வீட்டில் சோலார் பயன்படுத்துவது குறித்த தகவல்கள்
அன்பர்களுக்கு வணக்கம், மின்வெட்டிற்கு சரியான நிவாரணம் சோலார்தான் என்பதை வலியுறுத்தி ஏற்கனவே சில பதிவுகள் போட்டு இருக்கிறேன், இப்போது அரசும் இதை ஒப்புக் கொண்டு விட்ட நிலையில், இணையத்தில் மேய்கின்ற பொழுது நான் படித்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வீட்டிற்கு சோலார் செல் மூலம் மின்சாரம் அளிக்க எவ்வளவு செலவு ஆகும்? மானியம் எங்கே கிடைக்கும்? என்பது பற்றிய கேள்விகளை வலை நண்பர்கள் கேட்டிருக்கின்றார்கள். என் நண்பர் ஒருவர் மகாராஷ்டிரா, புனாவில் சோலார் செல் பிசினஸ் நடத்துகிறார். அவரிடமிருந்து கேட்டுப் பெற்ற தகவல்களை இங்கே கொடுக்கிறேன். வீட்டிற்கு : உங்கள் வீட்டில் ஒரு மாதத்திற்கு சுமார் 100லிருந்து 150 யூனிட் வரை மின்சரம் செலவானால், ஒரு கிலோவாட் சோலார் சிஸ்டம் போதுமானது. (மின்சார பில் பல இடங்களில் 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் வரும். அதனால், 2 மாதத்திற்கு 200லிருந்து 300 யூனிட் செலவு என்று சொல்லலாம்). இதற்கு 2 லட்சம் வரை செலவாகும். உங்கள் கையிலிருந்து 1.1 லட்சம் செலவாகும். மீதி 90 ஆயிரம் ரூபாய் மானியமாகக் கிடைக்கும். உங்களுக்கு சோலார் சிஸ்டம் சப்ளை செய்யும் நிறுவன...