Posts

Showing posts from July, 2012

தாண்டவம்- TRAILER - ஒரு முன்னோட்டம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், தெய்வ திருமகளுக்கு பின்னர் இயக்குனர் விஜய்யுடன் நடிகர் விக்ரம் இனைந்து பணியாற்றும் தாண்டவம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. படத்தில் அனுஸ்கா, மதராசபட்டினம் 'எமி ஜாக்சன்' மற்றும் நாசர் நடித்துள்ளனர், இவர்கள் அனைவருமே இயக்குனர் விஜய்யுடன் ஏற்கனவே பணியாற்றி உள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கது. படத்தில் விக்ரம் பார்வையற்றவராக வருகிறார், கதை பழி வாங்கும் கதை என்றும் அதை வித்தியாசமாக சொல்லி உள்ளதாகவும் இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார். படத்தின் ட்ரெய்லர்

உளவுத்துறைக்கு தண்ணி காட்டும் உளவாளி-SPY GAME- திரை விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான கலாச்சாரங்கள், ஆனால் எங்கெங்கிலும் இருக்கும் உணர்வுகள் ஒன்றுதான், எல்லா நாட்டிலும் தாய்பாசமும், நட்பும், காதலும், பிரிதலும், சேர்தலும், சிரிப்பும், அழுகையும் உண்டு, வெளிப்படுத்தும் முறை மட்டுமே மாறும், ஒரு விசயம் செய்தால் ஆபத்து வருமென்று தெரிந்தும் செய்வதைத்தான் ரிஸ்க் எடுப்பது என்று தூய தமிழில் கூறுவோம். நாம் பெரும்பாலும் எடுக்கும் ரிஸ்க்குகள் நமக்காகத்தான் இருக்கும், சில நேரங்களில் நாம் நேசிப்பவர்களுக்காக, நம் மனசாட்சிக்காக எடுப்போமோ? பார்ப்போம் இத்திரைப்படத்தில். "SPY GAME".  நம்மில் அதிகம் பேர் பல்வேறு காரணங்களுக்காக ஒரு இடத்தில் இருந்து வேலையை விட்டு நின்று வேறு இடத்திற்கு போவோம், அப்படி கடைசி நாளாக நாம் ஒரு இடத்தில் வேலை பார்க்கும் போது நாம் எப்படி இருக்க ஆசைப் படுவோம்? ஆனால் படத்தில் அமெரிக்க உளவுத்துறை நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெறப் போகும் ஒரு உயர்மட்ட அதிகாரியின் கடைசி வேலை நாளினை பற்றிய படம் தான் இது. பட ஆரம்பத்தில் சீனாவின் ஒரு சிறையிலிருந்து ஒரு பெண்கைதியை தப்புவிக்க முயன்று ஒரு இளைஞன...

'நான் ஈ' ராஜமவுலி + ஜுனியர் NTR = எமதொங்கா - கலக்கல் கலாட்டா/ திரைவிமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், நம்மில் பலருக்கு நான் ஈ புகல் ராஜமவுலிக்கு முதன்முதலாக வாய்ப்பு குடுத்ததும், தொடர்ந்து 3 படங்களுக்கு வாய்ப்பு குடுத்ததும் ஜுனியர் என் டி ஆர் என்பது தெரியாது, அவர்கள் கூட்டனியில் வந்த ஒரு படத்தை பற்றித்தான் இப்போது பார்க்க போகிறோம், மீதி 2 படங்களை தமிழில் எடுக்கிறேன் என்று கேவல படுத்தி விட்டார்கள், ஒன்று ஸ்டூடன்ட் நம்பர் 1, இன்னொன்று கஜேந்திரா, ஆனால் இரண்டும் தெலுங்கில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இன்று நாம் பார்க்கும் படம் எமதொங்கா.   கதை என்னவென்று பார்த்தால் நமது அதிசிய பிறவி கதைதான், ஏற்கனவே இதே மாதிரி ஹிந்தில வந்த FATSO படத்தை பத்தி நாம பார்த்துட்டோம், அதுலருந்து கொஞ்சம் மாற்றம், ஆனா அதே மதிரி எமலோகம் சம்பந்த பட்டது. அதாவது பார்த்திங்கனா ஹீரோயின சின்ன பொன்னா காட்டறாங்க, அதுக்கு கடவுள் அருளால ஒரு டாலர் செயின் கிடைக்குது, அதை நல்லவன்னு நம்பி திருட்டு பையனான ஹீரோகிட்ட குடுக்குது, அப்ப பிடிச்சு 20 வருசமா விடாம ஹீரோவ அந்த செயின் துரத்திகிட்டே இருக்கு. வளர்ந்தும் ஹீரோ திருடனா இருக்காரு. ஹீரோயின் அவங்கப்பா இறந்ததும் சொந்த காரங்களால வேலைக்காரியா நடத்...

