சாரல் காலம் 11

சாரல் காலம் - முந்தின பாகங்கள்

#0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 /#7 /#8 / #9 / #10 / #11 / #12 / 13 / #14 / !5

-----------------------------------------------------------------------------------------------------------------
ஹரி மனதில் விரைவாக சாப்பிட்டுவிட்டு வந்தால்தான் காயத்ரியை பார்க்க முடியும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் அதை அவனால் செயல்படுத்த முடியவில்லை. காரணம் உடன் இருக்கும் நண்பர்கள் அவனிடம் பேச்சு கொடுத்து கொண்டே இருந்தார்கள்.

அதுவும் இல்லாமல் எந்த சூழ்நிலையிலும் ஹரி ஆகட்டும், அவனது நண்பர்கள் ஆகட்டும் அருமையான சாப்பாடு கிடைத்தால் எந்த காரணத்திற்காகவும் விட்டுவிட மாட்டார்கள்.

அன்பு "டேய் பாலா, இதுவரைக்கும் இந்த கல்யாணத்துல மொத்தமா எத்தனை செலக்ட் பன்னிருக்க?"

பாலா "12 இருக்கும், எதுக்கு?"

அன்பு "இல்லை, நீயா பார்த்து எனக்கு ஒத்து போற மாதிரி ஒன்ன தள்ளி விடேன்"

பாலா "எந்த மாதிரி எதிர்பார்க்கற?"

அன்பு "ஓரளவுக்கு பார்க்க நல்லாயிருக்கனும், பேசுனா நல்லா பேசனும் அவ்ளோதான்"

பாலா "சரி மச்சி, பார்த்துக்கலாம், விடு"

கன்னன் "அப்படியே எனக்கேத்த மாதிரி ஒன்னு"

பாலா "உனக்கேத்த மாதிரினா எப்படி?"

கன்னன் "கொஞ்சம் அழகா, இதுவரைக்கும் எந்த பசங்க கூடவும் பேசாம, என்னையும் என் குடும்பத்தையும் அனுசரிச்சு போற மதிரி?"

பாலா "டேய் நிறுத்து, இப்ப எதுக்கு இப்படி கன்டிஷன் போடற? பொன்ன காதலிக்கத்தானே கேட்கற?"

கன்னன் "காதலிச்சு கல்யாணம் பன்னத்தான், அப்படியே கொஞ்சம் வசதியான பொன்னா பாருடா"

பாலா "எதுக்கு வசதியான பொன்னு?"

கன்னன் "அப்பதானே நிறைய வரதட்சனை கொடுப்பாங்க?"

பாலா "டேய் கன்னா, மனசாட்சிய தொட்டு சொல்லு, என்னை பார்த்தா கல்யாண புரோக்கர் மாதிரியா தெரியுது?"

கன்னன் "இல்லைடா, ஏன் அப்படி கேட்கற?"

பாலா "அப்பறம் என்ன கருமத்துக்குடா என்னை உனக்கு பொன்னு பார்க்க சொல்ற?"

கன்னன் "அன்புக்கு மட்டும் பார்த்து தரேன்னு சொன்ன?"

பாலா "அது காதலிக்க"

கன்னன் "நானும் காதலிச்சு கல்யாணம் பன்றதுக்குதானே கேட்கறேன்"

பாலா "டேய் காதலுக்கும் கல்யாணத்துக்கும் என்னடா சம்பந்தம்?"

கன்னன் "ஏன்டா, கல்யாணம் பன்றதுக்குதானே காதலிக்கறாங்க?"

பாலா "இந்த நினைப்பு இருக்க வரைக்கும் எவளும் உனக்கு சிக்க மாட்டா, நினைப்ப மாத்திக்க"

கன்னன் "அப்ப எதுக்கு காதல்?"

பாலா "பாடத்துல என்னைக்காவது இப்படி சந்தேகம் கேட்டுருக்கியா? மூடிகிட்டு சாப்பிடு"

கன்னனும் பாலாவும் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது அவன் இலையில் இருந்து அவனுக்கு தெரியாமல் சில பதார்த்தங்களை மாதேஸ் எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.

கன்னன் பேசி முடித்துவிட்டு கவனித்து பார்க்கும் பொழுதுதான் உணரமுடிந்தது. அவனுக்கு சந்தேகம் எதுவுமில்லை, உறுதியாக மாதேஸ் தான் எடுத்திருப்பான் என்று அவனுக்கு தெரியும்.

கன்னன் அவனை முறைத்ததும் மாதேஸ் சிரித்து கொண்டே சொன்னான்.

"டேய் கன்னா, உன் இலையில இருக்கறதையே உன்னால காப்பாத்த முடியலைன்ன நீயெல்லாம் நாளைக்கு கல்யாணம் பன்னி?"

கன்னன் "இந்த பொழப்புக்கு போய் பிச்சை எடுக்கலாம்"

மாதேஸ் "போய் எடு, யார் வேண்டாம்னு சொன்னா?"

ஹரி எப்பொழுதும் பொறுமையாகத்தான் சாப்பிடுவான். ஆனால் இப்பொழுது காயத்ரியை பார்க்க வேண்டும் என்பதற்காக விரைவாக சாப்பிட்டான்.

