அடம்பிடிக்கும் ஆசிரியை, அவனுக்காக காத்திருப்பேன் - இதற்கு பெயரும் காதாலாம்?
இதுபோல் மைனர் பசங்களின் வாழ்க்கையை கெடுக்கும் பெண்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்வி "ஊர்ல பொன்னுங்க பின்னாடி சுத்தறதுக்குனு ஒரு கும்பல் இருக்கு, அதுல ஒருத்தனை கூட்டிட்டி போக வெண்டியதுதானே? யார் கேட்க போறாங்க? எதுக்கு இப்படி படிக்கற பையன் வாழ்க்கைல மண் அள்ளி போடனும்?" சரி நாம சொன்னா யார் கேட்க போறா? அந்த மரியதைக்குறிய ஆசிரியை என்ன சொல்றாங்கனு பார்ப்போம்.
என்னால் மாணவனைப் பிரிந்திருக்க முடியாது. அதேபோல அவனாலும் என்னை விட்டுப்
பிரிந்து வாழ முடியாது. அவனுக்கு 21 வயது வரும் வரை காத்திருப்பேன்.
அதற்குப் பிறகு சேர்ந்து வாழ்வேன். அதுவரை அவனை எனது மகன் போல பார்த்துக்
கொள்வேன் என்று முறை தவறிய உறவால் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள
சென்னையைச் சேர்ந்த 37 வயது ஆசிரியை குமுது கூறியுள்ளார்.
சமீபத்தில் சென்னையை அதிர வைத்த சம்பவம் 17 வயது மாணவனுடன், 37 வயது
ஆசிரியை வீட்டை விட்டு ஓடிப் போன விவகாரம். அந்த விவகாரத்தில்
சம்பந்தப்பட்ட ஆசிரியை குமுதுவையும், மாணவனையும், கடும் சிரமத்திற்குப்
பின்னர் போலீஸார் டெல்லியில் வைத்து கைது செய்தனர்.
இருவரும் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். பின்னர் குமுதுவை போலீஸார்
கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவனை சிறார் சீர்திருத்த
காப்பகத்தில் அடைத்தனர்.
மைனர் பையனை கூட்டிச் சென்றதால் ஆசிரியை குமுது மீது கடத்தல் வழக்கைப்
போலீஸார் பதிவு செய்துள்ளனர். மாணவனுக்கு மருத்துவப் பரிசோதனை
நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் மாணவனைப் பிரிந்து பெரும் வேதனையில் இருக்கிறாராம் ஆசிரியை
குமுது. இதுகுறித்து அவர் சிறை அதிகாரிகளிடம் கூறுகையில், நாங்கள்
பழகுவதில் இத்தனை சட்ட சிக்கல் இருக்கும் என தெரியவில்லை. இருந்தாலும்
மாணவனுக்கு 21 வயது ஆகும் வரை நான் காத்திருப்பேன்.
வாழ்ந்தால் அவனோடு தான் வாழ்வேன். மாணவனை என் மகன் போல் பார்த்து
கொள்வேன். என்னை, மாணவன் நெடுநாள் பிரிந்து இருக்க மாட்டான் என்கிறாராம்
ஆசிரியை குமுது.
குமுது வட மாநிலத்தைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள பள்ளியில் இந்தி
ஆசிரியையாக இருந்து வந்தார். அவர் வேலை பார்த்த பள்ளியில் பிளஸ் ஒன்
படித்தவன்தான் அந்த 17 வயது மாணவன்.
மாணவனுடன் தனக்கு ஏற்பட்ட முறை தவறிய உறவு குறித்து முன்னதாக ஆசிரியை குமுது அளித்த வாக்குமூலத்தில்...
நான் வேலை பார்த்த பள்ளியில் 7 மற்றும் 8-வது வகுப்புகளுக்கு இந்தி பாடம்
சொல்லிக்கொடுப்பேன். எனக்கு பெற்றொர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து
வைத்தனர். எனக்கும், எனது கணவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு
சண்டை போட்டுக்கொள்வோம்.
கடந்த செப்டம்பர் மாதம் எனது கணவர் சிறிய மனத்தாங்கலில் என்னைவிட்டு
பிரிந்து, அவரது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். நான் தனிமையில் மிகவும்
அவதிப்பட்டேன். அப்போதுதான் மாணவனுடன் அறிமுகம் ஏற்பட்டது. செப்டம்பர்
மாதம் பள்ளியில் ஒரு கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒரு நாடகம்
நடத்தப்பட்டது. நாடகத்தில் மாணவனும் நடித்தான். நான்தான் நாடக ஒத்திகை
சொல்லிக் கொடுத்தேன்.
எதேச்சையாக கட்டிப்பிடித்து காதல் வயப்பட்டோம்
அப்போது நாங்கள் இருவரும் ஏதேச்சையாக கட்டிப்பிடித்து விட்டோம். அந்த
முதல் ஸ்பரிசம் என்னை மின்சாரம் தாக்கியதுபோல் தாக்கிவிட்டது. அதில்
இருந்து நாங்கள் இருவரும் காதல் வயப்பட்டோம். இருந்தாலும், அவன்தான்
முதலில் காதலை சொன்னான். எனது அழகை அவன் வர்ணிப்பான். அவன் வகுப்பில் முதல்
மாணவர். நான் அதை பாராட்டுவதுபோல அவனை புகழ்ந்து பேசுவேன். இப்படியாக
காதல் வளர்ந்தது.
