கிருமி – விமர்சனம்
தமிழ்நாட்டில் மின்வெட்டு புயலாய் வீசிக்கொண்டிருந்த காலகட்டம். இரவு நேர மின்வெட்டுகளில் பல வீடுகளில் திருடு போனது. ஊர்க்காவல்படை திரட்டப்பட்டது. அதாவது ஊரில் உள்ள இளைஞர்களை கொண்டு அமைக்கப்படும் குழு. இரவில் மின்வெட்டு நிகழும் சமயங்களில் இப்படை ரோந்தில் ஈடுபடும். அப்படையில் இறங்கி வேலைப் பார்த்தது முழுக்க முழுக்க என் நண்பன் தான். கொஞ்சம் கொஞ்சமாய் ஊர் காவல் நிலையத்தில் அவனது போக்குவரத்து அதிகரிக்க துவங்கியது. பல வேலைகளை அவர்களுக்காக செய்து கொடுத்து கொண்டிருந்தான். சிறுவயதில் இருந்தே எல்லா மரங்களிலும் விரைவாய் ஏறி இறங்குவான். கட்டான உடலமைப்பும் கொண்டவன் . திடிரென ஒரு நாள் கான்ஸ்டபிள் ஆகிவிட்டான். அதற்கு காவல்நிலையம் பல வழிகளில் உதவியாய் இருந்ததாய் கெள்விப்பட்டேன். வேறு வேலை கிடைக்காததால் காவல்நிலையத்தில் உதவியாளாய் சேரும் நாயகனை சுற்றி வித்தியாசமான கதைக்களம் அமைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். மேலும் படிக்க... http://www.thoovaanam.com/?p=987