Posts

Showing posts with the label ROMANTIC COMEDY

THE ACCIDENTAL HUSBAND - விமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், அவ்வபோது வரும் படங்களை பார்த்தாலும் எனது எப்போதைய விருப்பம் ரொமென்டிக் காமெடி வகை படங்கள் தான், அந்த வகையில் ஒரு படம் தான் நாம் இன்று பார்க்கப் பாவது, THE ACCIDENTAL HUSBAND. படத்தலைப்பிலேயே கதையை யூகிக்கலாம், எதிர்பாராத விதமாய் ஒருவன் ஒரு பெண்ணுக்கு கணவனானால் என்ன ஆகும் என்பது? ஆனால் படத்தில் எதிர்பாராமல் நடப்பது இல்லை, சரி ஆரம்பத்தில் இருந்து பார்ப்போம். நமது நண்பர்களில் எல்லாம் கண்டிப்பாக ஒருவன் இருப்பான்/ள், தனக்கு அனுபவமே இல்லை என்றாலும் நாம் செய்யும் விசயங்களை பற்றி நன்கு தெரிந்தது போல் அறிவுரை சொல்பவர்கள்.   அது போல் லவ் டாக்டர் என கூறிக்கொண்டு ரேடியோவில் நிகழ்ச்சி நடத்துபவர்தான் கதா நாயகி, அவருக்கு வேலையே, யாராவது கஷ்டபட்டு காதலிக்க வைத்திருக்கும் பெண்ணிடம் உணர்வுகளை விளக்குகிறேன் பேர்வழி என்றி 90 % குழப்பி, இருவரையும் பிரிப்பதுதான். இதனால் கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தன் காதலியை இழந்தவர்தான் கதா நாயகன், ஒரு தீயனைப்பு வீரர், தன் காதல் தோல்விக்கு காரணமானவள் மீது கோபமாய் இருக்கிறார், அவருக்கு பக்கத்தில் குடியிருக்கும் ஒரு...

JUST GO WITH IT - REIVIEW

Image
அன்பர்களுக்கு வணக்கம், தீராத மின்வெட்டின் காரணமாக ஒரு படத்தை மூன்றாக பிரித்து மூன்று நாட்களில் பார்த்து முடிக்க வேண்டியாதாய் இருக்கிறது, நேற்று தீபாவளியினை முன்னிட்டு முழு நாளும் மின்சாரம் இருந்ததால் இந்த படத்தை பார்க்க முடிந்தது. படத்தின் பெயர் "JUST GO WITH IT" தமிழ்ல அது போக்குலய போலாம்னு கூட சொல்லலாம். நமக்கு எப்பவுமே பெருசா ட்விஸ்ட் இல்லைனாலும் பாஸிட்டிவ் க்ளைமாக்ஸ் இருக்க இந்த மாதிரி ரொமாண்டிக் காமெடி வகை படம் தான் ஆல் டைம் ஃபேவரட். சரி வாங்க படத்துக்கு போவோம். எல்லா நாட்டுலயும் எப்படி பொன்னுங்க ஒரே மாதிரி இருக்காங்களோ, அசிங்கமா இருந்தாலும் பராவாயில்லைனு ஒருத்தனை (ஹீரோ) கல்யாணம் பண்ணிகிட்டு அவனை அவன் குடும்பத்துலருந்து பிரிச்சு கூட்டி வந்து, அவன் டாக்டராகி சம்பாரிக்கற எல்லாத்தையும் ஆட்டய போட்டு பாய் ஃப்ரெண்ட்ஸ் கூட ஆட்டம் போட திட்டம் போடற ஒரு பொண்ணுகிட்ட இருந்து எஸ்கேப் ஆகி ஹீரோ பார்ல கல்யாண மோதிரத்தோட சரக்கடிக்கறப்ப, ஒரு பொண்ணுகிட்ட எதெச்சையா கல்யாணம் ஆனவன் மாதிரி சீன் போட செட் ஆகிருது, அதுலருந்து வாரம் வாரம் வெள்ளிக்கிழமை அந்த மோதிரத்தை வச்சுதான் ஒவ்வொர...

