Posts

Showing posts from May, 2012

சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முன்பு திமுகவினருக்குள் அடிதடி

Image
திமுக இன்று (30.05.2012) அறிவித்த ஆர்ப்பாட்டத்திற்காக முன்னாள் அமைச்சரும், சேலம் மாவட்ட திமுக செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம் சேலம் அண்ணாசிலையில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை திறந்த வேனில் வந்தார். அவருடன் டி.எம்.செல்வகணபதி எம்பி, வீரபாண்டி ராஜா உள்ளிட்டோர் வந்தனர். தபால் நிலையம் எதிரில் திமுக தொழிற்சங்க உறுப்பினர்கள் (முன்னாள் எம்எல்ஏவும், மாநில இளைஞரணி துணை அமைப்பாளருமான ராஜேந்திரன் ஆதரவாளர்கள்). நின்றிருந்தனர். அவர்களை பார்த்த வீரபாண்டி ஆறுமுகம், நீங்கள் பேரணியில் கலந்துகொள்ளுங்கள் என்றார். ஆனால் அவர்கள் அடிப்படியே நின்றனர். அப்போது வீரபாண்டி ஆறுமுகம் சொல்றத கேளுங்கப்பா என்றார். இதையடுத்து இருதரப்புக்கும் மோதல் உருவானது. அப்போது ராஜேந்திரன் ஆதரவாளர்கள் முன்னாள் துணை மேயர் ஜி.கே.சுபாஷ், கிச்சுப்பாளையம் வழக்கறிஞர் குணா உட்பட்டோர் மேலும் குவிந்தனர். அதற்குள் காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். கடந்த வாரத்தில் வீரபாண்டி ஆறுமுகம், ராஜேந்திரனுக்கு எதிரான அறிக்கையும், அதற்கு பதிலடியாக ராஜேந்திரன் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக அறிக்கையும் வெளியிட்டனர் என்பது குறிப...

WHATS YOUR NUMBER? பட்டியல் போட்டு காதலிக்கும் கதை- திரை விமர்சனம்

Image
அன்பு நண்பர்களுக்கு, நீண்ட இடைவெளிக்கு பின் சொந்தமாக ஒரு திரைவிமர்சனம், என் நண்பன் ஒருவன் ஏன் எப்பொழுதும் ஆங்கில படத்திற்கு மட்டும் விமர்சனம் எழுதுகிறாய் என்று கேட்டான், தமிழ் படங்களை நான் மற்ற பதிவர்களின் விமர்சனத்தை பார்த்த பின்பே பார்ப்பேன், அதற்குள் குறைந்தது 20 பேராவது அந்த படத்தினை விமர்சித்திருப்பார்கள். அதனால்தான் இப்படி, சரி படத்திற்கு போவோம், "WHATS YOUR NO?"  இந்த தலைப்பை பார்த்துவிட்டு கதை என்னவாக இருக்கும் என்று நான் பல விதங்களில் யோசித்து பார்த்தேன், ஆனால் இப்படி இருக்கும் என்று சத்தியமா எதிர்பார்க்கலிங்கோ? படம் ஆரம்பிக்கும் போது, படுக்கையை விட்டு எழுந்து வந்து பாத்ரூமில் மேக் அப் போட்டு கொண்டு திரும்பவும் வந்து படுத்து அப்பொழுதுதான் தூங்கி எழுவது போல்  நடித்து கூட படுத்துருக்கவனை ஏமாத்தும் போதே நான் முடிவு பன்னேன், இது நம்ம ஊர் பொன்னுங்க மாதிரி சரியான தில்லாலங்கடினு, ஹீரோயினுக்கு எதிர் ஃபிளாட்ல குடியிருக்கறார் ஹீரோ, அவருக்கு அறிமுகம் எப்படினா ஷேம்ஷேமா வந்து வாசல்ல இருக்க நியுஷ் பேப்பர் அ எடுத்துகிட்டு கூச்சமே இல்லாம குட்மார்னிங் சொல்றார், இதே ந...

உங்கள் வீட்டு பெண்ணை முழுதாக நம்ப வேண்டாம்

Image
அன்பு நண்பர்களுக்கு இனிய வணக்கம், ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்கள் பெண்ணை அடக்க ஒடுக்கமான பெண்ணாகத்தான் நினைத்து நம்பிக் கொண்டிருக்கிறோம், ஆனால் எல்லோருடைய நம்பிக்கையும் உண்மையாக இருப்பதில்லை, இதோ இந்த காணோளியினை பாருங்கள். இதில் வருபவர்கள் லூதியாணா பகுதியை சேர்ந்தவர்கள், மிக தைரியமாக அவர்களுடைய வீடியோவினை வெளியிட்டுள்ளார்கள், நம்ம ஊர் பெண்களுடைய ஆட்டங்கள் வெளி வருவதில்லை அவ்வளவுதான் வித்தியாசம், ஏன் இது போல் பெண்கள் ஆட்டம் போட்டால் தப்பா என்ற கேள்வியை கேட்க விரும்புவர்கள் தாராளமாக பெண்ணை பெற்றவர்களிடம் கேட்டுப் பாருங்கள், இதோ இந்த காணோளி, பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னுட்டமிடுங்கள்.

