சதுரங்க வேட்டை - உலக சினிமா
அன்பர்களுக்கு வணக்கம், உங்களுக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து கொஞ்சம் தெளிவா சொல்லனும்னா உங்க கையில பணம் வர ஆரம்பிச்சதுக்கு அப்புறம் யார்கிட்டயாவது பணத்தை ஏமாந்து இருக்கிங்களா? கடன் கொடுத்து ஏமாந்ததை கேட்கலைங்க, குறுக்கு வழில சம்பாதிக்க ஆசைப்பட்டு ஏமாந்து இருக்கிங்களா? 1 வச்சா 2 2 வச்சா 4 5 வச்சா 10 10 வச்சா 20 னு கூவி கூவி கூப்பிடற லங்கர் கட்டை உருட்டறவன்கிட்ட பணத்தை விட்டு இருக்கிங்களா? வெறும் 2 பேரை நமக்கு கீழ் சேர்த்து விட்டா போதும், அதுக்கு அப்புறம் வேலைக்கே போகாம பணம் சம்பாதிக்கலாம்னு சொல்ற, உங்களை சேர சொல்லி டார்ச்சர் பண்றவங்களை பார்த்துருக்கிங்களா? உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது மன்னுளி பாம்பு வியாபாரம் பண்ணி கோடி கோடியா சம்பாதிக்கலாம்னு பைத்தியகாரனா அலைஞ்சத பார்த்துருக்கிங்களா? கோபுர கலசத்துல இடி இறங்குனா அது இரிடியமா மாறிடும், அப்படி மாறுன கலசத்தை கோடி கணக்குல வாங்க ஆள் இருக்குனு நம்பற ஆளா நீங்க? உங்களோட, நம்மளோட முட்டாள்தனத்தை வெளிப்படையா காட்டற படம் தான் இந்த "சதுரங்க வேட்டை" "ஒருத்தனை ஏமாத்தனும்னா அவன்கிட்ட கருனைய எதிர்...