பெருந்திணை - படலம் - 8
பெண்களிடம் இருக்கும் மிகப்பெரும் பிரச்சனையாக அவர்களது கியுரியாசிட்டியை சொல்லலாம். அதிலும் தன்னைக் குறித்த ஒன்றினை தெரிந்து கொள்ள அவர்கள் காட்டும் அதீத ஆர்வம் எப்போதும் எதிலாவது ஒன்றில் சிக்க வைப்பதுதான் வழக்கம்.
சைந்தவிக்கு அசோக் தான் குறித்து எந்த நிலையில் இருக்கிறான் என்று தெரிந்துக் கொள்வதில் ஆர்வமாக இருந்தது. அதே சமயம் இதனை நேரடியாக கேட்கவும் முடியாது. கேட்டாலும் கிடைக்கும் பதில் நேர்மையானதாக இருக்கப் போவதில்லை.
இதற்கு என்ன செய்வது என்று மனம் குழம்பியது. எப்போதும் அல்ல. அவ்வபோது. நாளாக நாளாக அது அடங்கி விடும் என சமாதானப் படுத்திக் கொண்டாள்.
அடுத்து இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒரு தினத்தில் அவள் வெளியே சென்று திரும்பும் போது ஏகமாக மழையில் மாட்டிக் கொண்டாள். எதிர்பாராத மழை. அவள் ஸ்கூட்டியில் சென்றிருக்க, அணிந்திருந்த ஹெல்மெட் உச்சந்தலையை மட்டும்தான் காப்பாற்றியிருந்தது.
ஓரளவு நனைந்த பிறகு வீட்டிற்கே சென்று விடலாம் என்று மழையிலேயே வந்து விட்டாள். அப்போது மழை விட்டு, தூறல் மட்டும்தான். வண்டியை நிறுத்தி விட்டு லிஃப்ட்டில் ஏறினால் உள்ளே அசோக். அவன் மட்டும்.
ஒரு கணம் தயங்கினாலும் உள்ளே நுழைந்து விட்டாள். அவள் அணிந்திருந்த சுடி ஈரத்தில் மொத்தமாக உடலோடு ஒட்டிக் கொண்டிருந்தது அவளுக்கு நினைவில் வந்தது. உள்ளே நுழைந்தவள் ஒரு மூலையில் சென்று நின்று கொண்டாள்.
அவனும் ஆரம்பத்தில் நட்பாக சிரித்து விட்டு அமைதியாக ஓரமாக நின்று கொண்டான். இருவரது இதயத் துடிப்பும் இருவருக்கும் கேட்டன. அவன் திரும்பக் கூடாது என்று யாரோ அவன் தலையை இறுக்க பிடித்திருப்பது போலவும், அதை மீறி திரும்ப அவன் முயற்சிப்பது போலவும் இருந்தது.
ஒரு நிமிடத்திற்குள் முடிந்த அந்த மேல் நோக்கிய பயணம் அவர்களிருவருக்கும் ஒரு மணி நேரமாய் தோன்றியது. அதற்குள் முடிந்து விட்டதே என்று தனக்குள் தோன்றிய எண்ணத்தை சைந்தவி காரித் துப்பினாள்.
அவர்கள் தளம் வந்ததும் அவன்தான் முதலில் வேகமாக வெளியேறினான். முன்னேறி வேகமாக நடந்தவன் அவன் வீட்டுக்கதவை திறப்பதற்கு முன் ஒரு நொடி இவளைத் திரும்பிப் பார்த்தான். ஒரே ஒரு நொடி. அவளுக்கு அது என்னவோ செய்தது. அது தனக்கு பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்று புது குழப்பம் அவளுள் முளைத்தது.
வீட்டிற்குள் நுழைந்தவளை அவள் கணவன் கார்த்திக்தான் எதிர்கொண்டான்.
“என்ன இது? எங்காவது வெயிட் பண்ணி வரலாம்ல”
“இல்லை, சிக்னல்ல நிக்கறப்பவே மழை பிடிச்சுருச்சு”
“சரி, ஹீட்டர் போட்டு விட்டுட்டு, தண்ணி கொஞ்சம் வார்ம் ஆனதும் குளி, முதல்ல இந்த ஈரத்துணியை கழட்டி போடு”
“ம்”
உட்கார்ந்து வீடியோகேம் விளையாடிக் கொண்டிருக்கிறான். நனைந்து வந்திருக்கிறேன். வெறுமனே வாயால் பேசுகிறான். யோசித்தவாறே உடைகளை களைந்தவள் கண்ணாடி முன் வந்து நின்று பார்த்தாள்.
