INDIANA JONES - RAIDERS OF THE ARK திரை விமர்சனம்
அன்பர்களுக்கு வணக்கம், ஒவ்வொரு படங்கள் நம் மன நிலையில், நாம் பார்க்கும் தொழில்களை பற்றிய பார்வையினையே மாற்றி விடும், தொடர்ச்சியாக உளவாளிகளையும், போலிஸ் ஆபிசர்களையும் மட்டும் ஹீரோவாக காட்டி வந்த சினிமாவில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை பற்றிய பார்வையினையே மாற்ற வைத்த படம் தான் INDIANA JONES - RAIDERS OF THE ARK .
ஸ்டீபன் ஸ்பில்பெர்க் என்ற பெயரை கேள்விபடாதவர்கள் மிகக் குறைவு, நான் முதன்முதலில் காதலன் படத்தில் பிரபு தேவா "ஸ்டீபன் ஸ்பில்பெர்க் படம்பா, அதான் யோசிக்காம போயிட்டன்"னு சொல்லும் போதுதான் அந்த பேரை கேள்விபட்டேன். அதுக்கப்புறம் எல்லாருக்கும் தெரிஞ்ச ஜிராசிக் பார்க் படம் போதும் அவர் பேர் சொல்ல.
அந்த வகையில அவர் எடுத்த வித்தியாசமான முயற்சினு இந்த படத்தை சொல்லலாம். ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்குனு ஒரே திரைக்கதைதான் இருக்கும், ஒரு அறிமுகம், புது ஆயுதங்கள், கொஞ்சம் கில்மா சீன்னு ஒரே மாதிரிதான் இருக்கும்.
அதே மாதிரி இன்டியானா ஜோன்ஸ் படங்களுக்கான அறிமுகம் அவர் ஆரம்பத்துல ஒரு ஆபத்தான இடத்துக்கு போய் அவர் திறமைய காட்டி, தப்பிச்சு வரதுதான். அப்புறம் இந்த படத்துல அவர் தேடிப்போக போற பொருள் பத்தின அறிமுகம்.
சும்மா சொல்ல கூடாதுங்க, ஜெர்மனிய அநியாயத்துக்கு இழுத்துருப்பாங்க. அவங்கதான் உலகத்துக்கே எதிரிங்கற மாதிரி, அப்புறம் ஹீரோ ஹீரோயின் சேரனும், அப்புறம் வித்தியாசமான முறையில அற்புதமான பொருள் இருக்கற இடத்தை கண்டு பிடிக்கறது, அதை வில்லன் ஈசியா பிடுங்கிட்டு போயிடறதுனு வழக்கமான மசாலாதான்.
ஆனா படத்தை எடுத்துருக்க விதம், சான்ஸே இல்லை, 30 வருசத்துக்கு முன்னாடியே மனுசன் என்னாமா யோசிச்சுருக்கார், தனி ஆள் ஒரு ராணுவத்தையே சமாளிப்பார், அதுக்கு அவர் மூளைய மட்டும்தான் பயன் படுத்துவார்.
படத்தோட ஆரம்பத்துல குகைக்குள்ள போய் மாட்டிக்கறதும், அப்புறம் அரசாங்கத்துக்காக ARK அ எடுக்க கிளம்பி ஹீரோயின் அ தேடி போறதும், அங்க வில்லன்களை சமாளிக்கறதும் செமயா இருக்கும்.
எல்லாராலயும் ரசிக்கப்பட்ட காட்சி அந்த பிரமீடுக்குள்ள 100 கணக்கான பாம்புகளுக்கு நடுவுல மாட்டிக்கறதுதான், நிஜமா சொல்றேன் உங்களுக்கு இது வரைக்கும் நான் சொன்னதுல படத்தோட கதை ஓரளவுக்கு புரிஞ்சுருக்கும்னு நினைக்கறேன். ஆனா திரைக்கதைய நீங்க யூகிக்க முடியாத மாதிரி எடுத்துருப்பார். பார்த்தே தீர வேண்டிய படங்கள்ள இதுவும் ஒன்னு.
படத்தோட ட்ரெய்லர்
இந்த பதிவுல குறை இருந்தா தெரிவியுங்க, பிடிச்சுருந்தா நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.
பார்த்த படம் தான்...
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
வணக்கம்
ReplyDeleteசினிமா செய்திகளின் தொகுப்புக் களமாக இருக்கும் எமது தளத்தில் தங்களது ஹெலிவுட் பட விமர்சனங்களை இணைப்பதற்கான அனுமதியை வேண்டி நிற்கிறோம்.
தங்களது பெயர் பதிவு லிங்குடனேயே இடப்படுவதுடன் பதிவு வெளியாகி தாங்கள் குறிப்பிடும் நாளின் பின்னர் பிரசுரிக்கக் காத்திருக்கிறோம்.
www.saaddai.com
mathimahall@gmail.com