Posts

Showing posts from 2013

நய்யாண்டி - Remake of "வள்ளி வரப்போறா"

Image
அன்பர்களுக்கு வணக்கம்..மரியான் படத்தை பார்த்த அதே தியேட்டர்ல அதே ஈவ்னிங் ஷோக்கு கவுன்டர்ல நிக்கும்போதே கருக்குனு இருந்துச்சு...  மின்சாரக் கண்ணால விஜய் புறாவுக்கு பெல் அடிக்கற இன்ட்ரோ மாதிரி இதுல தனுஸ் கிணத்தை தாண்டி புறாவ பிடிக்கற மாதிரி அறிமுகம்...   ரொம்ப நாள் கழிச்சு அரை லூசூ ஹிரோயின், டாக்டர் பொன்னுங்க இஞ்சினியரிங் பசங்களையே மதிக்கறதுல்லை, இதுல டெண்டல் டாக்டர் படிக்காத பையனை லவ் பண்ணுதாம் 7ம் அறிவுல லவ் பண்றாங்களானு நாம யோசிக்கும் போதே "எம்மா யம்மா" பாட்டு வரும், அதே மாதிரி சைட் அடிச்சதுக்கு லவ்ஃபெயிலியர் சாங் வேற ரஜினியோட படிக்காதவன் ஐ ரீமேக் பண்ணியே படம் ஓடலைங்கறப்ப தனுஸ் புரிஞ்சுகிட்டு இருந்துருக்கனும், பாண்டியராஜனோட "வள்ளி வரப்போறா" படத்தை ரீமேக் பண்ணிருக்காரு...   நடுநடுவுல ஆனந்தம், தேசிங்கு ராஜாலருந்து சிலபல டயலாக் உருவியிருக்காங்க... தனுசோட அண்ணனா வர 2 பேர் மட்டும் இல்லைனா நல்லா தூங்கி இருப்பேன்... நஸ்ரியா - "ஏம்மா இதுக்கா இந்த குதி குதிச்ச? எனக்கு கவுண்டமணியோட கிணத்துல பாடி விழுந்த கதைதான் ஞாபகம் வருது??...

ஆதலால் காதல் செய்வீர் - கட்டாயம் பார்க்க வேண்டிய படம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், நீண்ட நாள் கழித்து தமிழில் உலக சினிமா, உலக சினிமா என்பதன் வரையரை பெரிதாய் ஒன்றுமில்லை, அப்படமெடுக்கும் பகுதியின் மக்களின் வாழ்வியலை பதிவு செய்தலே, அந்த வகையில் கட்டாயம் "ஆதலால் காதல் செய்வீர்" உலகப்படமே... கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு வந்த பில்லா படத்தை ரீமேக் செய்து அதில் வரும் பில்லாவின் கடந்த காலத்தை இரண்டாம் பாகமாக எடுத்தார்கள், அதே போல் "புதிய பாதை" என்றொரு படம் வந்தது, அனைவருக்கும் நினைவிருக்கும், அப்படத்தில் வரும் பார்த்திபன் கதாபாத்திரம் இவ்வழியில்தான் பிறந்திருப்பார் என கூறலாம்...   முக்கியமாக படத்தில் எதற்கு காதலிக்கிறோம் என்று யோசிக்காமலே "வெறுமனே கூட பழகியவன் பைக் மட்டும் வைத்திருந்தால் காதலிக்கலாம் கட்டிப்பிடித்து ஊர் சுற்றலாம்" என எண்ணும் தற்கால பெண்களின் மனநிலையை இயக்குனர் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். அதே போல் ஆண்களும் அழகாய் இருந்தால் போதும் என்றும், பெண்களை காதலிக்க வைக்க எந்த வித முட்டாள்தனமும் செய்ய தயாராய் இருப்பதையும் காட்டியுள்ளார், முதல்பாதி மிக அருமை, இக்கணத்தில் தமிழக...

