- மழைச்சாரல்: April 2013
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Monday, 29 April 2013

சாரல் காலம் 14

சாரல் காலம் - முந்தின பாகங்கள்

#0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 /#7 /#8 / #9 / #10 / #11 / #12 / #13 / #14 / !5

-----------------------------------------------------------------------------------------------------------------
பெண்கள் அனைவரும் தயாராகி வெளிப்புறம் வந்தனர், எவ்வளவு மோசமான குணமுடைய பெண்ணையும் நமது பசங்களால் புடவை கட்டி கொண்டு வரும் பொழுது ரசிக்காமல் இருக்க முடியவில்லை, அதுவும் கன்னனால் வாயை  மூடிக் கொண்டு இருக்க முடியவில்லை.

 http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ5tPUKVK8gsbInrgeMwPG-DRLZ2NqmCixCgIJjg_HaLHRRYiQPUg

கன்னன் "அம்மாடி, டேய் இதெல்லாம் நம்ம காலேஜ் பொன்னுங்களாடா?"

மாதேஸ் "உனக்கெதுக்கு அந்த சந்தேகம்?"

கன்னன் "அழகா இருக்காங்களே அதான் என் கண்ணுல எவளுமே ஒரு நாள் கூட பட்டதில்லையே"

மாதேஸ் "டேய் கன்னா, 9 மணி காலேஜ்க்கு 9.30க்கு வர வேண்டியது, எல்லோருக்கும் 5 மணிக்கு காலேஜ் முடியுதுனா கடைசி பீரியட் கட் அடிச்சுட்டு 4 மணிக்கே ஓடுனா எப்படிடா பார்க்க முடியும்?"

கன்னன் "டேய் நீங்களும் தான்டா என் கூட வர்ரீங்க போறிங்க, உங்க கண்ணுல மட்டும் எப்படி சிக்குது?"

மாதேஸ் "நாங்க அதுக்குனு தனியா டைம் டேபுள் போட்டு வச்சுருக்கோம்"

இவர்கள் உரையாடல் இப்படி போய் கொண்டிருக்க பாலா மட்டும் வனிதாவை புடவையில் பார்த்துவிட்டு கிறங்கி போய் நின்று கொண்டிருந்தான், வனிதா தூரத்தில் இருந்து சைகையில் பாலாவை பார்த்து "அழகா இருக்கேனா?" என்று கேட்க, பதிலுக்கு இவன் "சூப்பர்" என்று சைகையிலேயே சொல்லி கூடவே ஒரு பறக்கும் முத்தத்தையும் கொடுத்தான்.

இதை கவனித்து விட்டு வியப்புடன் கன்னன் கேட்டான்.

"டேய் என்னடா நடக்குது இங்க?"

மாதேஸ் "கன்னா, இதுக்கு பேருதான் கள்ளக்காதல்"

கன்னன் "எப்படி கள்ளக்காதல்?"

மாதேஸ் "அவ லவ்வருக்கு தெரியாம லவ் பன்றாங்கல்ல, அதான்"

கன்னன் "டேய் பாலா, அவளை காதலிக்கிறானா, சொல்லவேயில்லையே?"

பாலா "டேய் இதுக்கு பேரு காதல் இல்லைடா"

கன்னன் "வேற?"

பாலா "அதையும் தாண்டி புனிதமானது"

மாதேஸ் "செருப்பு பிஞ்சிரும், நீ பன்ற கருமம் புனிதமானதா? கொன்னுடுவேன், டேய் வேற ஏதாவது பேசுங்கடா"

கன்னன் "சாப்பாடு எப்ப போடுவாங்க?"

எல்லோரும் அவனை ரவுண்ட் கட்டி முறைத்தார்கள்.

கன்னன் "டேய் ஏன்டா முறைக்கறிங்க?"

மாதேஸ் "பசிய மறக்கத்தானே நாங்க பேசிட்டு இருக்கோம், திரும்ப அதையே ஞாபக படுத்துனா வேற என்ன பன்னுவாங்க?"

அன்பு "ஏன் தாலி எப்ப கட்டுவாங்கனு கேட்கறது?"

கன்னன் "எனக்கு அப்படிலாம் கேட்க தோணாது"

பாலா "டேய் அவனை விடுங்கடா, சூர்யாவும் ஹரியும் நேத்துலருந்து ஏதோ இரகசியமா பேசிக்கறாங்களே, கவனிச்சிங்களா?"

மாதேஸ் "என்ன, ஹரி காயத்ரிக்கு ரூட் விட்றான், அதைதான் பேசிகிட்டுருக்காங்க"

கன்னன் "டேய் யார்ரா அந்த காயத்ரி"

பாலா "உனக்கு ஒரு வகைல தங்கச்சிடா, நீ எப்படி மாதேஸ் உறுதியா சொல்ற?"

மாதேஸ் "ஹரியோட பார்வைய பார்த்தாலே கண்டுபிடிச்சுடலாம், அந்த காயத்ரி திரும்ப ஒரு தடவை பார்த்தா அவங்க அப்பன், பாட்டன் சம்பாரிச்ச சொத்தை அப்படியே எழுதி வச்சுருவான் போலருக்கு"

பாலா "அந்த காயத்ரியை இவனேதான்டா ஓட்டுனான், நாம கிண்டல் பன்னும் போதுலாம் சும்மா இருந்தான்?"

மாதேஸ் "அவன் கிண்டல் பன்னும் போதே எனக்கு தெரியும், நாம கேவல படுத்தனும்னு பன்னா, இவன் அவளை திரும்பி பார்க்க வைக்கறதுக்குனும்னே பன்னுவான்"

அன்பு "அப்ப உறுதியா கதல்ங்கறியா, ட்ரிட் வாங்கிட வேண்டியதுதான்"

மாதேஸ் "அவசரபட வேண்டாம், அவனா சொல்ற வரைக்கும் நாம எதுவும் தெரியாத மாதிரியே நடிக்கனும்"

பாலா "எதுக்கு நடிக்கனும்?"

மாதேஸ் "அப்பதான்டா கொஞ்ச நாளைக்கு நம்மகிட்ட யோசனை கேட்காம இருப்பான், காதலிக்கறவனுக்கு யோசனை சொல்றதும் கன்னனுக்கு பாடம் நடத்தறதும் ஒன்னு"

அன்பு "அப்ப நான் தெரிஞ்சுக்காத மாதிரிதான் நடிப்பேன், என்னால முடியாது"

பாலா "கன்னனுக்கு சொல்லி தர்றது அவ்ளோ கஷ்டமா?"

அன்பு "உனக்கு சொன்னா புரியாது, இந்த செமஸ்டர்க்கு வேணும்னா முயற்சி பன்னி பாரு"

அதே நேரம் ஹரி காயத்ரியை பச்சை நிற பட்டு புடவையின் பார்த்ததில் இருந்து பறக்க ஆரம்பித்து விட்டான்.
 "மச்சான், எனக்கு இப்பவே அவ கால்கிட்ட மண்டி போட்டு "I LOVE YOU" னு சொல்லனும் போல இருக்குடா"

சூர்யா "ரொம்ப அலையாதடா, இப்படிலாம் காதலிக்கற பசங்க ஏத்திவிடறதால தான்  சப்ப பிகருங்களாம் சீன் போட்டுகிட்டு திரியதுங்க"

ஹரி "டேய், யாரைடா சப்ப பிகர்னு சொன்ன?"

சூர்யா "உன் ஆளை சொல்லலடா, பொதுவாதான் சொன்னேன், கோவிச்சுக்காத"

ஹரி "நான் கோவிச்சுக்கலாம் இல்லை, நீ ஏதோ ஒரு சப்ப பிகர்கிட்ட கேவலபட்டு வந்த மாதிரி பேசறியே அதான் யாரை சொன்னன்னு கேட்டேன்"

சூர்யா "ஏன்டா கேட்க மாட்ட? உங்ககிட்டலாம் பேச்சுக்கு கூட ஒரு வார்த்தைய சொல்ல முடியலைடா"

அந்த பக்கம் தீபாவின் போக்கோ வேறு மாதிரி இருந்தது, அவளுடைய அம்மா எடுத்து கொடுத்து விட்டுருந்த புடவையை கட்டி இருந்தாள். அவள் குளிஹ்துவிட்டு வந்ததில் இருந்து அவளுடைய தோழிகள் அனைவரும் அவள் இன்று மிகவும் அழகாக தெரிவதாக கூறினர்.

ஆனால் சூர்யா ஒருமுறை கூட தன்னை பார்க்கவில்லை என்ற ஏக்கத்தில் அவளது பார்வை முழுவதும் நமது இளைஞர்கள் நின்றிருந்த இடத்தையே சுற்றி கொண்டிருந்தது.

மாதேஸ் "நான் சீரியஸா கேட்கறேம்"

பாலா "என்னடா?"

மாதேஸ் "இந்த மூட நம்பிக்கைலாம் எப்ப ஒழிய போகுதோ தெரியலை"

பாலா "எதை சொல்ற?"

மாதேஸ் "அதென்ன தாலி கட்டுனதுக்கு அப்புறம்தான் சாப்பாடி போடனும்னு எவன் சொன்னான்?"

பாலா "அதேனே பார்த்தேன், எலி ஏன் ஜாக்கி ஜட்டி போடுதுனு?"

அன்பு "இந்த மூட நம்பிக்கைய பத்திதான் பேசுனியா?"

மாதேஸ் "ஆமா"

பாலா "விடுறா, இந்த சமூக பிரச்சனைகளை நாம ஆட்சிக்கு வந்தப்புறம் சரி பன்னிடுவோம்"

நேரம் ஆக ஆக ஒவ்வொரு சம்பிரதாயமும் நடந்து கொண்டிருந்தது, மணமக்கள் பெரிய இடத்தை சேர்ந்தவர்களாதலால் நிறைய பெரிய மனிதர்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.

நமது இளைஞர்களை போலல்லாமல் மணப்பெண்ணின் தோழிகள் அனைவரும் விடியற்காலையில் முகூர்த்தத்திற்கு தான் வந்தார்கள். இப்படி வெளியிலிருந்து பெண்கள் வர ஆரம்பித்ததும் பார்த்து பார்த்து போரடித்து போன தங்கள் கல்லூரி பெண்களிடமிருந்து அனைவரும் ஃபோகஸை திருப்பினர், ஹரியை தவிர.

அன்பு எங்கிருந்தோ ஒரு ரோஜாவை எடுத்து கையில் வைத்து கொண்டான், அவனாவது பரவாயில்லை பாலா ஒரு மல்லிகை பூ சரத்தை கையில் சுற்றி கொண்டு அடிக்கடி முகர்ந்து பார்த்து  மைனர் பார்வை விட்டு கொண்டிருந்தான்.

பெண்களில் வனிதாவுக்கு அவளுடைய உறவு பெண்களை வரவேற்கும் வேலை இருந்ததால் கௌசல்யாவை மட்டும் துணைக்கு வைத்து கொண்டு சுற்றி கொண்டிருந்தாள்.

மண மேடையில் மணமக்கள் வந்து அமர்ந்தாகி விட்டது. மண மேடைக்கு ஒருபுறம் தீபா, காயத்ரி அவர்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். நம் இளைஞர்கள் ஒரு மூலையில் வந்து நாற்காலியில் அமர்ந்தனர்.

கன்னன் "எனக்கொரு சந்தேகம்டா"

மாதேஸ் "என்ன?"

கன்னன் "7.30 - 8.30 முகூர்த்தம்னு போட்டுருந்தது, சரியா எத்தனை மணிக்கு தாலி கட்டுவாங்கனு பத்திரிக்கல போடவேயில்லையே"

பாலா "தெரிஞ்சு நீ என்ன கிழிக்க போற?"

ஹரி "விடுங்கடா, நான் சொல்றேன் கன்னா, 7.30க்கும் 8.30க்கும் நடுவுல எப்ப வேணும்னாலும் கட்டுவாங்க"

கன்னன் " அதான் அந்த 2க்கும் நடுவுல எப்ப கட்டுவாங்கன்னு சொல்லு?"

மாதேஸ் "பெரிய 'கல்கி' பிரகாஷ் ராஜ், 2க்கும் நடுவுல எப்பனு கேட்டு தாலி எடுத்து கொடுக்க போறியா?"

கன்னன் "இல்லை தாலி கட்டிட்டாங்கன்னா போய் சாப்பிடலாம் அதான் கேட்டேன்"

பாலா "அதான் ரிசப்ஷன்ல கல்கண்டு 2 கைலயும் அள்ளிட்டு வந்து தின்னியே, அப்பவுமா பசிக்குது?"

