குவாரி கொள்ளையில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. குடும்பம்?

மதுரை, மேலூர் பகுதியைச் சுற்றி பல கிலோ மீட்டர்கள் தூர பகுதிகள் வளைக்கப்பட்டு, சட்டத்துக்குட்பட்டும்... சட்டத்துக்கு விரோதமாகவும் குவாரிகள் அமைக்கப்பட்டு பல லட்சம் கோடி ரூபாய்கள் சுருட்ட பட்டுள்ளன. நேற்றைய ஆளுங்கட்சி... இன்றைய ஆளுங்கட்சி என்று எல்லா கட்சிகளும் மூட்டை மூட்டையாக பணத்தை வாங்கிக் கொண்டு இந்தக் கொள்ளைக்கு துணை போயிருக்கின்றன. இதன் காரணமாக வயல்வெளிகளும், கண்மாய்களும் காணாமல் அடிக்கப்பட்டுள்ளன.


இதனால் நொந்து போன சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் என்று பலரும் மனுயுத்தம் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்! ஜூனியர் விகடன் உள்ளிட்ட பத்திரிகைகளிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாகவே கட்டுரைகள் எழுதப்பட்டு வருகின்றன. இந்நிலையில்... திடீர் என்று சமீப காலமாக குவாரி கொள்ளையர்கள் மீது நடவடிக்கை பாய்ந்து கொண்டிருக்கிறது.

‘அதன் பின்னணி என்னவாக இருக்கும்?’ என்கிற ஆராய்ச்சி ஒருபுறமிருக்க... குவாரி கொள்ளைக்கு எதிராக போராட்டங்களை நடத்திவரும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இதைப் பார்த்து பெரு மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தா.பாண்டியன், 'இந்த நடவடிக்கைகள் வரவேற்கத் தக்கது. மேலும் கடும் நடவடிக்கை தேவை' என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவருடைய கட்சியைச் சேர்ந்த தளி தொகுதி எம்.எல்.ஏ-வான ராமச்சந்திரன் கொலை வழக்கில் கைதாக, கூடவே குவாரி ஊழல் ஒன்றிலும் அவரை தொடர்புபடுத்தி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

இதையடுத்து, பொங்கி எழுந்துவிட்ட தா.பாண்டியன், சென்னையில் கடந்த செவ்வாயன்று (ஆகஸ்ட் 21), 'கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது போலீஸ் அடாவடி நடவடிக்கை எடுக்கிறது. எங்கள் பெண்களை மிரட்டுகிறது' என்றெல்லாம் சொல்லி போராட்டம் நடத்தியிருக்கிறார். கூடவே, 'ராமச்சந்திரனின் குடும்பத்தினர் லைசென்ஸ் பெற்று குவாரி நடத்துகின்றனர். அதற்கும், ராமச்சந்திரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்றும் கூறியிருக்கிறார் (என்ன ஒரு கண்டுபிடிப்பு!).

மதுரையில் பல லட்சம் கோடிகளுக்கு கிரானைட் கற்களை சுரண்டியிருக்கும் பி.ஆர்.பி. கூடத்தான் லைசென்ஸ் பெற்று குவாரியை நடத்தி வந்தார். பிறகு எதற்காக அவர் மீது மட்டும் குற்றம்சாட்டி இவருடைய கட்சி போராட்டமெல்லாம் நடத்தியது?
மருமகள் உடைத்தால் பொன்குடம்... மாமியார் உடைத்தால் மண்குடமா?

பின்குறிப்பு: சென்னையில் போராட்டம் நடத்திய கையோடு, முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துத் திரும்பிய தா.பாண்டியன், ‘இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்பாக அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து கூட்டு இயக்கம் நடத்த கோரிக்கை வைத்தேன். முதல்வர் ஏற்றுக் கொண்டார்' என்று கூறியுள்ளார்.

நன்றி: விகடன்

Comments

  1. பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2