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Image
அன்பர்களுக்கு வணக்கம். என் நண்பன் ஒருவன் சரித்திர நாவல்கள் விரும்பி படிப்பான், அவனது தந்தையுடன் பேசுகையில் அவர் நமது முன்னோர்களையும், கடவுள் வழிபாட்டையும் மறுத்து பேசியது பற்றி குறிப்பிட்டான். அது சம்பந்தமாக அவனிடம் நான் பேசியதை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.  நான் மனிதன் எனக்கு எல்லாம் தெரியும், என்னால எல்லா உயிரினத்தையும் அடிமைபடுத்த முடியும், நான் சக்கரத்தை கண்டு பிடிச்சுட்டேன், நெருப்பை கண்டு பிடிச்சுட்டேன், கம்ப்யுட்டர் கண்டுபிடிச்சுட்டேன்னு வெட்டியா சத்தம் போட்டு பேசறவங்க கடவுளை புரிஞ்சுக்க மாட்டாங்க, எல்லாத்தையும் கண்டுபிடிச்ச மனுசனால 2 நாள் சாப்பிடாம தூங்காம இருக்க முடியுமா? இல்லை 2 நாளைக்கு சேர்த்து சாப்பிட்டு ஒட்டுக்கா தூங்கிட்டே இருக்க முடியுமா? இன்னும் மனுசனால மனுசனையே ஜெயிக்க முடியலைய, பசிச்சா சாப்பிட்டுதான் ஆகனும், தூக்கம் வந்தா தூங்கிதான் ஆகனும், உன்னால ஒன்னும் கட்டுபடுத்த முடியாது, கடவுளை எதுக்கு வணங்கனும்? முதல்ல மனுசன் யாரை வணங்குவான், தன்னை விட வயசுல பெரியவங்களை, அதுக்கு என்ன அர்த்தம்? நான் உன்னை விட சின்னவன், உன் அளவுக்கு நான் இல்லைனு...

பொறியியல் படிப்பு- ஒரு எளிய அறிமுகம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், தற்போதுள்ள காலகட்டமானது மாணவர்கள் பள்ளி வாழ்க்கையை முடித்துக் கொண்டு கல்லூரிக்கு செல்லும் சமயம், அதிலும் தற்போது பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்துடுப்பது பொறியியல் (ENGINEERING) படிப்பினைத்தான். நானும் ஒரு பொறியாளர் என்ற வகையிலும் ஒரு தொழில்கல்லூரி ஒன்றினில் ஆசிரியராக பணியாற்றுவதாலும் இப்படிப்பு சம்பந்தமான தகவல்கள் தெரிந்து வைத்துள்ளேன், அதை உங்களுடன் பகிர விரும்புகிறேன். முதலில் பொறியியலில் எண்ணற்ற பாடப்பிரிவுகள் உள்ளன, அதில் தமிழகத்தில் பெரும்பாலும் தேர்ந்துடுக்கப்படுவது ஆறு பிரிவுகளே, அவை முறையே 1.CIVIL 2.MECHANICAL, 3.EEE, 4.ECE, 5.COMPUTER, 6.IT.   ஒவ்வொரு பிரிவாக பார்ப்போம். முதலில் CIVIL-கட்டிடவியல். தொழில் படிப்புகளில் முதல் பிரிவு, பெரும்பாலோனோர், இத்துறையினை பற்றிய தெளிவான தகவல் இன்றி இருக்கின்றனர். இப்பிரிவில் படித்தால் வெயிலில் காயவேண்டும் என்பது பலரது எண்ணம். அது உண்மையல்ல. SOFTWARE ல் இருப்பவர்களுக்கு ஈடாக வருமானம் ஈட்டவும், அவர்களை போல் குளிரான அறையில் வேலை பார்க்கும் வாய்ப்பு இப்பிரிவு படிப்பவர்களுக்கும் உண்டு. எப்படியெனில் DESI...

