சாரல் காலம் 15
சாரல் காலம் - முந்தின பாகங்கள்
#0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 /#7 /#8 / #9 / #10 / #11 / #12 / #13 / #14 / !5
-----------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------
ஹரியை போல் , தீபாவை போல் நடக்கும் திருமணம் தமக்கும் தங்களுடைய காதலருக்கும் நடப்பதை போல் உணரும் ஒரு தலை காதலர்கள் ஒவ்வொரு திருமணத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அனைவருடைய கைகளுக்கும் அட்சதை வந்து சேர்ந்தது. கெட்டி மேளம் சொல்லி தாலி கட்டும் போது அவசரமாக அட்சதையை போட்டுவிட்டு மாதேசும் சூர்யாவும் சத்தமாக விசிலடித்து விட்டு கன்னனை பார்த்தவாறு அமைதியானார்கள்.
திருமணத்திற்கு வந்தவர்கள், மணமக்கள் அனைவருமே திரும்பி பார்த்தனர்.
பாலா "கன்னா, எல்லாரும் பார்க்கறாங்க, இன்னொரு தடவை விசிலடிடா?"
கன்னன் "டேய் நான் எங்கடா அடிச்சேன்"
ஹரி "பையன் ஆசைபட்டு கேட்கறான் பாரு, அடிடா"
கன்னன் "சத்தியமா எனக்கு விசிலடிக்கவே தெரியாதுடா"
மாதேஸ் சத்தமாக "யாரும் நம்பாதிங்க, கன்னன் தான் விசிலடிச்சான்"
அதென்னவோ தெரியவில்லை. நம் இளைஞர்களின் குறும்பால் எரிச்சலடைபவர்களை விட ரசிப்பவர்கள் தான் அதிகமாக இருந்தனர்.
கன்னன் "டேய் தாலி கட்டியாச்சு, வாங்க சாப்பிட போலாம்"
ஹரி "ஏன்டா பறக்கற? இரு எல்லாரும் போகும் போது போலாம்"
கன்னன் "இடம் கிடைக்கலனா?"
ஹரி "நின்னுட்டு சாப்பிடு"
மாதேஸ் "அவன் தான் பசிக்குதுனு சொல்றான் வாங்கடா சாப்பிட போலாம்"
சூர்யா "கொஞ்சம் wait பண்ணி போலாம்டா, நாமதான் முதல்ல போன மாதிரி இருக்கும்டா"
அப்போது பெண்ணின் உறவினர் ஒருவர் இவர்களை பார்த்து "தம்பி, போங்க, போய் சாப்பிடுங்க" என்று கூறிவிட்டு வந்தவர்களையும் கவனித்து கொண்டு இருந்தார்.
மாதேஸ் "புரியலை, நாம சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் எல்லாருக்கும் சாப்பாடுனு சொல்லிட்டு போறார்"
ஹரி "நாம என்ன காக்காவாடா, முதல்ல சாப்பாடு வைக்கறதுக்கு?"
பாலா "இல்லைடா, இதுக்கு பேர்தான் முதல் மரியாதை, வாங்க போய் சாப்பிட போலாம்"
ஹரி அப்படியே பார்வையை திருப்பி காயத்ரியை பார்த்தான். அந்த பெண்கள் அனைவருமே மணப்பெண்ணிடம் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டிருந்தனர். அப்போது கூட தீபாவின் பார்வை சூர்யாவையே மேய்ந்து கொண்டிருந்தது. கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலையை போல தீபாவிற்கும் சூர்யா மீதிருந்த காதலும் நிச்ச்யம் ஒன்று சேர்வோம் என்ற நம்பிக்கையும் வளர்ந்து கொண்டிருந்தது.
ஹரி தீபாவின் பார்வையை கவனித்து விட்டான். அவள் சூர்யாவை தான் பார்க்கிறாள் என்று புரிந்து விட்டது. உடனே மனது கணக்கு போட துவங்கி விட்டது.
"பையன் நமக்கு தெரியாம கரெக்ட் பண்ணிட்டான் போல இருக்கு, அப்ப பிரச்சனையே இல்ல, இவளையே காயத்ரிகிட்ட பேசவச்சு ஓகே பண்ணிட வேண்டியதுதான்"
ஹரி "டேய் வாங்கடா, போய் மணமக்களை வாழ்த்திட்டு சாப்பிட போலாம்"
பாலா அந்த பக்கம் திரும்பி பார்த்துட்டு
"ஆமடா, வாங்கடா போய்ட்டு வந்துடலாம்"
மாதேஸ் "டேய் ஒரே பொன்னுங்களா இருக்காங்கடா, அப்புறம் போலாம்"
பாலா "அதனாலதான் கூப்பிடறேன், வாங்க இப்பவே போலாம்"
கன்னன் "ஆமான், வாங்க போலாம்"
மாதேஸ் "கன்னா, you too?"