பட்டத்து யானை - யானை பேர் சந்தானம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், கோவை வந்ததுல இருந்த நினைச்ச மாதிரி படம் ரிலிஸ் ஆனா முதல் நாளே பார்க்க முடியுது, இன்னைக்கு "சொன்னா புரியாது" போகனும்னு நினைச்சாலும் பக்கத்துல அது ரிலிஸ் ஆகததால பட்டத்து யானைய பார்க்க போனோம், காலையில சகப்பதிவர்கள் போட்ட விமர்சனத்துல சுமார்னு சொல்லிருந்தாலும் மரியான் அளவுக்கா இருந்துட போகுதுனு போனோம், ஏன்னா நாங்க அலெக்ஸ் பாண்டியனையே முதல் நாள் பார்த்தவங்க...   படத்துல கதை இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை, ஏன்னா டைரக்டர் பூபதி பாண்டியன், ஆனா நச்சுனு காமெடி இருக்கும்னு எதிர்பார்த்தேன், ஏன்னா அவரோட முதல் படத்துல இருந்து படம் எவ்ளோ மொக்கையா இருந்தாலும் சில காமெடிகள் பயங்கரமா ரசிக்க வைக்கும், உதாரணத்துக்கு "மலைக்கோட்டை"ல "இடிமுட்டி" கேரக்டர், "காதல் சொல்ல வந்தேன்"ல பேக்ரவுன்ட் கஜினி மியுசிக் குடுத்து பில்டப் ஏத்தற லேடி வாய்ஸ் கேரக்டர்னு சொல்லலாம். எதிர்பார்த்த மாதிரி வயிறு வலிக்கற அளவுக்கு காமெடி இல்லைனாலும் படத்தோட மொக்கைகள் தெரியாத அளவுக்கு காமெடி இருக்கு, அதுக்கு காரணம் சந்தானம் தான், அவர் யாரோட பாடி லாங்க்வேஜ...

மரியான் - அவசர பட்டுட்டேன்

Image
தனுஷ்க்குனு ஒரு அடையாளம் வந்துருச்சு, அவருக்கு போட்டினுலாம் இனி யாரும் நிக்க முடியாத இடத்துக்கு போய்ட்டார், "மரியான்"படத்தை உண்மையிலேயே தனுஷ் அ நம்பித்தான் முதல் நாள் பார்க்கப்போனேன், படம் கமர்ஷியல் இல்லைனு தெரியும், அதுக்காக இவ்ளோ மெதுவா போனா எப்படி? ஆடியன்ஸ் ஒவ்வொருத்தரும் வாட்ச் அ பார்த்துகிட்டே படம் பார்க்கறாங்க...   கதைக்களம் புதுசுனு சொல்ல முடியாது, நீர்ப்பறவைல பார்த்தது, அப்புறம் கொஞ்சம் மயக்கம் என்ன, செகன்ட் ஆஃப் "ரோஜா", இன்னும் கொஞ்சம் யோசிச்சுருக்கலாம், ஆனா ஒருவேளை உண்மைக்கதைங்கறதால எதுவும் செய்ய முடியலையோ என்னவோ? அதுக்குனு படம் மொக்கைனு சொல்ல மாட்டேன், ஏன்னா படத்தை 2 பேர் தூக்கி நிறுத்துறாங்க, படத்தோட ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், அவங்க இல்லைன்னா பல பேர் எழுந்து ஓடிருப்பாங்க, ஒவ்வொரு ஃப்ரேமும் தமிழுக்கு புதுசு, ஆப்பிரிக்கா புதுசு, முக்கியமா பார்வதி மேனன் ஃப்ரெஷ் ஆ இருக்க புதுசு. படத்துல தனுஷ் அ உபயோகப்படுத்துன அளவுக்கு மத்த எல்லோரையும் கண்டுக்காம விட்டது வருத்தப்படத்தக்க விஷயம், அதுலயும் அந்த மலையாள நடிகர் சலிம் ...

மகாதேவன் - கரை சேர்ப்பாளன்

Image
அன்பர்களுக்கு வணக்கம், நேற்று எங்கள் கல்லூரியில் புதிதாய் வந்திருக்கும் பேராசிரியர்களுக்கென ஒரு சுய உந்து நிகழ்ச்சி நடத்தினர், அதில் கோவை பார்க் கல்லூரி முதல்வர் திரு.லக்ஷ்மன் அவர்கள் ஒரு மனிதனை பற்றி மேலோட்டமாக குறிப்பிட்டார், பெயர் கூட கூறவில்லை, செய்யும் வேலையை மற்றவர்கள் மேற்பார்வை செய்கிறார்கள் என்பதற்காக செய்யாமல் தானாக சுயதிருப்திக்காக செவ்வனே செய்பவர்களுக்கு உதாரணமாய் அவரை குறிப்பிட்டார், அந்த மனிதனை பற்றிய விஷயங்கள் என்னை வெகுவாய் பாதித்தது. நமக்குதான் இருக்கவே இருக்கிறதே இணையம், தேடிப் பிடித்தேன், முழுதாய் அறிந்து கொண்டேன். அந்த மனிதனின் பெயர் மகாதேவன். அவரை பற்றிய தகவல்கள் உங்களுக்காக...   பிறந்தது 1961 ஆம் வருடம், கர்நாடகா மைசூரில் அஞ்சுப்புரா என்ற கிராமத்தில் பிறந்த மகாதேவ் தனது 8வது வயதில் பெங்களூர் அரசு மருத்துவமனைக்கு தனது உடல்நலமில்லாத தாயுடன் வந்தார், அவரது தந்தையை பற்றிய தகவல் இல்லை, அரசு மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் மருத்துவமனை வரான்டாவில் தன் தாயை படுக்க வைத்து விட்டு, அக்கம் பக்கமிருந்தவர்களிடமும் சுற்றி இருந்த கடைகளிலும் பசிக்கு தஞ்சமடைந்துர...

