உதயம் NH4 விமர்சனம்
அன்பர்களுக்கு வணக்கம், ஒரு படம் பிடிக்கலைன்னா கண்டிப்பா நான் விமர்சனம் எழுத மாட்டேன். எனக்கு அந்த படத்துல பிடிச்ச விஷயங்களைத்தான் விமர்சனங்கற பேர்ல எழுதுவேன். இன்னைக்கு நாம பார்க்க போற படம் உதயம் NH4. தியேட்டர் மேச்சேரி KS தான், 9 மணிக்கு முடிவு பண்ணி, சாப்பிட்டு பொறுமையா டீ சர்ட், லுங்கியோட வீட்லய தண்ணிர் பாட்டில் எடுத்துகிட்டு நடந்து நண்பனோட போனேன், டிக்கெட் 40 ரூபாய் தான், என்னா கரன்ட் போனா ஜெனரேட்டர்க்கு மாத்தறப்ப 2 நிமிஷம் காத்திருக்கனும். உள்ளே போறப்பவே சித்தார்த் அ போஸ்டர்ல பார்த்தேன், அப்படி எதை பார்த்து சமந்தா மயங்கி இருக்கும்? படம் ஆரம்பிச்சதும் உதய நிதி ஸ்டாலின் பேர் போட்டதுக்குலாம் 4 உடன் பிறப்புகள் கைத்தட்டுனாங்க, வெற்றி மாறன் பேருக்கு நான் ஒருத்தன் தான் கை தட்டுனேன். படம் ஆரம்பிக்கும் போதே பொன்னை தூக்கறாங்க, நாடோடிகள் போலனு பார்த்தா ஏதோ மங்கத்தா ரேஞ்சுக்கு ஒழுங்கா கேட்காத மாதிரி ப்ளான் போட்டாங்க, சரி ஏதாவது புதுசா இருக்கும்னு பார்த்தேன், பழச கழுவி சுத்தமா கொடுத்துருக்காங்க. கடைசி எக்சாம் முடிஞ்சதும் ஹீரோயின் அ பாத்ரூம் ஜன்னல் வழியா கடத்தறத யூகி...