2 CBI ஒரே பொன்னை காதலித்தால்?-THIS MEANS WAR திரை விமர்சனம்
அன்பர்களுக்கு வணக்கம், மீண்டும் கலகலப்பான காதல் படங்களை பார்க்க நினைத்து இன்றொரு படம் பார்த்தேன், ஆனால் படம் KNIGHT & DAY போல் ஆக்சன் காமெடி, ஆனால் கதைக்களம் சூப்பர். வாங்க நேரா படத்துக்கு போலாம்.
படத்தோட ஆரம்பத்துல 2 ஏஜென்ட்ஸ் ஒரு வில்லனை பிடிக்க போறாங்க, ஆரம்பத்துலயே பிடிச்சுட்டா அப்புறம் யார் க்ளைமாக்ஸ்ல வந்து பழி வாங்குவானு அவனை விட்டுட்டு அவன் சொந்தகாரங்க எல்லாரையும் போட்டு தள்ளிடறாங்க.
இந்த 2 ஏஜென்ட்ல ஒருத்தனுக்கு 7 வயசு பையன் இருக்கான், ஆனா வீட்டுகாரம்மா கூட செட் ஆகலை, புதுசா ஒரு பொன்னை தேடி நெட்ல அலையறான். இங்கதான் நம்ம ஹீரோயின் அறிமுகம், ஹீரோயின் வேற யாருமில்லை, நம்ம THERE'S SOMETHING ABOUT MARRY படத்துல நடிச்சவங்கதான். யாருக்குதான் ஆசை வராது.
இன்னொரு ஏஜென்ட் நம்மளை மாதிரி பிரம்மச்சாரினு சொல்லிகிட்டே ஊர்ல இருக்க எல்லார்கிட்டயும் கடலை போடற பார்ட்டி. ஒரு வினோதம் பாருங்க , 2 பேரும் சொல்லி வச்ச மாதிரி 2 ஹீரோவும் ஒரே நாள்ள ஹீரோயின் கூட கடலை போட்டு மனச பறி குடுத்துடறாங்க.
அடுத்த நாள் 2 பேருக்கும் ஒரு பொன்னு பின்னாடிதான் 2 பேரும் சுத்தறோம்னு தெரிஞ்சுருது. வழக்கம்போல டீல் வச்சுக்கறாங்க, 2 பேரும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்க கூடாது, போட்டு குடுக்க கூடாது, செக்ஸ் வச்சுக்க கூடாதுனு ஜென்டில் மேன் அக்ரிமென்ட் லாம் போட்டுக்கறாங்க.
ஆனா கையில பவர் இருக்கறப்ப சும்மா இருக்க முடியுமா? 2 பேரும் தங்களோட சிபிஐ புத்தியையும், டெக்னாலஜியையும் பயன்படுத்தி ரகசியமா ஹீரோயினோட ஒவ்வொரு அசைவையும் கண்காணிச்சு ஒட்டு கேட்டு தங்களுக்கு சாதகமா பயன் படுத்திக்கறாங்க.
அதே நேரத்துல அடுத்தவன் காதலையும் கெடுத்துக்கறாங்க. இப்படியே போய்ட்டு இருந்தாலும் ஹீரோயின் நம்ம பிரம்மச்சாரி பையன்கிட்ட கவுந்துருது. 2 பேருக்குள்ள எல்லாமே முடிஞ்சுருது. இதனால பொறாமைலேயே இன்னொருத்தனும் நடத்திடறான்.
இப்பதான் வில்லன் பழி வாங்க வர்ரான், சாதாரணமா போலிஸ் தான் க்ளைமாக்ஸ்ல வரும், இது போலிஸ் லவ் ஸ்டோரிங்கறதால வில்லன் க்ளைமாக்ஸ்ல வந்து சண்டை போட்டு ஹீரொங்களை சேர்த்து வச்சுட்டு ஹீரோயின்களுக்கும் புத்திய வர வச்சுட்டு யார் பெத்த் புள்ளையோ அநியாயமா செத்துடுது?
க்ளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் இருக்கு, அதை படம் பார்த்து தெரிஞ்சுக்கங்க. படத்துல அங்கங்க ஆக்சன் வச்சுருக்காங்க, போரடிக்காம அதை முடிச்சுடறாங்க.
படம் ஆரம்பத்துலருந்து போரடிக்காம போய்கிட்டே இருக்கு, 2 நெருங்கிய நண்பர்கள்கிடையிலே ஒரு அழகான பொன்னு வந்தா என்ன ஆகும்னு செமயா சொல்லிருக்காங்க, ரசிச்சு சிரிச்சு பார்க்க வேண்டிய படம். மிஸ் பன்னிடாதிங்க.
படத்தோட ட்ரெய்லர்
மறக்காம கமெண்ட்டும், கீழே இருக்க பட்டன்களை அழுத்தி ஓட்டை போட்டுட்டு அப்படியே முக நூல்ல பகிர்ந்துக்கங்க.
Comments
Post a Comment