மறக்கப் பட்ட கவர்ச்சி கன்னி-சில்க் ஸ்மிதா

1926 சூன் 1 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமையில் பிறந்த குழந்தையின் பெயர் நார்மா ஜீன் மார்ட்டேன்சன் , இவர் உலக சினிமாவையே வரலாற்றில் மிக பெரிய கனவு தேவதையாக வலம் வருவார் என்று அன்று தெரியவில்லை, சிறு வயதில் பல்வேறு துன்பங்களுக்கும், பாலியல் வன்முறைக்கும், குடும்ப சூழல்களுக்கும் சிக்கக் கொண்டவர் இவர், பதினாறு வயதில் திருமணம் முடித்து, அதற்கு பின் மாடலிங் துறையில் காலெடுத்து, தன் அழகாலும், தோற்றத்தாலும், கவர்ச்சியாலும் இந்த உலகை புரட்டிப் போட்டு இறந்த பின்னும் இன்று வரை நம் மனதில் மாறாது இருப்பவர் மெர்லின் மன்றோ... இவரின் இறப்பு குறித்த மர்மங்கள் இன்றும் புரியாத புதிராகவே இருந்து வருகின்றது...
 

===========================================
1960 , மர்லின் மன்றோ இறப்பதற்கு சரியாக இரண்டு வருடங்கள், ஏலுறு , ஆந்திரா பிரதேசத்தில் விஜயலட்சுமி என்ற பெயரில் டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்தது. சிறு வயதில் குடும்ப சுழல் காரணமாக பெற்றோரால் படிப்பை நிறுத்தப் பட்டு, அறியாத வயதில் திருமணமும் செய்து வைத்தனர், கணவன் மற்றும் மாமியார் கொடுமையால், அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு புறப்பட்டு வந்தார் விஜயலட்சுமி. அன்றிலிருந்து அவர் வாழ்கையில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது. , தமிழகத்தை தன் கவர்ச்சியாலும், காந்த கண்களினாலும் சுண்டி இழுத்தவர் , அவர் தான் விஜயலட்சுமி என்கின்ற சில்க் சுமிதா.


ஆனால் இவரின் கவர்ச்சியான தோற்றத்திற்கும், கவர்ச்சியான நடிப்பிற்கும் முகம் சுழித்தவர்களும் இருந்தனர், ஐடம் கேர்ள் நடனம் மட்டும் ஆடும் பெண்களிடையே சில்க் தான் என்றும் டாப், அதோடு மட்டும் அல்லாமல் சில்க் பல படங்களில் நடித்தும் உள்ளார், அற்புதமான நடிகையும் கூட அவர்...

சுமித்தாவின் வாழ்க்கை புரியாத புதிராகவே இருந்து வந்தது, அவரின் தனிப் பட்ட வாழ்க்கை இன்று வரை மர்ம முடிச்சுகள் அவிழப் படாமல் இருகின்றது , அவர் தற்கொலை செய்துக் கொண்ட பின், ஏற தாழ அவரைப் பற்றி தமிழ் மக்களும் சினிமா துறையும் மறந்து போனது, தீடிரென பாலிவுட்டில் அவரின் சுய சரிதை படமாக்கப்படுவதாகவும், படத்தில் சோகம் தோய்ந்த முகத்துடன், ஒரு குடும்ப பெண்ணாக ( பரிநீதா ) போன்ற படங்களில் நடித்த வித்யா பாலன் நடிப்பதாகவும் சொன்னார்கள் , இது ஒரு நல்ல தேர்வே இல்லை, சில்கு எவ்வளவு அழகு, சில்கின் நடை, உடை, அவளின் தோற்றம், நிறம் எல்லாமே ஒரு அழகு, என்று பல பேர் தங்களின் கருத்தை முன் வைத்தார்கள்,

இது ஒரு புறம் இருக்கட்டும், இன்றைய நவீன காலத்து பெண்கள் " Dusky " என்று கூறப் படும் மாநிறத்தை விரும்புகின்றனர், தீபிகா படுகோனே, கஜோல், ராணி முகர்ஜி போன்றவர்கள் " Dusky beauty " என்றும் சிலரால் அழைக்கப் படுவது உண்டு. ஆனால், நம் தமிழ் சினிமா, இதை ஒரு தலை முறைக்கு முன்பாகவே அறிமுகப் படுத்திவிட்டது. சில்க் சுண்டி இழக்கும் நிறம் இல்லை, மாநிறம் தான், இப்பொழுதுக்கான சொல்லாடல்களில் சொல்லபோனால் " Dusky Beauty :, இன்றைய நவீன பெண்கள் தங்களின் நாரிகம், உடை ஆகிய அனைத்தையும் தாங்கள் தேர்வு செய்வதற்கான சுதந்திரத்தைப் பெற்று இருகின்றனர், அதை அன்றே பெற்று இருந்தார் சில்கு, சில்கின் வாழ்க்கையிலிருந்து அறிவது என்ன வென்றால் அவர் நிச்சயமாக ஒரு தைரியமான, சுயமாக முடிவெடுக்கும் ,பெண்ணாக இருந்து இருத்தல் வேண்டும், மிக அழுத்தமான பெண்ணாகவும் இருந்திருத்தல் வேண்டும்.


