Posts

Showing posts with the label காலேஜ் டைரி

ஏண்டா டகால்டி-CTS SEN

Image
அன்பர்களுக்கு வணக்கம், கல்லூரி நண்பர்கள் பற்றி எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, இன்று நண்பனின் பிறந்தநாள், அவனை பற்றி பேச மனம் விழைகிறது, அவனுக்கு அருமையான தமிழ் பெயர் "செந்தமிழ்", பொதுவாக ஒவ்வொரு மனிதனையும் பிடித்தவர்கள் இருப்பது போல் பிடிக்காதவர்களும் இருப்பார்கள், எனக்கு தெரிந்து என்னுடன் கல்லூரியில் படித்த அனைவருக்கும் இவனை பிடிக்கும்.செந்தமிழை நினைத்தாலே மனம் குதுகலமடையும், ஒல்லியான உருவம், சிரித்த களையான முகம், அப்பப்போ தாடி வைப்பாறு, முக்கியமானது இவனுடைய உடல்மொழி, இரண்டு தோள்பட்டையையும் தூக்கி ஆட்டி "ஏண்டா டாய், டகால்டி" என்றால் அதை நினைத்து நான் இரண்டு நாள் சிரித்து கொண்டிருப்பேன். அவனது தந்தை  மத்திய வங்கி வேலையில் இருந்ததால், அவனது குடும்பம் வட இந்தியாவில் இருக்க, இவன் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தான். இவன் பெயர் முதலாம் ஆண்டு எல்லாரிடமும் பிரபலமானதே சுவாரசியமான முறையில்தான், முதல் செமஸ்டர் தேர்வு எழுதி விட்டு மெஸ்ஸுக்கு சாப்பிட வந்த எல்லோரிடமும் "மச்சி, நீ பாஸ் ஆகிருவியா? எனக்கு போயிரும்னு பயமா இருக்குடா" என ரொம்ப அப்பாவாக முகத்த...

லல்லு யாதவ்வின் கொள்ளு பேரன் - காலேஜ் டைரி 6

Image
அன்பர்களுக்கு வணக்கம், என்னடா தலைப்பு கொஞ்சம் வித்தியாசமா இருக்கேன்னு பார்க்கறிங்களா? வெறுமனே தலைப்ப பார்த்துட்டு படிக்க ஆரம்பிச்சிங்கனா உங்களுக்கு சத்தியமா புரியாது. முதல் பதிவுல இருந்து படிச்சுட்டு வாங்க. இன்னைக்கு நம்ம காலேஜ் டைரில பார்க்க போற ஆள் சாதாரணமானவர் இல்லை, அவருக்கு சென்ட்ரல் வரைக்கும் பவர் இருக்கு, அவர் கை காட்டுனா எக்ஸ்பிரஸ் ரயிலே நிக்கும்ங்க, அவ்வளவு ஏன்? நம்ம முன்னாள் ரயில்வே மந்திரி லல்லு பிரசாத் யாதவ்க்கு 24 விட்ட பேரான்டி. நான் 2 வது செமஸ்டர் காலேஜ் போனதும் எனக்கு ஒரு கண்டம் வந்தது, சாதாரணமானது இல்லைங்க, கொஞ்சம் பெருசு, எங்க க்ளாஸ் இன்சார்ஜ் மானிக்க வேல் சார் 4 பேர் இருக்க மாதிரி குருப் ஃபார்ம் பன்னிக்க சொன்னார், நானும் எதுக்கும் வசதியா இருக்கட்டும்னு கடைசி பெஞ்ச்ல இருக்க நான், நிவாஸ், கைப்புள்ள, நம்ம லிட்டில் பாண்டுனு ஒரு குருப் ஃபார்ம் பன்னேன். கடைசியாதான் தெரிஞ்சது அவர் குருப் ஃபார்ம் பன்ன சொன்னது செமினார் எடுக்கறதுக்குனு, 4 பேர் சேர்ந்து எடுக்கனுமாம், எந்த டாபிக் வேணும்னாலும் எடுத்துக்கலாமாம், நிவாசும் கைப்புள்ளையும் அப்படி செமினார் எடுத்த...