யார் இந்த மாமனிதர் ?! 'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !!

Image
யார் இந்த மாமனிதர் ?! 'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !! உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!! கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...! யார் இவர் ? அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகைய...

தமிழர்களை மீண்டும் வம்புக்கு இழுக்கும் கேரள அரசு

Image
'நீ நெல் கொண்டுவா... நான் உமி கொண்டுவருகிறேன். இரண்டையும் கலந்து, சமமாகப் பங்கிட்டு... ஊதி ஊதிப் பசியாறலாம்' என்றானாம் ஓர் அதிபுத்திசாலி. அதாவது, 'சதி புத்திசாலி’! முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்துவதால் அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று நிபுணர்களும் நீதிமன்றமும் சொன்ன பிறகும்கூட, தமிழ்நாட்டின் தாகம் தீர்ந்துவிடவே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அநியாய அரசியல் செய்யும் கேரளத்து முதல்வர் உம்மன் சாண்டியும் அப்படி 'சதி புத்தி’யைத்தான் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி ஆகப்போகும் மின்சாரத்தில், சுளையாக 500 மெகா வாட் கேரளத்துக்கு வேண்டுமாம்... பிரதமருக்குக் கடிதம் எழுதி இருக்கிறார் சாண்டி. மின் தட்டுப்பாட்டால் ஏற்படக்கூடிய இழப்புகளில் இருந்து மீள்வதற்கு வேறு வழியே தெரியாமல்... எத்தனையோ எதிர்ப்புகளையும் மீறி... தன்னையே பணயம்வைத்துத்தான், மத்திய அரசு கொண்டுவந்த கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு ஒப்புதலும் ஒத்துழைப்பும் கொடுத்திருக்கிறது தமிழ்நாடு. அப்படி இருக்க... பசுவின் வாய் இருக்கும் முன் ப...

புகைப்படத்தோடு வாருங்கள்! அழைக்கும் இணையதளம்.

Image
  மே 15 ம் தேதியை குறித்து வைத்து கொள்ளுங்கள்;அப்படியே காமிராவையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்! அன்றைய தினம் உங்கள் உலகை ஒரு புகைப்படம் எடுத்து அதனை எங்கள் தளத்தில் சம‌ர்பியுங்கள் என்கிறது ஏடே.ஆர்ஜி. உலகை ஒரு நாளில் புகைப்படம் எடுத்து அந்த படங்களை பதிவு செய்யும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது. தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் ஆர்வம் மட்டும் உள்ளவர்கள் என புகைப்படங்களை எல்லோரும் எடுக்கின்றனர்.அதிலும் டிஜிட்டல் காமிரா வருகைக்கு பின் புகைப்படம் எடுப்பவ‌ர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.புகைப்பட வழி பதிவுகளும் அதிகரித்துள்ளது. புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்காக இணைய சேவைகளும் அதிகரித்துள்ளன. ஆனால் எடுக்கப்படும் புகைப்படங்களும் ப‌கிரப்படும் புகைப்படங்களும் இணையத்தில் சிதறிக்கிடக்கின்றன. இந்நிலையில் புகைப்படங்கள் வாயிலாக உலகை புரிந்து கொள்ளும் ஒரு முயற்சியாக ஒரு நாளில் எடுக்கப்படும் அனைத்து புகைப்படங்களையும் திரட்டும் நோக்கத்தோடு ஏடே.ஆர்ஜி இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.இதற்காக தான் மே 15 ம் தேதி தேர்வு செய்ப்பட்டுள்ளது. புகைப்படக்கலையில் ஆர்வம் உள்...

மலையேறிய அனுபவமுண்டா? இது எனது அனுபவம்

Image
 அன்பு நண்பர்களே, நீண்ட இடைவெளிக்கு பின் உங்களுடன் என் எண்ணங்களை பகிர்வதில் மகிழ்ச்சி. வழக்கம் போல் என்ன எழுதுவதென்று தெரியாமல் பார்க்கும் படங்களுக்கு விமர்சனமும் ரசித்த பதிவுகளை அப்படியே திருடி பகிர்ந்து கொண்டு இருந்தேன், இப்போது முதல் முறையாக சொந்தமாக ஒரு பதிவை எழுதுகிறேன். அதற்காக மறக்காமல் உங்கள் வாழ்த்தினை தெரிவித்துவிட்டு செல்லுங்கள். உங்களுக்கு மலையேறிய அனுபவம் உண்டா? மலையேறுதல் என்றால் பழனி, திருப்பதி போன்ற தளங்களுக்கு பஸ்ஸிலோயொ அல்லது படிகளின் வழியாகவோ செல்லுதல் அல்ல, வெறுமனே கால் நடையாக ஏறுதல். என்னை பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதிகம் புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ளவன், இதை எதற்கு சொல்கிறேன் என்றால் பாலகுமாரனின் பல புத்தகங்களில் மலையேறுதல் உடலுக்கும் மனதுக்கும் எவ்வளவு நல்லது என கூறியிருப்பார், என் நண்பர்கள் பிரபு மற்றும் கண்ணன் போன வருடம் சித்திரை மாதம் ஆரம்பிக்கும்பொழுதே, என்னுடன் கல்லூரியில் வேலை பார்க்கும் என் நண்பன் பிரபு (வருசம் தவறாமல் மலையேறுபவன்) என்னை மேட்டூர் பக்கத்தில் இருக்கும் பாலமலைக்கு சித்ரா பவுர்ணமிக்கு செல்லலாம் எ...