கன்னன் "அதை சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் பசி அதிகமாயிருச்சு"

பாலா "எப்ப பாரு பசி, சாப்பாடு, தூக்கம் இதை பத்தியே பேச்சு, வேற ஏதாவது பேசலாமே"

கன்னன் "என்ன பேசலாம்?"

அன்பு "பேசாம இருங்கடா, என் ஆள் என்னையே பார்த்துட்டுருக்கு, பாருங்கடா"

கன்னன் "எந்த ஆள்டா?"

பாலா "அந்த மஞ்ச சுடியா?"

அன்பு "அது என்னை பார்க்குதா?"

பாலா "அப்ப அது உன் ஆள் இல்லையா?"

அன்பு "பார்த்துச்சா? இல்லையா?"

பாலா "பார்த்துச்சுடா"

அன்பு "அப்ப இனிமே அதுதான் என் ஆள், எவனும் பார்க்க கூடாது"

சூர்யா "அன்பு சக்கைடா, அவனை வச்சே உனக்கொரு ஆள்- அ பிடிச்சுகிட்ட"

பாலா "என்னைய பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?"

ஹரி "டேய் விடுங்கடா, கொஞ்ச நேரத்துல தாலி கட்ட போறங்க, அமைதியா இருங்க"

மாதேஸ் "என்னமோ கொடி ஏத்த போற மாதிரி சொல்ற? தாலி கட்டும் போது அமைதியா இருக்கனும்னு யார் சொன்னது?"

ஹரி "யாரும் சொல்லலை, ஆனா ஒரு மங்கலகரமான விஷயம்னு சொன்னேன்"

பாலா "லூசு, சாவு வீட்லதான் சைலன்ட் ஆ இருக்கனும், இங்க சந்தோசமா சிரிச்சுகிட்டு இருக்கனும்"

அந்த நிமிடத்தில் நடக்கும் திருமணம் எதிர்காலத்தில் நிகழ போகும் பல திருமணங்களுக்கு வித்தாக இருக்க போகிறது என்பதை பலர் அறியவில்லை.


THE ACCIDENTAL HUSBAND - விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், அவ்வபோது வரும் படங்களை பார்த்தாலும் எனது எப்போதைய விருப்பம் ரொமென்டிக் காமெடி வகை படங்கள் தான், அந்த வகையில் ஒரு படம் தான் நாம் இன்று பார்க்கப் பாவது, THE ACCIDENTAL HUSBAND.

http://1.bp.blogspot.com/_-64sx017tqA/S9uZMROmoTI/AAAAAAAADKs/cufLmpE6D-Y/s1600/accidental-husband-posterthe-accidental-husband.jpg

படத்தலைப்பிலேயே கதையை யூகிக்கலாம், எதிர்பாராத விதமாய் ஒருவன் ஒரு பெண்ணுக்கு கணவனானால் என்ன ஆகும் என்பது? ஆனால் படத்தில் எதிர்பாராமல் நடப்பது இல்லை, சரி ஆரம்பத்தில் இருந்து பார்ப்போம். நமது நண்பர்களில் எல்லாம் கண்டிப்பாக ஒருவன் இருப்பான்/ள், தனக்கு அனுபவமே இல்லை என்றாலும் நாம் செய்யும் விசயங்களை பற்றி நன்கு தெரிந்தது போல் அறிவுரை சொல்பவர்கள்.

 http://www.aceshowbiz.com/images/still/the_accidental_husband26.jpg

அது போல் லவ் டாக்டர் என கூறிக்கொண்டு ரேடியோவில் நிகழ்ச்சி நடத்துபவர்தான் கதா நாயகி, அவருக்கு வேலையே, யாராவது கஷ்டபட்டு காதலிக்க வைத்திருக்கும் பெண்ணிடம் உணர்வுகளை விளக்குகிறேன் பேர்வழி என்றி 90 % குழப்பி, இருவரையும் பிரிப்பதுதான்.

இதனால் கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தன் காதலியை இழந்தவர்தான் கதா நாயகன், ஒரு தீயனைப்பு வீரர், தன் காதல் தோல்விக்கு காரணமானவள் மீது கோபமாய் இருக்கிறார், அவருக்கு பக்கத்தில் குடியிருக்கும் ஒரு இந்திய சிறுவன் இன்டர்னெட் ஹேக்கிங்கில் கில்லாடி, அவன் அரசு பதிவு சம்பந்தமான இணையதளத்தில்  கதா நாயகன்,கதா நாயகிக்கு திருமணம் நடந்தது போல் பதிவு செய்து விடுகிறான்.

கொஞ்ச நாளில் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கும் நாயகிக்கு இந்த தொழில் நுட்ப கோளாறு தெரியவர அதை மாற்றுவதற்காந விண்ணப்பத்தில் நாயகனிடம் கையெழுத்து வாங்க அவரை தேடி வர ஆரம்பிக்கிறார், நம்ம ஆளும் "அச்சச்சோ, அப்புறம் என்னாச்சு?"னு பதறியடிச்சு சீன் போட்டுகிட்டே கொஞ்சம் கொஞ்சமா நாயகியுடன் நேரத்தை கழிக்க முயற்சிக்கிறார்.

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSgOJPgxCCmWhfKmLYRYLdxXrbUkm9EwunsR5BilWOAOW2O1Chy7g

அன்று இரவு நாயகி ஃபுல் டைட்டாகி மட்டையாகிடறதால நாயகன் தான் ரூம்க்கு தூக்கிட்டு போயிடறார், எதுவும் செய்யாமலே  நாயகியோட துணியை எல்லாம் செஞ்ச மாதிரி கலைச்சு விட்டுறார், காலைல எழுந்து நாயகி அதிரும் போது ஒரு பின்னனி இசை வருது, நான் என் செல் அடிக்குதா, டீவீ ஆன் ஆகிருச்சானு சுத்தி முத்தி பார்க்கறேன், ஏன்னா நம்ம 'அலைபாயுதே' மியுசிக், யாரோ யாரோடி பாட்டுக்கு முன்னாடி வர்ர டும்டு மாக்கடி, அலைபாயுதேல எப்படி இருந்துச்சோ இந்த சீனுக்கு செமயா இருக்கு.

http://kalafudra.files.wordpress.com/2008/11/the-accidental-husband.jpg

அப்புறம் நடக்கற எல்லா சீனையும் சொல்லிட்டா சுவாரசியம் இருக்காது. பழி வாங்கறதுக்குனு பழக ஆரம்பிக்கற நாயகன் பழி வாங்கனாறா? இல்லை முக்கால் வாசி ஆம்பளைங்க மாதிரி பொன்னை பார்த்ததும் எல்லாத்தையும் மறந்துட்டு "ப்ளீஸ், என்னை லவ் பன்னு"ன்னு கெஞ்சறாரா? அதே மாதிரி நாயகியும் தன்னை பழி வாங்கத்தான் இவன் கூட பழகனானு தெரிஞ்சப்புறம் என்ன பன்றாங்க? 2 பேருக்குள்ள எல்லாம் முடிஞ்சது தெரிஞ்சும் நாயகிய ஏத்துக்க தயாரா இருக்க தியாகியோட நிலைமை என்னா ஆகுதுனு படத்தை பார்த்து தெரிஞ்சுக்குங்க, பெரிய சஸ்பென்ஸ் லாம் ஒன்னும் இல்லை, சுபம் தான்.

http://www.aceshowbiz.com/images/still/the_accidental_husband23.jpg

படத்துல முக்கியமான சிறப்பம்சம், ஆங்கில படத்தோட பின்னனி இசைக்கு தமிழ் பாடல்களை பயன்படுத்தி இருக்கறதுதான், அதுவும் அவ்வளவு சரியா பொருந்தது, முக்கியமா அலைபாயுதே, தெனாலி பாடல்கள், இறுதி காட்சிக்கு "என்ன சொல்ல என்ன சொல்ல" பாட்டு செமயா பொருந்துது. இதுக்காவே படத்தை பார்க்கலாம்.


படத்தோட ட்ரெய்லர்உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.Saturday, 27 April 2013

CATCH ME IF YOU CAN - விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், முகம் பார்த்து பழகும் என் நண்பர்கள் பலருக்கு மற்ற மொழி படங்கள் பார்க்கும் பழக்கம் அறவே இல்லை, எப்போதாவது விக்கிப்பீடியாவின் துணை கொண்டும், சகப் பதிவர்களின் விமர்சனத்தினை கண்டும் பல படங்களை பற்றி தெரிந்து கொண்டு தரவிறக்கம் செய்து பார்ப்பேன். அப்படி என் உடன்பிறப்பு மூலம் அறிமுகம் கிடைத்து சமிபத்தில் நான் பார்த்த திரைப்படம் தான் "CATCH ME IF YOU CAN", பலர் பார்த்திருக்க கூடும், ஏனேனில் படம் வெளியானது 2002ல், சரி படத்திற்கு வருவோம்.

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/4/4d/Catch_Me_If_You_Can_2002_movie.jpg/220px-Catch_Me_If_You_Can_2002_movie.jpg

படத்தின் நாயகனை உண்மையில் முதலில் பார்க்கும் பொழுது எனக்கு அடையாளம் தெரியவில்லை, பின்னர் எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறதே என்று தேடி பார்க்கும் போதுதான் கண்டு கொண்டேன், அட நம்ம டைட்டானிக் ஹீரோ ஜேக் இல்லைன்னு, படம் ஆரம்பமே கொஞ்சம் வித்தியாசமா, எதுவுமே புரியாமா யாரோ யாரையோ ஜெயில்ல போய் பார்க்க போறாங்க, என்னதான் சப்டைட்டில்ல வசனம் புரிஞ்சாலும் கதை புரியறதுக்கு 15 நிமிடம் ஆகிடுது.

ஃப்ராங்க், அதிபுத்திசாலியான 16 வயசு பையன், நல்லா வாழ்ந்துட்டு இருந்த அவங்க குடும்பம் பொருளாதார ரீதியா பாதிக்கப் படுது, வீடு மாறுறாங்க, இருந்தாலும் எப்பவும் சுவாரசியமான விசயங்களை செய்யற அப்பாவால பையன் ஃபிராங்க் நல்லாதான் வாழ்க்கை போகுதுனு நம்பறான். அவங்கம்மா அவங்கப்பாக்கு செய்யற துரோகத்தை தெரிஞ்ச பின்னாடி எல்லாமே மாறுது, ஒரு நாள் முடிவுக்கு வர்ர குடும்ப பிரச்சனை, விவாகரத்துல நிக்குது, அதுக்கப்பறம் யார்கூட வாழ பிரியப்படறங்கற கேள்விக்கு யோசிக்க சொல்லி தனியா விட படற ஃபிராங்க் அங்க இருந்து ஓடிப்போறான்.

http://3.bp.blogspot.com/-JDc9H19vQSg/UKjxipLon5I/AAAAAAAAAjE/E1R5j2fja2s/s1600/Catch-me-if-you-can-catch-me-if-you-can-24979250-460-288.jpg

ட்ரெய்ன் டிக்கெட்டுக்காக முதல் தடவையா போலி செக் கொடுக்கறான், ஊரை விட்டு வந்தவனுக்கு தங்க இடம் இல்லை, எந்த ஹோட்டல்லயும் முகம் தெரியாத சின்னப் பையங்கறதால அவனோட செக்க எடுத்துக்க மாட்டேங்கறாங்க, அந்த நேரத்துல ஒரு பெரிய ஹோட்டல்ல தங்கப்போற பைலட்க்கு கிடைக்கற உபசரிப்ப பார்த்துட்டு பைலட்டா வேஷம் போடறான், சும்மா ஒரு வரில சொன்னாலும் அதுக்காக அவன் மெனக்கெடறது ரொம்ப...