யாரும் எளிதாக செய்ய தயங்கும் கவர்ச்சி வேடங்களில் சில்க் செய்தார் என்பதால் பல பேர் அவரை வெக்கம் இல்லாதவள் , மானம் கேட்டவள் என்றும் பட்டமளித்தனர், ஆனால் அப்படி அவர் செய்வதற்கு அவர் எத்தகைய துணிச்சலான பெண்ணாக இருந்து இருப்பார் என்பது வியப்பை அளிக்கின்றது. இதிலென்ன துணிச்சல் வேண்டும் ? என்பவர்களுக்கு, சில்க் சிறிய வயதில் பல்வேறு துன்பங்கள் அனுபவித்து அந்த அனுபவங்களின் தாக்கம் கலைத் துறையில் அவர் எந்த கதாப் பாத்திரத்தையும் ஏற்று நடிப்பதற்கான மன உறுதியை வெளிப்படுத்தியது,


இன்றைய சுழலில் நடிகைகளின் வாழ்க்கை வேறுவிதமாக அமைந்துள்ளது. பெற்றோர்களே அவர்களை ஊக்குவிக்கிறார்கள் , வித்யா பாலன் சில்கைப் போல் நடித்ததற்கு அவரை முதலில் பாராட்டியது வித்யா பலானின் தந்தை, ஆனால் சில்கிற்கு மிஞ்சியது வெறும் மரணம் என்னும் கோர பிடித்தான்.

அன்றைய காலகட்டத்தில் சில்க் சுமிதா அருவெறுப்புடனும் , சில்க் சுமிதாவை ரசிப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்றும் இருந்தது, அது இன்று வரை தொடர்கிறது, ஆனால் சில்க் சுமிதாவின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த ஒரு பெண்ணுக்கு பரிசும் பாராட்டும், பட்டங்களும், கோடிகளும்... பல பேர் வித்யா பாலனின் இந்த முயற்சிக்கு , " She is courageous to take up this stand ", என்றனர் , நான் மறுக்கவில்லை, ஆனால் ஒருவராக நடிக்கும் ஒருவருக்கு இத்தனை புகழ் என்றால், வாழ்ந்தவருக்கு ஏன் அப்படி இல்லை? ஏன் சில்க்கை பார்க்கும் போது எல்லோருக்கும் பாலியல் குறித்த எண்ணமும், கேவலமான சிந்தனையும் மட்டும் தோன்றுகிறது ? என்றால் நாம் எதையும் எப்படி சொல்லப் பட்டதோ அப்படியே ஏற்கும் மனப் பான்மையில் உள்ளோம் என்பதற்கான அறிகுறியே ..

மெர்லின் மன்றோவிற்கும் ..சுமித்தாவின் வாழ்க்கையும் ஏற தாழ ஒரே சூழ்நிலைகள் தான். சிறு வயதில் வறுமை, புறக்கணிப்பு, திருமணம், திருப்புமுனை, மரணம். ஆனால் இடைப்பட்ட வாழ்க்கையில் மெர்லின் மன்றோவிற்கும் சில்க்குக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன,

மெர்லின் மன்றோ அமெரிக்காவின் ஒரு அழகு தேவதையாகவும், கவர்ச்சி கண்ணியாகவும் கருதப்பட்டார் , இன்றளவும் அவருக்கு பல கோடி பேர் ரசிகர்கள், ஆனால் சில்க் இன்று நம்மிடையே மறைந்து போய் விட்டார்... அவரின் ரசிகர் என்று சொல்வதற்கு கூட தயங்குகிறார்கள்....

சில்க் 1996 , தூக்கில் இட்டு தற்கொலை செய்துக் கொண்டார், இவர் மரணத்தில் மர்மங்களின் முடிச்சுகள் அவிழப்படாமல் உள்ளது, பலர் காதல் தோல்வியென்றும், பாலியில் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறுகின்றனர் , எது எப்படி இருந்தாலும் . ஆந்திராவில் பிறந்து தமிழகம் கண்டெடுத்த சில்க் சுமிதா தமிழ் நாட்டின் மெர்லின் மன்றோ....

Comments

  1. பாவப்பட்ட உண்மை

    ReplyDelete
  2. சில்க்- பட்டுப்பூச்சி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2