22 FEMALE KOTTAYAM திரை விமர்சனம்
அன்பர்களுக்கு வணக்கம், என்னவோ எப்போது பார்த்தாலும் வேறு மொழிப் படங்களை பற்றி எழுதுவதற்குதான் நேரம் அமைகிறது, ஏற்கனவே வாங்கி வைத்து ரொம்ப நாள் பார்க்காமல் இருந்து பார்த்த படம், எனக்கு அறிமுகப்படுத்தியது " வல்லத்தான் ". படத்தின் பெயர் 22 FEMALE KOTTAYAM. படத்தின் ஆரம்பத்திலேயே தெரிந்து விடுகிறது, ஏதோ ஒரு த்ரில்லர் வகை என எதிர்பார்க்கும் பொழுதே கதை நாயகியின் அறிமுகப்பாடலில் மனம் லேசாகிறது, கொச்சினில் ஒரு பெரிய மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் நாயகிக்கு வெளி நாட்டில் சென்று வேலை பார்க்கும் ஆசை உண்டு. அதற்காக வீசா அப்ளை செய்து வாங்கி குடுக்கும் நிறுவனத்தில் நாயகனை சந்திக்கிறாள். கதையோடு நர்ஸ்களின் வாழ்க்கை பற்றியும் சொல்கிறார்கள். வீசா கிடைத்தற்காக ஹீரோவுக்கு ட்ரிட் தரும் பொழுது நிறைய குடித்த ஹீரோயின் தெளிவாக இருப்பதும் போதையேறிய ஹீரோவினை வீட்டில் கொண்டு விடுவதும் நல்ல ரசனைக்குரிய இடங்கள். அதன் பின் கொஞ்சமாய் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கிறது, காதலாகிறது. ஹீரோ ஏதோ சொல்ல வரும் நேரத்தில் டக்கென்று "I AM NOT A VIRGIN" என ஹீரோயின் ப...