Posts

Showing posts with the label எனது அனுபவங்கள்

ஒரு கைதியின் டைரி

எனக்கு தெரிந்து யாரிடமும் இந்த பழக்கம் இல்லை, யாரை பார்த்து ஆவல் கொண்டேன் என்றும் தெரியவில்லை, எட்டாம் வகுப்பில் இருந்தே எனக்கு டைரி எழுதும் ஆவல் இருந்தது. ஒன்பதாவது படிக்கையில் என் தந்தைக்கு LICல் கொடுத்த டைரியை வைத்து நான்கு நாட்கள் எழுதி இருப்பேன், படிக்காமல் காதல் கவிதை எழுதுகிறான் என புகார் போனது. நான் அதற்கென தனியாக ஒரு குயர் நோட்டு வாங்கி வைத்து எழுதி கொண்டிருப்பது வீட்டிற்கு தெரியாது, ஆனால் பாவம் கவிதை நோட்டை காப்பாற்றுவதற்கு வேறு வழி தெரியாமல் டைரியை அப்பாவிடம் பழி கொடுத்தேன், அவர் அதை எரித்து விட்டு படிப்பை கவனிக்க சொன்னார், நான் நல்ல பிள்ளையாக கவிதைகளில் பயிற்சி எடுத்து கொண்டிருந்தேன்… பின்னர் 2005ம் வருடம் கல்லூரி விடுதியில் நிறைய நேரமும் தனிமையும் கிடைக்க முழுமையாய் டைரி எழுத துவங்கினேன். அதுவும் ஆங்கிலத்தில். ஏனேனில் நான் +2 வரை தமிழ்வழிக்கல்வியில் பயின்றவன். பொறியியல் படிப்பினை ஆங்கிலத்தில் எதிர்கொள்ள சிரம்ப்பட்டேன். டைரியை ஆங்கிலத்தில் எழுத முயற்சித்தால் நண்பர்கள் உதவியுடன் அம்மொழியினில் தேறலாம் என முயன்றேன், நல்ல பலனும் கிடைத்து. அடுத்த வருடம் முதல்...

மகாதேவன் - கரை சேர்ப்பாளன்

Image
அன்பர்களுக்கு வணக்கம், நேற்று எங்கள் கல்லூரியில் புதிதாய் வந்திருக்கும் பேராசிரியர்களுக்கென ஒரு சுய உந்து நிகழ்ச்சி நடத்தினர், அதில் கோவை பார்க் கல்லூரி முதல்வர் திரு.லக்ஷ்மன் அவர்கள் ஒரு மனிதனை பற்றி மேலோட்டமாக குறிப்பிட்டார், பெயர் கூட கூறவில்லை, செய்யும் வேலையை மற்றவர்கள் மேற்பார்வை செய்கிறார்கள் என்பதற்காக செய்யாமல் தானாக சுயதிருப்திக்காக செவ்வனே செய்பவர்களுக்கு உதாரணமாய் அவரை குறிப்பிட்டார், அந்த மனிதனை பற்றிய விஷயங்கள் என்னை வெகுவாய் பாதித்தது. நமக்குதான் இருக்கவே இருக்கிறதே இணையம், தேடிப் பிடித்தேன், முழுதாய் அறிந்து கொண்டேன். அந்த மனிதனின் பெயர் மகாதேவன். அவரை பற்றிய தகவல்கள் உங்களுக்காக...   பிறந்தது 1961 ஆம் வருடம், கர்நாடகா மைசூரில் அஞ்சுப்புரா என்ற கிராமத்தில் பிறந்த மகாதேவ் தனது 8வது வயதில் பெங்களூர் அரசு மருத்துவமனைக்கு தனது உடல்நலமில்லாத தாயுடன் வந்தார், அவரது தந்தையை பற்றிய தகவல் இல்லை, அரசு மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் மருத்துவமனை வரான்டாவில் தன் தாயை படுக்க வைத்து விட்டு, அக்கம் பக்கமிருந்தவர்களிடமும் சுற்றி இருந்த கடைகளிலும் பசிக்கு தஞ்சமடைந்துர...

