KAHAANI - பார்க்க வேண்டிய படம்- திரை விமர்சனம்
அன்புள்ள வாசகர்களுக்கு, இது வரை நான் ஒரு தமிழ் படத்திற்கு கூட விமர்சனம் எழுதியது இல்லை, ஏனென்றால் தமில் சினிமாக்களை நான் பார்ப்பதற்குள் குறைந்தது 50 பேராவது பார்த்து விமர்சனம் எழுதி விடுகிறார்கள், மற்ற மொழி படங்கள் அப்படி இல்லை, அதனால்தான் நான் எழுதும் விமர்சனங்கள் மற்ற மொழி படங்களை மட்டும் விமர்சிக்கின்றன.
இன்று நாம் பார்க்க இருக்கும் படம் "KAHAANI". இந்த வார்த்தைக்கு அர்த்தம் எனக்கு தெரியவில்லை. தலைப்பா முக்கியம், நம்மள பொறுத்த வரைக்கும் வசனமே முக்கியம் இல்லை.
அதாவது பார்த்திங்கனா நம்ம வித்யா பாலன் அதாங்க நம்ம ஊர் சில்க் ஸ்மிதா கேரக்டர்ல THE DIRTY PICTURE ல நடிச்சதே அந்த பொன்னுதான், உண்மைலேயே அழகான பொன்னுங்க, அதே நேரத்துல நல்லா நடிக்கவும் செய்யுது.கதைக்கு வருவோம்.
படத்தோட ஆரம்பத்துல ஒரு மெட்ரோ ட்ரேய்ன் ல ஒரு டெர்ரரிஸ்ட் கேஸ் பாம் போட்டு எல்லாரையும் கொல்றத காட்றாங்க, இந்த சீன்னுக்கும் க்ளைமாக்ஸ்க்கும் சம்பந்தம் இருக்கு, நல்லா பார்த்துக்கங்க,
ஒரு பொன்னு உண்மைலேயே கர்ப்பத்துலதான் அழகா தெரிவாங்கனு சொல்லுவாங்க, அந்த வகையில படம் ஆரம்பத்துல வித்யா ஏர்போர்ட்ல வந்து இறங்கும் போதே அழகா தெரியறாங்க, லண்டன் லருந்து நேரா கொல்கத்தா வந்து முதல் வேலையா போலிஸ் ஸ்டேசன் போய் ஒரு மாசத்துக்கு முன்னாடி இந்தியா வந்த தன்னோட புருசன்ன கானோம் நு கம்ப்ளெய்ன்ட் தராங்க, அந்த ஸ்டேசன்ல இருக்க ஒரு சப் இன்ஸ்பெக்டர் அவங்களுக்கு கூடவே இருந்து உதவி பன்றார்.
இதுல வித்யா தன்னோட வீட்டுக்காரர கண்டுபிடிக்க விடாம நிறைய பேர் தடுக்கறாங்க, போலிஸ்ல பல பெருந்தலைங்கலாம் தலையிடுது, இதுல தீவிரவாதிங்களும் சம்பந்த பட்றாங்க, இது எல்லாத்தையும் தாண்டி வித்யா தன்னோட வீட்டுக்காரர எப்படி கண்டு பிடிக்கிறாருங்கறதுதான் கதை.
தமிழ் படம் மாதிரி கதையோட ஒட்டாம காமெடி வச்சோ, ரசிகர்கள் கேட்கறாங்கனு குத்து பாட்டு வச்சோ, 20, 30 பேரை அடிக்கற மாதிரி ஃபைட் வச்சோ டைரக்டர் படத்தை நகர்த்தலை, கதைக்கு தேவை இல்லாம ஒரு சீன் கூட வைக்கலை, அதே மாதிரி கதைல வர ஒவ்வோரு கேரக்டரோட மென்டாலிட்டிய நாம பார்த்தாலே புரிஞ்சுக்கற மாதிரி ஆளுங்களை தேரிந்தெடுத்துருக்கார்.உதாரணத்துக்கு படத்துல வர காண்ட்ராக்ட் கில்லர்- அ பார்த்தா யாருக்கும் சந்தேகம் வர மாதிரி பன்னிருக்கார்.
எல்லா சீன்லயும் அழகா தெரியறது கொல்கத்தாவும் வித்யா பாலனும்தான், விதயா ஊருக்கு வரப்ப துர்கா பூஜைக்கு ஊரே தயாராகறதா சொல்லிட்டு துர்கா பூஜையன்னைக்கு கதைய முடிச்சுருக்காங்க,
கொல்கத்தால பாரம்பரியமா கட்டற வெள்ளை-சிகப்பு புடவைய கட்ட முயற்சி பன்னி அழும்போது நம்ம கண்லயும் மெதுவா ஈரம் எட்டி பார்க்குது. மசாலா படம் பார்த்து வெறுத்தவங்களுக்கு இந்த படம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்,
படத்துல எனக்கு நிறைய விசயம் பிடிச்சுருக்குங்க,
- முதல் விசயம் எந்த மாஸ் ஹீரோவையும் நம்பாம படம் எடுத்தது
- க்ளாமர் கேர்ள்னு சொல்ற வித்யா பாலன் அ தைரியமா கர்ப்பினியா காட்டுனது
- முடிஞ்ச வரைக்கும் கொல்கத்தாவ அழகா காட்டுனது
- போலிஸ் ஸ்டேசன் அ அவ்ளோ இயல்பான இடமா நம்மள நம்ப வச்சது, முதல் முதலா வித்யா வந்தப்ப ஸ்டேசன்ல இருக்க எல்லா போலிஸிம் இங்கிலிஸ் ல பேச முயற்சி பன்னி முடியாம விட்டுட்றது
- வித்யா எல்லா குட்டி பசங்ககிட்டயும் அழகா பேசி ஃப்ரெண்ட் ஆகிடறது
- அது ஏன்னே தெரியலை, நம்ம ஹீரோ கொலை பன்னும் போது ஆண் கடவுள் யாரையாவது காட்றாங்களோ இல்லையோ ஹீரோயின்னுக்கு கோபம் வந்தாலே காளியம்மன காட்டிடறாங்க.ஆனாலும் நல்லாயிருந்தது.
படத்தை கண்டிப்பா பாருங்க, ஒரு அழகான பொன்னு ஒழுக்கமா நடிச்சுருக்கு, இதுக்காகவே பார்க்கனும். ஏற்கனவே படம் பார்த்தவங்க நான் ஏதாவது தப்பா சொல்லிருந்தா எனக்கு சுட்டிக் காட்டுங்க.
என்றும் அன்புடன்
கதிரவன்.
Comments
Post a Comment