Posts

Showing posts from August, 2013

ஆதலால் காதல் செய்வீர் - கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், நீண்ட நாள் கழித்து தமிழில் உலக சினிமா, உலக சினிமா என்பதன் வரையரை பெரிதாய் ஒன்றுமில்லை, அப்படமெடுக்கும் பகுதியின் மக்களின் வாழ்வியலை பதிவு செய்தலே, அந்த வகையில் கட்டாயம் "ஆதலால் காதல் செய்வீர்" உலகப்படமே... கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு வந்த பில்லா படத்தை ரீமேக் செய்து அதில் வரும் பில்லாவின் கடந்த காலத்தை இரண்டாம் பாகமாக எடுத்தார்கள், அதே போல் "புதிய பாதை" என்றொரு படம் வந்தது, அனைவருக்கும் நினைவிருக்கும், அப்படத்தில் வரும் பார்த்திபன் கதாபாத்திரம் இவ்வழியில்தான் பிறந்திருப்பார் என கூறலாம்...   முக்கியமாக படத்தில் எதற்கு காதலிக்கிறோம் என்று யோசிக்காமலே "வெறுமனே கூட பழகியவன் பைக் மட்டும் வைத்திருந்தால் காதலிக்கலாம் கட்டிப்பிடித்து ஊர் சுற்றலாம்" என எண்ணும் தற்கால பெண்களின் மனநிலையை இயக்குனர் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். அதே போல் ஆண்களும் அழகாய் இருந்தால் போதும் என்றும், பெண்களை காதலிக்க வைக்க எந்த வித முட்டாள்தனமும் செய்ய தயாராய் இருப்பதையும் காட்டியுள்ளார், முதல்பாதி மிக அருமை, இக்கணத்தில் தமிழக...