சோனா கல்லூரிக்கு வந்த கெட்ட காலம்- காலேஜ் டைரி பாகம் 1
அன்பர்களுக்கு வணக்கம், ஏதேதோ தோன்றுவதை எழுதிக் கொண்டிருந்தேன், பின்பு மற்றவர்களை பார்த்து விமர்சனம் எழுத துவங்கினேன். விமர்சனம் எழுதினால் அந்தந்த காலங்களில் மட்டுமே வாசகர்கள் கிடைப்பார்கள். எல்லா சமயங்களிலும் அனைவராலும் படிக்க விரும்பகூடிய பதிவுகள் எழுத முயற்சி செய்கிறேன். இதோ முதல் முயற்சி என் கல்லூரி அனுபவங்கள் என் நடையில் உங்களுக்காக. இந்த பதிவில் என் சுயபுராணம் அதிகம் வராமல் நிகழ்வுகளையே ரசிக்கும் விதத்தில் சொல்ல விரும்புகிறேன். எங்கயாவது என் பெருமைய பெருசா பேசுனா உடனே கமெண்ட் போட்டு என்னை ஆஃப் பன்னிருங்க. கதை எங்க இருந்து ஆரம்பிக்குதுனா எனக்கு SSLC ரிசல்ட் வந்த நாள்ள இருந்து, ஏன்னா தெரியாத்தனமா எனக்கு யாரோ 400 க்கு மேல மார்க் போடவும் என்னை கொண்டு போய் அந்தியுர் ஐடியல் ஸ்கூல்ல சேர்த்துனாங்க, நான் படிக்கறப்ப என் கூட படிச்ச எல்லாருக்கும் ஒரே ஒரு லட்சியம் தான். டாக்டராகனும்னு, அஃப்கோர்ஸ், எனக்கும்தான். ஆனா +2 பரிட்சை நெருங்கறப்ப எனக்கு தெரிஞ்சு போச்சு, நமக்கு எந்த மெடிக்கல் காலேஜ்லயும் சீட் தர மாட்டாங்கனு. நம்ம ஊர்ல படிப்புனா 2 தான், ஒன்னு டாக்டர், இன்னோன்னு இஞ்சினி...