தனித்திரு - 9
முந்தைய பாகங்கள் #1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9 -------------------------------------------------------------------------------------------------------------- அடுத்த நாள் கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி ஒன்றாக வருகையில் என்னால் திருவை நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை. அவன் என்னுள் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்து ‘என் ஒரு மாதிரி இருக்க?' எனக் கேட்டான். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எனக்கு ஒரு விஷயம் தெளிவாய் புரிந்தது. இதற்கு மேல் என்னால் முன்பு போல் திருவிடம் இயல்பாய் பேச முடியாது. காதலை சொல்லியே ஆக வேண்டும். “திரு” “சொல்லு” “சொன்னா கோவிச்சுக்க கூடாது?” “சொல்லு” “நான் உன்னை காதலிக்கறேன்” அவன் நிமிர்ந்து என் முகத்தை பார்த்தான். அந்த பார்வையில் அவன் என்னிடம் இதை எதிர்பார்க்கவில்லை என தெரிந்தது. “என்ன திடிர்னு?” “நேத்துதான் எனக்கே தெரிஞ்சது” “நான் என்ன சொல்லனும்னு எதிர்பார்க்கற வரலட்சுமி?” “உனக்கு என்ன தோணுது?” “நான் எதாவது சொன்னா உன் மனசு கஷ்டபடுமோனு பயப்படறேன்” “பரவாயில்லை சொல்லு” “எனக்கு உ...