"அப்பா, அடிக்காதிங்கப்பா, இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்ப்பா" - தந்தையர் தினம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், இன்று தந்தையர் தினம், அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், பெண்களை பற்றி சொல்லவே வேண்டாம், நாம சாதாரணமா பேசறப்பவே அவங்கப்பா எப்படிலாம் அவங்க மேல பாசமா இருக்காங்கனு சொல்லி வெறுப்பேத்துவாங்க, பசங்கள்ல பாதி பேருக்கு என்னதான் அவங்கப்பா மேல பாசம் இருந்தாலும் 2 பேருக்கும் நடுவுல பெரிய இடைவெளி இருக்கும், படிப்பு முடிஞ்சு வேலைக்கு போக ஆரம்பிச்சதும் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகும்... இன்னைக்கு ஒரு நாள் முழுக்க அவங்கவங்க அப்பா கூட நடந்த நல்லது, கெட்டதை அசை போட்டுகிட்டு இருப்போமே, முதல்ல நான் என் அனுபவங்களை சொல்றேன்.... நான் எங்க வீட்ல 4 வது பையன், கடைக்குட்டி, அப்பா செல்லம், அதனால எங்கப்பா என்னை அடிச்சா இரத்தம் வராத அளவுக்கு தான் அடிப்பார், எங்க பரம்பரைலயே எங்க குடும்பத்துலதான் முதல்முறையா எல்லாரையும் காலேஜ் வரைக்கும் படிக்க வச்சது, எங்கப்பா 5 வது தான், ஆனாலும் 10வது வரைக்கும் நான் படிக்கறப்ப அது கணக்கு பாடமா இருந்தாலும் சத்தமா படிக்க சொல்லி பக்கத்துல உட்கார்ந்து கேட்டுகிட்டு இருப்பார்... எங்கப்பாகிட்ட எனக்கு பிடிக்காத விஷயம் எப்ப எனக்கு பரிட்சை முடிஞ்சு ரி...

வெள்ளைக் குயிலை கண்டறிந்த விஞ்ஞானி - காலேஜ் டைரி 5

Image
அன்பர்களுக்கு வணக்கம், எனது கல்லூரி வாழ்க்கையில் என்னுடன் வாழ்ந்த சில நண்பர்களை காலேஜ் டைரி வாயிலாக அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறேன், அதில் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒரு முக்கியமான ஆளை, அவரது பெயரை கூறுவதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை, ஏன் அவரே தாராளமா எழுதிக்கோ என்றுதான் கூறினார், ஆனால் அவரது பெயரிலேயே என் வகுப்பில் 3 பேர் படித்ததால் அவர்கள் வீட்டில் குழப்பம் வந்து விட கூடாது என்பதற்காக பேரைக் கூறாமல் எழுதுகிறேன், அவர் யார் என் கூற ஒரு அடையாளச் சொல் உள்ளது, அது ஒரு பறவையின் பெயர். குயில். சோனாக் கல்லூரியில் 2008 ஆம் வருடம் படித்து முடித்தவர்கள் அனைவருக்கும் இவரினை நன்றாக தெரியும். முந்தைய பதிவுகளை படிக்காதவங்க படிச்சுருங்க, இல்லை புரியாது. சோனா கல்லூரிக்கு வந்த கெட்ட காலம்- காலேஜ் டைரி பாகம் 1 ஒரு முறை அனைவரும் தேர்வுக்கு அவசரமாக படித்துக் கொண்டிருந்த போது ( சேச்சே நான் இல்லைங்க, மத்தவங்க), இவர் வந்து காமெடி பன்னுவதாக நினைத்துக் கொண்டு வெள்ளையாக இருந்த புறாவினை பார்த்து குயில் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லியதால் அன்று முதல் இவர் அனைவர...

