AMERICAN PIE-REUNION REVIEW
அன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாளாகி விட்டது விமர்சனம் எழுதி, சரி இன்று கலக்கலாக ஒரு படத்தை பார்த்து விடுவோம், American Pie Reunion எத்தனை பேர் இந்த படத்தினை எதிர்பார்த்து காத்திருந்தீர்கள்? சரி எத்தனை பேர் இப்படத்தின் முந்தைய 7 பாகங்களை பார்த்துள்ளீர்கள்? பார்க்கலைனா உங்க இளமை காலத்தை சரியா நீங்க அனுபவிக்கலைனு அர்த்தம்.
நான் இந்த படத்தோட 4 வது பார்ட் அ பார்த்துட்டு 2 நாள் சிரிச்சு தேடி அலைஞ்சு மீதி 7 பார்ட்டையும் பார்த்தேன், 8 வதா இந்த REUNION பார்ட் வந்துருக்கு.
நம்ம கூடவே வளர்ந்த, படிச்ச பள்ளி நண்பர்களை பிரிஞ்சு 8 வருசம் கழிச்சு சந்திச்சா எப்படி ஒரு உணர்வு வருமோ அப்படித்தான் இந்த படம் பார்க்கும் போது இருந்தது. ஹைஸ்கூல்ல சேரும் போது இவங்க பன்ற அலம்பல்ல ஆரம்பிச்சு ஒவ்வொருத்தரும் எப்படி காதலிச்சு கல்யாணம் பன்னிக்கறாங்க? அதுல எவ்வளவு கலாட்டானு கேப் விடாம சிரிக்க வச்சு 7 பார்ட் அ முடிச்சுருப்பாங்க.
இந்த படத்தோட எல்லா சீரியஸ்லயும் போரடிக்காம கொண்டு போற கேரக்டர் நம்ம ஸ்டிஃப்லர் தான். இந்த பார்ட்லயும் தல பின்னிருக்கார், இந்த படங்களை தமிழ்ல விட்டா கண்டிப்பா இவருக்கு ரசிகர் மன்றம் கன்ஃபார்ம்.
ரொம்ப நாள் கழிச்சு சொந்த ஊருக்கு பள்ளி தோழர்களை பார்க்கறதுக்காக கதையின் நாயகர்கள் அனைவரும் திட்டமிடுகிறார்கள், அவர்கள் திட்டத்தில் முதல் அம்சமே ஸ்டிஃப்லரை கூப்பிட கூடாது என்பதுதான். ஆனால் தல இல்லாம படத்தை எடுத்துட முடியுமா? தானா பார்ல வந்து ஜோதில ஐக்கியமாய்டுது.
குழந்தை பிறந்துட்டதால தாம்பத்யத்துல ஈடுபட நேரம் இல்லாத ஹீரோ காய்ஞ்சு போய் ஊருக்கு வந்து பக்கத்து வீட்ல யார்ரா சூப்பர் பிகர்னு பார்த்தா அவர் வளர்த்த 18 வயசாகிருக்க பொன்னு. அவருக்கு அப்ப தெரியலை குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்க போறதே இந்த மகராசி தான்னு.
பீச்ல தங்களோட காதலிங்ககிட்ட உள்ளாடைய திருடற இளைஞர்களை தண்டிக்க ஸ்டிஃப்லர் போடற திட்டமும், போதைல நிர்வானமா மட்டையாயிட்ட பக்கத்து வீட்டு பொன்னை, அவங்க அப்பா அம்மா கண்ல படாம பெட்ல கொண்டு போய் படுக்க வைக்க கூட்டமா இவங்க பன்ற அலப்பறையும் செம.
படத்துல முந்தைய பார்ட்லருந்து இப்ப வரைக்கும் இளமையா இருக்கறது ஸ்டிஃப்லரோட அம்மாதான். போதைல ஹீரோவோட அப்பா அவங்ககிட்ட போய் கடலை போடறதும், போலிஸ் வர்ர சத்தம் கேட்டு ஜன்னல்ல எகிறி குதிச்சு தொங்கறதும், மனைவிய எதிர்பார்த்துட்டு இருக்கறப்ப பக்கத்து வீட்டு பொன்னும், பின்னாடியே அவ காதலனும் வந்து கலாட்டா பன்றதும் செம கலாட்டா.
என்னதான் ஸ்டிஃப்லர் பன்ற கலாட்டா யார்க்கும் பிடிக்கலைனாலும் அவன் இல்லாம ஒரு பார்ட்டிய நினைச்சு கூட பார்க்க முடியாம அவன் ஃப்ரெண்ட்ஸ் அவனை தேடி ஆபிஸ்க்கே போய் கூட்டி வர்ரதுதான் கெத் சீன். எவ்வளவோ மோசமான நிலைமை வந்தாலும் தங்களோட துணைகளுக்கு துரோகம் பன்னாம இருக்கற கதாபாத்திரங்களோட படைப்பின் ஆக்கம் சொல்லாமையே புரியுது.
படத்துல எழுத்து போடறதுக்கு முன்னாடியே சிரிக்க ஆரம்பிச்சுருவோம், படம் முழுக்க காமெடி, கலாட்டா, friendship, love, sentiment னு கலக்கிருக்காங்க. படத்தை 10 தடவை பார்க்கலாம், அதுலயும் லவ்வரோட ஃப்ரென்ட்ஸோட பார்த்தா தனி சுகம் தான். நான் 3 தடவை பார்த்துட்டேன்பா.
என் கூட காலேஜ் படிக்கும் போது ரூம்ல உட்கார்ந்து பார்த்த என் ஃப்ரெண்ட்ஸ் கூட திரும்ப உட்கார்ந்து இந்த படத்தை பார்க்க விரும்பறேன். அதிர்ஸ்டம் இருந்தால்?
படத்தின் ட்ரெய்லர்
மறக்காம உங்க நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க. உங்க கந்த்துக்களை தெரிவிங்க.
Comments
Post a Comment