பெருந்திணை - படலம் - 4
சைந்தவி கண்ணாடி எதிரே நின்று கொண்டிருந்தாள். மேலிருந்து கீழே தன்னை முழுமையாகப் பார்த்தாள். சராசரியான பெண்களை விட கொஞ்சம் கூடுதல் உயரம். அதுவே இவளை மற்ற பெண்களிடமிருந்து பிரித்து காட்டி விடும். அவ்வுயரத்திற்கேற்ற விகிதத்தில் அவயங்கள். கூடவும் இல்லை. குறையவும் இல்லை. மடிப்பில்லாத இடுப்பு. இளமைக்கு இதுதான் முதல் சான்று.
கார்த்திக் வரவில்லை என்று சொன்ன பின் தனியாக தயாரானாள். சில விசயங்களுக்கு தனிமை போதை. அதில் குறிப்பிட்டது தன்னை தயார் செய்துக் கொள்வது. இன்னொருவர் முன்பு உடையணிந்து அலங்காரம் செய்வதெல்லாம் அத்தனை ஆசுவாசமானதாக இருக்காது. அதிலும் சைந்தவிக்கு தனிமை. இப்படி நிர்வாணமாக ஓரிரு கணங்கள் தன்னை வெளிச்சத்தில் கண்டுணர்வது எப்போதாவது வாய்ப்பதுதான். அனைவரும் வரவேற்பறையில். இவள் படுக்கையறையில் தயாரானாள்.
தயாராகும் போதே அசோக்கின் நினைவு வந்தது. அவன் வருவான் என்று அனிதா சொன்னாள். அன்றைய தினத்திற்கு பிறகு அவன் தன்னை பார்வையால் தீண்டவில்லை என்பது நல்லதாகப் பட்டாலும் அதற்குள்ளாக முடிந்து விடும் என்பதில் அவளுக்கே நம்பிக்கை வரவில்லை. இத்தனை அழகுடன் எத்தனை பேரை கடந்து வந்திருப்பாள்?
அலங்காரம் ஒரு கலை. ஆயக்கலைகளுல் 18 வது கலை. அது அனைத்து பெண்களுக்கும் முழுமையாக வாய்ப்பதில்லை. தாய்க்கு வாய்த்து மகளுக்கு வாய்க்காத சோதனைகளும் உண்டு. மருமகன் நிலையை நினைத்து பாருங்கள். அக்கலையில் முழுக்க தேர்ச்சி பெற்றவள் சைந்தவி. வேறு யாருக்காகவும் அல்லாமல் தனக்காகவே தன்னை முழுமனதுடன் அலங்கரித்துக் கொள்வாள். அதில் அவளுக்கு கிடைக்கும் மன திருப்தி இருக்கிறதே…
என்னதான் தனக்காகவே செய்துக் கொண்டாலும் மனம் எதிர்படுவோரின் விழிகள் விரிவடைவதை எதிர்நோக்கத்தான் செய்யும். இன்று கூடுதலாக அசோக் எப்படி பார்ப்பான் என்றும் ஒரு கேள்வி அவளுள் எழும்பியது. அதில் கவனம் குவிக்காமல் கடந்து சென்றாள்.
பிறந்தநாள் விழாவில் அசோக்கின் செய்கைகளை கவனித்தாள். முன்பு போல் அல்லாமல் அவன் பார்வையில் ஏதோ வித்தியாசம் தெரிந்தது. எதையோ தொலைத்து விட்டு தேடுபவனை போல் அவன் விழிகள் அலை பாய்ந்தன. அதை இவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
ஒரு கணம் பார்க்கிறான். அமைதியாக எதையோ யோசிக்கிறான். வேறு எதுவும் பிரச்சனையோ! அசோக் அமைதியான பேர்வழி அல்ல. நன்றாக வாயாடுபவன். இரு பெண்களும் பேசுகையில் மட்டும் குறுக்கிடாமல் போனை நோண்டுவது போல் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருப்பான். இருவருமாக அவனை கலாய்ப்பதை ரசித்து சிரிப்பான். இன்றும் கிளம்பும் சமயங்களில் அவன் முன்பு போல் சிரித்து உரையாடியது மனதிற்கு இதமாக இருந்தது.