கோதாவரி - ஃபீல்குட் காதல் படம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், என்னதான் தமிழ் சினிமாவில் சமிப காலங்களில் ஏதேதோ மாற்றங்கள் நிகழ்ந்தாலும் ஃபீல் குட் படங்களின் எண்ணிக்கை சுத்தமாக குறைந்து விட்டது, வருபவர்கள் அனைவரும் சமுதாயத்தை திருத்துவதற்கும், நட்பிற்குமே படமெடுத்து தள்ளுகிறார்கள். இன்று நாம் பார்க்க போவது தெலுங்கில் வந்த ஒரு ஃபேல் குட் படம் "கோதாவரி"   தமிழில் 'இனிது இனிது' என்று ஒரு படம் வந்தது, அனைவரும் பார்த்திருப்பீர்கள், அதன் ஒரிஜினல் பதிப்பான "ஹேப்பி டேஸ்" படத்தினை இயக்கிய சேகர் கம்முலாவின் படம் தான் இந்த கோதாவரி. ரொம்ப நாளாக இனையத்தில் இருந்து எடுத்து வைத்து இருந்த படம். சரி கதைக்கு வருவோம். நாயகன் ராம் அமெரிக்காவில் படித்துவிட்டு மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று ஆளுங்கட்சிக்கு சென்று தன்னை சேர்த்து கொள்ளுமாறு கேட்டு அசிங்கபட்டு வரும் இயல்புக்கு புறம்பான குணம் படைத்தவன், இது போன்ற குணங்களால் நேசிக்கும் அத்தை மகள் ராஜியினை(நீது சந்த்ரா) மணக்க முடியாமால் IPS மாப்பிள்ளைக்கு விட்டு குடுக்கிறார். நாயகி சீதா(கமாலினி முகர்ஜி), அப்பா செல்லாமாக வளர்ந்து சொந்தமாக ஃபேஸன்...

A Cinderella Story திரைவிமர்சனம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், என் மாணவர்களுக்கு தேர்வு நெருங்குவதால் முன் போலதிகமாய் எழுத இயலவில்லை, தினமும் இறக்கம் செய்யும் படங்களும் என் கணிணியினை நிரப்பிக் கொண்டே வருகிறது, ஒரு படத்தினை பார்த்ததும் அதன் விமர்சனம் எழுதிய பின்புதான் அதனை அழிப்பது வழக்கம், எப்போதோ எடுத்து வைத்து சமிபத்தில் பார்த்த படம் "A CINDERELLA STORY".   இந்த சின்ட்ரெல்லா பெயரினை கேள்விப் படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், அது போலத்தான் அந்த கதையும், சிறுவயதில் பெற்றோரினை இழந்து சித்திக் கொடுமையால் வாடும் கதா நாயகி தேவதையின் வரத்தால் இரவு அரண்மனையில் நடக்கும் விருந்திற்கு முகத்தினை காட்டாமல் சென்று இளவரசனை கவர்ந்து பின் காலணியினை வைத்து இருவரும் சேரும் கதை, சிறுவயதில் பலருக்கு இது BED TIME STORY ஆக இருந்திருக்கும். எனக்கு இல்லைங்க. படத்துக்கு வருவோம், இப்ப மேல படிச்ச அதே கதைய இப்ப இருக்க கலாச்சாரத்துக்கு ஏத்த மாதிரி எடுத்தா எப்படி இருக்கும்? அந்த ஒரு கேள்விக்காகத்தான் நானும் படம் பார்த்தேன். கதைப்படி அம்மா இல்லாத ஒரு பெண் குழந்தை அவங்க அப்பா கூட சந்தோஷமா இருக்கறப்ப சித்தியா 2 குழந்தையோட ஒரு மே...

