Posts

Showing posts from 2015

கிருமி – விமர்சனம்

தமிழ்நாட்டில் மின்வெட்டு புயலாய் வீசிக்கொண்டிருந்த காலகட்டம். இரவு நேர மின்வெட்டுகளில் பல வீடுகளில் திருடு போனது. ஊர்க்காவல்படை திரட்டப்பட்டது. அதாவது ஊரில் உள்ள இளைஞர்களை கொண்டு அமைக்கப்படும் குழு. இரவில் மின்வெட்டு நிகழும் சமயங்களில் இப்படை ரோந்தில் ஈடுபடும். அப்படையில் இறங்கி வேலைப் பார்த்தது முழுக்க முழுக்க  என் நண்பன் தான். கொஞ்சம் கொஞ்சமாய் ஊர் காவல் நிலையத்தில் அவனது போக்குவரத்து அதிகரிக்க துவங்கியது. பல வேலைகளை அவர்களுக்காக செய்து கொடுத்து கொண்டிருந்தான். சிறுவயதில் இருந்தே எல்லா மரங்களிலும் விரைவாய் ஏறி இறங்குவான். கட்டான உடலமைப்பும் கொண்டவன் . திடிரென ஒரு நாள் கான்ஸ்டபிள் ஆகிவிட்டான். அதற்கு காவல்நிலையம் பல வழிகளில் உதவியாய் இருந்ததாய் கெள்விப்பட்டேன். வேறு வேலை கிடைக்காததால் காவல்நிலையத்தில் உதவியாளாய் சேரும் நாயகனை சுற்றி வித்தியாசமான கதைக்களம் அமைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். மேலும் படிக்க... http://www.thoovaanam.com/?p=987

கலாய்ச்சுட்டாராமாம்...

Image
ஒரு பெரிய மனிதர் அல்லது மற்றவர்கள் அனைவரும் பாராட்டுகிற ஒருவரை சடாரென கவிழ்த்து விடுவது பற்றி பேசி கொண்டிருக்கையில் எனக்கு 3 காட்சிகள் நினைவுக்கு வந்தது... முதல் காட்சி நம் கவுண்டர் நடித்த தங்கம் படத்தில் இருந்து, அந்த படத்தில் அவர் ஒரு வேட்டைக்காரனாக பேட்டி அளிக்கும் பொழுது சொல்லுவார்... தான் வேட்டைக்கு செல்லும் பொழுது திடிரென சிங்கம் தன்னை தாக்க வந்ததாகவும் அவர் உடனே இடைமறித்து "இவ்ளோ பெரிய காட்டுக்கு ராஜாவா இருக்கையே, ஒரு ஜட்டி கூட போடாம சுத்தறயே, உனக்கு வெட்கமா இல்லை?" என்றதும் சிங்கம் அவமானத்தில் திரும்பி சென்று ஒரு மரத்தில் ஒளிந்து கொண்டதாக சொல்வார். இந்த காட்சியை முதலில் பார்க்கையில் பெரிதாய் ஈர்க்கவில்லை, ஆனால் நண்பன் ஒருவன் அடிக்கடி யாரையாவது கிண்டலடிக்க இதை பயன்படுத்தும் தொனியை ரசிக்க துவங்கினேன்...   இரண்டாவது ராமாயணத்தில் வரும் காட்சி, சீதை மிக அழகி, உலக அழகி, அவளை போல் வேறொரு பெண் எங்கும் கிடைக்க மாட்டால் என்ற பின்னர்தான் மாற்றான் மனைவி என தெரிந்தும் ராவணன் அவளை சிறைப்பிடித்தான் என்ற பேச்சு உலமெல்லாம் பரவ, சீதையை சிறை மீட்டு கிஷ்கிந்தைக்கு அழைத்து வந்த ...

டிமாண்ட்டி காலணி விமர்சனம்

Image
http://www.thoovaanam.com/?p=922 தமிழ் சினிமாவை சந்திரமுகியில் பிடித்தது இந்த பேய்(சீசன்), கொஞ்சம் இடைவெளி விட்டு பீட்ஸா விலிருந்து வருடத்திக்கு 4 பேய் படமாவது வந்து கொண்டே இருக்கிறது, அதை வரிசை படுத்தி நான் போட்ட ட்விட்தான் என்னுடையதில் அதிகமாய் பகிரபட்டது. பேயை பார்த்து பயந்தா – பீட்ஸா, காஞ்சனா சிரிப்பு வந்தா – யாமிருக்க பயமே மூடு வந்தா – அரண்மனை அழுகை வந்தா – பிசாசு பயமுறுத்தற பேய் பட வரிசைல ‘டிமாண்ட்டி காலணி’ படத்தையும் சேர்த்துக்கலாம், நான்கு அறைத்தோழர்கள், ஒரு எலக்டரீசியன், ஒரு இயக்குனராக முயலும் இளைஞன், போட்டோஷாப் டிசைனர், நான்காவதாக நாயகன் அருள்நிதியின் தொழிலை படத்தில் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். முதல் 25 நிமிடங்கள் வரை இது ஒரு பேய் படம் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். சராசரியாக போகும் கதையில் ஒரு நாளிரவு விளையாட்டாக பேய் வீடான டிமாண்டி காலணிக்கு செல்கிறார்கள், நால்வரில் ஒருவரான எலக்ட்ரீசியன் மிகவும் பயந்த சுபாவம் உடையவர், அவரை மற்றவர்கள் மறைந்திருந்து பயமுறுத்துகிறார்கள், அப்போது அங்கங்கே சில அமானுஷ்யங்கள் தென்படுகின்றன. அங்கே ஆரம்பிக்கும் ...

மாதொருபாகன்,ஆலவாயன் & அர்த்தநாரி – பெருமாள் முருகன்

நடந்த கலவரங்களில் தமிழ்நாடு முழுக்க இவரை அறியும். கூகுளில் எழுத்தாளர் என அடித்தால் இவர் பெயர் உடன் வரும் அளவுக்கு கொஞ்ச நாள் தலைப்பு செய்தியாக இருந்தார். நடந்த பிரச்சனைகளை பற்றியோ, எது சரி, தவறு என்பது பற்றியோ பேச போவதில்லை. இப்பதிவின் நோக்கம் “மாதொருபாகன்- ஆலவாயன் – அர்த்தநாரி” புத்தகங்களை பற்றியது. பலர் இப்புத்தகத்தை அறிமுகப்படுத்தி இருந்த போதும் பெருமாள் முருகனை நோக்கி பல சங்கங்கள் கல்லெறிய துவங்கிய போதுதான் மாதொருபாகனை வாங்க நெர்ந்தது. வாங்கும் பொழுது அதன் தொடர்ச்சியாக இரண்டு புத்தகங்களின் வெளியீடும் நடந்தது, எனவே அந்த புத்தகங்களையும் வாங்கினேன். நீங்கள் வக்கிரம் என நினைத்தால் வக்கிரமாகவும் எதார்த்தமாக நினைத்தால் எதார்த்தமாகவும் தெரியும் பல விஷயங்களை எழுத்தாளர் தைரியமாய் எழுதி இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் என்றால் காளியின் சித்தப்பா நல்லுப்பிள்ளை தான். ஊரே குடுமி வைத்திருக்கும் பொழுது கிராப் வெட்டிக் கொள்வதில் துவங்கி, சொத்துக்களை பிடுங்கி கொள்ள பார்க்கும் தம்பிகளை பஞ்சாயத்தில் சமாளிப்பதிலும், அதே சொத்துக்காக கடைசி தம்பி தனது மனைவியை கூட்டிக் கொட...