கலாய்ச்சுட்டாராமாம்...
ஒரு பெரிய மனிதர் அல்லது மற்றவர்கள் அனைவரும் பாராட்டுகிற ஒருவரை சடாரென கவிழ்த்து விடுவது பற்றி பேசி கொண்டிருக்கையில் எனக்கு 3 காட்சிகள் நினைவுக்கு வந்தது... முதல் காட்சி நம் கவுண்டர் நடித்த தங்கம் படத்தில் இருந்து, அந்த படத்தில் அவர் ஒரு வேட்டைக்காரனாக பேட்டி அளிக்கும் பொழுது சொல்லுவார்... தான் வேட்டைக்கு செல்லும் பொழுது திடிரென சிங்கம் தன்னை தாக்க வந்ததாகவும் அவர் உடனே இடைமறித்து "இவ்ளோ பெரிய காட்டுக்கு ராஜாவா இருக்கையே, ஒரு ஜட்டி கூட போடாம சுத்தறயே, உனக்கு வெட்கமா இல்லை?" என்றதும் சிங்கம் அவமானத்தில் திரும்பி சென்று ஒரு மரத்தில் ஒளிந்து கொண்டதாக சொல்வார். இந்த காட்சியை முதலில் பார்க்கையில் பெரிதாய் ஈர்க்கவில்லை, ஆனால் நண்பன் ஒருவன் அடிக்கடி யாரையாவது கிண்டலடிக்க இதை பயன்படுத்தும் தொனியை ரசிக்க துவங்கினேன்... இரண்டாவது ராமாயணத்தில் வரும் காட்சி, சீதை மிக அழகி, உலக அழகி, அவளை போல் வேறொரு பெண் எங்கும் கிடைக்க மாட்டால் என்ற பின்னர்தான் மாற்றான் மனைவி என தெரிந்தும் ராவணன் அவளை சிறைப்பிடித்தான் என்ற பேச்சு உலமெல்லாம் பரவ, சீதையை சிறை மீட்டு கிஷ்கிந்தைக்கு அழைத்து வந்த ...