"அப்பா, அடிக்காதிங்கப்பா, இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்ப்பா" - தந்தையர் தினம்
அன்பர்களுக்கு வணக்கம், இன்று தந்தையர் தினம், அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், பெண்களை பற்றி சொல்லவே வேண்டாம், நாம சாதாரணமா பேசறப்பவே அவங்கப்பா எப்படிலாம் அவங்க மேல பாசமா இருக்காங்கனு சொல்லி வெறுப்பேத்துவாங்க, பசங்கள்ல பாதி பேருக்கு என்னதான் அவங்கப்பா மேல பாசம் இருந்தாலும் 2 பேருக்கும் நடுவுல பெரிய இடைவெளி இருக்கும், படிப்பு முடிஞ்சு வேலைக்கு போக ஆரம்பிச்சதும் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகும்... இன்னைக்கு ஒரு நாள் முழுக்க அவங்கவங்க அப்பா கூட நடந்த நல்லது, கெட்டதை அசை போட்டுகிட்டு இருப்போமே, முதல்ல நான் என் அனுபவங்களை சொல்றேன்.... நான் எங்க வீட்ல 4 வது பையன், கடைக்குட்டி, அப்பா செல்லம், அதனால எங்கப்பா என்னை அடிச்சா இரத்தம் வராத அளவுக்கு தான் அடிப்பார், எங்க பரம்பரைலயே எங்க குடும்பத்துலதான் முதல்முறையா எல்லாரையும் காலேஜ் வரைக்கும் படிக்க வச்சது, எங்கப்பா 5 வது தான், ஆனாலும் 10வது வரைக்கும் நான் படிக்கறப்ப அது கணக்கு பாடமா இருந்தாலும் சத்தமா படிக்க சொல்லி பக்கத்துல உட்கார்ந்து கேட்டுகிட்டு இருப்பார்... எங்கப்பாகிட்ட எனக்கு பிடிக்காத விஷயம் எப்ப எனக்கு பரிட்சை முடிஞ்சு ரி...