நன்றாக கவனிக்க வேண்டும். விரைவாக சாப்பிட்டானே ஒழிய சாப்பிடாமல் எழுவதில் நாட்டமில்லை. தவிர சாப்பிடாமல் எழுந்தால் தான் தோழர்களுக்கு சந்தேகம் வரும்.

ஆனால் என்னதான் விரைவாக சாப்பிட்டாலும் கல்யாண வீட்டார் இன்னும் கொஞ்சம் என்று திரும்ப பரிமாறும் பொழுது இவனால் மறுக்கு முடியவில்லை, ஏனெனில் மறுத்து பழக்கமில்லை. ஆதலால் அனைவரும் உண்டு முடிக்கும் பொழுதுதான் இவனும் முடித்தான்.

இவர்களுக்கு முன்பாகவே பெண்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றாகி விட்டது. ஹரியும் நண்பர்களும் சாப்பிட்டு வெளியே வரும் போதுதான் ஐஸ்கிரிம் கொடுத்து கொண்டிருப்பதை கவனித்தார்கள்.

மாதேஸ் அனைவருக்கும் முன்பாகவே சென்று ஒரு அட்டைப்பெட்டி முழுவதையும் எடுத்து வந்துவிட்டான். இது போல யாராலும் முடியாத வேலையை செய்து முடிக்க மாதேசால்தான் முடியும்.

தனியாக எடுத்து வந்து நண்பர்கள் அனைவரும் அவரவர்கள் விருப்பம் போல் பங்கு பிரித்து கொண்டார்கள். ஹரி காயத்ரி நினைவே வராமல் அவன் பங்குக்கு 4 எடுத்து வைத்து கொண்டான்.

சூர்யாவும் அவன் பங்கினை எடுத்து கொண்டு அனைவரும் சிரித்து கொண்டே உண்பதை யாருமே தவறாக நினைக்கவில்லை. எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்து கொள்ளும் இவர்களது சுபாவம் கூட்டத்தில் சிலரால் ரசிக்கப்பட்டது, அவர்களுல் தீபாவும் ஒருத்தி.

பாலா ரகசியமாக 2 கப்பினை எடுத்து கொண்டு சென்று வனிதாவிடம் கொடுத்து பத்திரமாக வைத்திருக்க சொன்னான், ஆனால் பெண்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு காலி செய்தனர். வனிதாவுடன் ஜோடியாக சாப்பிட திட்டமிட்டுருந்த பாலா கடுப்பாகி பஞ்சாயத்திற்கு மாதேசை அழைத்து வந்து நஷ்ட ஈடு கேட்டு, பின் மாதேஸ் திட்டி அழைத்து வந்தான்.

அன்புதான் மற்றவர்களை போல் இல்லாமல் எதிர்காலத்தை மனதில் வைத்து இரவுக்கு சரக்கு உண்டா இல்லையா என் கராராக கேட்டான், பாபு என்றொரு ஜீவன் மூலம் வனிதாவி மாமன் மகன் அதற்கான ஏற்பாட்டை செய்வதாக தெரிய வந்தது.உடனே பாலா 

"அப்ப எனக்கு க்ளைமாக்ஸ் தெரிஞ்சுருச்சு"

அன்பு "என்ன க்ளைமாக்ஸ்?"

ஹரி "அதான்டா , எப்ப வனிதா லவ் மேட்டர் வீட்டுக்கு தெரியுதோ அப்ப இந்த மாமா பையன் தான் பலிகடா"

பாபு "எப்படி சொல்ற?'

பாலா "இதுக்கு தான்டா இவனுங்களை சோறு போட்டு வளர்க்கறாங்க"

அந்த பக்கம் தீபாவிற்கோ இப்பொழுது பெரிய கவலை.ஒரு வேளை சூர்யாவிற்கும் குடிப்பழக்கம் இருக்குமோ என்று.

மனதில் ஒரு பக்கம்

 "அவன் குருப் அ பார், கண்டிப்பா அவனும் குடிப்பான்"

மறுபக்கம் "சேச்சே இருக்கவே இருக்காது. இரத்தம் அடிக்கடி கொடுக்கறார். அவர் குடிக்க மாட்டார்"

நேரம் ஆக ஆக கூட்டம் குறைய துவங்கி, அனைவரும் அவரவர்கள் தங்கி இருந்த அறைக்கு செல்ல துவங்கினர்.பெண்கள் அவரவர் தோழிகளுடன் அடுத்த நாள் கட்ட போகும் புடவையை பற்றி விவாதித்து கொண்டிருந்தனர். தீபாவிற்குத்தான் யாரிடமும் பேச பிடிக்கவில்லை.

இன்றுதான் அவளுள் காதல் மலர்வதை அவள் உணர்ந்திருக்கிறாள். அவ்வளவு சீக்கிரம் உறக்கம் வந்துவிடுமா? என்ன?

வீட்டின் ஒரு மூலையில் ஒரு கூட்டம் சீட்டு விளையாண்டு கொண்டிருந்தது. சிலர் தொடர்ந்து அலங்கார வேலை செய்து கொண்டே இருந்தனர்.