பைலட்டா மாறி ஏர்போர்ட் போய் ஃபிளைட்ல ஓசில போய்ட்டு வந்தாலும் அவனோடா கவனம்லாம் போலி செக் தயாரிக்கறதலாதான் இருக்கு, வெறுமனே செக் தயாரிக்கறதுல்ல மட்டும் இல்லாம அதை உபயோகப்படுத்தற இடத்துல அவனோட ஸ்டைலான நடிப்பு, சும்மா பின்றான்.

http://25.media.tumblr.com/tumblr_lf6u6oXO9I1qcs276o1_400.jpg

இன்னொரு பக்கம் அவனை ஒவ்வொரு ஸ்டெப்பா பின்தொடர்ந்து வந்துகிட்டு இருக்க FBI ஆபிசர் டாம், அவரும் புத்திசாலித்தனமா அவனை நெருங்கி அவன் தங்கி இருக்க இடத்துக்கு வந்து அர்ரெஸ்ட் பன்ற நேரத்துல படம் வேகம் பிடிக்குது, இந்த இடத்துல வர்ர காட்சியமைப்ப நீங்க பல படங்கள்ள பார்த்துருக்கலாம்.

http://3.bp.blogspot.com/-WOH7ow-g3Ag/Thu2NLE27eI/AAAAAAAABqw/a8Jpxd_wmm4/s1600/32.jpg

அடுத்து படத்துல நடக்கறதை சொல்லிட்டா படம் பார்க்கறப்ப ஆர்வம் குறைஞ்சுரும், ஆனா ஒரு சின்னப்பையன் முதல்ல வீட்டை விட்டு ஓடி வந்து பைலட்டாகி, அப்புறம் போலிஸ் நெருங்கறத தெரிஞ்சுகிட்டு டாக்டராகி, நர்ஸ் அ உஷார் பன்னி, அதுக்காக அப்புறம் வக்கிலாகி என்னென்னலாம் வித்தை காட்டுவாங்கறிங்க.

http://3.bp.blogspot.com/-shAkC2PX6pQ/ThxKQp56dvI/AAAAAAAAcmc/z6sy9hgvcOc/s1600/Catch-Me-If-You-Can-9.jpg

அவனோட பலம் எந்த சூழ்நிலையிலயும் பதட்டமடையாம இருக்கறதுதான், நான் வீட்ல உட்கார்ந்து பார்க்கும் போதும் கைதட்ட வச்ச சீன் ஹோட்டல்ல நைட் முழுக்க கூட தங்கறதுக்கு 1000 டாலர் கேட்கற பொன்னுகிட்ட 1400 டாலருக்கு டூப்ளிகெட் செக் கொடுத்துட்டு மிச்சம் சில்லறை வாங்கிக்கற சீன் தான்.

படத்தோட முடிவை என்னால யூகிக்க முடிஞ்சது, ஏன்னா அதை சுட்டு இங்க ஒரு தமிழ்படம் வந்துருக்கு, உங்களால கண்டு பிடிக்க முடிஞ்சா எனக்கு சொல்லுங்க. படத்துல நீங்க எதிர்பார்க்கற எல்லாமே இருக்கு, சண்டைய தவிர.

படத்தோட ட்ரெய்லர்உங்க கருத்துக்களை தெரிவியுங்க....

Wednesday, 24 April 2013

சாரல் காலம் 13

சாரல் காலம் - முந்தின பாகங்கள்

#0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 /#7 /#8 / #9 / #10 / #11 / #12 / 13 / #14 / !5

-----------------------------------------------------------------------------------------------------------------
பெண்களின் நிலையே வேறு, தீபாவிற்கு காதல். அதனால் அவள் உறங்கவில்லை. காயத்ரி சிறு சலனம் ஏற்பட்டாலோ, வெளிச்சம் இருந்தாலோ அவ்வளவு விரைவில் உறக்கம் வருவதில்லை.

http://farm5.static.flickr.com/4098/4791780425_03a60ddfe7.jpg

(படத்திற்கும் கதைக்கும் சம்பந்தமில்லை, ஒரு அழகியலுக்காக மட்டும் சேர்க்கப் பட்டுள்ளது)

கல்யாண வீடு. ஆதலால் சிறுசிறு சப்தங்கள் வந்து கொண்டே இருந்ததால் காயத்ரியும் உறங்கவில்லை. படுத்து கொண்டே இருந்தவள் ஏதோ ஒரு ஞாபகத்தில் எழுந்து உட்கார்ந்தாள். விழித்துக் கொண்டே படுத்திருந்த தீபாவுக்கு யாரிடமாவது பேச வேண்டும் போல இருந்தது.

தீபா "ஏன்டி, தூங்கலையா?"

காயத்ரி "இல்லை, எனக்கு புது இடத்துல சீக்கிரம் தூக்கம் வராது, நீ தூங்கலை?"

தீபா " இல்லை, எனக்கும் உன்னை மாதிரிதான் புது இடத்துல தூக்கம் வராது"

காயத்ரி "வரலனாலும் எப்படியாவது தூங்கியே ஆகனும். இல்லன்னா காலைல நிக்க முடியாது, பயங்கர டயர்ட் ஆகிடும்"

தீபா "ஆமாமா, எப்படியாவது தூங்கனும்"

காயத்ரி "குட் நைட்"

தீபா "குட் நைட்"

தீபாவிற்கு உறக்கத்தை விட சிந்தனை  தான் புதியதாக வந்து கொண்டே இருந்தது. புது இடத்தில் உறக்கம் வராது என்றால் திருமணத்திற்கு பின் புதிய இடத்திற்கு தான் தங்க வேண்டும். அப்போது என்ன செய்வது?

இப்படி யோசித்து கொண்டே அவளும் உறங்கி போனாள். இப்படி அனைவரும் உறங்க ஆரம்பிக்கவே மணி 1 ஆகிவிட்டது.

மூன்று மணிக்கெல்லாம் கல்யாண வீட்டில் மற்ற வேலைகளை ஆரம்பிக்க அனைவரும் எழுந்து தயராக ஆரம்பித்தனர்.

நம்ம பசங்க எப்பவும் கல்யாணத்துக்குனு போனா 8 மணிக்கு முன்பு எழுந்ததாக சரித்திரம், பூகோளம் எதுவுமில்லை.

ஒருவன் காதலிக்க ஆரம்பித்தால் அவனுடைய வாழ்க்கை மட்டுமல்ல, அவன்  நண்பர்களின் வாழ்க்கையும் சேர்ந்து தான் மாறும்.

சரியாக ஐந்து மணிக்கெல்லாம் சூர்யா எழுந்து கொண்டான். அவன் எழுந்ததும் ஹரியை எழுப்பி விட, எப்போதும் முரண்டு பிடிக்கும் ஹரி இன்று "டேய் ஹரி, எழுந்திரிடா" என்று ஒருமுறை சொன்னதும் எழுந்து விட்டான்.

சூர்யா "சீக்கிரமா கிளம்பு, மணி 5 ஆச்சு"

ஹரி "சரி, பசங்களை எழுப்ப வேண்டாமா?"

சூர்யா "வேண்டாம், லேட் பன்னுவாங்க"

ஆனால் ஹரி எழுந்து நடக்கும் போது தெரியாமல் கன்னனின் தொடைப் பகுதியை மிதித்து விட்டான்.

"அய்யோ, அம்மா"

மொத்த அறையும் எழுந்து விட்டது. மாதேஷ் நன்றாக விழித்து கொண்டான்.

ஹரி "டேய் கன்னா, மூடிட்டு படு"

மாதேஷ் "டேய், எங்கேடா போறிங்க?"

சூர்யா "பாத்ரூம் போறோம்டா"

மாதேஷ் "2 பேருக்கும் ஒன்னா வந்ததா? டைம் என்ன?"

ஹரி "மணி 5 தாண்டிடுச்சு"

மாதேஷ் "சரி, எங்கே போறிங்க?"

ஹரி "தூக்கம் தெளிஞ்சுடுச்சுடா, அதான் அப்படியே குளிச்சு ரெடி ஆகலாம்னு கிளம்பனோம்"

மாதேஷ் "யாருக்கு உனக்கு 5 மணிக்கு தெளிஞ்ச்ருச்சா?"

ஹரி "இல்லை, சூர்யாவுக்கு தெளிஞ்சுருச்சு, அவன் என்னையும் எழுப்பி விட்டுட்டான்"

சூர்யா "சரி மச்சான், இரு நாங்க போய்  குளிச்சுட்டு வந்துடறோம். ஹரி நட போலாம்"

மாதேசுக்கு இவர்கள் எங்கோ ரகசியமாக கிளம்புகிறார்கள் என்பது புரிந்தது. ஆனால் எங்கு என்று யோசிக்க தோன்றவில்லை. தானும் பின் தொடர வேண்டும் என்றுதான் தோன்றியது. துனைக்கு அன்பையும் எழுப்பினான். அவன் சாமான்யத்தில் எழுந்திருக்கவில்லை.

போட்டு உலுக்கியதில் அன்புவை கட்டி பிடித்து தூங்கி கொண்டிருந்த பாலா விழித்து கொண்டான்.

பாலா "என்னடா மாப்பிள்ளை?"

மாதேஷ் "ஹரியும் சூர்யாவும் எங்கேயோ கிளம்பறாங்கடா, வா நாமளும் போலாம்"

உடனே பாலாவும் விறுவிறுவென்று எழுந்து கொண்டான். இருவரும் சேர்ந்து உலுக்கியதில் அன்புக்கு லேசாக தூக்கம் தெளிந்தது. அவனை ஏதோ குழந்தையை தூக்குவது போல் மாதேஷ் தூக்கி கொண்டும் இழுத்து கொண்டும் கிளம்பினான். பாலா திரும்பி பார்த்தான்.

கன்னன் நிம்மதியாக ஒரு கையை வயிற்றிலும் ஒரு கையை கண்கள் மீதும் வைத்து உறங்கி கொண்டிருந்தான். அமைதியாக அவனை நெருங்கி பாலா, அவன் தொடையில் ஒரு எத்து விட்டான்.

கன்னன் "என்னடா?"

பாலா "மணி 7 ஆகுது, இன்னும் தூங்கற? உருப்படுவியா? எழுந்திருடா?"

கன்னன் "7- ஆ? (தன் செல்லை எடுத்து பார்த்து) மணி 5 தான்டா ஆகுது"

பாலா "நம்ப மாட்டியா? நம்ம பசங்க என்னைக்குடா 5 மணிக்கு எழுந்து குளிக்க போனாங்க?"

கன்னன் "ஆமாடா பசங்க எங்க போனங்க?"

பாலா "சொன்னன்ல்ல? குளிக்க போய்ட்டாங்க வா போகலாம்"

கன்னன் "டேய் என்னாச்சுன்னே தெரியலைடா, என் செல்லுல மணி 5 னு ஸ்லோவா காட்டுது, இப்ப என்ன டைம்னு சொல்லு மாத்திக்கறேன்"

பாலா "மணி இப்ப 7.10. சீக்கிரம் வா, 7.30க்கு முகூர்த்தம்"

கன்னன் உடனே அடித்து பிடித்து கொண்டு எழுந்து வந்தான், பாத்ரூம் அருகே அன்பு குத்த வைத்து உட்கார்ந்து உறங்கி கொண்டிருந்தான்.

கன்னன் "இங்க பாரு, 7 மணிக்கு உட்கார்ந்து தூங்கறத?"

கன்னன் அப்படி சொன்னதும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அனைவருக்கும் கன்னன் மணி 7 என்று நம்பி கொண்டிருப்பது புரிந்து விட்டது. எல்லோரும் அதை ஆமோதிப்பது போல் எதுவும் பேசாமல் இருந்து விட்டார்கள்.

அதிக பட்சம் 20 நிமிடத்தில் அனைவரும் குளித்து தயாராகி விட்டனர். அறைக்கு வந்து சீராக உடை மாற்றிக் கொண்டு தயாரானார்கள்.

பெண்கள் அறையில் கதையே வேறு. 4 மணிக்கெல்லாம் எழுந்து தயாராக ஆரம்பித்து பொருத்தமாக புடவை அணிந்து கிளம்ப மணி 6 ஆனது.

திருமணத்திற்கு வந்த மற்ற நண்பர்களுக்கு இவர்களின் செயல்கள் ஆச்சர்யத்தை அளித்தது. வழக்கமாக எந்த சிறு விஷயமாக இருந்தாலும் தோண்டி துருவி கேள்வி கேட்கும் பாலா கூட யாரையும் எதுவும் கேட்கவில்லை. நண்பனுக்கு ஒரு காதல் கிடைத்திருக்கிறது என்றால் மகிழ்ச்சிதான், ஆனால் எனக்கும் ஒன்று வேணும்.

கன்னனுக்கு விளங்கி விட்டது. மணி எத்தனை என்று. ஆனால் எதற்காக இவ்வளவு சீக்கிரம் கிளம்பி இருக்கிறோம் என்றுதான் தெரியவில்லை. சரியென்று மெதுவாக அன்புவிடம் கேட்டான்.

கன்னன் "டேய், எதுக்குடா இவ்வளவு சீக்கிரம் கிளப்புனிங்க?"

