ICE AGE 4 - திரை விமர்சனம்
அன்பர்களுக்கு வணக்கம், இதற்கு முன்பு வந்த இப்படத்தின் 3 பாகங்களையும் திரையரங்கிற்கு சென்று பார்க்காதவர்கள் கூட தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பும் போது கட்டாயம் பார்த்திருப்பீர்கள், அதிலும் தமிழ் வசனம் பேச வைத்து செம கலாட்டாவாக எடுத்திருப்பார்கள். அதனாலோ என்னவொ சிறியவர்கள் முதல் பெரியவர்கல் வரை அனைவரும் இந்த படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். பேட் மேன் 3 சொதப்பலாலோ என்னவோ சற்று ஆர்வம் குறைந்திருந்தது.
முதல் 3 பாகங்களில் மேனி என்ற யானைக்கு தன் நண்பர்களான அணில், புலியுடன் சுற்ற ஆரம்பித்து காதலித்து கல்யாணம் செய்து குழந்தை பெற்று கொள்வது வரை காட்டிருப்பார்கள், அதிலேயே நாம் ரசிக்கும் வண்ணம் அனிமேஷனில் உலகின் பரிணாம மாற்றங்களையும் பருவ மாற்றங்களையும் விளக்கியிருப்பார்கள். அந்த வகையில் இந்த படத்தில் அவர்கள் கையில் எடுத்திருப்பது கண்டங்கள் பிரிவதை.
மேனியின் மகள் இப்போதைய வயதுக்கு வந்த பெண்களை போல் வீட்டிற்கு அடங்க மறுத்து சுற்ற விரும்புவது, அப்பாவான மேனி அதனை கண்டிப்பதையும் பார்க்கும் போது ஒன்று தோன்றுகிறது, உலகம் ஆரம்பிச்சதலிருந்தே அப்பாக்கள்னா அப்படித்தானா?
அப்புறம் சின்னதா ஒரு அணில் ஒரு ஓட்ரி பழத்துக்காக அலையுமே, வழக்கம் போல அதை வைத்துதான் கண்டங்கள் பிரிந்ததாக காட்டிருக்கிறார்கள். அப்படி பிரியும் போது மேனி, டியொகோ, சிட், அதனோட பாட்டினு நினைக்கறேன், தனியா ஒரு பனிப்பாறைல மாட்டிக்கறாங்க, எப்படியும் குடும்பத்தோட போய் சேர்ந்தடனும்னு மேனி படற அவஸ்தையை பார்க்கும் போது அவசியம் கல்யாணம் பன்னனுமானு தோணுது?
ice age னாவே வித்தியாசமா நாம் பார்க்காத விசயங்களை காட்டுவாங்கனு எதிர்பார்த்தா பைரெட்ஸ் ஆஃப் கரிபியன் பட கேரக்டர்ங்களை அனிமேஷன்ல மாத்தி களம் இறக்கனது எனக்கு பிடிக்கலைங்க, ஏன்னா அவங்களோட அடுத்த மூவ் என்னவா இருக்கும்னு யூகிக்க முடியுது?
அந்த கொள்ளைக்கூட்ட தலைவனா வர்ர குரங்கு பன்ற வில்லத்தனத்தை பார்க்கும்போது நம்ம ஊர் ஆயிரத்தில் ஒருவன் நம்பியார் மாதிரியே இருக்கு, இந்த படத்தோட ஸ்பெசல் என்னன்னா தனியா இருந்த புலிக்கு ஒரு ஜோடி கிடைச்சுருக்கு, மனசுல இருக்க ஆசைய சொல்லாம ரெண்டுங்களும் சண்டையா போட்டுகிட்டு இருக்குங்க.
இது எல்லாத்தையும் மீறி எப்படி மேனியோட குடும்பம் ஒன்னு சேருது, டியாகோவோட காதல் என்னாகுது, ஓட்ரி பழத்துக்கான புதையல் மேப் அ வச்சுகிட்டு தேடற அணிலுக்கு கடைசியா என்ன ஆகுது, எல்லாரையும் மிரட்டிட்டு இருந்த வில்லன் குரங்குக்கு என்ன ஆகுதுங்கறத படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க,
வழக்கம்போல படத்துல லொடலொடனு பேசிகிட்டு இருக்க சிட்டோட கேரக்டருக்காவே படத்தை பார்க்கலாம், ஆசையா பேச தடுமாடற டியோகோக்கு நடுவுல பூந்து பூமாலை போட்டு காலாய்க்கறதுனு கலக்கிருக்கு, கடல் மட்டம் ஏறி இறங்கி புதுசா கண்டங்கள் உருவாகற அனிமேஷன் அருமை.
முந்தைய படங்களோட ஓப்பிட்டு பார்த்தா இதுொரு மாற்று குறைவுதான், இருந்தாலும் பார்க்கலாம், போரடிக்காது.
படத்தோட ட்ரெய்லர்
மறக்காம தமிழ்10ல ஓட்டு போட்டுடுங்க, பிடிச்சுருந்தா நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.
நம்மூருல இப்பத் தான் 3டில ரிலீஸ் ஆகியிருக்கு. போகணும்.
ReplyDeleteநல்ல விமர்சனம்.
இன்னும் பார்க்கவில்லை...
ReplyDeleteவிமர்சனம் நல்லா இருக்கு...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
படம் பார்க்கும் வாய்ப்பு எனக்கில்லை. ஆனா நீங்க பார்த்த நான் பார்த்த மாதிரி தானே? அருமை தோழா.
ReplyDeletehi
ReplyDelete