வெள்ளைக் குயிலை கண்டறிந்த விஞ்ஞானி - காலேஜ் டைரி 5

Image
அன்பர்களுக்கு வணக்கம், எனது கல்லூரி வாழ்க்கையில் என்னுடன் வாழ்ந்த சில நண்பர்களை காலேஜ் டைரி வாயிலாக அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறேன், அதில் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒரு முக்கியமான ஆளை, அவரது பெயரை கூறுவதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை, ஏன் அவரே தாராளமா எழுதிக்கோ என்றுதான் கூறினார், ஆனால் அவரது பெயரிலேயே என் வகுப்பில் 3 பேர் படித்ததால் அவர்கள் வீட்டில் குழப்பம் வந்து விட கூடாது என்பதற்காக பேரைக் கூறாமல் எழுதுகிறேன், அவர் யார் என் கூற ஒரு அடையாளச் சொல் உள்ளது, அது ஒரு பறவையின் பெயர். குயில். சோனாக் கல்லூரியில் 2008 ஆம் வருடம் படித்து முடித்தவர்கள் அனைவருக்கும் இவரினை நன்றாக தெரியும். முந்தைய பதிவுகளை படிக்காதவங்க படிச்சுருங்க, இல்லை புரியாது. சோனா கல்லூரிக்கு வந்த கெட்ட காலம்- காலேஜ் டைரி பாகம் 1 ஒரு முறை அனைவரும் தேர்வுக்கு அவசரமாக படித்துக் கொண்டிருந்த போது ( சேச்சே நான் இல்லைங்க, மத்தவங்க), இவர் வந்து காமெடி பன்னுவதாக நினைத்துக் கொண்டு வெள்ளையாக இருந்த புறாவினை பார்த்து குயில் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லியதால் அன்று முதல் இவர் அனைவர...

இறந்துருனு சொல்லு ஆனா மறந்துருனு சொல்லாத!!!- காலேஜ் டைரி-4

Image
அன்பர்களுக்கு வணக்கம். இதுக்கு முந்தைய பதிவுகளை படிக்காதவர்களுக்கு சத்தியமா நான் என்ன சொல்றன்னு புரியாது. அதனால முதல்ல அதை படிச்சுருங்க.  காலேஜ் டைரி-1 காலேஜ் டைரி-2 காலேஜ் டைரி-3 இப்ப நான் சொல்ல போறது எங்க கல்லூரியோட முதல் தேவதாஸ் பத்தி, நிறைய பேர் காதலிச்சாங்க, அதுல பாதிப் பேரை தூண்டிவிட்டு போய் காதலை சொல்ல வச்ச பெருமை எங்க பசங்களுக்குதான் சேரும். அது மாதிரி எங்களால பாதிக்கப் பட்டதுல ரொம்ப முக்கியமான ஒருத்தனை பத்தித்தான் இன்னைக்கு பார்க்கப் போறோம். பையனை பத்தி சொல்லனும்னா தங்கமான பையன், நம்பி பொன்னு கூட குடுக்கலாம், எந்த கெட்டப் பழக்கமும் இல்லை, காலேஜ் படிக்கும் போதே கந்து வட்டி விட்டுட்டு இருந்தான். சரி அவன் காதல் கதைக்கு வருவோம். எல்லாருக்கும் காதல் எப்படி எப்படியோ வரும், இவனுக்கு வந்த விதமே விசித்தரமானது, அதை விட அந்த காதலை நாங்க தெரிஞ்சுகிட்ட விதமே செம காமெடியான அனுபவம். படிச்சா அவனும் சிரிப்பாங்கற நம்பிக்கைல எழுதறேன். நாங்க 2 வது வருசம் சுற்றுலா போனப்போ பக்கத்துல உட்கார்ந்து தூங்கிட்டு இருந்தான்.  "டேய் தள்ளி உட்கார்ரா"னு சொன்னேன். தூக்க...

"மச்சான் அது உன்னோட 15வது தங்கச்சிடா"- காலேஜ் டைரி-3

Image
அன்பர்களுக்கு வணக்கம். என்னடா தலைப்பு இப்படி இருக்குனு நினைக்கறிங்களா? என்ன பன்றது? அவன் என் பக்கத்துல இருக்கும் போது நான் அதிகமா கேட்ட வசனம் இதுதான், நான் என்ன சொல்றன்னு புரியலைன்னா இதுக்கு முந்தின பார்ட் அ படிச்சுருங்க. நாம போற பஸ் ஆக்சிடென்ட் ஆனா எவ்ளோ நல்லாருக்கும்?- காலேஜ் டைரி-2 படிச்சுட்டிங்கனா நான் யாரை பத்தி சொல்றனு தெரிஞ்சுருக்கும், எப்படி கூடவே இருந்து ஒருத்தன் எல்லா பொன்னுங்களையும் விரட்டி விட்டு கெடுத்தானோ, அதே மாதிரி இன்னொருத்தனும் இருக்கான், இவன் ஸ்டைல் வேற, இந்த பதிவுல நான் உங்களுக்கு அறிமுக படுத்தப் போற மெக்கானிக்கல்ல படிச்ச என் உயிர் நண்பனின் பெயர் மாதேஸ்(பெயர் மாற்றப் பட்டுள்ளது).  எனக்கு ஏதாவது ஒரு பொன்னை பிடிக்கும், நான் போய் பேச கூட முயற்சி பன்ன மாட்டேன், சும்மா பார்ப்பேன், உடனே "மச்சான் அது உன்னோட 15வது தங்கச்சிடா"னு சொல்லுவான். இதுக்கு முன்ன பார்த்த 14க்கும் அதையேதான் சொன்னான், சரி எப்படியும் பார்க்கற பொன்னுங்ககிட்டலாம் போய் பேசற தைரியம் எனக்கு கிடையாது, சும்மா பார்க்கறதுக்கு எதுக்கு சண்டை போடனும்னு எதுவும் சொல்ல மாட்டேன். ஆன...