அன்பு "டேய் நாயே, இவ்ளோ நேரமா நானும் அதைத்தான் யோசிச்சுட்டு இருக்கேன், என்னை கேட்டா? உன்னை எவன் எழுப்பனானோ அவனை கேளு"

கன்னன் "டேய் பாலா, நீதான் என்னை எழுப்பன? நீயே சொல்லு"

பாலா "அது வந்து கன்னா, நேத்து நைட் படுக்க வரப்பவே எல்லா பொன்னுங்களும் காலைல உன்னை சீக்கிரமா எழுப்பி கூட்டி வர சொன்னாங்க"

கன்னன் அதை நம்பியவாறே கேட்டான் 
"என்னையா? எதுக்கு?"

பாலா "என்னடா கன்னா? எல்லாம் உன் அழகை ரசிக்கத்தான்"

பாலா இப்படி சொன்னதும் யாருமே சிரிக்கவில்லை, கன்னன் அவர்களை ஒரு தடவை பார்த்து விட்டு கேட்டான்.

கன்னன் "ஏன்டா, அவந்தான் ஜோக் அடிக்கறானே, சிரிங்களேன்டா"

மாதேஷ் "நாங்க எதுக்கு சிரிக்கனும், அவன் உண்மையதான சொல்றான், நீ அழுகுதானே"

கன்னன் "நான் எதுவும் பேச விரும்பலைடா சாமிகளா"

ஹரி மெதுவாக சூர்யாவிடம் கேட்டான்

ஹரி "மச்சான், நாம வேணா ஏதாவது வேலை செய்யலாமா?"

சூர்யா "என்ன வேலை?"

ஹரி "பொன்னு வீட்டு சார்பா கல்யாண வேலைலாம் செய்யலாம்டா"

சூர்யா "எப்படி, பந்தியில பரிமாறுறது, கூல்ட்ரிங்ஸ் கொடுக்கறது அது மாதிரியா?"

ஹரி "ஆமாடா"

சூர்யா "வீட்ல உங்கப்பா சாப்பிடும் போது தண்ணிர் மொண்டு வச்சுருக்கியா? உங்கப்பாவ விடு உனக்கே உங்கம்மாதான் வைப்பாங்க, எப்படிடா கூசாம வேலை பார்க்கலாமானு கேட்கற?"

ஹரி "இல்லைடா நீதான சொன்ன அவளை காதலிக்கறதை விட காதலிக்க வைக்கறதுல கவனம் செலுத்தனும்னு"

சூர்யா "அதுக்குனு இதெல்லாம் ரொம்ப ஓவர்"

ஹரி "வேற என்ன பன்னா இம்ப்ரெஸ் பன்ன முடியும்?"

சூர்யா "இந்த கல்யாணம் முடியற வரைக்கும் அவளை இம்ப்ரெஸ் பன்றத விட்டுட்டு, அவ எதுல இம்ப்ரெஸ் ஆவானு அவளை முழுக்க அப்சர்வ் பன்னி கண்டு பிடி"

ஹரி "எப்படி மச்சான் இவ்வளவு புத்திசாலி தனமா பேசற? வேற எந்த விஷயத்துலயும் நீ இவ்ளோ தெளிவா பேச மாட்டியே"

சூர்யா "என்னை பொறுத்த வரைக்கும் காதல் ஒரு கேம், வீடியோ கேம்ல வர்ர மாதிரி ஒவ்வொரு ஸ்டேஜ் ஆ தாண்டுனா எந்த பொன்னையும் காதலிக்க வச்சுடலாம்"

ஹரி "இவ்ளோ சொல்றியே, நீ ஏன்டா எந்த பொன்னையும் கரெக்ட் பன்னலை"

சூர்யா "அதுக்கெல்லாம் ஒரு டைம் வரும்டா, உனக்கு தோணுன மாதிரி எனக்கும் ஒருத்திய பார்த்து தோணும் போது பார்க்கலாம்"

இவர்கள் இருவரும் பேசியதை மாதேஷ் கேட்டக் கொண்டுதான் இருந்தான். ஆனால் இருவரும் ஒரு தடவை கூட ஹரியின் காதலி (காயத்ரி) பெயரை சொல்லாதது மாதேசுக்கு ஏமாற்றமாக இருந்தது. 

Sunday, 21 April 2013

சாரல் காலம் 12

சாரல் காலம் - முந்தின பாகங்கள்

#0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 /#7 /#8 / #9 / #10 / #11 / #12 / 13 / #14 / !5

-----------------------------------------------------------------------------------------------------------------
ஹரியின் முகத்தில் அந்த இருளிலும் ஒளி வீசும் அளவுக்கு உற்சாகம் பொங்கியது. தீபாவிற்கு சொல்லவே வேண்டாம், தான் காதலிக்க துவங்கியது தெரிந்ததில் இருந்தே பயங்கர உற்சாகத்தில் தான் இருந்தாள்.

நாம் நினைக்கும் நேரத்தில் நம்மை காதலிப்பவர்கள் எதிரில் தோன்றினால் போதாதா? வேறு என்ன வேண்டும் இந்த உலகில் நமக்கு?

சூர்யாவை பார்த்ததும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போன தீபா, காயத்ரி அருகில் இருப்பதை உணர்ந்ததும் தன்னை கட்டுப்படுத்தி கொண்டாள்.

காயத்ரிக்கு ஹரியை பார்த்ததும் இந்நேரத்திற்கு கூட சைட் அடிப்பதற்கென்று வந்து நின்று கொண்டிருக்கிறானா என்று தோன்றியது.

http://3.bp.blogspot.com/-rLTqiuCGK_s/T5lvGkH6pRI/AAAAAAAAWps/FWPdYnV8esM/s1600/Raattinam+Heroine+Swathi+Cute+Photos+Stills+Tamil+Actress+Swathi+New+Photoshoot+images+(4).jpg

காயத்ரி தீபாவை அழைத்துக் கொண்டு சென்று படுத்துக் கொண்டாள். தீபாவிடம் பேச இப்போது எந்த வார்த்தையும் இல்லை, தப்பித் தவறி வாயை திறந்தால் 'I LOVE SURYA' என்றுதான் வரும்.

நம் மனதில் எந்த கவலையும் இல்லை என்றால் படுத்த உடனே உறங்கி விடுவோம். ஏதேனும் கவலை இருந்தால் உறக்கம் நம்மை தழுவ விடாமல் கவலை நம் மனதை அரித்து கொண்டிருக்கும்.

நீங்கள் எப்போதாவது உறக்கம் வராத அளவுக்கு உற்சாகத்தில் மிதந்து இருக்கிறிர்களா? நிச்சயம் முதல் காதலை உணரும் பொழுதுதான் அதை முழுதாக அனுபவிக்க முடியும்.

தீபா இப்போது அந்த சொர்க்கத்தத்தான் அனுபவித்து கொண்டிருக்கிறாள்.

ஹரியை பற்றி சொல்லவா வேண்டும், காயத்ரி சென்றவுடன் பெருமையாக சூர்யாவை ஒரு பார்வை பார்த்தான். சூர்யா ஒன்றும் பேசாமல் மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

"one side love பன்றப்பவே இந்த பார்வை பாக்கறானே, அந்த பொன்னும் காதலிக்க ஆரம்பிச்சுட்டா போன ஜென்மத்துல நான்தான் தாஜ்மஹால் அ கட்டுனேன், இப்போ அது எனக்கு வேணும்னு அடம் பிடிப்பான் போல இருக்கே?"

ஹரி "என்னடா பார்க்கற?"

சூர்யா "ஒன்னுமில்லைடா"

ஹரி "இப்ப என்ன சொல்ற?"

சூர்யா "என்ன சொல்ல சொல்ற?"

ஹரி "காயத்ரி வந்து பார்த்துட்டு போனத கேட்கறேன்"

சூர்யா "அதுக்கென்னடா  இப்போ?"

ஹரி "நாம நினைக்கும் போது அவங்க வந்தாங்கனா என்ன அர்த்தம்?"

சூர்யா "என்ன அர்த்தம்?"

ஹரி "இந்த காதல் கட்டாயம் ஜெயிக்கும்னு அர்த்தம்"

சூர்யா "அப்படினு பகவத் கீதைல போட்டுருக்கா?"

ஹரி "ஏன்டா நீ ஊக்குவிக்கவே மாட்டியா?"

சூர்யா " என்னடா ஊக்கு விக்கறியா? பின் விக்கறியா?னுகிட்டு, நீ முடிவெடு நான் சப்போர்ட் பன்றேன், உன் வாழ்க்கைக்கு என்னை முடிவு எடுக்க சொல்லாதே?"

ஹரி "ஏன்டா?"

சூர்யா "உன் குடும்ப விசயத்துல கூட தலையிடலாம், எனக்கு உரிமை இருக்கு, ஆனா காதல்ல அப்படி இல்லை"

ஹரி "ஏன்டா மச்சான், உனக்கு இல்லாத உரிமையா?"

சூர்யா "இந்த மரியாதைய காப்பாத்திக்கனும், கொஞ்சம் கொஞ்சமா நான் தலையிட்டனா நாளைக்கு நீயே என் சொந்த விஷயத்துல தலையிடாதனு சொல்லிடுவ அதான்"

ஹரி "நான் அப்படிலாம் சொல்லுவனா?"

சூர்யா "நீ சொல்ல மாட்ட? ஆனா அந்த காதல் உன்னை சொல்ல வைக்கும்"

ஹரி "டேய் என்னடா இப்படி சொல்ற? அப்படிபட்ட காதல் எனக்கு வேணாம் மச்சான்"

சூர்யா "ரொம்ப குழப்பிக்காதடா, அவளை உனக்கு பிடிச்சுருக்கு, உன்னை அவளுக்கு பிடிக்க வைக்க என்ன பன்னனும்னு யோசி"

ஹரி "நீதான்டா குழப்பற, அவளை காதலிக்க சொல்றியா? வேணாம்னு சொல்றியா?"

சூர்யா "நீதான் புரிஞ்சுக்க மாட்டேங்கற"

ஹரி "என்ன புரிஞ்சுக்கலை"

சூர்யா "நீ ஏற்கனவே அவளை காதலிக்க ஆரம்பிச்சுட்ட?"

ஹரி "அப்படியா?"

சூர்யா "ஆமா, கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரு, உனக்கு அவ நினைப்ப தவிர வேற ஏதாவது ஞாபகத்துல இருக்கா? இருக்காது. ஆனா இப்படியே இருந்தா உன்னால அவளை காதலிக்க வைக்க முடியாது"

ஹரி "என்ன சொல்றனு புரியலைடா"

சூர்யா "நீ அவளை காதல் மட்டும் பன்னா திரும்ப அவ உன்னை காதலிக்க மாட்டா"

ஹரி "வேற?"

சூர்யா "இப்போதைக்கு உன்னோட கவனம் முழுக்க அவளை காதலிக்கறதுல இருக்க கூடாது, அவளை காதலிக்க வைக்கறதுல இருக்கனும்"

ஹரி "கொஞ்சமா புரியுது, ஆனா தெளிவா புரியலை"

சூர்யா "அப்புறம் புரிய வைக்கறேன், உனக்கு அவ வேணுங்கறதுல நீ தெளிவா இருக்க தானே?"

ஹரி "ஆமா"

சூர்யா "விடு பார்த்துக்கலாம்"

ஹரி "தேங்க்ஸ் மச்சி"

சூர்யா "ஆனா ஒரு கன்டிஷன், ஒருவேளை ஏதாவது ஒரு கட்டத்துல அவ உன்னை விட்டுட்டு போய்ட்டா நீ அவளையே நினைச்சு அழுதுட்டு இருக்க கூடாது"

ஹரி "அதான் நீ இருக்கல்ல, என்னை பத்திரமா பார்த்துக்க மாட்ட"

சூர்யா "ஆமாடா, பால் குடிக்கற குழந்தை நீ பெட்ல உச்சா போகாம நான் பத்திரமா பார்த்துக்கறன்"

ஹரி " அப்ப்டி இல்லை இனிமேல் எது செஞ்சாலும் உன்னை கேட்டுட்டுதான் செய்வேன்"

சூர்யா "சரி அப்ப வா படுக்கலாம், காலைல சீக்கிரமா எழனும், நிறைய வேலை இருக்கு"

ஹரி "என்ன வேலைடா?"

சூர்யா "காதலிக்க போற!!"

ஹரி "காதலிக்க போறனா? என்னடா களை புடுங்க போற மாதிரி சொல்ற?"

சூர்யா "அப்படித்தான் சொல்லுவேன், உனக்கு இது உணர்வு சம்பந்தபட்ட விஷயம், நானும் அப்படி பார்க்க முடியாது"

ஹரி " வேற எப்படி பார்க்க போற?"

சூர்யா "நமக்கு எதிரா ஒரு பசங்க குருப் இருந்தா என்ன பன்னுவோம்?"