AMERICAN PIE-REUNION REVIEW

Image
அன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாளாகி விட்டது விமர்சனம் எழுதி, சரி இன்று கலக்கலாக ஒரு படத்தை பார்த்து விடுவோம், American Pie Reunion எத்தனை பேர் இந்த படத்தினை எதிர்பார்த்து காத்திருந்தீர்கள்? சரி எத்தனை பேர் இப்படத்தின் முந்தைய 7 பாகங்களை பார்த்துள்ளீர்கள்? பார்க்கலைனா உங்க இளமை காலத்தை சரியா நீங்க அனுபவிக்கலைனு அர்த்தம். நான் இந்த படத்தோட 4 வது பார்ட் அ பார்த்துட்டு 2 நாள் சிரிச்சு தேடி அலைஞ்சு மீதி 7 பார்ட்டையும் பார்த்தேன், 8 வதா இந்த REUNION பார்ட் வந்துருக்கு. நம்ம கூடவே வளர்ந்த, படிச்ச பள்ளி நண்பர்களை பிரிஞ்சு 8 வருசம் கழிச்சு சந்திச்சா எப்படி ஒரு உணர்வு வருமோ அப்படித்தான் இந்த படம் பார்க்கும் போது இருந்தது. ஹைஸ்கூல்ல சேரும் போது இவங்க பன்ற அலம்பல்ல ஆரம்பிச்சு ஒவ்வொருத்தரும் எப்படி காதலிச்சு கல்யாணம் பன்னிக்கறாங்க? அதுல எவ்வளவு கலாட்டானு கேப் விடாம சிரிக்க வச்சு 7 பார்ட் அ முடிச்சுருப்பாங்க.   இந்த படத்தோட எல்லா சீரியஸ்லயும் போரடிக்காம கொண்டு போற கேரக்டர் நம்ம ஸ்டிஃப்லர் தான். இந்த பார்ட்லயும் தல பின்னிருக்கார், இந்த படங்களை தமிழ்ல விட்டா கண்டிப்பா இவருக்கு ர...

"நான் ஈ" நாயகனின் காதல் கலாட்டா "Ala Modalaindi"- REVIEW

Image
அன்பர்களுக்கு வணக்கம், கல்யாணம் ஆகற வரைக்கும் காதல் படம் பிடிக்கும், ஆனதுக்கு அப்புறம் திகில் படம்தான் பிடிக்கும்னு என் நண்பன் ஒருத்தன் சொன்னான், அவனுக்கும் இன்னும் ஆகலை, இருந்தாலும் எதுக்கும் கல்யாணத்துக்கு முன்னமே தெரிஞ்ச காதல் படங்களை பார்த்துருவோம். இன்னைக்கு நாம பார்க்கப் போற படம் "Ala Modalaindi". எனக்கும் சொல்ல வரலை.  படத்தோட ஹீரோ நம்ம "நான் ஈ" புகழ் நானிதான். ஹீரோயின் நம்ம 180 பட புகழ் 'நித்யா மேனன்'. இவங்க 2 பேரும் ஜோடியா ஒரு தமிழ் படத்துல கூட நடிச்சுருக்காங்க படம் பேர் 'வெப்பம்'. படம் மொக்கை, ஆனா ஒரு பாட்டு செமையா இருக்கும். "மழை வரும் அறிகுறி". முடிஞ்சா கேளுங்க. சரி கதைக்கு போவோம், நம்ம தில் 'ஆஷிஸ் வித்யார்த்தி துப்பாக்கி முனையில நம்ம ஹீரோவ கடத்தறதுதான் ஆரம்பம். போரடிக்கறதால அவரே உன் காதல் பத்தி சொல்லுன்னு ஃப்ளாஸ்பேக் அ கேட்டு வாங்கறார். தன்னோட பழைய காதலியோட கல்யாணத்துக்கு போய் குடிச்சுட்டு புலம்பறப்ப கூட யாரோ புலம்பற சத்தம் கேட்க யார்னு பார்த்தா நம்ம நித்யா, அவங்களும் பழைய லவ்வர் அ பறி குடுத்துட்டு நிக்க...

கலக்கல் ஆவி- காமெடிப்படம் - GHOST TOWN- REVIEW

Image
அன்பர்களுக்கு வணக்கம், அனைவராலும் ரசிக்க கூடிய படங்களுடைய முடிவு பெரும்பாலும் சுபமாகத்தான் இருக்கும், அனைவரது மனமும் மகிழ்ச்சியைத்தான் விரும்புகிறது. ஹாலிவுட்டிலும் அதனால்தானோ என்னவோ குறைந்த செலவில் எடுக்கப்படும் ROMANTIC COMEDY படங்கள் சக்கை போடு போடுகின்றன. அந்த வகையான் படங்களில் FANTASY கலந்திருந்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியான ஒரு படம்தான் "GHOST TOWN".  கதையின் நாயகன் ஒரு பல் மருத்துவர், தனிமை விரும்பி, எந்த அளவுக்கு என்றால் யாராவது உதவி கேட்டால் கூட கழண்டுக் கொள்வார், எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். இவரது அப்பார்ட்மென்ட்டில் தான் நாயகியும் வசிக்கிறார். ஒரு நாள் கிட்டத்தட்ட தற்கொலை முயற்சி போல் ஏதோ ஒன்று செய்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைக்கிறார்.  அடுத்தடுத்த நாட்களில் அவர் கண்களுக்கு இறந்தவர்கள் தெரிய ஆரம்பிக்கிறார்கள். அவர்களுக்கு இவரால் தங்களை பார்க்க முடியும் என்ற விசயம் தெரிய வந்ததும் ஒவ்வொருவரும் தங்களது கடைசி ஆசையை தீர்த்து வைக்க சொல்லி பின் தொடர்கிறார்கள். தனிமை விரும்பிக்கு ஒரு கூட்டமே பின் தொடர்ந்...

