Posts

Showing posts from April, 2015

மாதொருபாகன்,ஆலவாயன் & அர்த்தநாரி – பெருமாள் முருகன்

நடந்த கலவரங்களில் தமிழ்நாடு முழுக்க இவரை அறியும். கூகுளில் எழுத்தாளர் என அடித்தால் இவர் பெயர் உடன் வரும் அளவுக்கு கொஞ்ச நாள் தலைப்பு செய்தியாக இருந்தார். நடந்த பிரச்சனைகளை பற்றியோ, எது சரி, தவறு என்பது பற்றியோ பேச போவதில்லை. இப்பதிவின் நோக்கம் “மாதொருபாகன்- ஆலவாயன் – அர்த்தநாரி” புத்தகங்களை பற்றியது. பலர் இப்புத்தகத்தை அறிமுகப்படுத்தி இருந்த போதும் பெருமாள் முருகனை நோக்கி பல சங்கங்கள் கல்லெறிய துவங்கிய போதுதான் மாதொருபாகனை வாங்க நெர்ந்தது. வாங்கும் பொழுது அதன் தொடர்ச்சியாக இரண்டு புத்தகங்களின் வெளியீடும் நடந்தது, எனவே அந்த புத்தகங்களையும் வாங்கினேன். நீங்கள் வக்கிரம் என நினைத்தால் வக்கிரமாகவும் எதார்த்தமாக நினைத்தால் எதார்த்தமாகவும் தெரியும் பல விஷயங்களை எழுத்தாளர் தைரியமாய் எழுதி இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் என்றால் காளியின் சித்தப்பா நல்லுப்பிள்ளை தான். ஊரே குடுமி வைத்திருக்கும் பொழுது கிராப் வெட்டிக் கொள்வதில் துவங்கி, சொத்துக்களை பிடுங்கி கொள்ள பார்க்கும் தம்பிகளை பஞ்சாயத்தில் சமாளிப்பதிலும், அதே சொத்துக்காக கடைசி தம்பி தனது மனைவியை கூட்டிக் கொட...