வடகறி - திரை விமர்சனம்
அன்பர்களுக்கு வணக்கம், எனக்கு ரொம்ப புதுசா கதை இருக்கனும்னு அவசியம் இல்லை, நான் எங்கேயும் லாஜிக்லாம் பார்க்க மாட்டேன், பொழுது போக்குக்கு மட்டும்தான் படத்துக்கு போறேன்னு சொல்றவங்களுக்கான படம் தான் இந்த "வடகறி" படத்தோட டைட்டில்லயே ஆப்பிள் சிம்பள் வரப்பவே புரிஞ்சுக்கனும், இந்த படத்துக்கும் ஆப்பிள் iphone க்கும் முக்கியமான சம்பந்தம் இருக்குனு, ஹீரோவ முதல்ல காட்டும் போதே போன்லருந்துதான் ஆரம்பிக்கறாங்க, அவர் வச்சுருக்க போன்ல பேசுனா வாக்கி டாக்கி மாதிரி சுத்தி இருக்க எல்லாருக்கும் கேட்கும், இதுல போன் பண்ணி ஜாக்கி வேலை பார்த்து கோர்த்து விடற நண்பன் வேற.... ஒவ்வொரு இடத்துலயும் அசிங்கப்பட்டு, புதுசா போன் வாங்கலாம்னு 2000 ரூபாய் எடுத்துட்டு கிளம்பறார், 500 ரூபாய் ட்ரீட்டுக்கு ஒதுக்கிட்டு 1500 ரூபாய்க்கு கொரியன் செட் வாங்கறார், இந்த சுச்சுவேஷனுக்குதான் நம்ம தலைவிய கொண்டு வந்து இறக்கியிருக்கான் நம்ம இயக்குனர் ஆனா சைனா செட் வாங்கனதுக்கு சன்னி லியோன் கூட சாங்லாம் ரொம்ப ஓவர், அதுக்கப்புறம் தான் ஹீரோ உச்ச கட்ட அவமானத்தைலாம் வாழ்க்கைல அனுபவிக்கறார், குழந்தைய கூட அவர...