சாரல் காலம் 14
சாரல் காலம் - முந்தின பாகங்கள் #0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9 / #10 / #11 / #12 / #13 / #14 / !5 ----------------------------------------------------------------------------------------------------------------- பெண்கள் அனைவரும் தயாராகி வெளிப்புறம் வந்தனர், எவ்வளவு மோசமான குணமுடைய பெண்ணையும் நமது பசங்களால் புடவை கட்டி கொண்டு வரும் பொழுது ரசிக்காமல் இருக்க முடியவில்லை, அதுவும் கன்னனால் வாயை மூடிக் கொண்டு இருக்க முடியவில்லை. கன்னன் "அம்மாடி, டேய் இதெல்லாம் நம்ம காலேஜ் பொன்னுங்களாடா?" மாதேஸ் "உனக்கெதுக்கு அந்த சந்தேகம்?" கன்னன் "அழகா இருக்காங்களே அதான் என் கண்ணுல எவளுமே ஒரு நாள் கூட பட்டதில்லையே" மாதேஸ் "டேய் கன்னா, 9 மணி காலேஜ்க்கு 9.30க்கு வர வேண்டியது, எல்லோருக்கும் 5 மணிக்கு காலேஜ் முடியுதுனா கடைசி பீரியட் கட் அடிச்சுட்டு 4 மணிக்கே ஓடுனா எப்படிடா பார்க்க முடியும்?" கன்னன் "டேய் நீங்களும் தான்டா என் கூட வர்ரீங்க போறிங்க, உங்க கண்ணுல மட்டும் எப்படி சிக்குது?" மாதேஸ் "நாங்க அத...