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Image
அன்பர்களுக்கு வணக்கம். என் நண்பன் ஒருவன் சரித்திர நாவல்கள் விரும்பி படிப்பான், அவனது தந்தையுடன் பேசுகையில் அவர் நமது முன்னோர்களையும், கடவுள் வழிபாட்டையும் மறுத்து பேசியது பற்றி குறிப்பிட்டான். அது சம்பந்தமாக அவனிடம் நான் பேசியதை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.  நான் மனிதன் எனக்கு எல்லாம் தெரியும், என்னால எல்லா உயிரினத்தையும் அடிமைபடுத்த முடியும், நான் சக்கரத்தை கண்டு பிடிச்சுட்டேன், நெருப்பை கண்டு பிடிச்சுட்டேன், கம்ப்யுட்டர் கண்டுபிடிச்சுட்டேன்னு வெட்டியா சத்தம் போட்டு பேசறவங்க கடவுளை புரிஞ்சுக்க மாட்டாங்க, எல்லாத்தையும் கண்டுபிடிச்ச மனுசனால 2 நாள் சாப்பிடாம தூங்காம இருக்க முடியுமா? இல்லை 2 நாளைக்கு சேர்த்து சாப்பிட்டு ஒட்டுக்கா தூங்கிட்டே இருக்க முடியுமா? இன்னும் மனுசனால மனுசனையே ஜெயிக்க முடியலைய, பசிச்சா சாப்பிட்டுதான் ஆகனும், தூக்கம் வந்தா தூங்கிதான் ஆகனும், உன்னால ஒன்னும் கட்டுபடுத்த முடியாது, கடவுளை எதுக்கு வணங்கனும்? முதல்ல மனுசன் யாரை வணங்குவான், தன்னை விட வயசுல பெரியவங்களை, அதுக்கு என்ன அர்த்தம்? நான் உன்னை விட சின்னவன், உன் அளவுக்கு நான் இல்லைனு...

ஆடி 1 - கொண்டாட்டம்/தேங்காய் சுட்டிங்களா?

Image
அன்பர்களுக்கு வணக்கம், ஆடி மாசம் இன்னைக்கு ஆரம்பிச்சுருச்சு, இனி எல்லா ஊர்லயும் மாரியம்மன் பண்டிகை நடத்துவாங்க, கூழ் ஊத்துவாங்க, ஆடி 18 வந்தால் காவிரி ஆறு போற பக்கமெல்லாம் அமர்க்கலமா இருக்கும்.  எல்லாத்துக்கும் மேல ஆடி மாசம் எல்லா துணிக்கடைலயும் தள்ளுபடிய நடிகைகளை வச்சு ஊர் முழுக்க சொல்லுவாங்க, எல்லாத்துக்கும் தயாராகுங்க.  உங்க ஊர்ப்பக்கம் ஆடி 1 அ கொண்டாடுவிங்களா? எங்க மாவட்டம்ல தேங்காய் சுடற பண்டிகைனு கொண்டாடுவோம், ஆடி மாசம் முழுக்க அம்மனுக்கு பண்டிகை, ஆடி முதல் நாள் வினாயகருக்கு தேங்காய் சுடற பண்டிகை,  என்னன்னா தேங்காய் வாங்கி உரிச்சு தரைல தேய்ச்சு மொழுமொழுன்னு ஆக்கி ஓட்டை போட்டு உள்ளே வெல்லம், அவுல், கடலை,கடுகுனு என்னென்னமோ ஒரு லிஸ்ட் வச்சு போட்டு குச்சி சொருகி அடைச்சுருவோம். அதுக்கு அப்புறம் டெக்கரேஷன், மஞ்சள், குங்குமம் , கரின்னு விதவிதமா கலர் பூசுவோம், எதுக்குனா ஒரு தெருவுல இருக்க எல்லாரும் ஒன்னா ஒரே நேரத்துலதான் தேங்காய் சுடுவோம். அப்ப யாரோட தேங்காய் அழகா இருக்குனு சீன் போடத்தான். நான் பெரியவனாயிட்டேன், தேங்காய் சுடறதுலாம் சின்ன பச...

