பெருந்திணை - படலம் 1
18+ வயதின் இளையோர், ஒழுக்கத்தை உயிரினும் ஓம்புவோர், இலக்கிய வரையரையாளர், முக்கியமாய் காமத்தை சபிப்போர் இத்தொடரினை படிப்பதை தவிர்க்கவும். #பெருந்திணை படலம் - 1 அனிதாவிற்கு தூக்கம் கலைந்து பொழுது பக்கத்தில் ஆளில்லை. மெலிதான பதற்றத்தோடு அரைக்கண்ணிலேயே தேடவும் அசோக் படுக்கையில்தான் அமர்ந்திருந்தான். கொஞ்சம் தள்ளி கைகளால் முகத்தைத் தாங்கியபடி கண்களை மூடியிருந்தான். “ஓய்” “ம்” “என்ன இப்படி உக்காந்துருக்க?” “தூக்கம் போச்சு, எழுந்து போகவும் மனசில்லை” என்றான் கொட்டாவி விட்டவாறே… அவன் வெற்று முதுகில் கன்னம் வைத்துக் கொண்டாள். பின் அப்படியே துழாவி சதையிருந்த இடமொன்றினை மென்மையாகக் கடித்தாள். “ம்ம்” என்றான். “வலிக்கலை?” “வலிக்குது” “வெளிப்படையா கத்தக்கூட மாட்டியா?” என்றவாறு அழுத்தமாக கடித்தாள். இம்முறை நெளிந்தவன், அவளைப் பிடித்து தள்ளி, மேலே ஏறிப் படுத்து, கன்னங்களைக் கடித்தான். அவள் பலமாகக் கத்தினாள். “நீ கத்தறதை கேட்டா காலைக்காட்சின்னு நினைச்சுப்பாங்கடி” என்றான். சிரமப்பட்டு அவனை புரட்டித் தள்ளினாள். “அதெல்லாம் இன்னைக்கு கிடையாது, எனக்கு இன்னைக்கு நேரமா போகனும்” என்றவாறு ...