"அப்பா, அடிக்காதிங்கப்பா, இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்ப்பா" - தந்தையர் தினம்

Image
அன்பர்களுக்கு வணக்கம், இன்று தந்தையர் தினம், அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், பெண்களை பற்றி சொல்லவே வேண்டாம், நாம சாதாரணமா பேசறப்பவே அவங்கப்பா எப்படிலாம் அவங்க மேல பாசமா இருக்காங்கனு சொல்லி வெறுப்பேத்துவாங்க, பசங்கள்ல பாதி பேருக்கு என்னதான் அவங்கப்பா மேல பாசம் இருந்தாலும் 2 பேருக்கும் நடுவுல பெரிய இடைவெளி இருக்கும், படிப்பு முடிஞ்சு வேலைக்கு போக ஆரம்பிச்சதும் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகும்... இன்னைக்கு ஒரு நாள் முழுக்க அவங்கவங்க அப்பா கூட நடந்த நல்லது, கெட்டதை அசை போட்டுகிட்டு இருப்போமே, முதல்ல நான் என் அனுபவங்களை சொல்றேன்.... நான் எங்க வீட்ல 4 வது பையன், கடைக்குட்டி, அப்பா செல்லம், அதனால எங்கப்பா என்னை அடிச்சா இரத்தம் வராத அளவுக்கு தான் அடிப்பார், எங்க பரம்பரைலயே எங்க குடும்பத்துலதான் முதல்முறையா எல்லாரையும் காலேஜ் வரைக்கும் படிக்க வச்சது, எங்கப்பா 5 வது தான், ஆனாலும் 10வது வரைக்கும் நான் படிக்கறப்ப அது கணக்கு பாடமா இருந்தாலும் சத்தமா படிக்க சொல்லி பக்கத்துல உட்கார்ந்து கேட்டுகிட்டு இருப்பார்... எங்கப்பாகிட்ட எனக்கு பிடிக்காத விஷயம் எப்ப எனக்கு பரிட்சை முடிஞ்சு ரி...

தனித்திரு - 9

Image
முந்தைய பாகங்கள் #1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9 -------------------------------------------------------------------------------------------------------------- அடுத்த நாள் கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி ஒன்றாக வருகையில் என்னால் திருவை நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை. அவன் என்னுள் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்து ‘என் ஒரு மாதிரி இருக்க?' எனக் கேட்டான். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எனக்கு ஒரு விஷயம் தெளிவாய் புரிந்தது. இதற்கு மேல் என்னால் முன்பு போல் திருவிடம் இயல்பாய் பேச முடியாது. காதலை சொல்லியே ஆக வேண்டும். “திரு” “சொல்லு” “சொன்னா கோவிச்சுக்க கூடாது?” “சொல்லு” “நான் உன்னை காதலிக்கறேன்” அவன் நிமிர்ந்து என் முகத்தை பார்த்தான். அந்த பார்வையில் அவன் என்னிடம் இதை எதிர்பார்க்கவில்லை என தெரிந்தது. “என்ன திடிர்னு?” “நேத்துதான் எனக்கே தெரிஞ்சது” “நான் என்ன சொல்லனும்னு எதிர்பார்க்கற வரலட்சுமி?” “உனக்கு என்ன தோணுது?” “நான் எதாவது சொன்னா உன் மனசு கஷ்டபடுமோனு பயப்படறேன்” “பரவாயில்லை சொல்லு” “எனக்கு உ...

