NINJA ASSASSIN - திரை விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், என்னதான் ஆங்கில படங்களை உலகத்தரமான படங்கள் என நாம் ஏற்று கொண்டாலும் ஆக்சன் என்றால் நம் மனதில் முதலில் தோன்றுவது புருஸ்லீயும் ஜாக்கியும் தான், ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை குங்ஃபூ படங்களை ரசிக்காதவர்களே இருக்க மாட்டார்கள்.

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது NINJAS என்றால் யார் என்பது, ஜப்பானில் 13 ம் நூற்றாண்டுகளில் பிரபுக்களின் ஆட்சி நடந்த பொழுது அவர்களை எதிர்த்து புரட்சி செய்பவர்களையும், துரோகம் செய்பவர்களையும் இரகசியமாய் கொலை செய்ய பயன்படுத்த பட்ட அமைப்பு.

http://fc04.deviantart.net/fs70/i/2010/233/d/7/Ninja_Assassin_modelsheet_by_skedart.jpg

இந்த அமைப்பில் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பல்வேறு வழிகளில் (அனாதைகள், கடத்தப்பட்டோர்) கொண்டு வரப்பட்டு தொடர்ந்தாற் போல் 8 வருடத்திற்கு மேல் அனைத்து விதமான தற்காப்பு கலைகளும் கற்று தரப்பட்டு, இருளில் பதுங்கி இரக்கமின்றி கொலை செய்ய பழக்கப்படுத்த படும். இவர்களை கதைக்களமாக கொண்டு வந்துள்ள படம் தான் NINJA ASSASSIN.

http://www.daveonfilm.com/pics/ninja-assassin-one-sheet.jpg

படம் ஆரம்பிக்கும் பொழுது ஒரு கூட்டத்தை கண்களுக்கே தென்படாமல் வித்தியாசமான ஆயுதங்களை பயன்படுத்தி கண்டதுண்டமாக வெட்டி எறிவதில் பரபரப்பு ஆரம்பிக்கிறது, ஒரு அழகான பெண் போர்வையை மடிக்க சிரித்து கொண்டே உதவி  கேட்கும் பொழுது, அவள் தன்னை கொலை செய்ய வந்துள்ளதை தெரிந்து கொண்டு நாயகன் அவளை கொல்லும் இடம் நம்மை பெரிதாக எதிர்பார்க்க வைக்கிறது.

இந்த படம் NON-LINEAR வகையை சேர்ந்தது, ஒருபக்கம் உலகத்தில் NINJAS அமைப்பு இல்லை, அழிந்து விட்டது என எல்லாரும் நினைக்கும் நேரத்தில் "இல்லை, அவர்கள் இன்னமும் இருக்கிறார்கள், கொலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்" என நம்பும், அது சம்பந்தமான ஆதாரங்களை தேடி அலையும் பெண் அதிகாரி மைக்கா ஒருபுறம்.

http://images4.fanpop.com/image/photos/17000000/Raizo-Mika-3-ninja-assassin-17091639-900-600.jpg

எங்கெல்லாம் NINJAS கொலை செய்ய திட்டம் இடுகிறார்களோ அங்கு நுழைந்து அவர்களை கொலை செய்ய விடாமல் தடுக்கும் கதாநாயகன் ஒருபுறம், கதையின் போக்கில் இருவரும் சந்திக்க நேர்கிறது, இருவரையும் சேர்த்து கொலை செய்ய NINJAS கூட்டம் கூட்டமாய் தேடி அலைகிறது, இதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை படு விறுவிறுப்பாய் காட்டி உள்ளனர்.

http://chanofamerica.com/wp-content/uploads/2013/01/ninja-assassin.jpg

சிறுவயதில் இருந்து குழந்தைகள் எப்படி வலி தாங்க கற்று கொள்கிறார்கள், உணர்ச்சிகளை கட்டுபடுத்த கற்று தருவது, கொலை செய்ய சொல்லி சோதிப்பது, சத்தமில்லாமல் நடக்க, இருளில் மறைய, வேகமாய் நகர, தொங்க என எப்படி எல்லாம் சொல்லி தருகிறார்கள் என விளக்கமாய் காட்டுகிறார்கள்.

http://www.sosmoviers.com/wp-content/gallery/ninja-assassin/ninja-assassin-005.jpg

என்னதான் வெட்டியவுடன் கார்ப்பரேசன் பைப் உடைந்தால் வரும் தண்ணிர் போல இரத்தம் பீய்ச்சியடிப்பது ஓவராய் இருந்தாலும் புதிதாய் காட்டப்படும் ஆயுதங்களுடன் வேகமான சண்டைக்காட்சியை யாராலும் இரசிக்காமல் இருக்க முடியாது.

நெஞ்சில் நின்ற வசனம்

"அவங்க உன் வாசனைய வச்சே உன்னை பின் தொடர்வாங்க"

"வாசனைய வச்சா? நாய் மாதிரியா?"

"ஓநாய் மாதிரி"

இந்த படத்தினை முதல் முறையாக எனக்கு கொடுத்து பார்க்க வைத்த என் உடன்பிறப்பு கண்ணன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

படத்தின் ட்ரெய்லர்


Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2