"நான் ஈ" நாயகனின் காதல் கலாட்டா "Ala Modalaindi"- REVIEW

Image
அன்பர்களுக்கு வணக்கம், கல்யாணம் ஆகற வரைக்கும் காதல் படம் பிடிக்கும், ஆனதுக்கு அப்புறம் திகில் படம்தான் பிடிக்கும்னு என் நண்பன் ஒருத்தன் சொன்னான், அவனுக்கும் இன்னும் ஆகலை, இருந்தாலும் எதுக்கும் கல்யாணத்துக்கு முன்னமே தெரிஞ்ச காதல் படங்களை பார்த்துருவோம். இன்னைக்கு நாம பார்க்கப் போற படம் "Ala Modalaindi". எனக்கும் சொல்ல வரலை.  படத்தோட ஹீரோ நம்ம "நான் ஈ" புகழ் நானிதான். ஹீரோயின் நம்ம 180 பட புகழ் 'நித்யா மேனன்'. இவங்க 2 பேரும் ஜோடியா ஒரு தமிழ் படத்துல கூட நடிச்சுருக்காங்க படம் பேர் 'வெப்பம்'. படம் மொக்கை, ஆனா ஒரு பாட்டு செமையா இருக்கும். "மழை வரும் அறிகுறி". முடிஞ்சா கேளுங்க. சரி கதைக்கு போவோம், நம்ம தில் 'ஆஷிஸ் வித்யார்த்தி துப்பாக்கி முனையில நம்ம ஹீரோவ கடத்தறதுதான் ஆரம்பம். போரடிக்கறதால அவரே உன் காதல் பத்தி சொல்லுன்னு ஃப்ளாஸ்பேக் அ கேட்டு வாங்கறார். தன்னோட பழைய காதலியோட கல்யாணத்துக்கு போய் குடிச்சுட்டு புலம்பறப்ப கூட யாரோ புலம்பற சத்தம் கேட்க யார்னு பார்த்தா நம்ம நித்யா, அவங்களும் பழைய லவ்வர் அ பறி குடுத்துட்டு நிக்க...

கலக்கல் ஆவி- காமெடிப்படம் - GHOST TOWN- REVIEW

Image
அன்பர்களுக்கு வணக்கம், அனைவராலும் ரசிக்க கூடிய படங்களுடைய முடிவு பெரும்பாலும் சுபமாகத்தான் இருக்கும், அனைவரது மனமும் மகிழ்ச்சியைத்தான் விரும்புகிறது. ஹாலிவுட்டிலும் அதனால்தானோ என்னவோ குறைந்த செலவில் எடுக்கப்படும் ROMANTIC COMEDY படங்கள் சக்கை போடு போடுகின்றன. அந்த வகையான் படங்களில் FANTASY கலந்திருந்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியான ஒரு படம்தான் "GHOST TOWN".  கதையின் நாயகன் ஒரு பல் மருத்துவர், தனிமை விரும்பி, எந்த அளவுக்கு என்றால் யாராவது உதவி கேட்டால் கூட கழண்டுக் கொள்வார், எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். இவரது அப்பார்ட்மென்ட்டில் தான் நாயகியும் வசிக்கிறார். ஒரு நாள் கிட்டத்தட்ட தற்கொலை முயற்சி போல் ஏதோ ஒன்று செய்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைக்கிறார்.  அடுத்தடுத்த நாட்களில் அவர் கண்களுக்கு இறந்தவர்கள் தெரிய ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு இவரால் தங்களை பார்க்க முடியும் என்ற விசயம் தெரிய வந்ததும் ஒவ்வொருவரும் தங்களது கடைசி ஆசையை தீர்த்து வைக்க சொல்லி பின் தொடர்கிறார்கள். தனிமை விரும்பிக்கு ஒரு கூட்டமே பின் தொடர்ந்...

மாற்றான் படக்கதை இதுவாகவும் இருக்கலாம்-STUCK ON YOU-REVIEW

Image
அன்பர்களுக்கு வணக்கம். மாற்றான் படம் வந்தது முதலே இனையங்களில் அது "STUCK ON YOU" படத்தின் தழுவல் என்று பரப்பப் பட்டு வருகிறது. மற்ற பதிவர்கள் எந்த திரப்படம் வந்தாலும் முதல் நாளே பார்த்து விமர்சனம் எழுதுகிறார்கள், அந்த வேகம் எனக்கு வராது, அதனால் தான் அதிகமாக மற்ற மொழிப் படங்களை விமர்சித்து வருகிறேன்.  அதில் ஒரு புது முயற்சியாகத்தான் இந்த படத்தின் விமர்சனம், அனைவரும் சொல்வது போல் இந்தக் கதை மாற்றான் படத்தின் கதையாகவும் இருக்கலாம். ஏதோ ஒரு வகையில் என்னை இந்த படம் பார்க்க வைத்த கே.வி. ஆனந்த் மற்றும் இனைய நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனேனில் அருமையான படம்.   படத்தின் துவக்கத்திலேயே கதையின் நாயகர்கள் இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என தெரிந்து விடுகிறது. இருவரும் ஒரு சிறிய ஊரில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார்கள். அவர்களது கடையில் ஒரு சிறப்பு, PIZZA போல் சொன்ன நேரத்தில் ஆர்டர் செய்ததை தராவிட்டால் இலவசமாக சாப்பிட்டுவிட்டு செல்லலாம். சிறு வயதில் இருந்து அந்த ஊரில் இருப்பதால் ஊர் முழுக்க நண்பர்கள். அண்ணன் தம்பி என்று பிரித்துக் கொள்வோம், அண்ணன் ...

