கலர்புல் லவ் ஸ்டோரி 'BACHNA AE HASEENO' விமர்சனம்

அன்புள்ள நண்பர்களுக்கு, ஏதோ கடிதம் எழுதுவது போலத்தான் துவங்க வருகிறது, இன்னும் பயிற்சி தேவையோ? சரி விசயத்துக்கு வருவோம், மறுபடியும் விமர்சனம் தாங்க, என்னமோ தெரியல நான் விமர்சனம் எழுதனும் நினைக்கற படத்துல வர ஹீரோ பொம்பளை பொறுக்கியா தாங்க வரான், அதுவுமில்ல்லாம எனக்கும் இது மாதிரி படம்தான் பிடிச்சு தொலையுது.
படத்தோட பேர் "BACHNA AE HASEENO" அப்படினா என்ன அர்த்தம் னு கேட்காதிங்க, சத்தியமா எனக்கு தெரியாது. இந்த ஹீரோ, டைரக்டரோட இன்னோரு படம் "ANJAANA ANJAANI" பார்த்தேன், பிடிச்சுருந்தது, அத பத்தி அடுத்த பதிவு ல எழுதறேன்.முதல்ல இத பார்ப்போம்.
படத்துல எனக்கு பிடிச்ச முதல் விசயம் 3 ஹீரோயின்,  இந்த ஒரு காரணம் போதாதா எனக்கு முழு படமும் பார்க்க, நம்ம ஊர் "நான் அவன் இல்லை" மாதிரி படத்தோட ஆரம்பத்திலேயே 3 ஹீரோயின் கூடவும் சேர்ந்து ஒரு பாட்டு வச்சுட்டாங்க,
 எனக்கு 3 பேரையுமே பிடிச்சுருக்குங்க, அடுத்ஹு ஹீரோ கதை சொல்ல ஆரம்பிக்கிறார், முதல்ல அவர் ஆட்டோகிராஃப் போட்டது 1996 ல, ஒரு ஃபாரின் ட்ரிப் ல ட்ரேய்ன் ல கியூட் ஆ ஒரு பொண்ண மீட் பன்றார், அடுத்து ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து எப்படி அதை கரெக்ட் பன்றதுனு பிளான் போட்றார், இதுல இவங்களுக்கு ஒரு கொள்கை, கடைசி வரைக்கும் எந்த பொன்னையும் கல்யாணம் பன்னாம சும்மா கரேக்ட் மட்டும் பன்னிட்டு கழட்டி விட்டுடனும்னு, அவருக்கு அதிர்ஸ்டம் அடிக்குது.
 ஹீரோவும் ஹீர்ரொயினும் சேர்ந்தாப்ல ட்ரேய்ன் அ மிஸ் பன்னிடறாங்க, இந்த ஹீரோயின் பத்தி சொல்ல மறந்துட்டனே, இவங்களுக்கும் ஒரு லட்சியம் இருக்கு, "dhilwae dhulhania lee jaainge" படத்துல வர ஷாருக் மாதிரி ஒரு கேரக்டர் அ கண்டுபிடிச்சு லவ் பண்ணி கல்யாணம் பன்னனும்னு, இந்த மாதிரி ஒரு ஃபிகருக்கு இப்படி ஒரு லட்சியம் இருக்குனு தெரிஞ்சா எந்த பையங்க சும்மா இருப்பான், ஹீரோ அவனால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சு மடக்கி ஒரு லிப் கிஸ்ஸும் அடிச்சுர்ரார்,
 அடுத்த நாள் ஏர்போர்ட் ல அவர் ஃப்ரெண்ட் கிட்ட எல்லாத்தையும் ஷேர் பன்னும் போது பாத்துடற ஹீரோயினுக்கு ஹீரோ தன்னை உண்மையா லவ் பண்ணலைங்கறது தெரிஞ்சு அழுதுகிட்டே பிரிஞ்சு போயிடறாங்க பாவம்.
அடுத்த ஆட்டோகிராஃப் 2002, மும்பை ல, ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனி ல வேலை கிடைச்சு செட்டில் ஆகி புது ஃப்ளாட்க்கு குடி வர நம்ம ஹீரோக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, நமக்குளாம் பக்கத்து வீட்டுக்கு சம்மர் லீவ்க்கு சுமாரா ஒரு பொன்னு 2 மாசம் வந்து தங்கனாளே தாங்காது, இருக்கறதுலயே நல்ல துணியா போட்டு கரெக்ட் பண்ண பார்ப்போம், நம்மஹீரோக்கு பக்கத்து வீட்ல கும்முனு 'பிபாஷா பாசு' தனியா தங்கி இருக்கறது தெரிஞ்சா சும்மா இருக்க முடியுமா?
