chatting-ல் figure ஐ கரெக்ட் செய்வது எப்படி? "சொத்தை பொன்னு" குறும்படம்


அன்பு நண்பர்களே, நானும் ஏதாவது உருப்படியா சொந்தமா எழுதனும்னு தாங்க நினைக்கறேன், எதுவும் வர மாட்டெங்குது, ஏதாவது தோணும் போது கரென்ட் இருக்க மாட்டேங்குது, முதல்ல வீட்ல சொல்லி ups போடனும், உண்மைலியே நீங்க நம்பறிங்களோ இல்லையோ நான் கொஞ்சம் உருப்படியா பேசுவேன், எழுதுவேன்னு கொஞ்சம் பேரி சொன்னதை நம்பி  BLOG ஆரம்பிச்சுட்டேன், ஆனா எந்த மாதிரி விசயம் எல்லாருக்கும் பிடிக்கும் நு தெரியாமமுழிச்சுட்டு இருக்கேன், விடுங்க எப்படியாவது நல்ல நல்ல வலைப்பதிவர்களோட BLOG படிச்சு படிச்சாவது கத்துக்கறேன்,  நம்ம தலைவர் சந்தானம் சொன்ன மாதிரி "PRACTICE MAKE A MAN PERFECT", சரி கதைக்கு போலாம்.
இன்னைக்கு ஒரு குறும்படத்தை பத்தி பார்ப்போம், பெருசா ஒன்னும் மெசேஜ் சொல்லலை, குறும்படம் னாலே ஒன்னு மெசேஜ் இருக்கும் இல்ல லவ் அ பத்தி இருக்கும்,'சொத்தை பொன்னு'ங்கற டைட்டில் கொஞ்சம் புதுசா இருந்தது, எப்படியும் காமெடியா ஏதாவது ட்ரை பன்னிருப்பானுங்கனு பார்த்தேன்.
எடுத்ததும் ஒரு காலேஜ் கேண்டின் ல ஒரு கேங் அ காட்றாங்க, ஒருத்தன் சாப்பாட்டு ராமன், இன்னோருத்தன் பொன்னுங்களை பார்த்ததுக்கே பொங்கறவன், இந்த கேங்ல ஒருத்தன் புதுசா ஒரு பொன்னை மடக்கி கடலை போட்டுட்டு இருக்கான், 'எப்புடிறா புடிச்ச?'னா "FACEBOOK" மூலமானு சொல்லி என்னென்ன மாதிரி ஸ்டெப் எடுக்கனும்னு கரெக்ட் பன்ன சொல்லி குடுக்கறான்.

 இதை கேட்டு வீணாப் போகத்தான் என்னை மாதி அப்பாவி பசங்க ( நான் அப்பாவி தாங்க)நிறைய பேர் இருக்காங்களே, அந்த அப்பாவியும் ஃஃபேஸ்புக் ல தேடி தேடி ஒரு பொன்னை ஃப்ரெண்ட் பிடிச்சு இராப்பகலா கடலை போட்றான், நேர்ல பார்க்கவும் ஒத்துக்க வச்சுட்றான். போய் நேர்ல பார்க்கும் போது ஒரு ட்விஸ்ட், என்னங்கறத, நேர்ல பார்த்துக்கங்க.ரொம்ப பெரிய ட்விஸ்ட் லாம் எதிர்பார்த்துறாதிங்க, என்னை பொறுத்த வரைக்கும் உண்மைலியே கதையே இல்லாம, ஒரு குறும்படத்தை போர் அடிக்காம சொன்னதுக்கு பாராட்டியே ஆகனுங்க, நீங்க படம் பார்த்து திட்டறதுனா தாராளமா என்னையோ இல்லை இந்த படம் எடுத்தவனையோ திட்டிக்கலாம், தப்பு இல்லை,
உங்கள் திட்டுக்கள் வரவேற்க படுகின்றன, நானும் எப்படியாவது ஏதாவது எழுத கத்துக்கனும்னு நினைக்கறேன், முடிய மாட்டேங்குது, ஆனா கத்துக்காம விட மாட்டேன்.
அது வரைக்கும் என் மொக்கையான பதிவுகளை நீங்க படிச்சுதான் ஆகனும்.
இப்ப போறேன்.
ஆனா திரும்பி

....................
.....................
..........................





வருவேன்.
நன்றி

Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2