இறந்துருனு சொல்லு ஆனா மறந்துருனு சொல்லாத!!!- காலேஜ் டைரி-4

Image
அன்பர்களுக்கு வணக்கம். இதுக்கு முந்தைய பதிவுகளை படிக்காதவர்களுக்கு சத்தியமா நான் என்ன சொல்றன்னு புரியாது. அதனால முதல்ல அதை படிச்சுருங்க.  காலேஜ் டைரி-1 காலேஜ் டைரி-2 காலேஜ் டைரி-3 இப்ப நான் சொல்ல போறது எங்க கல்லூரியோட முதல் தேவதாஸ் பத்தி, நிறைய பேர் காதலிச்சாங்க, அதுல பாதிப் பேரை தூண்டிவிட்டு போய் காதலை சொல்ல வச்ச பெருமை எங்க பசங்களுக்குதான் சேரும். அது மாதிரி எங்களால பாதிக்கப் பட்டதுல ரொம்ப முக்கியமான ஒருத்தனை பத்தித்தான் இன்னைக்கு பார்க்கப் போறோம். பையனை பத்தி சொல்லனும்னா தங்கமான பையன், நம்பி பொன்னு கூட குடுக்கலாம், எந்த கெட்டப் பழக்கமும் இல்லை, காலேஜ் படிக்கும் போதே கந்து வட்டி விட்டுட்டு இருந்தான். சரி அவன் காதல் கதைக்கு வருவோம். எல்லாருக்கும் காதல் எப்படி எப்படியோ வரும், இவனுக்கு வந்த விதமே விசித்தரமானது, அதை விட அந்த காதலை நாங்க தெரிஞ்சுகிட்ட விதமே செம காமெடியான அனுபவம். படிச்சா அவனும் சிரிப்பாங்கற நம்பிக்கைல எழுதறேன். நாங்க 2 வது வருசம் சுற்றுலா போனப்போ பக்கத்துல உட்கார்ந்து தூங்கிட்டு இருந்தான்.  "டேய் தள்ளி உட்கார்ரா"னு சொன்னேன். தூக்க...

"மச்சான் அது உன்னோட 15வது தங்கச்சிடா"- காலேஜ் டைரி-3

Image
அன்பர்களுக்கு வணக்கம். என்னடா தலைப்பு இப்படி இருக்குனு நினைக்கறிங்களா? என்ன பன்றது? அவன் என் பக்கத்துல இருக்கும் போது நான் அதிகமா கேட்ட வசனம் இதுதான், நான் என்ன சொல்றன்னு புரியலைன்னா இதுக்கு முந்தின பார்ட் அ படிச்சுருங்க. நாம போற பஸ் ஆக்சிடென்ட் ஆனா எவ்ளோ நல்லாருக்கும்?- காலேஜ் டைரி-2 படிச்சுட்டிங்கனா நான் யாரை பத்தி சொல்றனு தெரிஞ்சுருக்கும், எப்படி கூடவே இருந்து ஒருத்தன் எல்லா பொன்னுங்களையும் விரட்டி விட்டு கெடுத்தானோ, அதே மாதிரி இன்னொருத்தனும் இருக்கான், இவன் ஸ்டைல் வேற, இந்த பதிவுல நான் உங்களுக்கு அறிமுக படுத்தப் போற மெக்கானிக்கல்ல படிச்ச என் உயிர் நண்பனின் பெயர் மாதேஸ்(பெயர் மாற்றப் பட்டுள்ளது).  எனக்கு ஏதாவது ஒரு பொன்னை பிடிக்கும், நான் போய் பேச கூட முயற்சி பன்ன மாட்டேன், சும்மா பார்ப்பேன், உடனே "மச்சான் அது உன்னோட 15வது தங்கச்சிடா"னு சொல்லுவான். இதுக்கு முன்ன பார்த்த 14க்கும் அதையேதான் சொன்னான், சரி எப்படியும் பார்க்கற பொன்னுங்ககிட்டலாம் போய் பேசற தைரியம் எனக்கு கிடையாது, சும்மா பார்க்கறதுக்கு எதுக்கு சண்டை போடனும்னு எதுவும் சொல்ல மாட்டேன். ஆன...