புகழ், பணத்திற்காக இளைய ஆதீனமாக நான் பொறுப்பேற்கவில்லை. நித்யானந்தா விளக்கம். - Thedipaar.com

Image
News at Tamilsource,புகழ், பணத்திற்காக இளைய ஆதீனமாக நான் பொறுப்பேற்கவில்லை. நித்யானந்தா விளக்கம். - Thedipaar.com

ஆனந்த விகடன் பேட்டியில் மதுரை ஆதீனம் அருணகிரி....

Image
ஆனந்த விகடன் பேட்டியில் மதுரை ஆதீனம் அருணகிரி.... ஹைடெக் மைக்குகள்... லேப்-டாப்கள் சகிதம் நித்தியானந்தாவின் சீடர்கள்... ‘‘மைக் ஒன் காலிங் மைக் டூ... அங்கே கூட்டம் ஜாஸ்தியா இருக்கு. கன்ட்ரோல் பண்ணுங்க... ஓவர்!’’ என்று மதுரை ஆதீனத்தில் உத்தரவுகள் தூள் பறந்துகொண்டு இருக்க... 100 கார்கள் புடைசூழ வந்து இறங்கினார்கள் நித்தியானந்தாவும் மதுரை ஆதீனமும். ’’இனி மதுரை ஆதீனத்திலும் ஆட்டம் பாட்டம் டான்ஸ் எல்ல ாம் இருக்குமா?’’ ‘‘அதில் தவறென்ன? அனைவரையும் ஆடவைத்துச் சந்தோஷப்படுத்த நித்தியானந்தா விரும்பினால், அதற்கு நாங்கள் குறுக்கே நிற்க மாட்டோம். இளம் தலை-முறையினர் பக்தியின் சிறப்பை அறியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே அப்டேட் செய்யப்பட்ட டைனமிக் சாஃப்ட்வேர்தான் நித்தியானந்தா!’’ ’’இனி ரஞ்சிதாவும் மதுரை ஆதீனத்துக்கு வருவாரா?’’ ‘‘நித்தியானந்தரின் உண்மையான சீடர் ரஞ்சிதா. அவர் மேல் எந்தத் தப்பும் கிடையாது. யாரோ செய்த சூழ்ச்சிக்கு பாவம் அந்தப் பொண்ணு பலியாகிடுச்சு. எல்லாச் சீடர்களையும்போல ரஞ்சிதாவும் மதுரை ஆதீனத்துக்கு வருவார். அதை ஆதீனமும் வரவேற்கிறது!’’

படித்ததில் பிடித்தவை!புலி ஒரு ஆளுமையின் குறியீடு

Image
புலி ஒரு ஆளுமையின் குறியீடு. தைரியத்தோட அடையாளம். ”உண்மையில் புலிதான் தனிக்காட்டு ராஜா. காட்டுல அது வெச்சதுதான் சட்டம். அத்தனை ஆக்ரோஷமா இருக்கும் புலி, உண்மையில் ரொம்பக் கூச்ச சுபாவி. தனிமை விரும்பியும்கூட. தனக்குனு ஒரு எல்லையை வகுத்துக்கிட்டு அதுக்குள்ள உலா வர்றது தான் புலியோட இயல்பு. ஒரு புலி அப்படிச் சுதந்திரமா உலா வர, 40 சதுர கி.மீ. பரப்புள்ள அடர்த்தியான வனம் தேவை. இப்போ அதோட எல்லைக்கு உள்ளே நாம அத்துமீறி நுழையுறதாலேயே, புலிகள் அழிவோட விளிம்புல இருக்குங்க புலிகளின் அழிவுங்கிறது உண்மையில் காடுகளோட அழிவு மட்டும் இல்லை… அது ஒரு நாட்டோட வளத்தின் அழிவு. புலி ஒரு ஆளுமையின் குறியீடு. தைரியத்தோட அடையாளம். உயிர்ச் சங்கிலியில் ஒரு கண்ணி!” - களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்துக்கு நான் கானகப் பயணம் சென்றிருந்தபோது அதன் இயக்குநர் வெங்கடேஷ் உணர்ச்சியும் உருக்கமுமாகப் பேசினார். களக்காடு முண்டந்துறையில் சென்ற வாரம் புலிகள் கணக்கெடுப்பு நடந்தது. அதில் கலந்துகொண்ட வாலன்டியர்களுக்குத்தான் இந்தப் பாடம். காட்டுக்குள் ஒரு புலியை நேருக்கு நேர் பார்ப்பது என்பது, ஜெயல...