ஹரி "என்ன பன்னுவோம்? அவங்களை முழுக்க கவனிச்சுகிட்டே இருப்போம், அவங்க பலம், பலவீனம் எல்லாம் தெரிஞ்சுப்போம், சரியான சமயம் கிடைக்கறப்ப தட்டுவோம், ஆனா அது மாதிரி காதலிக்க முடியுமா?"

சூர்யா "வேற வழி, நமக்கு என்ன தெரியுமோ அதைத்தான் செய்ய முடியும், தெரிஞ்ச வழிலயே முயற்சி பன்னுவோம்"

ஹரி "சரி, நீ சொல்ற மாதிரியே கேட்கறேன், நாளைக்கு செட் ஆகி கல்யாணம்னு வந்தாலும் கையெழுத்து போட நீதான் வரனும், விட்டுட்டு போய்ட்டாலும் நான் புலம்பறத கேட்கவும் நீதான் வரனும்"

சூர்யா "ரெண்டுமே செய்ய எந்த நண்பனும் சலிச்சுக்க மாட்டான். உன் நல்ல நேரம் பசங்க எதுவும் நோண்டலை, காலையில என்ன ஆகுதுனு பார்க்கலாம்"

ஹரி "எனக்கென்னமோ காலைல பெருசா ஒன்னும் ஆகாதுனுதான் நினைக்கறேன்"

சூர்யா " எப்படி சொல்ற?"

ஹரி "விசேசத்த பார்த்த இல்லை? எத்தனை பொன்னுங்கனு, ஒவ்வொருத்தனும் ஆளுக்கு ஒன்னு செலக்ட் பன்னிகிட்டாங்க, அவன் அவன் அவனோட செலக்ஷன் பின்னாடி சுத்தவே நேரம் பத்தாது. கேள்வி கேட்கறதுக்கு ஒருத்தன் தான் இருக்கான்"

சூர்யா "யாரு?"

ஹரி " நம்ப கன்னன் தான்"

சூர்யா "எனக்கென்னமோ அவனும் ஒன்னை செலக்ட் பன்னிட்டானுதான் நினைக்கறேன்"

ஹரி "அப்படியா, யார்னு தெரியுமா?'

சூர்யா "தெரியலை, எப்படியும் காலைல தெரிஞ்சுரும்"

ஹரி "சரி வாடா போய் படுக்கலாம், காலைல சீக்கிரம் எழுந்திருக்கனும்"

சூர்யா "சரி வா, காதலிக்க ஆரம்பிச்சுட்ட, இனி உன் வாழ்க்கையே மாற போகுது"

இருவரும் பொறுமையாக நடந்து அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றனர். அங்கே அளுக்கொரு பக்கம் புரண்டு கொண்டு இருந்தார்கள். கன்னன் ஒரு மூலையில் ஒடுங்கி படுத்திருந்தான், இவர்களும் தங்களால் முடிந்தவரை அனைவரையும் புரட்டி போட்டு விட்டு படுத்தனர். இருவரும் மிகவும் யோசித்து கொண்டே இருந்து, பிறகு அவர்களை அறியாமல் உறங்கினர்.


404 Error not found - திரை விமர்சனம்

அனபர்களுக்கு வணக்கம், சில படங்களை பார்த்ததும் உடனே நம்மளை ஒத்த ரசனை உடையவங்களை தொடர்பு கொண்டு நாம ரசிச்சு பார்த்த படத்தை பார்க்க சொல்லுவோம், அந்த மாதிரி என்னை ரொம்ப பாதிச்ச படங்கள் கம்மிதான், அதுல இந்த படம் கண்டிப்பா ஒன்னு.

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/e/e7/404_Movie_Poster.jpg/220px-404_Movie_Poster.jpg

இந்த படத்தோட பேரே வித்தியாசமா இருக்கு, ஒரு மருத்துவ கல்லூரி, ஹாஸ்டல், இராக்கிங் பிரச்சனை, முதல்ல சாதாரணமா ஆரம்பிக்கற திரைக்கதை, ஆனா அதுலயும் வித்தியாசமான கேமிரா கோணங்கள், நீங்க எதிர்பார்க்கற மாதிரி ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடியன்லாம் யாரும் கிடையாது.

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTYeJWlRQxZV3PKkxW9Et4ERuki6LyXwk8Vr1MLsr1bG6uxngmnfA

ஒரு நல்லா படிக்கற பையன் அபிமன்யு, அவனை ஊக்குவிக்கற புரொஃபசர், அவங்க அழகான மனைவி அவங்களும் புரோஃபசர் தான், தினமும் இராத்திரில முதல் வருசத்து பசங்களை இராக்கிங் பன்ற சீனியர் கும்பல், அவங்களை எதிர்க்கற நல்ல பையனை டார்ச்சர் பன்றதால, மத்த பசங்க தன்னால பாதிக்கப்பட கூடாதுனு வேற ரூம்க்கு போக நினைக்கறான் அபிமன்யு.

அவன் போகனும்னு நினைக்கற ரூம் நம்பர் 404, அதுதான் காலியா இருக்கு, ஆனா 3 வருசத்துக்கு முன்னாடி ஒரு ஸ்டூடன்ட் கௌரவ் அதுல தூக்கு போட்டு தற்கொலை பண்ணிகிட்டதால அதுல பேய் நடமாட்டம் இருக்குனு பூட்டியே இருக்கு, ஒரு வழியா அபிமன்யு போராடி அந்த ரூம்க்கு போறான்.

http://www.bollywoodtrade.com/News/Images/11/Jul/404-error-not-found-main.jpg

ஆனாலும் இராக்கிங் தொடருது, ராக் பன்ற சீனியர் நல்லவன்கிட்ட உன் ரூம்ல செத்து போன பையனை பத்தி எதுவும் தெரியாம எப்படி இருக்கலாம்னு மிரட்டி ஒரு நாள் டைம் கொடுத்து அவனை பத்தி எல்லாம் தெரிஞ்சுக்க சொல்றாங்க, அவனும் விசாரிக்க ஆரம்பிக்கறான், அப்பதான் எதிர்பாராத விஷயம் நடக்குது.

செத்துப்போன கௌரவ் இவனோட கண்ணுக்கு தெரிய ஆரம்பிக்கிறான், பயந்து நடுங்க ஆரம்பிக்கற பையனுக்கு ஆதரவா எல்லாரும் ராக்கிங் கூடாதுனு போராட ஆரம்பிக்கறாங்க, ஆனாலும் செத்தவனோட உருவம் இவனுக்கு தெரியறது தொடருது. ஆனா யாரும் நம்ப மாட்டேங்கறாங்க.

முதல்ல கௌரவ்வ பார்த்து பயந்த அபிமன்யு கொஞ்சம் கொஞ்சமா பயம் குறைஞ்சு அவன் கூட பழக ஆரம்பிச்சுடறான், தனியா பேசிகிட்டு அவன் சுத்தறதை எல்லாரும் பார்க்கறாங்க, அவனுக்கு டிஷ் ஆர்டர் குணப்படுத்தனும்னு நினைக்கறாங்க. இதுக்கு அப்புறம் தான் சஸ்பென்ஸ், நீங்க எதிர்பாக்காத பல விஷயங்கள் செகன்ட் ஆஃப்ல வரும்.

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRXIyKGI-wS50v-X7PJ-xiXTkwMM1Bw1qVdndu6c70coLWOmBarzA

நிறைய படம் பார்க்கறவங்களுக்கு ஒரு திறன் இருக்கும், எவ்வளவு திகில் படமா இருந்தாலும் யார் காரணம்னு, என்ன காரணம்னு மனசு தானா கணக்கு போடும், அவங்களால கண்டிப்பா இந்த படத்தோட ட்விஸ்ட் அ யூகிக்க முடியாதுங்கறது என் எண்ணம்.

நான் நல்ல வேளை பகல்ல தான் பார்த்தேன், இருந்தாலும் க்ளைமாக்ஸ்ல உடம்பெல்லாம் புல்லரிச்சு, லேசா நடுங்க ஆரம்பிச்சுருச்சு, பயம் காரணம் இல்லை, ஒரு மாதிரியான திகிலை உடனே தெரிஞ்சுகிட்ட பதட்டத்தை நான் உணர்ந்தேன், கண்டிப்பா மிஸ் பன்னாம பாருங்க நண்பர்களே!!!


படத்தின் ட்ரெய்லர்கருத்துக்களை தெரிவிக்கவும்

Saturday, 20 April 2013

உதயம் NH4 விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், ஒரு படம் பிடிக்கலைன்னா கண்டிப்பா நான் விமர்சனம் எழுத மாட்டேன். எனக்கு அந்த படத்துல பிடிச்ச விஷயங்களைத்தான் விமர்சனங்கற பேர்ல எழுதுவேன். இன்னைக்கு நாம பார்க்க போற படம் உதயம் NH4.

http://songspk3.in/images/tamil/udhayam%20NH4.jpg

தியேட்டர் மேச்சேரி KS தான், 9 மணிக்கு முடிவு பண்ணி, சாப்பிட்டு பொறுமையா டீ சர்ட், லுங்கியோட வீட்லய தண்ணிர் பாட்டில் எடுத்துகிட்டு நடந்து நண்பனோட போனேன், டிக்கெட் 40 ரூபாய் தான், என்னா கரன்ட் போனா ஜெனரேட்டர்க்கு மாத்தறப்ப 2 நிமிஷம் காத்திருக்கனும்.

உள்ளே போறப்பவே சித்தார்த் அ போஸ்டர்ல பார்த்தேன், அப்படி எதை பார்த்து சமந்தா மயங்கி இருக்கும்? படம் ஆரம்பிச்சதும் உதய நிதி ஸ்டாலின் பேர் போட்டதுக்குலாம் 4 உடன் பிறப்புகள் கைத்தட்டுனாங்க, வெற்றி மாறன் பேருக்கு நான் ஒருத்தன் தான் கை தட்டுனேன்.

http://static.ibnlive.in.com/ibnlive/pix/sitepix/03_2013/ghiyt.jpg

படம் ஆரம்பிக்கும் போதே பொன்னை தூக்கறாங்க, நாடோடிகள் போலனு பார்த்தா ஏதோ மங்கத்தா ரேஞ்சுக்கு ஒழுங்கா கேட்காத மாதிரி ப்ளான் போட்டாங்க, சரி ஏதாவது புதுசா இருக்கும்னு பார்த்தேன், பழச கழுவி சுத்தமா கொடுத்துருக்காங்க.

கடைசி எக்சாம் முடிஞ்சதும் ஹீரோயின் அ பாத்ரூம் ஜன்னல் வழியா கடத்தறத யூகிக்க முடியாத செக்யுரிட்டி கார்ட்ஸ், ஹோலி பண்டிகைல நடு ரோட்ல கலர் பூசற மாதிரி, பப்ளிக் ஆ என்கவுன்டர் பன்ற போலிஸ் வில்லன், கண்டிப்பா லவ் ஸ்டோரினு தெரிஞ்சாலும் என்ன பன்ன போறாங்கனு நிமிர்ந்து உட்கார்ந்தேன். இன்டர்வெல் வரைக்கும் குனிய விடலை, செம ஸ்பீட்.

http://static.ibnlive.in.com/pix/slideshow/04-2013/tamil-friday-siddharths/tamilcropped4.jpg

ஹீரோயின் எங்கே போயிருப்பானு விசாரிக்க ஹீரோவோட நண்பனை கூட்டி வந்து விசாரிக்கறப்ப வர்ர ஃபிளாஷ்பேக் நல்லாதான் இருக்கு, எனக்கு ஒரு சந்தேகம், கடைசி பெஞ்ச் பையனுக்கு கிளாஷ்லயே சூப்பர் ஃபிகர் மாட்டுது, காரணம் அவர் மெச்சூர்ட் ஆ முறைச்சுகிட்டே இருக்கார்னு, நாங்க ஒரு 4 பேர் 4 வருசம் அப்படிதாங்க பெஞ்ச் அ தேய்ச்சோம், மனுசங்களாவே யாரும் மதிக்கலையே???????????

 http://www.jaffaa.com/wp-content/themes/arts-culture/timthumb.php?src=http://www.jaffaa.com/wp-content/uploads/2013/03/Udhayam-NH4-Movie-Stills-Siddharth-Udhayam-NH4-Latest-Photos-Siddharth-Udhayam-NH4-Photos-Udhayam-NH4-Latest-Hot-Pics.jpg&q=90&w=630&zc=1

போலிஸ் அ முட்டாள் அ காட்டாமா, முடிஞ்ச வரைக்கும் விரட்டி விரட்டி பைக், கார், ட்ரெய்ன்னு மாறுனாலும் தேடிப் பிடிச்சு ஹீரோயின் அ ஒத்தை கைய வச்சுகிட்டே இழுத்துட்டு போற வில்லன் செம கெத். அதுலயும் நடுவுல நடுவுல பொண்டாட்டி கிட்ட போன்ல சமாளிக்கறத பார்க்கறப்ப எங்க கேங்ல புதுசா கல்யாணமான பசங்களாம் நினைவுக்கு வந்துட்டு போறானுங்க.