 வழக்கம் போலதான் சின்ன வீடு பாக்யராஜ் மாதிரி 'நதுர்தனா தினனா நா' னு தீம் மியுசிக் போட்டு அதையும் கரெக்ட் பண்ணி 1 வருசம் ஒண்ணா ஒரே வீட்ல 'GET TOGETHER' ஆ இருக்கற அளவுக்கு கொண்டு வந்துடறார்.
 இப்பதான் கதைல ட்விஸ்ட், ஹீரோக்கு சிட்னி ல பெரிய வேலை கிடைக்குது, கழட்டி விட்டுடலாம்னு நம்பிகிட்டு இருந்த காதலி கல்யாணத்த பத்தி பேச ஆரம்பிக்கறா, அதுல இருந்து தப்பிக்க என்னென்னமோ ட்ரை பன்னி, முடியாம கல்யாணத்தன்னைக்கு ஃப்ளைட் ஏறி சிட்னிக்கு ஓடி வந்துடறார்.
வழக்கம் போல தினம் ஒரு ஃபிகர் அ கரெக்ட் பண்ணி ஜாலியா சுத்திட்டு இருக்கறவர் கண்ல எதெச்சையா படறாங்க நம்ம தீபிகா படுகோன்(ஓம் சாந்தி ஓம்) டெய்லி நைட் டாக்சி ஓட்டி அதுல MBA படிக்கற நம்ம அம்மணி கொஞம் கொஞ்சமா நம்ம ஹீரோவோட மனச திருடிறாங்க, 
 இவ்வளவு அம்சமான ஃபிகர் வந்தா யார்தான் கவுறாம இருப்பாங்க, வழக்கம் போல நம்ம ஹீரோ மண்டி போட்டு கல்யாணம் பன்னிக்க கெஞ்சுரார்.
 தீபிகாவுக்கு கல்யாணத்துல நம்பிக்கை இல்லைனு சொல்லிடறாங்க, மனசு வெறுத்து போன நம்ம ஹீரோ 'ஆகா நமக்கு வலிக்கற மாதிரிதானே நாம கழட்டி விட்ட ஃபிகருங்களுக்கும் வலிச்சுருக்கும்'-னு புத்தி தெளிஞ்சு புதுசா ஒரு விசயம் பன்றார், நம்ம சேரன் போய் பழைய லவ்வர்ஸ்க்கு பத்திரிக்கை வச்ச மாதிரி, இவர் முன்னாள் காதலிங்ககிட்ட மன்னிப்பு கேட்க போறார்.
முத்ல்ல கழட்டி விட்ட பஞ்சாப் காதலிக்கு கல்யாணம் ஆகி 2 பசங்க இருக்காங்க, போய் அவ புருசன்கிட்டயே தான் யார்னு சொல்லி வாங்கி கட்டிக்கறார், ஒரு பெரிய கல்யாண வீட்ல எல்லாரையும் மீறி யாருக்கும் தெரியாம எப்படி மன்னிப்பு கேட்டு வர்ரார்னு நீங்க படத்த பார்த்து தெரிஞ்சுக்கங்க,
 முதல் பஞ்சாயத்து முடிஞ்சு போனா கல்யாணத்தன்னைக்கு கழட்டி விட்டு போன பிபாஷா இப்ப நெ.1 சினிமா ஸ்டார்,
 அவங்களை மீட் பன்னி, மனச மாத்தி மன்னிக்க வைக்கறதுக்கு ரொம்ப கஷ்ட படறார்,


பிபாஷா பன்ற அலம்பலுக்கு நானா இருந்தா சரிதான் போடினு சொல்லிட்டு வந்துருப்பேன். அவ்வளவு கொடுமை, பாவம் ஹீரோ.

 எப்படி பிபாஷாகிட்டயும் மன்னிப்பு வாங்கிட்டு ரிட்டர்ன் வந்து தீபிகாவ கைப்பிடிச்சு லிப் கிஸ் அடிக்கறைங்கறதுதான் கிளைமாக்ஸ், படம் நல்லா கலர்ஃபுல்லா ஜில்லுன்னு இருக்கு
எனக்கு மன்னிப்ப பத்தி பேசிக்கற சீன் ரொம்ப பிடிச்சுருக்கு, படத்துல வர லிப் கிஸ் பிடிச்சுருக்கு, எதை எதையோ இந்த படம் என்னை யோசிக்க வச்சது, கொஞ்சம் பழைய படம்தான், பாருங்க நல்லருக்கும்.
கமெண்ட் பிளிஸ்

Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2