நாம போற பஸ் ஆக்சிடென்ட் ஆனா எவ்ளோ நல்லாருக்கும்?- (சோனா) காலேஜ் டைரி-2

Image
அன்பர்களுக்கு வணக்கம்.என்னுடைய கல்லூரி அனுபவங்களை எழுத துவங்கிய பின் பெரிய எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தேன், இன்னும் வரவில்லை. சரி நாம கதைக்கு போவோம். முதல் பாகத்தை படிக்காதவங்க படிச்சுட்டு வந்துருங்க. சோனா கல்லூரிக்கு வந்த கெட்ட காலம்- காலேஜ் டைரி பாகம் 1 படிச்சுட்டிங்களா? இப்ப உங்களுக்கு புரிஞ்சுருக்குமே? நான் எவ்வளவு ஆசையா இந்த காலேஜ்ல சேர்ந்துருப்பேன்னு, நானும் அதெல்லாம் கற்பனை பன்னிகிட்டே முதல் நாள் காலேஜ் வந்தேன். ஸ்கூல்ல தான் நல்ல பையன்னு அடங்கி இருந்துட்டோம், இது சேலம், நம்ம ஊர், கொஞ்சம் ஆடித்தான் பார்ப்போமேனு முடிவு பன்னேன். 10 நிமிசம் முன்னாடி வந்தும் வேனும்னே க்ளாஸ்க்கு போகாம காரிடர்ல நின்னுட்டு இருந்தேன், என்னை மாதிரியே ஒருத்தன் கைல ஒரு நோட் வச்சுகிட்டு நின்னுகிட்டு இருந்தான். பெல் அடிச்சு ஸ்டாஃப் உள்ள போனதுக்கு அப்புறம்தான் நான் உள்ள போனேன். போய் கடைசி பெஞ்ச் அ தேடி உட்கார்ந்தேன், எனக்கு அப்புறம் லேட்டா அவன் வந்து என் பக்கத்துல வந்து உட்கார்ந்தான். நின்னுகிட்டுருந்த வாத்தியார் சும்மா இல்லாம ஒவ்வொருத்தரா வந்து ஸ்டேஜ்ல அவங்கவங்கல பத்தி இங்கிலிஸ்லி இன்ட்...

கடந்த வார கலாட்டா-கல்யாணமும் கெடாவெட்டும்

Image
அன்பர்களுக்கு வணக்கம், அரசியலுக்கு வந்துட்டா கறை வேட்டி கட்டித்தான் ஆகனும், ஆசிரமம் ஆரம்பிச்சா என்னைக்காவது ஒரு நாள் மாட்டித்தான் ஆகனும். அது மாதிரி பதிவு எழுத ஆரம்பிச்சதுக்கு அப்புறம் எத்தனை நாள் விமர்சனம் எழுதி ஏமாத்திட்டு இருக்க முடியும்? ஜாக்கி அண்ணன் அளவுக்கு இல்லைனாலும் ஏதோ நம்மாள முடிஞ்ச அளவுக்கு நம்ம வாழ்க்கைல நடக்கறதை அப்பப்ப அப்டேட் பன்னனும்ல. இதோ நானும் ஆரம்பிச்சுட்டேன். கடந்த வாரத்துல பெருசா நான் எதுவும் சாதிக்கலை. காலேஜ்க்கு போய்ட்டு வந்து செய்ய வேண்டிய வேலை நிறைய இருந்தும் எதையும் உருப்படியா செய்யலை. நினைவுல இருக்க மாதிரி ந்டந்ததுனா 2 விசேசத்துக்கு போனதுதான். ஒன்னு நண்பனோட தங்கச்சி கல்யாணம். இன்னொன்னு கூட வேலைப் பார்க்கற நண்பர் வீட்டுல நடந்த கெடா விருந்து. அதை பத்தி பார்ப்போம். என்னதான் காலேஜ் லைஃப்ல ஹாஸ்டல்ல கட்டிப்பிடிச்சு தூங்கி இருந்தாலும் ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ் அ அடிச்சுக்க முடியாதுங்க. இதை பல பேர் ஒத்துப்பிங்கனு நம்பறேன். என் கூட ஸ்கூல்ல படிச்ச செந்தில் அவன் தங்கச்சி கல்யாணத்துக்கு எங்க வீட்டுக்கு வந்து எங்க அப்பா,அம்மாக்கு தனியாவும் எனக்கு தனியாவும் நான் இல்லா...

