நய்யாண்டி - Remake of "வள்ளி வரப்போறா"
அன்பர்களுக்கு வணக்கம்..மரியான் படத்தை பார்த்த அதே தியேட்டர்ல அதே ஈவ்னிங் ஷோக்கு கவுன்டர்ல நிக்கும்போதே கருக்குனு இருந்துச்சு... மின்சாரக் கண்ணால விஜய் புறாவுக்கு பெல் அடிக்கற இன்ட்ரோ மாதிரி இதுல தனுஸ் கிணத்தை தாண்டி புறாவ பிடிக்கற மாதிரி அறிமுகம்... ரொம்ப நாள் கழிச்சு அரை லூசூ ஹிரோயின், டாக்டர் பொன்னுங்க இஞ்சினியரிங் பசங்களையே மதிக்கறதுல்லை, இதுல டெண்டல் டாக்டர் படிக்காத பையனை லவ் பண்ணுதாம் 7ம் அறிவுல லவ் பண்றாங்களானு நாம யோசிக்கும் போதே "எம்மா யம்மா" பாட்டு வரும், அதே மாதிரி சைட் அடிச்சதுக்கு லவ்ஃபெயிலியர் சாங் வேற ரஜினியோட படிக்காதவன் ஐ ரீமேக் பண்ணியே படம் ஓடலைங்கறப்ப தனுஸ் புரிஞ்சுகிட்டு இருந்துருக்கனும், பாண்டியராஜனோட "வள்ளி வரப்போறா" படத்தை ரீமேக் பண்ணிருக்காரு... நடுநடுவுல ஆனந்தம், தேசிங்கு ராஜாலருந்து சிலபல டயலாக் உருவியிருக்காங்க... தனுசோட அண்ணனா வர 2 பேர் மட்டும் இல்லைனா நல்லா தூங்கி இருப்பேன்... நஸ்ரியா - "ஏம்மா இதுக்கா இந்த குதி குதிச்ச? எனக்கு கவுண்டமணியோட கிணத்துல பாடி விழுந்த கதைதான் ஞாபகம் வருது??...