செகன்ட் ஆஃப் தான் தெலுங்கு வாடை, ஆணி வச்சு ஜீப் அ நிறுத்தறது, RX100 அ பத்த வச்சு வெடிக்க வைக்கறதுனு கொஞ்சம் சீன் எனக்கு பிடிக்கலைப்பா. இருந்தாலும் செகன்ட் ஆஃப்ல ஃப்ளாஷ்பேக் நல்லா இருந்தது. பப்க்கு போற பொன்னுங்களை எப்படி அடிப்பாங்கனு இப்பதாங்க பார்க்கறேன். பரவாயில்லைங்க இந்த ஹீரோயின், ஹீரோகிட்ட ஒரு பாதுகாப்பை தான் எதிர்பார்க்குதாம், அப்படினு சொல்லிகிட்டே எதுக்கு ரூம்க்கு வந்து "I WANT TO KISS YOU, TO HAVE YOU, HUG YOU" னு வேற எதுக்கோ அடி போடுது.

http://static.ibnlive.in.com/pix/slideshow/04-2013/tamil-friday-siddharths/tamilcropped3.jpg

அப்பவும் ஹீரோ நல்லவனாவே இருக்கார், எனக்கு இருக்கறதுலயே பிடிச்ச டயலாக் "கதவை தட்டிட்டு வந்துருக்கலாம் இல்லை மச்சான்" தான், சீன் அ சொல்லிட்டா சப்புன்னு போயிரும், படத்துல பாருங்க.

போலிஸ் ஃபிளாஷ்பேக் அ கேட்டுட்டு இருக்கறப்ப டக்னு ஷாக் ஆகி "எப்புடுறா?"னு கேட்கற சீன்,

அந்த கான்ஸ்டபுள் ஹை பிட்ச் ல "எஸ் சார்" சொல்றது.

அப்பா, அம்மா காச வீணாக்க கூடாதுனு ஓசி சரக்குக்கு அலையற நண்பன், ஃபைன் கட்டாம இருக்க முறை போட்டு ஒருத்தனை குடிக்க விடாம் வண்டி ஓட்ட வைக்கறதுனு ரசிக்கறதுக்கும் நிறைய சீன் இருக்கு.

வெற்றி மாறனோட முத்திரைனு சொல்லனும்னா முதல் விஷயம் எங்கேயும் போரடிக்காத மேக்கிங், தேவையில்லாத வசங்களை பயன்படுத்தாதது, சைந்தவி, G.V.பிரகாஷ்கிட்ட ஜோடியா ஒரு பாட்டை வாங்குனது, க்ளைமாக்ஸ் லிப் கிஸ்ஸிக்காக ஹிந்தி ஹீரோயின்ன புக் பன்னது, பெங்களூர் தமிழ்ல எல்லாரையும் பேச வச்சது.

மணிமாறன்கிட்ட தனி முத்திரையா இந்த படத்துல என் கண்ணுக்கு எதுவும் படலை, வெற்றிமாறன் இல்லாம நீங்க தனியா படம் பன்னாதான் உங்க அடையாளம் வெளிய தெரிய வரும்.

மொத்தமா சொல்லனும்னா படம் பெருசா போரடிக்கலை, தமிழ் ல நான்லினியர் படங்கள் கம்மி, உற்சாக படுத்துவோம், பாட்டு நல்லாருக்கு, தியேட்டருக்கு போய் பார்க்கலாம், அதுக்குனு 100 ரூபாய்க்கு மேலலாம் டிக்கெட் வாங்கி பார்க்காதிங்க.

கருத்துக்களை சொல்லிட்டு போங்கப்பா...

Monday, 8 April 2013

Delhi Belly விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், என்னடா இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு இந்த படத்துக்கு விமர்சனம் போட்டுருக்கேன்னு யோசிக்கலாம், நானும் சேட்டை படம் வந்ததும் பார்க்கலாம்னு தான் இருந்தேன், நம்ம சகப் பதிவர்கள்லாம் சேர்ந்து படத்தை கழுவி ஊத்துனதுக்கு அப்புறம் எதுக்கு செலவு பன்னி பார்க்கனும்னு தோணிருச்சு, ஆனா சேட்டைய ஓட்டுன எல்லாரும் அதோட ஒரிஜினலான இந்த படத்தை ரொம்ப புகழ்ந்துருந்தாங்க, ஏற்கனவே வாங்கி வச்சுருந்த டிவிடி ய எடுத்து போட்டு இன்னைக்குத்தான் பார்த்தேன். அதான்.

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/8/82/Delhi_belly_poster.jpg/220px-Delhi_belly_poster.jpg

படம் உண்மையிலேயே செம என்டர்டெய்னர், ஜெய்சங்கர் காலத்து கதைதான், அதுல வர்ர நாகேஷ், தேங்காய் சீனிவாசன் ரோல்லதான் சந்தானம், பிரேம்ஜிக்கு கொடுத்துருப்பாங்கனு நினைக்கறேன். அது என்னவோ ஷேவ் கூட பன்னாம, அழுக்கு ரூம்ல இருக்க பையனை தேடி வந்து பனக்கார பொன்னு லவ் பன்னுதுனு நிறைய படத்துல காட்டுனாலும் அதுல எனக்கு உடன்பாடு இல்லை. ஏன்னா நான், என் ஃப்ரென்ட்ஸ்லாம் காலகாலமா அப்படித்தான் இருக்கோம், யாரும் திரும்பி கூட பார்க்கறது இல்லையே.

 http://photogallery.indiatimes.com/parties/mumbai/success-bash-delhi-belly/photo/9134207/Success-Bash-Delhi-Belly.jpg

படத்துல 2 ஹீரோயின், வடக்க சென்சார் போர்ட்லாம் இருக்கா? இல்லையானே தெரியலை, பாத்ரூம் வந்தாலாம் கெட்ட வார்த்தைலாம் திட்டிக்கறாங்க, ஆனா ஒன்னு சொல்லிக்கறேன். படத்துல வர்ர எந்த கேரக்டரும் நடிச்ச மாதிரியே தெரியாம இயல்பா செஞ்சுருக்காங்க, காட்சி அமைப்பு அந்த மாதிரி, ரொம்ப சீரியசான சீன்னு எதுவும் இல்லை.

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQq9ZvksNF169SwOfm2LU_UBGH4RVV0psxAd8qfajvJlENyLqdC1w

ஒரு ஹீரோ, பத்திரிக்கைக்காரராம், அவரோட போட்டோகிராஃபர், ஒரு கார்ட்டுனிஸ்ட் 3 பேரும் ஒன்னா தங்கி இருக்காங்க, ஹீரோவ எதுக்கோ ஒரு பனக்கார ஃபிகர் காதலிக்குது, புதுசா துணிமணிலாம் எடுத்து கொடுத்து கார்லாம் வாங்கி தருது.

ஒரு வைரக்கடத்தல் கும்பல், கடத்தற வைரம் தவறுதலா ஹீரோ குருப்கிட்ட ஒவ்வொருத்தர் கைலயும் மாறி மாறி சுத்திகிட்டு இருக்கு, தேடிகிட்டு கடத்தல் கும்பல் அவங்ககிட்ட வருது. 

இன்னொரு ஹீரோயின், விவாகரத்தானவங்க, ஆனாலும் நல்லாதான் இருக்காங்க, ஹீரோ கூட சுத்தறாங்க, ஹீரோ தன்னோட காதலியோட 'அது' பன்னும் போது போன் பன்னி வரச் சொல்லி தண்ணியடிக்க சொல்ற கேரக்டர்.

இன்னொரு முக்கியமான ரோல், ஹவுஸ் ஓனர், விபச்சாரி கூட சேர்த்து இவரை போட்டோ எடுத்து மிரட்டறப்ப இவர் கொடுக்கற ரியாக்சன் செம்ம, படத்துலயே எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் வில்லன் தான், சர்ப்ரைஸ் ஆ ப்ர்த்டேக்கு வந்துருக்கோம்னு பொய் சொல்றதுல ஆரம்பிச்சு, ஹீரோயின் தலைல பென்சில் அ வச்சு துப்பாக்கினு பயமுறுத்தி 1,2,3 சொல்லி விளையாடறதுலயும் சிக்ஸர் அடிக்கறார்.

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRWb0x_OG5APXDSrCFiWFh8aCMw3GMpsTpus0ZnBPTchlK5g51O

அடுத்து அந்த கார்ட்டூனிஸ்ட், அவரோட லவ்வரோட மேரேஜ்ல ஒரு வசனத்தை சொல்லி கல்யாணத்தை நிப்பாட்டி ஒரு பாட்டு பாடுவார், மிஸ் பன்னாம பாருங்க, செமயா இருக்கு.

இவங்க எல்லாரையும் வச்சு, அந்த வைரம் கைமாறிகிட்ட இருக்கறதை ரொம்ப வேகமா விறுவிறுப்பா சொல்லி இருக்காங்க, டைம்பாஸ்க்கு படம் பார்க்கறிங்களா? கண்டிப்பா உங்களுக்கு இந்த படம் பிடிக்கும்.

http://4.bp.blogspot.com/-sBow14UUkEY/Te6Jyb_ie1I/AAAAAAAAAWw/zm7UyznRPkA/s1600/delhi+belly4.jpg

நெஞ்சுல நிக்கற மாதிரி ஒரு கிளைமாக்ஸ், ஹீரோயின் குட்பை சொல்லிட்டு காரை ரிவர்ஸ் எடுத்துட்டு போறப்ப ஹீரோ அப்ப்டியே காருக்குள்ள பாய்ஞ்சு லிப் கிஸ் அடிப்பார் கார் ஓட ஓட, எப்படித்தான் யோசிக்கறாங்களோ. படத்துல 90% வசனம் ஆங்கிலம் தான், அதனால தெளிவா படம் புரியுது. தமிழ்ல எப்படி எடுத்துருக்காங்கனு தெரியலை.

ஆனாலும் படம் செம ஸ்பீட், ஆரம்பிச்சதும் தெரியலை, முடியறதும் தெரியலை, கதையே இல்லாம கருத்து சொல்லாம அவ்வளவு ஏன் சண்டையே இல்லாம ஒரு படம் வேகமா போகுதுங்க, இந்திய சினிமால எனக்கு இந்த மாதிரி படம் இதுதான் முதல் தடவை, உங்களுக்கு தெரிஞ்சு வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க, நான் பார்க்கறேன்.

படத்தின் ட்ரெய்லர்


விமர்சனம் குறித்த உங்கள் கருத்துக்கள் வரவேற்க படுகின்றன.

சாரல் காலம் 11

சாரல் காலம் - முந்தின பாகங்கள்

#0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 /#7 /#8 / #9 / #10 / #11 / #12 / 13 / #14 / !5

-----------------------------------------------------------------------------------------------------------------
ஹரி மனதில் விரைவாக சாப்பிட்டுவிட்டு வந்தால்தான் காயத்ரியை பார்க்க முடியும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் அதை அவனால் செயல்படுத்த முடியவில்லை. காரணம் உடன் இருக்கும் நண்பர்கள் அவனிடம் பேச்சு கொடுத்து கொண்டே இருந்தார்கள்.

அதுவும் இல்லாமல் எந்த சூழ்நிலையிலும் ஹரி ஆகட்டும், அவனது நண்பர்கள் ஆகட்டும் அருமையான சாப்பாடு கிடைத்தால் எந்த காரணத்திற்காகவும் விட்டுவிட மாட்டார்கள்.

அன்பு "டேய் பாலா, இதுவரைக்கும் இந்த கல்யாணத்துல மொத்தமா எத்தனை செலக்ட் பன்னிருக்க?"

பாலா "12 இருக்கும், எதுக்கு?"

அன்பு "இல்லை, நீயா பார்த்து எனக்கு ஒத்து போற மாதிரி ஒன்ன தள்ளி விடேன்"

பாலா "எந்த மாதிரி எதிர்பார்க்கற?"