16 வயது மாணவியாக உணர்வேன்
எனது கணவர் வீட்டில் இல்லாதது, எங்களுக்குள் காதல் மேலும் வளர ஒரு
தூண்டுதலாக இருந்தது. நான் அவனை சந்திக்கும்போதெல்லாம் என்னை ஒரு 16 வயது
மாணவியைப்போல மனதுக்குள் நினைத்துக்கொள்வேன். அவன் பிளஸ்-1 வகுப்பு
என்பதால் எங்களால் அடிக்கடி பார்த்துக்கொள்ள முடியாது. பள்ளி முடிந்து வீடு
செல்லும்போது, இருவரும் பார்த்து பேசிக்கொள்வோம். செப்டம்பர் மாத
கடைசியில் ஒரு நாள் அவனை எனது வீட்டுக்கு வருமாறு அழைத்தேன். அந்த
சந்திப்புதான் எங்களை காதலோடு, நிறுத்தாமல் உடல் ரீதியாகவும் இணைய வைத்தது.
அதன்பிறகு இருவரும் அடிக்கடி எனது வீட்டில் சந்தித்து உல்லாசத்தை
பகிர்ந்து கொண்டோம். செல்போனில் இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருப்போம்.
எங்கள் காதல் விவகாரம் அவனது தந்தைக்கு தெரிந்துவிட்டது. அவர் என் மீது
போலீசில் புகார் கொடுத்துவிட்டார். பின்னர் சமாதானமாக பேசி முடித்து
விட்டனர். அதன்பிறகு அவனை பள்ளிக்குவர அவனது தந்தை தடை போட்டு விட்டார்.
அவனை செல்போனில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. நான் மிகவும் தவித்த
நிலையில் இருந்தேன்.
இந்த நிலையில்தான், கடந்த பிப்ரவரி மாதம் 26, 27, 28 ஆகிய 3 நாட்களும்,
பள்ளி பிராக்டிக்கல் வகுப்பில் கலந்துகொள்ள வந்தான். அப்போது நாங்கள்
மீண்டும் சந்தித்துக்கொண்டோம். மீண்டும் நாங்கள் காதல் வானில் சிறகடித்து
பறந்தோம்.
எல்லாவற்றையும் மறந்தோம்..உல்லாசத்தை முடிவு செய்தோம்
இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட்டால், நாம் மீண்டும் சேர முடியாது, இதில் நாம்
சேர்ந்து வாழ நல்ல முடிவு எடுத்தாக வேண்டும் என்று அவன் கூறினான். நாங்கள்
அப்போது வயது வித்தியாசத்தை பார்க்கவில்லை. போலீஸ் மற்றும் சட்டம் பற்றி
சிந்திக்கவில்லை. மாணவர்-ஆசிரியை என்ற மதிப்புமிக்க உறவு பற்றியும் நாங்கள்
மறந்துவிட்டோம். சென்னையை விட்டு, வெளியேறி உல்லாச வாழ்க்கையில் மிதக்க
முடிவு செய்தோம்.
நான் ரூ.60 ஆயிரம் செலவுக்கு பணம் எடுத்துக்கொண்டேன். இருவரும் கடந்த 4-ந்
தேதி அன்று புதுச்சேரிக்கு பஸ்சில் சென்றோம். நாங்கள் செய்த காரியம்
எவ்வளவு பெரிய தவறான காரியம் என்பது பற்றி நினைக்கவில்லை. அதன்பிறகு கோவை,
சேலம் ஆகிய ஊர்களுக்கும் சென்றோம். அங்கு லாட்ஜுகளில் தங்கி சந்தோஷமாக
இருந்தோம். அதன்பின் நாக்பூர், டெல்லி வழியாக ஜம்மு சென்றோம். ஜம்முவில்
வைஷ்ணவி கோவிலில் தங்கி இருந்தோம்.
இதற்குள் செலவுக்கு நான் எடுத்துச்சென்ற பணம் தீர்ந்து போனது. சென்னையில்
உள்ள எனது தங்கைக்கு போன் செய்து உதவி கேட்டேன். அவள் டெல்லியில் அவளது
தோழி வீட்டுக்கு செல்லுமாறு கூறினாள். அதன்படி டெல்லி சென்றோம். அங்கு எனது
தங்கையின் தோழி எங்களை ஏமாற்றி விமானத்தில் சென்னை அழைத்து வந்து
விட்டார். இங்கு போலீசார் எங்களை பிடித்துவிட்டனர்.
எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை. எங்கள் காதலை வாழவிடுங்கள். இனி எனது
கணவருடன் சேரமாட்டேன். வாழ்ந்தால் அவனோடு வாழ்வேன். அவன் கிடைக்காவிட்டால்
நான் செத்து மடிவேன். அவனுக்கு 21 வயது முடியும்வரை நான் காத்திருப்பேன்
என்றார் குமுது.
இதேபோலத்தான் அந்த மாணவனும் கூறி வருவதாக தெரிகிறது. மாணவனுக்கு தற்போது
கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனராம். இதில் நல்ல முன்னேற்றம்
ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நிஜத்தை உணர ஆரம்பித்துள்ளானாம் அந்த
மாணவன்.
முன்னதாக நேற்று கோர்ட்டில் ஆசிரியை குமுதுவை ஆஜர்படுத்தினர் போலீஸார்.
அப்போது அவர் கதறி அழுதபடி இருந்தார். மயங்கியும் விழுந்தார். அவருக்கு
சூடான டீ வாங்கிக் கொடுத்து போலீஸார் அமைதிப்படுத்தினர். அப்படியும் கூட
அவர் அழுதபடிதான் இருந்தார்.
என்ன சொல்வதென்று தெரியவில்லை...!
Comments
Post a Comment