பிக் பாக்கெட் ஹோம் மினிஸ்டர் ஆனா?-DARUVU - விமர்சனம்
அன்பர்களுக்கு வணக்கம், எனக்கு என்னமோ தெரியலைங்க, தெலுங்கு படம் மேல ஒரு தனி பிரியம் இருக்கு, எதனாலனு தெரியலை, ஒரு வேளை அருந்ததி, மகதீரா, ஹேப்பி டேஸ், நான் ஈ, பிருந்தாவனம்னு ஏகப்பட்ட விதமா படம் வர்ரதாலோயோ என்னவோ போங்க, சரி இன்னைக்கு நாம பார்க்க போற படம் 'தருவு'.
தெலுங்கு சிறுத்தை (விக்ரமார்குடு) பார்த்ததுல இருந்தே ரவி தேஜாவ எனக்கு பிடிக்கும். அந்த மனுசன் படம் எதுவும் அதிகம் சீரியஸ் ஆ இல்லாம காமெடிய மையமா வச்சே எடுப்பாங்க, அதை நம்பித்தான் எல்லா படமும் பார்க்கறேன். நம்ம வல்லத்தான் பதிவர் எழுதுன விமர்சனத்தை பார்த்துட்டு இந்த படம் பார்த்தேன்.
திரும்பவும் எமலோகத்தை சீனுக்குள்ள கொண்டு வர்ர கான்செப்ட், படம் ஆரம்பத்திலேயே வயசானதால தன் மகன் பிரபுக்கு எமன் பட்டம் குடுக்கற சீனியர் எமன் நம்ம பழைய '"எமனுக்கு எமன், அதிசிய பிறவி, எமதொங்கா" படக்கதையைலாம் சொல்லி எச்சரிக்கை பன்னிட்டுதான் போறார். ஆனா சித்ரகுப்தன் வேணும்னே லீவ் கிடைக்காத காண்டுல எமனை மாட்டி விடனும்னு திட்டம் போட்டு ரவி தேஜாவ சீக்கிரம் சாகடிக்க முடிவு பன்றார்.
நம்ம ரவிதேஜா யார்னா ராஜீனு சென்னைல பெரிய 420. அப்படி என்ன ஏமாத்து வேலை பன்றார்னுலாம் காட்ட மாட்டாங்க, அது ஒரு அடையாளம் முடிஞ்சது பாட்டு, அடுத்து ஒளியறதுக்குனு ஒரு மண்டபத்துக்குள்ள நுழைஞ்சு நிச்சயதார்த்த பொன்னுகிட்ட ஐ லவ் யூ சொல்லிட்டு வந்துடறார்.
ஹீரோயின் யார்னா நம்ம ஆடுகளம் டாப்சி தான். எப்படி எப்படியோ டான்ஸ் மாஸ்டரா வர்ர பிரேமானந்த் கூட காமெடி பன்னி லவ் ஒர்க் அவட் ஆகும்போதுதான் சித்ரகுப்தனோட திட்டபடி தப்பா ஹீரோவ எமலோகம் கூட்டிப் போயிடறாங்க. எமன் யார்னு சொல்லவே இல்லையே, நம்ம இளைய திலகம் பிரபு தான்.
நம்ம அதிசிய பிறவி படத்துல வர்ர மாதிரியே இன்னொரு ஹீரோ செத்ததும் அவர் உடம்புக்குள்ள அனுப்பிடலாம்னு முடிவு பன்றாங்க, அது யார் உடம்புனா ஹைதராபாத் ஹோம் மினிஸ்டர் உடம்பு. அவர் கூடவே இருந்து கொள்ளையடிச்சவங்க ஆள் திருந்தனதும் போட்டு தள்ளிடறாங்க,
ஒரு ரவுடி ஹோம் மினிஸ்டரான எவ்வளவு கலாட்டாவா இருக்கும். நேரா போய் லவ்வரை ஹெலிகாப்டர்ல கமாண்டோஸ் வச்சு தூக்கிட்டு வர்ரார். எங்க தப்பு நடந்தாலும் MMS அனுப்ப சொல்லி பிரச்சனைய தீர்த்து வைக்கறார். வில்லங்க சும்மா இருப்பாய்ங்களா? அவங்களுக்கு தெரிஞ்சதலாம் பன்னி ஹீரோவ போட்டு தள்ள பார்க்கறாங்க.
இதுலருந்துலாம் எப்படி ஹீரோ தப்பிக்கிறார்னு பாருங்க. படத்தை தெலுங்குலதான் பார்த்தேன். எனக்கு பிடிச்ச வசனம்.
"எனக்கு அந்த பொன்னு வேணும்"
"கிடைக்காது"
"ஏன் அவ சி எம் பொன்னா? இல்லை பி எம் பொன்னா?"
"இல்லை கல்யாண பொன்னு"
படம் வழக்கமான மசாலா படம், இயக்குனர் ஹீரோவையும் காமெடியையும் நம்பி படம் எடுத்துருக்கார். ரவி தேஜாவும் தன்னால முடிஞ்ச வரைக்கும் படத்தை தாங்கறார். பாட்டு எல்லாமே விஜய் ஆன்டனி தமிழ்ல போட்டதுதான், தெலுங்குல நல்லாதான் இருக்கு, பாருங்க.
படத்தோட ட்ரெய்லர்
மறக்காம் உங்க கருத்துக்களை தெரிவிங்க, பிடிச்சுருந்தா கீழ இருக்கு ஓட்டுப்பட்டைல ஓட்டு போடுங்க. நண்பர்கள் கிட்ட பகிர்ந்துக்குங்க.
பகிர்வுக்கு நன்றி நண்பரே...
ReplyDeleteநல்ல பகிர்வு! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
தாயகத்தை தாக்காதே! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html
சுதந்திர தின தகவல்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html