பட்டத்து யானை - யானை பேர் சந்தானம்
அன்பர்களுக்கு வணக்கம், கோவை வந்ததுல இருந்த நினைச்ச மாதிரி படம் ரிலிஸ் ஆனா முதல் நாளே பார்க்க முடியுது, இன்னைக்கு "சொன்னா புரியாது" போகனும்னு நினைச்சாலும் பக்கத்துல அது ரிலிஸ் ஆகததால பட்டத்து யானைய பார்க்க போனோம், காலையில சகப்பதிவர்கள் போட்ட விமர்சனத்துல சுமார்னு சொல்லிருந்தாலும் மரியான் அளவுக்கா இருந்துட போகுதுனு போனோம், ஏன்னா நாங்க அலெக்ஸ் பாண்டியனையே முதல் நாள் பார்த்தவங்க... படத்துல கதை இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை, ஏன்னா டைரக்டர் பூபதி பாண்டியன், ஆனா நச்சுனு காமெடி இருக்கும்னு எதிர்பார்த்தேன், ஏன்னா அவரோட முதல் படத்துல இருந்து படம் எவ்ளோ மொக்கையா இருந்தாலும் சில காமெடிகள் பயங்கரமா ரசிக்க வைக்கும், உதாரணத்துக்கு "மலைக்கோட்டை"ல "இடிமுட்டி" கேரக்டர், "காதல் சொல்ல வந்தேன்"ல பேக்ரவுன்ட் கஜினி மியுசிக் குடுத்து பில்டப் ஏத்தற லேடி வாய்ஸ் கேரக்டர்னு சொல்லலாம். எதிர்பார்த்த மாதிரி வயிறு வலிக்கற அளவுக்கு காமெடி இல்லைனாலும் படத்தோட மொக்கைகள் தெரியாத அளவுக்கு காமெடி இருக்கு, அதுக்கு காரணம் சந்தானம் தான், அவர் யாரோட பாடி லாங்க்வேஜ...