நாம போற பஸ் ஆக்சிடென்ட் ஆனா எவ்ளோ நல்லாருக்கும்?- (சோனா) காலேஜ் டைரி-2

Image
அன்பர்களுக்கு வணக்கம்.என்னுடைய கல்லூரி அனுபவங்களை எழுத துவங்கிய பின் பெரிய எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தேன், இன்னும் வரவில்லை. சரி நாம கதைக்கு போவோம். முதல் பாகத்தை படிக்காதவங்க படிச்சுட்டு வந்துருங்க. சோனா கல்லூரிக்கு வந்த கெட்ட காலம்- காலேஜ் டைரி பாகம் 1 படிச்சுட்டிங்களா? இப்ப உங்களுக்கு புரிஞ்சுருக்குமே? நான் எவ்வளவு ஆசையா இந்த காலேஜ்ல சேர்ந்துருப்பேன்னு, நானும் அதெல்லாம் கற்பனை பன்னிகிட்டே முதல் நாள் காலேஜ் வந்தேன். ஸ்கூல்ல தான் நல்ல பையன்னு அடங்கி இருந்துட்டோம், இது சேலம், நம்ம ஊர், கொஞ்சம் ஆடித்தான் பார்ப்போமேனு முடிவு பன்னேன். 10 நிமிசம் முன்னாடி வந்தும் வேனும்னே க்ளாஸ்க்கு போகாம காரிடர்ல நின்னுட்டு இருந்தேன், என்னை மாதிரியே ஒருத்தன் கைல ஒரு நோட் வச்சுகிட்டு நின்னுகிட்டு இருந்தான். பெல் அடிச்சு ஸ்டாஃப் உள்ள போனதுக்கு அப்புறம்தான் நான் உள்ள போனேன். போய் கடைசி பெஞ்ச் அ தேடி உட்கார்ந்தேன், எனக்கு அப்புறம் லேட்டா அவன் வந்து என் பக்கத்துல வந்து உட்கார்ந்தான். நின்னுகிட்டுருந்த வாத்தியார் சும்மா இல்லாம ஒவ்வொருத்தரா வந்து ஸ்டேஜ்ல அவங்கவங்கல பத்தி இங்கிலிஸ்லி இன்ட்...

சோனா கல்லூரிக்கு வந்த கெட்ட காலம்- காலேஜ் டைரி பாகம் 1

Image
அன்பர்களுக்கு வணக்கம், ஏதேதோ தோன்றுவதை எழுதிக் கொண்டிருந்தேன், பின்பு மற்றவர்களை பார்த்து விமர்சனம் எழுத துவங்கினேன். விமர்சனம் எழுதினால் அந்தந்த காலங்களில் மட்டுமே வாசகர்கள் கிடைப்பார்கள். எல்லா சமயங்களிலும் அனைவராலும் படிக்க விரும்பகூடிய பதிவுகள் எழுத முயற்சி செய்கிறேன். இதோ முதல் முயற்சி என் கல்லூரி அனுபவங்கள் என் நடையில் உங்களுக்காக. இந்த பதிவில் என் சுயபுராணம் அதிகம் வராமல் நிகழ்வுகளையே ரசிக்கும் விதத்தில் சொல்ல விரும்புகிறேன். எங்கயாவது என் பெருமைய பெருசா பேசுனா உடனே கமெண்ட் போட்டு என்னை ஆஃப் பன்னிருங்க. கதை எங்க இருந்து ஆரம்பிக்குதுனா எனக்கு SSLC ரிசல்ட் வந்த நாள்ள இருந்து, ஏன்னா தெரியாத்தனமா எனக்கு யாரோ 400 க்கு மேல மார்க் போடவும் என்னை கொண்டு போய் அந்தியுர் ஐடியல் ஸ்கூல்ல சேர்த்துனாங்க, நான் படிக்கறப்ப என் கூட படிச்ச எல்லாருக்கும் ஒரே ஒரு லட்சியம் தான். டாக்டராகனும்னு, அஃப்கோர்ஸ், எனக்கும்தான். ஆனா +2 பரிட்சை நெருங்கறப்ப எனக்கு தெரிஞ்சு போச்சு, நமக்கு எந்த மெடிக்கல் காலேஜ்லயும் சீட் தர மாட்டாங்கனு.  நம்ம ஊர்ல படிப்புனா 2 தான், ஒன்னு டாக்டர், இன்னோன்னு இஞ்சினி...