பாலா "பெரிய ஜீலியஸ் சீசர், மூடிகிட்டு வாடா"
ஹரி, பாலா இருவரும் வேகமாக நடந்து போனதால் அவர்களை பின்தொடர அனைவரும் வேகமாக நடந்தனர்.
சூர்யா "டேய், ரிசப்ஷன்ல போய் கிஃப்ட் கொடுத்துட்டுதான் போட்டோக்கு போச் குடுப்பாங்க, தாலி கட்டுனதுக்கு இப்படி ஓடுறிங்க"
பாலா "வெரி சாரி, அடுத்தவங்க போட்ட ரூல்ஸ்லாம் நாங்க கண்டுக்கறதுல்லை"
கன்னன் "டேய் என்ன சொல்லிடா விஷ் பன்னனும்?"
மாதேஸ் " என்ன வேணும்னாலும் சொல்லிக்கலாம்டா, நாம என்ன சொன்னாலும் அவங்க கவனிக்க போறதில்லை"
மணமக்களின் உறவினர்கள் நிறைய பேர் வாழ்த்த நெருங்கினாலும் இவர்கள் முண்டியடித்து கொண்டு வருவதை பார்த்து ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றனர். அந்த கேப்- ஐ பயன்படுத்தி அனைவரும் மணமக்களை நெருங்கி கன்னனை முதலில் வாழ்த்துமாறு தள்ளி விட்டனர்.
கன்னனும் வேறு வழியில்லாமல் மாப்பிள்ளையிடம் கைகுடுத்து ஏதோ ஒரு ஞாபகத்தில் "Wish you happy Birthday" என்று சொல்லி விட்டான்.
கன்னனின் நேரத்திற்கு மணமேடைக்கு அருகில் இருந்த அனைவரும் கவனித்து விட்டு கொள்ளென்று சிரித்து விட்டனர்.
சூர்யா "Happy Married Life" என்று இருவருக்கும் கை குடுத்தான்.
ஹரியும் அதை அப்படியே காபி அடித்தான். மாதேஸ் கைகுடுத்து விட்டு வேற யார்கிட்டயும் என் நண்பன் உங்களுக்கு Birthday wish பன்னதை சொல்லும் போது மறக்காம அவன் பேர் கன்னன் - னு சொல்லுங்க"
பாலா "ஆமா, அழகு கன்னன்"
மணமகள் "என் sister friends"
மணமகன் "நீங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம், போய் சாப்பிடுங்க"
மாதேஸ் அவர் காதோரம் போய் "மாப்பிள்ளை சார், லிப் ஸ்டிக் அதிகமா இருக்கு, தொடைச்சுக்கங்க" என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
கன்னன் "சரி, வாங்கடா சாப்பிட போலாம்"
பாலா "கொஞ்சமாவது சூடு சொரனை இருக்கா பாரு"
ஹரி "விடுறா, வாங்க போலாம்"
சூர்யா "டேய் மாதேஸ், மாப்பிள்ளை காதுல என்ன சொன்ன?"
மாதேஸ் "லிப்ஸ்டிக் கை தொடைச்சுக்க சொன்னேன்"
பாலா "நான் கூட நைட்டுக்கு மிலிட்டரி சரக்கு வேணும்னு கேட்டியோனு நினைச்சேன்"
கன்னன் "டேய் பசிக்குது வாங்கடா சீக்கிரம் போலாம்"
இவர்கள் செய்ததை அனைத்தையும் அங்கு நின்று கொண்டிருந்த பெண்கள் அனைவரும் கவனித்து கொண்டுதான் இருந்தார்கள்.
அதிலும் தீபாவிற்கு இது போன்ற மகிழ்ச்சியை, இவர்களின் உற்சாகமான போக்கை சூர்யாவின் கையை கோர்த்தவாறே ரசிக்க வேண்டும் போலிருந்தது.
ஹரி போகிற போக்கில் காயத்ரியை ஒரு தடவி பார்த்துவிட்டு திரும்பி கொண்டான். முழுவதும் எதிர்கொள்கிற துணிச்சல் இப்போதைக்கு அவனிடம் இல்லை.
தீபா சூர்யா பார்க்காத போது மட்டும் அவனை பார்ப்பாள், அவளாலும் அவனது கண்களை நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை.
Comments
Post a Comment