அன்பு "ஓரளவுக்கு பார்க்க நல்லாயிருக்கனும், பேசுனா நல்லா பேசனும் அவ்ளோதான்"

பாலா "சரி மச்சி, பார்த்துக்கலாம், விடு"

கன்னன் "அப்படியே எனக்கேத்த மாதிரி ஒன்னு"

பாலா "உனக்கேத்த மாதிரினா எப்படி?"

கன்னன் "கொஞ்சம் அழகா, இதுவரைக்கும் எந்த பசங்க கூடவும் பேசாம, என்னையும் என் குடும்பத்தையும் அனுசரிச்சு போற மதிரி?"

பாலா "டேய் நிறுத்து, இப்ப எதுக்கு இப்படி கன்டிஷன் போடற? பொன்ன காதலிக்கத்தானே கேட்கற?"

கன்னன் "காதலிச்சு கல்யாணம் பன்னத்தான், அப்படியே கொஞ்சம் வசதியான பொன்னா பாருடா"

பாலா "எதுக்கு வசதியான பொன்னு?"

கன்னன் "அப்பதானே நிறைய வரதட்சனை கொடுப்பாங்க?"

பாலா "டேய் கன்னா, மனசாட்சிய தொட்டு சொல்லு, என்னை பார்த்தா கல்யாண புரோக்கர் மாதிரியா தெரியுது?"

கன்னன் "இல்லைடா, ஏன் அப்படி கேட்கற?"

பாலா "அப்பறம் என்ன கருமத்துக்குடா என்னை உனக்கு பொன்னு பார்க்க சொல்ற?"

கன்னன் "அன்புக்கு மட்டும் பார்த்து தரேன்னு சொன்ன?"

பாலா "அது காதலிக்க"

கன்னன் "நானும் காதலிச்சு கல்யாணம் பன்றதுக்குதானே கேட்கறேன்"

பாலா "டேய் காதலுக்கும் கல்யாணத்துக்கும் என்னடா சம்பந்தம்?"

கன்னன் "ஏன்டா, கல்யாணம் பன்றதுக்குதானே காதலிக்கறாங்க?"

பாலா "இந்த நினைப்பு இருக்க வரைக்கும் எவளும் உனக்கு சிக்க மாட்டா, நினைப்ப மாத்திக்க"

கன்னன் "அப்ப எதுக்கு காதல்?"

பாலா "பாடத்துல என்னைக்காவது இப்படி சந்தேகம் கேட்டுருக்கியா? மூடிகிட்டு சாப்பிடு"

கன்னனும் பாலாவும் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது அவன் இலையில் இருந்து அவனுக்கு தெரியாமல் சில பதார்த்தங்களை மாதேஸ் எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.

கன்னன் பேசி முடித்துவிட்டு கவனித்து பார்க்கும் பொழுதுதான் உணரமுடிந்தது. அவனுக்கு சந்தேகம் எதுவுமில்லை, உறுதியாக மாதேஸ் தான் எடுத்திருப்பான் என்று அவனுக்கு தெரியும்.

கன்னன் அவனை முறைத்ததும் மாதேஸ் சிரித்து கொண்டே சொன்னான்.

"டேய் கன்னா, உன் இலையில இருக்கறதையே உன்னால காப்பாத்த முடியலைன்ன நீயெல்லாம் நாளைக்கு கல்யாணம் பன்னி?"

கன்னன் "இந்த பொழப்புக்கு போய் பிச்சை எடுக்கலாம்"

மாதேஸ் "போய் எடு, யார் வேண்டாம்னு சொன்னா?"

ஹரி எப்பொழுதும் பொறுமையாகத்தான் சாப்பிடுவான். ஆனால் இப்பொழுது காயத்ரியை பார்க்க வேண்டும் என்பதற்காக விரைவாக சாப்பிட்டான்.

நன்றாக கவனிக்க வேண்டும். விரைவாக சாப்பிட்டானே ஒழிய சாப்பிடாமல் எழுவதில் நாட்டமில்லை. தவிர சாப்பிடாமல் எழுந்தால் தான் தோழர்களுக்கு சந்தேகம் வரும்.

ஆனால் என்னதான் விரைவாக சாப்பிட்டாலும் கல்யாண வீட்டார் இன்னும் கொஞ்சம் என்று திரும்ப பரிமாறும் பொழுது இவனால் மறுக்கு முடியவில்லை, ஏனெனில் மறுத்து பழக்கமில்லை. ஆதலால் அனைவரும் உண்டு முடிக்கும் பொழுதுதான் இவனும் முடித்தான்.

இவர்களுக்கு முன்பாகவே பெண்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றாகி விட்டது. ஹரியும் நண்பர்களும் சாப்பிட்டு வெளியே வரும் போதுதான் ஐஸ்கிரிம் கொடுத்து கொண்டிருப்பதை கவனித்தார்கள்.

மாதேஸ் அனைவருக்கும் முன்பாகவே சென்று ஒரு அட்டைப்பெட்டி முழுவதையும் எடுத்து வந்துவிட்டான். இது போல யாராலும் முடியாத வேலையை செய்து முடிக்க மாதேசால்தான் முடியும்.

தனியாக எடுத்து வந்து நண்பர்கள் அனைவரும் அவரவர்கள் விருப்பம் போல் பங்கு பிரித்து கொண்டார்கள். ஹரி காயத்ரி நினைவே வராமல் அவன் பங்குக்கு 4 எடுத்து வைத்து கொண்டான்.

சூர்யாவும் அவன் பங்கினை எடுத்து கொண்டு அனைவரும் சிரித்து கொண்டே உண்பதை யாருமே தவறாக நினைக்கவில்லை. எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்து கொள்ளும் இவர்களது சுபாவம் கூட்டத்தில் சிலரால் ரசிக்கப்பட்டது, அவர்களுல் தீபாவும் ஒருத்தி.

பாலா ரகசியமாக 2 கப்பினை எடுத்து கொண்டு சென்று வனிதாவிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்க சொன்னான், ஆனால் பெண்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு காலி செய்தனர். வனிதாவுடன் ஜோடியாக சாப்பிட திட்டமிட்டுருந்த பாலா கடுப்பாகி பஞ்சாயத்திற்கு மாதேசை அழைத்து வந்து நஷ்ட ஈடு கேட்டு, பின் மாதேஸ் திட்டி அழைத்து வந்தான்.

அன்புதான் மற்றவர்களை போல் இல்லாமல் எதிர்காலத்தை மனதில் வைத்து இரவுக்கு சரக்கு உண்டா இல்லையா என் கராராக கேட்டான், பாபு என்றொரு ஜீவன் மூலம் வனிதாவி மாமன் மகன் அதற்கான ஏற்பாட்டை செய்வதாக தெரிய வந்தது.உடனே பாலா 

"அப்ப எனக்கு க்ளைமாக்ஸ் தெரிஞ்சுருச்சு"

அன்பு "என்ன க்ளைமாக்ஸ்?"

ஹரி "அதான்டா , எப்ப வனிதா லவ் மேட்டர் வீட்டுக்கு தெரியுதோ அப்ப இந்த மாமா பையன் தான் பலிகடா"

பாபு "எப்படி சொல்ற?'

பாலா "இதுக்கு தான்டா இவனுங்களை சோறு போட்டு வளர்க்கறாங்க"

அந்த பக்கம் தீபாவிற்கோ இப்பொழுது பெரிய கவலை.ஒரு வேளை சூர்யாவிற்கும் குடிப்பழக்கம் இருக்குமோ என்று.

மனதில் ஒரு பக்கம்

 "அவன் குருப் அ பார், கண்டிப்பா அவனும் குடிப்பான்"

மறுபக்கம் "சேச்சே இருக்கவே இருக்காது. இரத்தம் அடிக்கடி கொடுக்கறார். அவர் குடிக்க மாட்டார்"

நேரம் ஆக ஆக கூட்டம் குறைய துவங்கி, அனைவரும் அவரவர்கள் தங்கி இருந்த அறைக்கு செல்ல துவங்கினர்.பெண்கள் அவரவர் தோழிகளுடன் அடுத்த நாள் கட்ட போகும் புடவையை பற்றி விவாதித்து கொண்டிருந்தனர். தீபாவிற்குத்தான் யாரிடமும் பேச பிடிக்கவில்லை.

இன்றுதான் அவளுள் காதல் மலர்வதை அவள் உணர்ந்திருக்கிறாள். அவ்வளவு சீக்கிரம் உறக்கம் வந்துவிடுமா? என்ன?

வீட்டின் ஒரு மூலையில் ஒரு கூட்டம் சீட்டு விளையாண்டு கொண்டிருந்தது. சிலர் தொடர்ந்து அலங்கார வேலை செய்து கொண்டே இருந்தனர்.

தீபாவிற்கு தனது உணர்வுகளை யாரிடமாவது சொல்லி மகிழ வேண்டும் என்று ஆவலாக இருந்தது. யாரிடம் என்று திரும்பி பார்த்தாள்.

சித்ரா - அழகுப் பிசாசு

கௌசல்யா - அறிவுரை செய்துவிட்டு, கேட்கவில்லை என்றால் வீட்டிற்கு போன் செய்து சொல்லி விடுவாள்.

வனிதா - சிரித்து விடுவாள்

காயத்ரி - அப்படியா என்று கேட்டு வீடு போய் விடுவாள்

ஜீனியர் - சினிமா கதை போல் கேட்டுவிட்டு போய் விடுவாள்.

சரி நமக்குள்ளேயே வைத்து கொண்டுவிட வேண்டியதுதான், இல்லையென்றால் இதற்கேற்றார் போல் ஒருத்தியிடம் தோழமை வைத்து கொள்ள வேண்டும்.

அதற்குள் மற்றொரு பக்கம் சுதி ஏற துவங்கியது. அனைவரும் 2 ரவுண்ட் முடித்திருக்க, ஹரி மட்டும் முதல் ரவுண்டையே கையில் பிடித்து கொண்டு வெறும் சிகரெட்டை பிடித்து கொண்டிருந்தான்.

சூர்யா காதோரமாக ஹரியிடம் கேட்டான். "மச்சான், பசங்ககிட்ட சொல்லட்டுமா?"

ஹரி "இப்ப வேணாம்டா"

பாலா "அங்க என்னடா குசுகுசு?"

மாதேஸ் "அவனுங்க எதைடா நம்மகிட்ட சொல்றானுங்க, இன்னைக்கு கூட ஹரி ஏதோ ஒரு ஜீனியர் பொன்னுக்கு நூல் விடறான், நம்மகிட்ட சொல்லவா போறான்?"

சூர்யா "நமக்கு வேலை வைக்காம இவனுங்களே கண்டுபிடிச்சுட்டானுங்களே"

பாலா "நீ சும்மா இருடா, என் மாப்பு என்கிட்ட சொல்லுவான், சொல்லு மாப்பு, தங்கச்சி யாருடா?"

ஹரி "டேய்....? அப்படிலாம் எதுவும் இல்லைடா"

மாதேஸ் "அப்புறம் எதுக்கு ரொம்ப நேரம் கிளாஸ் அ கையில வச்சு உத்து பார்த்துக்கிட்டு இருக்க?"

ஹரி "அது ஃபுல் ஆ சாப்பிட்டதால வாந்தி வர மாதிரி இருக்குடா"

அன்பு "டேய் அவனை விடுங்கடா, அவனா சொன்னா சொல்லட்டும், இல்லன்னா போகட்டும், ஹரி சந்தோஷமா இருக்கியா?"

ஹரி "ஏண்டா கேட்கற?'

அன்பு "கேட்டதுக்கு பதில் சொல்லுடா?"

ஹரி "சந்தோஷமா இருக்கேண்டா"

அன்பு "அது போதும்"

கன்னன்  "டேய் நீங்க எதை பத்தி பேசறிங்கனு எனக்கு புரியலை, கொஞ்சம் தெளிவா எடுத்து சொல்லுங்க"

பாலா "டேய் கன்னனுக்கு தெளிவு பன்னனுமான்டா, பன்னலாமா?"

ஹரி "இந்தாங்கடா, என்னோடதயும் நீங்களே சாப்பிட்டு ஆரம்பிங்க, வந்துடறேன். சூர்யா ஒரு நிமிசம் வா"

இருவரும் வீட்டின் வெளியே ஒரு மூலையில் போய் நின்று கொண்டு ரகசியமாக தம் பத்தவைத்து கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.

தீபா தூக்கம் வராமல் அறைக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தாள். யோசிக்க யோசிக்க அவளுள் காதலும் மகிழ்ச்சியும் பெருகிக் கொண்டே போனது.

இவள் நடப்பது மற்றவர்களுக்கு கேட்க கூடாதென்று போய் ஜன்னலருகே அமர்ந்து கொண்டாள்.