நண்பர்களுக்கு SMS இலவசமாக அனுப்பவும், இலவசமாக RECHARGE செய்யவும் புதிய இனைதளம்

Image
வணக்கம் நண்பர்களே. என்னடா சினிமா விமர்சங்கள் தந்து கொண்டு இருக்கும் போது என்ன இது! என்று நினைக்கலாம். எல்லாம் ஒரு மாற்றம் தான் சும்மா! இந்த பதிவானது உங்களுக்கு இலவசமாக மொபைல் ரிசார்ஜ் செய்ய உதவும் ஒரு நம்பகமான தளத்தை பற்றியது. இந்த தளத்தில் நமக்கு பல வசதிகளை இலவசமாக தந்துள்ளர்கள். உதாரணமாக சொல்ல போனால் நீங்கள் way 2 sms பயன்படுத்திக் கொண்டிருப்பிர்கள். அதை போலவே இந்த தளமும் உள்ளது. மற்றும் Amulyam என்ற தளத்தையும் பயன்படுத்தி இருப்பீர்கள். இந்த தளம் முதலில் ஓன்றை சொல்லி பின்பு செய்வதில்லை. ஆனால் நான் சொல்லும் தளம் மிக நம்பகமானது. நாம் இந்த தளத்துக்கு எந்த வேலையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இணைந்தவுடன் உங்கள் கணக்கில் 2 இணைந்து விடும். நீங்கள் மற்றவரை இணைத்து விட்டால் உங்களுக்கு கமிசனாக 1 ருபாய் கிடைக்கும். நீங்கள் நண்பர்களை இணைக்க எளிய வழிகள் உள்ளது. என்னிடம் பிளாக உள்ளதால் பதிவிட்டுள்ளேன். ஆனால் உங்களிடம் பிளாக் இல்லை என்றாலும் எளிதாக சம்பாரிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் facebook , twitter, google+ போன்ற சமுக வலை தளங்களில் உங்களிம் ரெப்ரல் லிங்கை...

ஆந்திரா மசாலா-POOLA RANGADU- TAMIL REVIEW

Image
அன்பர்களுக்கு வணக்கம், எப்பொழுதும் உலக சினிமாக்களை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் நம்ம ஊர் சினிமாக்களை யார் பார்ப்பது என்ற கவலையில் அவ்வப்போது சமயம் கிடைத்தால் தமிழ் படம் பார்ப்பேன். அதிகம் பார்ப்பது தெலுங்கு படங்கள் தான்,  என்னதான் ஆந்திராவில் ஹீரோயிசம் அதிகம் என்றாலும் அவர்களின் முன்னேற்றம் நம்மை விட அதிகம். உதாரணத்திற்கு அருந்ததி, மஹதீரா, நான் ஈ, பிருந்தாவனம் சொல்லிக் கொண்டே போகலாம். சரி நாம் படத்திற்கு போவோம். படத்தின் பெயர் பூலா ரங்கடு. கதையின் நாயகன் சுனில் ரெட்டி. தெலுங்குலகில் பெயர் சொல்லுமளவுக்கான நகைச்சுவை நடிகர். இவரை ஹீரோவாக்கிய பெருமை நமது நான் ஈ புகழ் இயக்குனர் ராஜ் மௌலியை சாரும். சுனிலை ஹீரோவாக்கி இவர் எடுத்த 'மர்யாத ரமண்ணா' படம் சூப்பர் டூப்பர் ஹிட். எப்படி நம்ம ஊரில் இம்சை அரசன் ஹிட் ஆனதும் இ.லோக அழகப்பன் வந்ததோ அதே போல் வந்த படம் தான் இந்த பூலா ரங்குடு. கதைப்படி ஹீரோ ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரை ஏமாற்றி ஒரு 30 ஏக்கர் நிலத்தை இவர் தலையில் ஒரு கும்பல் கட்டி விடுகிறது. அந்த நிலத்தை விற்றால்தான் அவரது பல குடும்ப பிரச்சனைகள் தீரும். ஆனால்...