மாற்றான் படக்கதை இதுவாகவும் இருக்கலாம்-STUCK ON YOU-REVIEW

Image
அன்பர்களுக்கு வணக்கம். மாற்றான் படம் வந்தது முதலே இனையங்களில் அது "STUCK ON YOU" படத்தின் தழுவல் என்று பரப்பப் பட்டு வருகிறது. மற்ற பதிவர்கள் எந்த திரப்படம் வந்தாலும் முதல் நாளே பார்த்து விமர்சனம் எழுதுகிறார்கள், அந்த வேகம் எனக்கு வராது, அதனால் தான் அதிகமாக மற்ற மொழிப் படங்களை விமர்சித்து வருகிறேன்.  அதில் ஒரு புது முயற்சியாகத்தான் இந்த படத்தின் விமர்சனம், அனைவரும் சொல்வது போல் இந்தக் கதை மாற்றான் படத்தின் கதையாகவும் இருக்கலாம். ஏதோ ஒரு வகையில் என்னை இந்த படம் பார்க்க வைத்த கே.வி. ஆனந்த் மற்றும் இனைய நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனேனில் அருமையான படம்.   படத்தின் துவக்கத்திலேயே கதையின் நாயகர்கள் இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என தெரிந்து விடுகிறது. இருவரும் ஒரு சிறிய ஊரில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார்கள். அவர்களது கடையில் ஒரு சிறப்பு, PIZZA போல் சொன்ன நேரத்தில் ஆர்டர் செய்ததை தராவிட்டால் இலவசமாக சாப்பிட்டுவிட்டு செல்லலாம். சிறு வயதில் இருந்து அந்த ஊரில் இருப்பதால் ஊர் முழுக்க நண்பர்கள். அண்ணன் தம்பி என்று பிரித்துக் கொள்வோம், அண்ணன் ...

CRAZY,STUPID,LOVE - MOVIE REVIEW

Image
அன்பர்களுக்கு வணக்கம், ஏனோ தெரியவில்லை, பல த்ரில்லர் படங்கள் எடுத்து வைத்தாலும் என் மனம் எப்போதும் காதல், நகைச்சுவை படங்களை நோக்கியே செல்கிறது. ரொமென்டிக் காமெடி வகையில் உலக அளவில் அதிக வசூல் செய்த படத்தை பற்றித்தான் இன்று பார்க்கப் போகிறோம். CRAZY,STUPID,LOVE.  படத்தில் எடுத்தவுடன் ஒரு தம்பதிகளை காட்டுகிறார்கள், இருவரும் A 40YEAR OLD VIRGIN படத்தில் இனைந்து நடித்தவர்கள். இருவரும் விவாகரத்தை பற்றி பேசுகிறார்கள், காரணம் மனைவிக்கு வேறு ஒருவருடனான தொடர்பு. கடுப்பில் மனிதன் ஓடும் காரில் இருந்து குதித்து விடுகிறான் என்றால் பாருங்கள். அவர்கள் வீட்டில் அவர்களது 13 வயது சிறுவன் தன்னை விட 8 வயது பெரிய பென்னை காதலிக்கிறான். அந்த பென்னோ நம்ம ஏமாந்த ஹீரோ (45 வயசு)வ காதலிக்கறா. இதுதான் கதைக்களம். சரி நம்ம விமர்சனத்துக்கு வருவோம். பொன்டாட்டி தப்பு பன்றானு தெரிஞ்சதுக்கப்புறம் அவன் செவ்வாய் கிரகத்து ஏலியனா இருந்தாலும் டாஸ்மாக் போகனும்ங்கறது விதி, நம்ம வயசான ஹீரோவும் அங்கன போய் புலம்பிட்டு இருக்கார். அங்கதான் இன்னொரு சின்ன வயசு ஹீரோ வர்ரார், அவருக்கு பொழப்பு என்னன்னா...