சூர்யா "மச்சான், உன்னை அவ புரிஞ்சுக்குவானு நம்பறியா?"

ஹரி "புரிய வைப்பேன்னு நம்பறேன்"

தீபாவிற்கு சூர்யாவை பார்க்கவேண்டும் போல இருந்தது. ஜன்னலுக்கு அந்த பக்கம் தான் ஹரியுடன் பேசிக் கொண்டு சூர்யா நிற்கிறான், ஆனால் இருளில் முகம் தெரியவில்லை.

தீபாவை போய் அழைத்து வந்து படுக்க சொல்லி சொல்ல வனிதா காயத்ரியை அனுப்பினாள்.

ஹரி "மச்சான், 2 பேரும் பொருத்தமா இருக்கோமா?"

சூர்யா "perfect ஆ" (மனதில் "கடவுளே, என்னை மன்னிச்சுரு")

ஹரி "எனக்கு அவளை பார்க்கனும் போல இருக்கு"

காயத்ரி வந்து தீபாவை "என்னடி பன்ற, வந்து படு வா" என்று கூப்பிட, சத்தம் கேட்டு தனது செல்லில் டார்ச் அடித்து பார்த்த ஹரிக்கு காயத்ரியை பார்த்த இன்ப அதிர்ச்சி, யாரது டார்ச்சடிப்பது என அறையில் லைட்டை போட்டு பார்த்த தீபாவிற்கு சூர்யாவை பார்த்ததும் இருட்டிலும் முகம் பிரகாசித்தது.

http://almostno1.com/wp-content/uploads/2013/02/swathi-1.jpg

சூர்யா மெதுவாக கூறினான்.

"கடவுளே, இன்னும் என்னென்னெ காமெடி காதல்ங்கற பேர்ல நடக்க போகுதோ....?"

---------------------------------------------------------------------------------------தொடரும்-----------


Sunday, 7 April 2013

சாரல் காலம் 10

சாரல் காலம் - முந்தின பாகங்கள்

#0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 /#7 /#8 / #9 / #10

-----------------------------------------------------------------------------------------------------------------
ஹரியும் நண்பர்களும் அந்த பெண்களுக்கு கொஞ்சம் தொலைவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஹரிக்கு தான் காயத்ரியை பார்த்தால் நண்பர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று தெரியும். ஆனால் காயத்ரி ஒருமுறையாவது தன்னை திரும்பி பார்க்க மாட்டாளா என்ற ஏக்கம் அவனையும் மீறி அடிக்கடி பார்க்க வைத்தது.

ஹரி அடிக்கடி காயத்ரியை மாதேசும் பாலாவும் கவனித்து கொண்டுதான் இருந்தார்கள். இருவரும் ரகசியமாக பேசிக் கொண்டார்கள்.

பாலா "டேய் மாப்பிள்ளை, ஹரி என்னடா அந்த பொன்ன அப்படி பார்க்குறான்"

மாதேஸ் "எப்படி?"

பாலா "2 நாளா சாப்பிடாதவன் பரோட்டா கடையை பார்க்கற மாதிரி, ரொம்ப சைட் அடிக்கறான்டா"

மாதேஸ் "எனக்கென்னமோ இதை பார்த்தா சைட் அடிக்கற மாதிரி தெரியலை. அதையும் தாண்டி ஏதோ நடந்துகிட்டு இருக்கு"

பாலா "எதை வச்சு சொல்ற?"

மாதேஸ் "சாதாரணமா சைட் அடிக்கறவனா இருந்தா அந்த பொண்ண ரசிச்சு வர்ணிச்சு நம்மகிட்ட பேசுவானே, இவன் பார்க்கற பார்வைல ஏதோ திருட்டுதனம் தெரியுது"

பாலா "இந்த விசயம் சூர்யாவுக்கு தெரிஞ்சுருக்கும் தானே?"

மாதேஸ் "சத்தியமா தெரிஞ்சுருக்கும், அதை என்னானு நைட் பஞ்சாயத்துல பேசிக்கலாம்"

ஹரி அடிக்கடி காயத்ரியை அமர்ந்திருக்கும் இடத்தை அடிக்கடி கவனிப்பதை பலரும் கவனித்தனர், அதில் சித்ராவும் ஒருத்தி.

சித்ராவை பற்றி கூற வேண்டுமென்றால் , நல்ல அழகி. ஆனால் அந்த அழகை மற்றவர்கள் ரசிக்க விடாமல் வெறுக்க வைப்பது அவளிடம் உள்ள அழகி என்ற கர்வம்.

அவளை சொல்லியும் குற்றமில்லை. கல்லூரிக்கு வந்த புதிதில் சும்மா இல்லாமல் ஜீனியர் வரட்டும் என்று காத்திருந்த அனைத்து சீனியர் ரோமியோக்களும் இவளிடமே காதலை சொல்லியதால் வந்த வினை.

சித்ரா யாரிடமும் மயங்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் வளர்ந்த கர்வம் அவளிடம் காதலை நெருங்காமல் பார்த்து கொண்டது.

சித்ராவிற்கு ஹரி அடிக்கடி கவனிப்பது தன்னை தான் என்ற எண்ணம் தானாகவே வந்தது. ஒரு யூகத்திற்காக கூட மற்றவர்களை பார்க்கிறாநா என்ற எண்ணம் தோன்றவேயில்லை.

முதல் பந்தியில் சாப்பிட்டவர்கள் அனைவரும் வெளியேற ஆரம்பித்தனர். கன்னனுக்கு அவர்களை பார்க்கும் போது பசி அதிகமாக எடுத்தது.

கன்னன் "டேய் வாங்கடா, சாப்பிட போலாம்"

மாதேஸ் "என்ன அவசரம்?"

கன்னன் "உங்களுக்கெல்லாம் பசிக்கலியா?"

பாலா "கன்னா, கல்யான சாப்பாடு சாப்பிட போறோம்னு 2 வேளை வயித்த காய போட்டுட்டு வந்தா இப்படித்தான் பசிக்கும்"

கன்னன் "மதியம் வழில சாப்பிடலாம்னு சொன்னதுக்கு நீங்கதான்டா வயிறு கெட்டு போயிடும்னு டீ மட்டும் வாங்கி கொடுத்திங்க. இப்ப என்னடா என்னை சொல்றிங்க?"

மாதேஸ் "கன்னா, சொல்றவன் 1000 சொல்லுவான், உனக்கு அறிவு இல்லை? இந்த சின்ன விசயத்துக்கு உன்னால முடிவு பன்ன முடியலையே, நாளைக்கு உனக்குலாம் கல்யாணம் ஆகி?"

கன்னன் "டேய் ஏண்டா, எதுக்கெடுத்தாலும் அதையே இழுக்கறிங்க?"

இவர்கள் பேசுவதை ஹரி கவனிக்கவேயில்லை. ஆனால் அவர்கள் ஏதாவது சொல்லி சிரிக்க ஆரம்பித்தால் இவனும் புரிந்த மாதிரி கூட சேர்ந்து சிரித்தான். ஆனால் இவனின் பார்வை, கவனம், எண்ணம் முழுவதும் காயத்ரியை சுற்றி இருந்தது.

இவன் தனியே அமைதியாக இருந்தால் மாட்டிக் கொள்வான் என்று சூர்யாவும் அவனுடன் சேர்ந்து அவனை போலவே ரியாக்சன் கொடுத்து கொண்டிருந்தான். ஆனால் அவனது நண்பர்கள் இதை கவனியாமல் இல்லை.

தீபாவின் நிலையோ வேறு. இவர்கள் சிரிக்கும் சத்தம் கேட்கும் போதெல்லாம் சூர்யாவை பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகி விடும். ஆனால் வெட்கமும் மற்றவர்கள் பார்த்து விடுவார்களோ என்ற பயமும் அவளை தடுத்தது.

சித்ராவிற்கோ இவர்கள் சிரிப்பது அவளையும் அவள் தோழிகளையும் திரும்பி பார்க்க வைப்பதற்காகத்தான் என தோன்றியது. அதனால் அவர்களின் சிரிப்பு சத்தம் கேட்கும் போதெல்லாம் இவள் எரிச்சலடைந்தாள்.

முதல் பந்தி முடிந்ததை சூர்யா கவனித்து விட்டு ஹரியின் காதருகே சென்று கூறினான்.

"டேய் வா சாப்பிட போகலாம், அந்த பொன்னுங்க போன பின்னாடி போனா நல்லாருக்காது"

ஹரி "சரிடா"

சூர்யா மற்றவர்கள் அனைவரையும் பார்த்து சாப்பிட போலாமென்று அழைத்தான். சரியென்று அனைவரும் கிளம்பும் போது பாலா வனிதாவிடம் சென்று சாப்பிடவில்லையா என விசாரித்து விட்டு மாதேஸ் முறைத்ததை பார்த்து திரும்பி வந்தான்.

இப்படி நடந்ததும் பாலா மற்ற பெண்களை கண்களால் அளவெடுத்ததும் சித்ராவிற்கு எரிச்சலை தந்தது.மனதிற்குள் திட்டி கொண்டே சாப்பிட போனாள்.

மாதேஸ் "டேய் பாலா, ஏண்டா எப்ப பார்த்தாலும் வனிதாவ பிடிச்சுகிட்டு சுத்தற?"

பாலா " நான் ஒன்னும் அவளுக்காக போகலை?"

மாதேஸ் "பின்ன?"

பாலா " கூட இருக்கற பொன்னுங்கள்ள ஏதாவது செட் ஆகுமானு பார்க்க போனேன்"

மாதேஸ் "எதுக்கு?"

பாலா "காதலிக்கத்தான்"

கன்னன் "அப்படியே எனக்கு ஒன்னுடா"

பாலா "பிஞ்சிரும்டா"

மாதேஸ் "சரி விடுறா, எதை செலக்ட் பன்ன?"

பாலா "எதையும் தனியா பிரிச்சு பார்க்க முடியலை மச்சி"

மாதேஸ் "அதனால?"

பாலா "ஆறையுமே லிஸ்ட்ல சேர்த்துகிட்டேன்"

மாதேஸ் "ஆறுனா வனிதாவுமா?"

பாலா "ஆமா, அவளுக்கென்ன குறைச்சல்?"

மாதேஸ் "ஏன்டா, அடுத்தவன் ஆளுக்கு ஆசைப்படற?"

அன்பு "டேய் விடுங்கடா, சாப்பிட வந்துட்டு எதைஎதையோ பேசிகிட்டு?"

ஹரி காயத்ரி வருகிறாளா என்று அடிக்கடி கவனித்து கொண்டுதான் உள்ளே வந்தான், அவனுடைய நல்ல நேரம் சித்ரா மூலம் வேலை செய்தது.

ஹரி எதிர்பார்த்தது என்னவோ காயத்ரிக்கு நேர் எதிரில் அமர்ந்து அவளை பார்த்துக்கொண்டே சாப்பிட வேண்டும் என்பதுதான். ஆனால் அதிர்ஷ்டம் அவனை ஏமாற்றி விட்டது. இவர்கள் அமர்ந்தவுடன் பக்கத்தில் ஒரு தம்பதிகள் அமர்ந்தனர். அவர்களை தொடர்ந்தார் போல் பெண்கள் அமர்ந்தனர்.

கொடுமை என்னவென்றால் ஹரி இந்த கடைசி என்றால் காயத்ரி அந்த கடைசி. தீபாவிற்கு அதிர்ஷ்டம் அடித்திருந்தது.

தீபா, தம்பதிகள், சூர்யா என்ற வரிசையின் படி அருகருகேதான் அமர்ந்திருந்தார்கள். அதனால் தீபாவினால் சூர்யாவின் குரலையும் சிரிப்பையும் நன்கு கேட்க முடிந்தது. அவ்வப்போது எட்டி அவனது முகத்தை அரை வினாடி பார்ப்பாள்.

 http://3.bp.blogspot.com/_0hrPgGO7E44/TTKbYch9s3I/AAAAAAAACGo/urMuimEhmg8/s400/Rowdila%2BCharitra%2BMovie%2Bstills%2B%25285%2529.JPG

ஏனென்றால் தீபா எட்டி பார்த்தால், வனிதாவை பார்ப்பதற்காக குனிந்த படி எட்டி எட்டி பார்த்து கொண்டிருக்கும் பாலாவின் கண்கள் அவளை தடுத்தது.
பாலாவிற்கு ஒருவேளை தீபா தன்னைத்தான் பார்க்கிறாளோ என்ற எண்ணம் வந்தது.

----------------------------------------------------------------------------------தொடரும்------------