சோனா கல்லூரிக்கு வந்த கெட்ட காலம்- காலேஜ் டைரி பாகம் 1

Image
அன்பர்களுக்கு வணக்கம், ஏதேதோ தோன்றுவதை எழுதிக் கொண்டிருந்தேன், பின்பு மற்றவர்களை பார்த்து விமர்சனம் எழுத துவங்கினேன். விமர்சனம் எழுதினால் அந்தந்த காலங்களில் மட்டுமே வாசகர்கள் கிடைப்பார்கள். எல்லா சமயங்களிலும் அனைவராலும் படிக்க விரும்பகூடிய பதிவுகள் எழுத முயற்சி செய்கிறேன். இதோ முதல் முயற்சி என் கல்லூரி அனுபவங்கள் என் நடையில் உங்களுக்காக. இந்த பதிவில் என் சுயபுராணம் அதிகம் வராமல் நிகழ்வுகளையே ரசிக்கும் விதத்தில் சொல்ல விரும்புகிறேன். எங்கயாவது என் பெருமைய பெருசா பேசுனா உடனே கமெண்ட் போட்டு என்னை ஆஃப் பன்னிருங்க. கதை எங்க இருந்து ஆரம்பிக்குதுனா எனக்கு SSLC ரிசல்ட் வந்த நாள்ள இருந்து, ஏன்னா தெரியாத்தனமா எனக்கு யாரோ 400 க்கு மேல மார்க் போடவும் என்னை கொண்டு போய் அந்தியுர் ஐடியல் ஸ்கூல்ல சேர்த்துனாங்க, நான் படிக்கறப்ப என் கூட படிச்ச எல்லாருக்கும் ஒரே ஒரு லட்சியம் தான். டாக்டராகனும்னு, அஃப்கோர்ஸ், எனக்கும்தான். ஆனா +2 பரிட்சை நெருங்கறப்ப எனக்கு தெரிஞ்சு போச்சு, நமக்கு எந்த மெடிக்கல் காலேஜ்லயும் சீட் தர மாட்டாங்கனு.  நம்ம ஊர்ல படிப்புனா 2 தான், ஒன்னு டாக்டர், இன்னோன்னு இஞ்சினி...

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- இறுதி பதிவு

Image
அன்பர்களுக்கு வணக்கம், இத்துடன் இந்த பதிவுத் தொடர் முடிவடைகிறது. ஏதோ ஒரு நாள் கோபத்தில் யாரையாவது திட்ட வேண்டும் போல் இருந்த பொழுது எழுத ஆரம்பித்தேன். முதல் பதிவு தலைப்புக்கென்றே நிறைய ரசிகர்களை பெற்றது. அதன் தாக்கமே அடுத்த பதிவிற்கும் நிறைய ஓட்டு கிடைத்தது. ஒரு கட்டத்தில் கோபமே இல்லாத நேரத்தில் ஏதோ எழுதுகிறோம் என்ற தலைக்கணத்தில் எழுதிய மூன்றாம் பதிவு யாராலும் ரசிக்கக் கூடியதாய் முடிந்து விட்டது. இந்த நிலையில் இத்தொடரினை முடித்துக் கொள்வதே கெளரவம். இந்த பதிவில் நான் யாரையும் திட்ட்ப் போவதில்லை. தலைப்பிற்கான காரணத்தை மட்டுமே எழுத போகிறேன். என்னை சுற்றிலும் ஏராளமான அல்டாப் ஆண்ட்டிகள், அவர்களை பற்றி முதல் மூன்று பதிவில் நிறைய எழுதி விட்டேன். படிக்காதவர்கள் படித்து விட்டு தொடருங்கள். இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- முதல் பாகம் இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- இரண்டாம் பதிவு இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- மூன்றாம் பதிவு ஒவ்வொருவரின் செய்கையும் என்னை மிகவும் எரிச்சலடைய செய்யும். ஏதாவது வேலையாக இருக்கும் பொழுது இவர்களது மினுக்கல்களை பார்த்...

