சாரல் காலம் 2
சாரல் காலம் #0 / #1 / #2 / #3 / #4 ======================================================== கனவு கண்டதையெல்லாம் காதலியிடம் மட்டும் தான் கூறுப் போவதாய் ஹரி இருக்கையில் அது என்ன கருமமா இருந்தா நமக்கென்ன? அடுத்து என்ன நடக்க போகுதுனு பார்ப்போம், ஆனா ஒன்னு தெரிஞ்சுக்கங்க, ஹரி ஏதோ முதல் முதலா ஒரு பொன்னை பார்த்து காதல் வயப்பட்டு கற்பனைக்கு போய்ட்டதா நினைக்க வேண்டாம். ஏதாவது கொலை கேஸ்ல தப்பா அவனை பிடிச்சு போய் போலிஸ் ஸ்டேசன்ல சட்டைய கழட்டி உட்கார வச்சிங்கன்னா கூட அங்க இருக்க ஏதாவது ஒரு லேடிய ஒரே ஒரு தடவை பார்த்துட்டு கண்ணை மூடிட்டு கனவுக்கு போயிருவான். "ஹலோ" "ஹலோ" "எனக்கு இளையராஜா பாட்டு பிடிக்கும்" "எனக்கும் தான்" "எனக்கு கௌதம் மேனன் படம்னா ரொம்ப பிடிக்கும்" "எனக்கும் தான்" "எனக்கு உங்களை பிடிச்சுருக்கு" "எனக்கும் தான்" தம்தன தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும்.... பாட்டு முடியறப்ப இவன் எந்த பொன்னை நினைச்சு கனவு கண்டானோ அது ஃப்ரேம்லயே இருக்காது, வேற யாரு...