தனித்திரு - 8

Image
முந்தைய பாகங்கள் #1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9 -------------------------------------------------------------------------------------------------------------- அதன் பின்னர் திருவுடன் எப்போது பேசினாலும் எதாவது ஒரு விஷயத்தை பற்றி புதிதாய் பேசி, அவன் அதை எப்படி பார்க்கிறான் என்பதை பார்க்க துவங்கினேன். நாட்கள் நகர்ந்தது. ஒரு மாதம் கழித்து என் அத்தை மகளின் திருமணத்திற்கு செல்ல பேருந்து நிலையத்தில் என் குடும்பத்துடன் காத்திருந்தேன். ஏதெச்சையாக திருவுடன் ஒரு பெண் பேசிக்கொண்டு வருவதைப் பார்த்தேன். ஒரு நிமிடம் உள்ளே ஏதோ எழுந்து அணைந்தது. நான் பார்த்ததை கவனித்து சுபாவும் அவர்களை பார்த்தாள். இருவரும் எங்களை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தனர். திரு எங்களை பார்த்ததும் புன்னகைத்தான். அதில் எந்த களங்கமும் இல்லை. என் அப்பாவிற்கு அவனை பார்த்ததும் மிகவும் சந்தோஷம், உற்சாகமாக அவனுடன் கைகுலுக்கி நலம் விசாரித்து கொண்டிருந்தார். திரு எங்களுக்கு அவனுடன் வந்திருந்த பெண்ணை அறிமுகபடுத்தினான். பெயர் தீபிகாவாம். அவனுடன் பள்ளியில் படித்தவளாம். எனக்கு அவளை பார்க்க எர...

தனித்திரு - 7

Image
முந்தைய பாகங்கள் #1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9 -------------------------------------------------------------------------------------------------------------- அடுத்த நாள் நானே எதிர்பாராத விதமாய் வீடு வந்து சேர்ந்ததும் திருவிடமிருந்து அழைப்பு வந்தது. நம்ப முடியாமல் பேசினேன். நான் எதிர்பார்த்தது போல் எதுவும் இல்லை. அவன் தங்கைக்கு ஏதோ சில துணிகள், அலங்கார பொருட்கள் வாங்க துணைக்கு போய் வர முடியுமா என்று கேட்டான். எனக்கும் அந்த முட்டை கண்ணியை மீண்டும் பார்க்க வேண்டும் போல இருந்ததால் சரி என்று ஒத்துக்கொண்டேன். நான் உடை மாற்றி தயாராவதற்குள் வீட்டிற்கு அழைத்து வந்து, என் வீட்டில் உள்ளோரிடம் பேசிவிட்டு சென்றான். அவன் தங்கையின் பள்ளியில் ஏதோ விழா நடக்க போகிறதாம். அதற்கு நடனமாட போகிறார்களாம். 4 பெண்களுக்கு ஒரே மாதிரி துணி எடுக்க வேண்டும் என்றும் மற்ற சில அலங்கார பொருட்கள் வாங்க வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன். எனக்கும் இது போன்ற பொருட்களை எங்கு வாங்க வேண்டும் என்று அவ்வளவுக்காய் தெரியாது, என் தோழிகளிடம் விசாரித்து அழைத்து சென்றேன். கடைகளுக்கு சென்ற...

தனித்திரு - 6

Image
முந்தைய பாகங்கள் #1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9 -------------------------------------------------------------------------------------------------------------- திருமுருகனுக்கு திருப்பி தர வேண்டும் என்பதற்காகவே வேகவேகமாக எழுதி முடித்தேன். எழுதி முடித்த பின்பு அவன் வீட்டை பற்றி சிந்தித்து பார்த்தேன். எனக்கு ஒரு பக்கம் அந்த வீட்டை பிடித்திருந்தது. எங்கள் வீட்டிற்கு யாரேனும் வந்தால் நாங்கள் அவர்கள் செல்லும் வரை அறையை விட்டு வெளியே வரவே மாட்டோம். எங்களை பார்த்தபின் அவன் தங்கை அவனருகே அமர்ந்த விதம் எனக்கு பிடித்திருந்தது. அந்த வீட்டில் இருப்பவர்களுடன் இன்னும் நெருக்கமாக பழக வேண்டுமென்ற ஆவல் பிறந்தது. எழுதி முடித்தாகி விட்டது. வாங்கிய நோட்டினை திருப்பி தர வேண்டும். ஆனால் அக்கா வீட்டில் இல்லை. வெளியே சென்று இருந்தாள். அவள் வந்தால் உடனே கிளம்பலாம் என்று காத்திருந்தேன். கொஞ்சம் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தாள். உடனே திரு வீட்டிற்கு செல்ல வேண்டும் என தயாராக சொல்லி அவளை கிளப்பினேன். ஆனால் அதற்குள் வாசலில் நிழலாடியது. நான் கண்ணாடி முன் நின்றிருந்த...