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- கடுப்பு பாகம் 3

Image
அன்பர்களுக்கு வணக்கம், உங்களுக்குனு வாழ்க்கைல ஆயிரம் பிரச்சனை இருக்கும் போதும் என் புலம்பலை முழுசா கேட்டதோட இல்லாம அதுக்கு கமெண்ட் போட்டு உற்சாகப்படுத்தற உங்களுக்கு ஒரு நன்றிய சொல்லிக்கறேன். இந்த பதிவோட முதல் 2 பாகங்களை படிக்காதவங்க முதல்ல அதை படிச்சுட்டு வந்துருங்க. இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- கடுப்பு பாகம் 1 இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பன்னிக்கலாம்- கடுப்பு பாகம் 2 என்ன படிச்சுட்டிங்களா? நான் எதை பத்தி புலம்பிட்டு இருக்கேன்னு புரிஞ்சுருக்குமே, சரி விசயத்துக்கு வருவோம். நான் இது மாதிரி என் கூட வேலை பார்க்கற அல்டாப்ஸ் பத்தி எழுதறத படிச்ச என் சக ஊழியர்கள் தனித்தனியா ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம வந்து என்னை பார்த்து அவங்க அனுபவங்களை சொல்லி அதையும் எழுத சொன்னாங்க. அவங்க பேர் வெளிய வரக் கூடாதுனும் சொன்னாங்க, ஏதோ இந்த அளவுக்காவது சொல்றாங்களேனு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான். ஆச்சர்யம் என்னன்னா சில பெண்களும் வந்து சொன்னதுதான். சரி கேள்விய ஆரம்பிப்போம். பொன்னுங்க புடவை எதுக்கு கட்டறாங்க? அதுல என்ன ஸ்டைல்? கட்டும் போது அவங்களுக்கு பிடிச்ச ஸ்டைல்ல கட்...

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2

Image
அன்பர்களுக்கு வணக்கம், என்னோட முதல் புலம்பலை படிக்காதவங்க தயவு செஞ்சு படிச்சுருங்க. இல்லைனா ஒரு கன்டினுயுட்டி மிஸ் ஆகும். இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 1  படிச்சுட்டிங்கனா நான் எதை பத்தி பேசறேங்கறது உங்களுக்கு நல்லா புரியும். என்னோட புலம்பல் ஒட்டு மொத்த பெண்கள் சமுதாயத்தை குறிப்பிடறதா தப்பா நினைக்க வேண்டாம். என் வாழ்க்கைல தினசரி எதிர்படற, பார்க்கும் போதுலாம் ஒரு 2 செகன்ட் கண்ணை மூடி "முடியலைடா சாமி"னு சொல்ல வைக்கற சில அல்டாப் ஆண்ட்டி & ஃபிகர்களை மட்டும்தான் நான் திட்டி தீர்க்கனும்னு நினைக்கறேன். உங்ககிட்ட ஒரு விசயம் சொல்றங்க, நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க, எப்பவாவது ஏன்னே தெரியாமா ரொம்ப சலிப்பா, அலுப்பா எந்த வேலையும் செய்யறதுக்கு மனசே வராம இருக்கும் போது ரொம்ப நாளா உங்களை வெறுப்பேத்தறவங்களை, யார்கிட்டயாவது திட்டி புலம்பி பாருங்க அப்படி ஒரு எனர்ஜி வரும், உற்சாகம் பிறக்கும், நான் சொல்லும் போது பைத்தியகாரத்தனமா இருக்கும், ட்ரை பன்னிங்கனா கண்டிப்பா என்னை குருவா ஏத்துகிட்டு ஆசிரமம் ஆரம்பிக்கலாமானு கேட்பிங்க.   சரி, நாம புலம்பல...