“இன்னும் என்னை முழுமையாக பார்க்கவில்லை. பார்க்கத்தான் துடிக்கிறானா? பார்த்த பின் இந்த பார்வை, அதிலிருக்கும் ஏக்கம், வெறியெல்லாம் அடங்கி விடுமா? அனிதாவிடம் இல்லாதது அப்படி என்ன புதிதாக இருக்கிறது?”
வெந்நீரில் குளிக்கையிலும் அவளுக்கு சிந்தனை தொடர்ந்தது.
“என்ன வேண்டும் அவனுக்கு?” யோசிக்க யோசிக்க குழப்பம் கோபமானது. எண்ணவோட்டத்தை மடை மாற்ற விரும்பினாள். இது குறித்து தொடர்ந்து யோசிப்பது அவளுக்கு சரியாக படவில்லை.
குளித்து முடித்து வெளியே வந்தவள் கார்த்திக்கை அழைத்தாள். சற்று நேரத்திற்கு பிறகு வந்தான். உள்ளே அவள் உடையின்றி நிற்பதை பார்க்கவும் அவன் கண்கள் விரிந்தன.
பலமுறை பார்த்திருந்தாலும் அத்தனை முறையும் அவளாக விருப்பப் பட்டாலோ அல்லது அவனாக முயன்றாலோ மட்டுமே பார்க்க முடிந்த உடல். அதனால் அதன் சிறப்பு அவனுக்குத் தெரியும். புரிந்துக் கொண்டு கதவைத் தாளிட்டுக் கொண்டு அவன் வர, அவனை அப்படியே படுக்கையில் தள்ளினாள்.
அவன் மேலே ஏறி அவன் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு அவனை முத்தமிடத் தொடங்கினாள். அவனைக் கிளப்ப அதுவே போதுமானதாக இருந்தது. அதன் பின் அவன் அவளை தயார் செய்தான். எல்லாம் வெகு சீக்கிரமாகவே நிகழ்ந்து முடிந்தது. அன்று பெரும்பாலும் இயக்கம் அவளுடையதாகவே இருந்தது. மழைதான் காரணமென்று அவனாக நினைத்துக் கொண்டான். கேட்டிருந்தாலும் அவள் அதைத்தான் சொல்லியிருப்பாள். அவள் விரும்பியது போலவே அவள் மனம் நிசப்தமாகியிருந்தது.
மனதை நிசப்தமாக்க உடல் உச்சமடைதலைக் காட்டிலும் சிறந்த செயல் வேறென்ன இருக்கிறது?
திட்டமிடாத கூடலில் இருக்கும் பெரும் குறை அப்படியே ஓய்வெடுக்க முடியாது. எழுந்து சென்று அடுத்த வேலைகளை பார்க்க வேண்டும். சைந்தவிக்கு அதுதான் வேண்டும் போலிருந்தது. ஏனென்றால் உறங்காமல் படுத்துக் கொண்டு மனதைக் கட்டுப்ப்டுத்துவதும் மரத்தில் இருக்கும் குரங்கை துரத்தி பிடித்து அதற்கு ஜட்டி மாட்டி விடுவதும் ஒன்றுதான். வெறுத்து விடும்.
எழுந்து உடையணிந்து கண்ணாடியில் தன்னைப் பார்த்ததும் மீண்டும் அசோக் நினைவு வந்தது. முன்பளவு தாக்கமில்லை. ஆனால் எட்டிப் பார்த்தது.
இம்முறை அவள் சலித்துக் கொள்ளவில்லை. மாறாக கண்ணாடியில் தன்னைப் பார்த்து மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள்.
கார்த்திக் என்னவென்று வினவ, அவனை நெருங்கி நெற்றியில் முத்தமிட்டு விட்டு நகர, அவன் இழுத்து உதட்டில் முத்தமிட்டான். விரைவாக முடிப்பதற்கென துவங்கப்பட்ட முத்தம். அப்படியே முடிந்தது.
- தொடரும்
Comments
Post a Comment