என் friend மச்சான்- இன்று நான் ரசித்த குறும்படம்
வணக்கம் நண்பர்களே,இதோ எனது 3 வது பதிவு
ஏதோ ஒன்றை தினமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன்.
இன்று அதற்காகதான் என் நண்பன் மொபைலில் பார்த்த ஒரு குறும்படத்தினை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
"என் ஃப்ரெண்ட் மச்சான்"
குறும்படம் என்றாளே ஏதாவது ஒரு மெசேஜ் சொல்லுவாங்கனு தெரியும்,
ஆனா டைட்டில் அ பார்த்தா மெசேஜ் சொல்ர மாதிரி தெரியலியே,
ஒரு வேளை விஜய் நடிச்ச நண்பன் படத்த கிண்டல் பண்ணிருப்பாங்களோனு பார்க்க ஆரம்பிச்சேன். ஆமாங்க அதே டைட்டில் சாங், அதே மாதிரி ஃப்ரெண்ட் அ தேடி இன்னோரு ஃப்ரெண்ட் வந்துருக்கறத பார்த்ததும் கடுப்பாய்டுச்சு,
ஆனா கொஞ்சம் என் காலேஜ் வாழ்க்கை நினைவுக்கு வந்ததால தொடர்ந்து பார்க்க ஆரம்பிச்சேன்.
அனேகமா காலேஜ் ஸ்டுடண்ஸ் ஆ தான் இருப்பாங்கனு நினைக்கறேன், முடிஞ்ச வரைக்கும் செலவு பண்ணிருக்காங்க,2 பேர் எப்படி எந்த டேஸ்ட்டும் ஒத்து போகாம ஃப்ரெண்ட்ஸ் ஆனாங்கனு ஆரம்பிக்குது
இதுல வர ஒரு ஃப்ரெண்ட் க்கு ஒரு மேனரிசம் இருக்கு, எப்ப பார்த்தாலும் ஃப்ரெண்ட் அ பின்பக்கமா குத்தற ஊசி பாபு, வழக்கமா ஃப்ரெண்ட்ஸ்க்குள்ள ஏன் சண்டை வரும், அதேதாங்க, ஃபிகருதான் காரணம் அடிச்சுகிட்டு பிரிஞ்ச்சுடறாங்க, அப்புறம் ஒரு ஃப்ரெண்ட் விட்டு குடுக்கவும் இன்னோருத்தற்கு செட் ஆய்டுது.
இதுல என்ன மெசேஜ் இருக்குனு நீங்க கேட்கறது எனக்கு புரியுது, கிளைமாக்ஸ் அ
பாருங்க, கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும், சிரிக்காம இருக்க முடியாது . ஆரம்பத்துல மொக்கையாதான் இருக்கும் இப்பவே சொல்லிடரேன்.
அப்புறம் முக்கியாமந விசயம், படிச்சா திட்டியாவது comment போடுங்கப்பா, போர் அடிக்குது. இந்த குறும்படத்தை பார்க்க கீழே சொடுக்கவும்
thanks shareimg
ReplyDelete