இந்த கொடுமைக்கு பேசாமா கல்யாணமே பன்னிக்கலாம்

Image
அன்பர்களுக்கு இனிய வணக்கம், இன்று நான் எழுத போவது ஒரு பேச்சிலர் வாழ்வில் ஏற்படும் துயரங்கள், பெருசா ஒன்னுமில்லைங்க, காலைல எழுந்ததுலருந்து நைட் தூங்க போற வரைக்கும் கல்யாணம் ஆகாத பசங்களை யார்யார்லாம் கடுப்பேத்தி காயப்படுததறாங்கனு பார்ப்போம். காலைல 4 மணிக்கு மேலதான் நல்லா தூக்கம் வரும், அப்பதான் வீட்ல பெத்தவங்க எழுப்பி பால் வாங்கிட்டு வர சொல்றது, தண்ணீர் பிடிச்சு வைக்க சொல்றதுனு வேலை வைப்பாங்க, அதை செய்யலைனா என்னமோ முதியோர் இல்லத்துல கொண்டு போய் சேர்த்துட்ட மாதிரி அக்கம்பக்கத்துல புலம்ப ஆரம்பிப்பாங்க. சரீன்னு அதுக்கு பயந்து வேலையா செய்யலாம்னு வெளிய வந்தா கோலம் போடறேங்கற பேர்ல தெருவுல வரிசையா கல்யாணம் ஆனது ஆகாததுனு 2 கேட்டகிரிலயும் பொன்னுங்க நிப்பாங்க, நான் அதை தப்பு சொல்லலை, அவங்க வேலைய அவங்க பார்க்கட்டு, என் வேலைய நான் பார்க்கறேன், எதுக்கு எங்களை(பேச்சுலர்ஸ்) பார்த்ததும் நல்லா கவர் பன்னிருக்க ஏரியாவையும் திரும்ப ஒரு தரம் கவர் பன்னனும்னு கேட்கறேன்? நாங்க என்ன ஏதாவது தப்பா பார்த்தமா?கைய பிடிச்சு இழுத்தமா?  வீட்ல இருக்க சின்ன சின்ன வேலைய முடிச்சுட்டு வேலைக்கு போலாம்னு கிளம்ப...

மலையேறிய அனுபவமுண்டா? இது எனது அனுபவம்

Image
 அன்பு நண்பர்களே, நீண்ட இடைவெளிக்கு பின் உங்களுடன் என் எண்ணங்களை பகிர்வதில் மகிழ்ச்சி. வழக்கம் போல் என்ன எழுதுவதென்று தெரியாமல் பார்க்கும் படங்களுக்கு விமர்சனமும் ரசித்த பதிவுகளை அப்படியே திருடி பகிர்ந்து கொண்டு இருந்தேன், இப்போது முதல் முறையாக சொந்தமாக ஒரு பதிவை எழுதுகிறேன். அதற்காக மறக்காமல் உங்கள் வாழ்த்தினை தெரிவித்துவிட்டு செல்லுங்கள். உங்களுக்கு மலையேறிய அனுபவம் உண்டா? மலையேறுதல் என்றால் பழனி, திருப்பதி போன்ற தளங்களுக்கு பஸ்ஸிலோயொ அல்லது படிகளின் வழியாகவோ செல்லுதல் அல்ல, வெறுமனே கால் நடையாக ஏறுதல். என்னை பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதிகம் புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ளவன், இதை எதற்கு சொல்கிறேன் என்றால் பாலகுமாரனின் பல புத்தகங்களில் மலையேறுதல் உடலுக்கும் மனதுக்கும் எவ்வளவு நல்லது என கூறியிருப்பார், என் நண்பர்கள் பிரபு மற்றும் கண்ணன் போன வருடம் சித்திரை மாதம் ஆரம்பிக்கும்பொழுதே, என்னுடன் கல்லூரியில் வேலை பார்க்கும் என் நண்பன் பிரபு (வருசம் தவறாமல் மலையேறுபவன்) என்னை மேட்டூர் பக்கத்தில் இருக்கும் பாலமலைக்கு சித்ரா பவுர்ணமிக்கு செல்லலாம் எ...