நிகழ்ச்சி முடிந்த பின்னும் அனிதாவுடன் அப்படியே பேசிக்கொண்டே நடந்துக் கொண்டிருந்தாள். அனிதாவிடம் மட்டும்தான் சைந்தவியால் யாரையாவது திட்டி பேச முடியும். ஒரு நட்பின் உண்மையான நெருக்கம் அவரிடம் எவ்வளவு தூரம் புலம்ப முடிகிறது என்பதல்ல. எவ்வளவு தூரம் நீங்கள் வெறுப்பவர்களை மனதார திட்டித் தீர்க்க முடிகிறது என்பதில் இருக்கிறது. உதாரணத்திற்கு உங்களுக்கு நெருக்கமான உறவினரை உங்களால் யாரிடம் மனதால் திட்ட இயல்கிறது என்று யோசித்துப் பாருங்கள். எத்தனை கால இடைவெளிகளுக்கு ஒருமுறை பேசுபவராக இருந்தாலும் சரி. அவரே உங்களின் உற்ற நண்பர். அவரிடம்தான் நீங்கள் அரிதாரம் பூசுவதில்லை.
பேசி முடித்து தம்பதிகள் சைந்தவியை விட்டுப் பிரிகையில் ஏதோ உறுத்த திரும்பி பார்த்தாள். அசோக் பார்த்துக் கொண்டிருந்தான். இவளுக்குள் ஏதோ திருப்தியடைவதை உணர முடிந்தது. அதை முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை. அவனும் முழுமையாக நிதானமாக பார்த்து விட்டே பார்வையை திருப்பினான்.
தன் மனது தனக்கே புதிராக இருப்பதை சைந்தவி விரும்பவில்லை. வீட்டிற்குள் வந்தாள். மற்றவர்கள் படுத்திருந்தார்கள். கார்த்திக் மட்டும் வரவேற்பறையில் படம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனை அழைத்துக் கொண்டு படுக்கையறைக்குச் சென்றாள்.
அவனை படுக்கையில் அமர வைத்தாள். நிதானமான இசையொன்றினை குறைந்த சத்தத்தில் ஒலிக்க விட்டாள். கார்த்திக்குக்கு புரிந்தது. கால் மேல் கால் போட்டுக் கொண்டான்.
முதலில் புடவைத் தலைப்பை எடுத்து மெதுவாக சுழற்றினாள். கொஞ்சம் நீளமாக்கி அவன் கழுத்தோடு போட்டு இழுத்து முகத்தோடு முகம் உரசினாள். பின் சுழன்று புடவையை நீக்கினாள். அவன் கால்கள் அவளை வளைத்து இழுக்க முயற்சித்துக் கொண்டிருந்தன.
பின்னர் ஒவ்வொரு திசையிலும் திரும்பி நின்று இசையுடனொத்து ஒவ்வொன்றாக களைந்தாள். இறுதியாக எஞ்சியிருந்தது தாலியும் தலையிலிருந்த மல்லிகையும். அத்தோடு அவனை நெருங்கினாள்.
அவனுடலில் இரத்த ஓட்டம் 200 கிலோவை தூக்குவதற்கான பலத்தை கொடுக்கவல்ல வேகத்தை எட்டியிருந்தது. அவசரப்படாமல் அதனை ரசித்து அனுபவித்தான். இதுவல்லவா போதை!
அன்றைய கூடல் அதுவரையிலான கூடல்களில் ஏதோ ஒன்றினை கடந்திருந்தது என்பது இருவருக்குமே தெரிந்திருந்தது. அது என்னவாக இருக்கும் என்றெல்லாம் யோசிக்காமல் அவன் அனுபவித்தான். அவளுக்கு தன்னுள் இத்தனை நாட்களாக தடைக்கல்லாக இருந்த ஒன்றினை கடந்து விட்டதாக தோன்றியது. அவள் எழுப்பும் சத்தம் கூட வழக்கம்போல் அவள் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. நல்ல காலமாக அது சத்தத்தைக் கடத்தாத குளிர்வூட்டப்படும் அறை.
ஒவ்வொரு நிலையிலும் உச்சத்தை தொடும்போதும் ஒவ்வொன்றாக எட்டிப்பிடிக்கும் அவள் மனதில், இறுதி உச்சத்தின் போது மங்கலாக அசோக்கின் பார்வை தென்பட்டது.
அதை பெரிதாக பொருட்படுத்தாமல் தன்னை முழுவதுமாக உணர்ந்து தன்னுள் நிறைத்துக் கொண்டாள்.
- தொடரும்
Comments
Post a Comment