CRAZY,STUPID,LOVE - MOVIE REVIEW

Image
அன்பர்களுக்கு வணக்கம், ஏனோ தெரியவில்லை, பல த்ரில்லர் படங்கள் எடுத்து வைத்தாலும் என் மனம் எப்போதும் காதல், நகைச்சுவை படங்களை நோக்கியே செல்கிறது. ரொமென்டிக் காமெடி வகையில் உலக அளவில் அதிக வசூல் செய்த படத்தை பற்றித்தான் இன்று பார்க்கப் போகிறோம். CRAZY,STUPID,LOVE.  படத்தில் எடுத்தவுடன் ஒரு தம்பதிகளை காட்டுகிறார்கள், இருவரும் A 40YEAR OLD VIRGIN படத்தில் இனைந்து நடித்தவர்கள். இருவரும் விவாகரத்தை பற்றி பேசுகிறார்கள், காரணம் மனைவிக்கு வேறு ஒருவருடனான தொடர்பு. கடுப்பில் மனிதன் ஓடும் காரில் இருந்து குதித்து விடுகிறான் என்றால் பாருங்கள். அவர்கள் வீட்டில் அவர்களது 13 வயது சிறுவன் தன்னை விட 8 வயது பெரிய பென்னை காதலிக்கிறான். அந்த பென்னோ நம்ம ஏமாந்த ஹீரோ (45 வயசு)வ காதலிக்கறா. இதுதான் கதைக்களம். சரி நம்ம விமர்சனத்துக்கு வருவோம். பொன்டாட்டி தப்பு பன்றானு தெரிஞ்சதுக்கப்புறம் அவன் செவ்வாய் கிரகத்து ஏலியனா இருந்தாலும் டாஸ்மாக் போகனும்ங்கறது விதி, நம்ம வயசான ஹீரோவும் அங்கன போய் புலம்பிட்டு இருக்கார். அங்கதான் இன்னொரு சின்ன வயசு ஹீரோ வர்ரார், அவருக்கு பொழப்பு என்னன்னா...

ஆடி 1 - கொண்டாட்டம்/தேங்காய் சுட்டிங்களா?

Image
அன்பர்களுக்கு வணக்கம், ஆடி மாசம் இன்னைக்கு ஆரம்பிச்சுருச்சு, இனி எல்லா ஊர்லயும் மாரியம்மன் பண்டிகை நடத்துவாங்க, கூழ் ஊத்துவாங்க, ஆடி 18 வந்தால் காவிரி ஆறு போற பக்கமெல்லாம் அமர்க்கலமா இருக்கும்.  எல்லாத்துக்கும் மேல ஆடி மாசம் எல்லா துணிக்கடைலயும் தள்ளுபடிய நடிகைகளை வச்சு ஊர் முழுக்க சொல்லுவாங்க, எல்லாத்துக்கும் தயாராகுங்க.  உங்க ஊர்ப்பக்கம் ஆடி 1 அ கொண்டாடுவிங்களா? எங்க மாவட்டம்ல தேங்காய் சுடற பண்டிகைனு கொண்டாடுவோம், ஆடி மாசம் முழுக்க அம்மனுக்கு பண்டிகை, ஆடி முதல் நாள் வினாயகருக்கு தேங்காய் சுடற பண்டிகை,  என்னன்னா தேங்காய் வாங்கி உரிச்சு தரைல தேய்ச்சு மொழுமொழுன்னு ஆக்கி ஓட்டை போட்டு உள்ளே வெல்லம், அவுல், கடலை,கடுகுனு என்னென்னமோ ஒரு லிஸ்ட் வச்சு போட்டு குச்சி சொருகி அடைச்சுருவோம். அதுக்கு அப்புறம் டெக்கரேஷன், மஞ்சள், குங்குமம் , கரின்னு விதவிதமா கலர் பூசுவோம், எதுக்குனா ஒரு தெருவுல இருக்க எல்லாரும் ஒன்னா ஒரே நேரத்துலதான் தேங்காய் சுடுவோம். அப்ப யாரோட தேங்காய் அழகா இருக்குனு சீன் போடத்தான். நான் பெரியவனாயிட்டேன், தேங்காய் சுடறதுலாம் சின்ன பச...