தீபாவிற்கு தனது உணர்வுகளை யாரிடமாவது சொல்லி மகிழ வேண்டும் என்று ஆவலாக இருந்தது. யாரிடம் என்று திரும்பி பார்த்தாள்.

சித்ரா - அழகுப் பிசாசு

கௌசல்யா - அறிவுரை செய்துவிட்டு, கேட்கவில்லை என்றால் வீட்டிற்கு போன் செய்து சொல்லி விடுவாள்.

வனிதா - சிரித்து விடுவாள்

காயத்ரி - அப்படியா என்று கேட்டு வீடு போய் விடுவாள்

ஜீனியர் - சினிமா கதை போல் கேட்டுவிட்டு போய் விடுவாள்.

சரி நமக்குள்ளேயே வைத்து கொண்டுவிட வேண்டியதுதான், இல்லையென்றால் இதற்கேற்றார் போல் ஒருத்தியிடம் தோழமை வைத்து கொள்ள வேண்டும்.

அதற்குள் மற்றொரு பக்கம் சுதி ஏற துவங்கியது. அனைவரும் 2 ரவுண்ட் முடித்திருக்க, ஹரி மட்டும் முதல் ரவுண்டையே கையில் பிடித்து கொண்டு வெறும் சிகரெட்டை பிடித்து கொண்டிருந்தான்.

சூர்யா காதோரமாக ஹரியிடம் கேட்டான். "மச்சான், பசங்ககிட்ட சொல்லட்டுமா?"

ஹரி "இப்ப வேணாம்டா"

பாலா "அங்க என்னடா குசுகுசு?"

மாதேஸ் "அவனுங்க எதைடா நம்மகிட்ட சொல்றானுங்க, இன்னைக்கு கூட ஹரி ஏதோ ஒரு ஜீனியர் பொன்னுக்கு நூல் விடறான், நம்மகிட்ட சொல்லவா போறான்?"

சூர்யா "நமக்கு வேலை வைக்காம இவனுங்களே கண்டுபிடிச்சுட்டானுங்களே"

பாலா "நீ சும்மா இருடா, என் மாப்பு என்கிட்ட சொல்லுவான், சொல்லு மாப்பு, தங்கச்சி யாருடா?"

ஹரி "டேய்....? அப்படிலாம் எதுவும் இல்லைடா"

மாதேஸ் "அப்புறம் எதுக்கு ரொம்ப நேரம் கிளாஸ் அ கையில வச்சு உத்து பார்த்துக்கிட்டு இருக்க?"

ஹரி "அது ஃபுல் ஆ சாப்பிட்டதால வாந்தி வர மாதிரி இருக்குடா"

அன்பு "டேய் அவனை விடுங்கடா, அவனா சொன்னா சொல்லட்டும், இல்லன்னா போகட்டும், ஹரி சந்தோஷமா இருக்கியா?"

ஹரி "ஏண்டா கேட்கற?'

அன்பு "கேட்டதுக்கு பதில் சொல்லுடா?"

ஹரி "சந்தோஷமா இருக்கேண்டா"

அன்பு "அது போதும்"

கன்னன்  "டேய் நீங்க எதை பத்தி பேசறிங்கனு எனக்கு புரியலை, கொஞ்சம் தெளிவா எடுத்து சொல்லுங்க"

பாலா "டேய் கன்னனுக்கு தெளிவு பன்னனுமான்டா, பன்னலாமா?"

ஹரி "இந்தாங்கடா, என்னோடதயும் நீங்களே சாப்பிட்டு ஆரம்பிங்க, வந்துடறேன். சூர்யா ஒரு நிமிசம் வா"

இருவரும் வீட்டின் வெளியே ஒரு மூலையில் போய் நின்று கொண்டு ரகசியமாக தம் பத்தவைத்து கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.

தீபா தூக்கம் வராமல் அறைக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தாள். யோசிக்க யோசிக்க அவளுள் காதலும் மகிழ்ச்சியும் பெருகிக் கொண்டே போனது.

இவள் நடப்பது மற்றவர்களுக்கு கேட்க கூடாதென்று போய் ஜன்னலருகே அமர்ந்து கொண்டாள்.

சூர்யா "மச்சான், உன்னை அவ புரிஞ்சுக்குவானு நம்பறியா?"

ஹரி "புரிய வைப்பேன்னு நம்பறேன்"

தீபாவிற்கு சூர்யாவை பார்க்கவேண்டும் போல இருந்தது. ஜன்னலுக்கு அந்த பக்கம் தான் ஹரியுடன் பேசிக் கொண்டு சூர்யா நிற்கிறான், ஆனால் இருளில் முகம் தெரியவில்லை.

தீபாவை போய் அழைத்து வந்து படுக்க சொல்லி சொல்ல வனிதா காயத்ரியை அனுப்பினாள்.

ஹரி "மச்சான், 2 பேரும் பொருத்தமா இருக்கோமா?"

சூர்யா "perfect ஆ" (மனதில் "கடவுளே, என்னை மன்னிச்சுரு")

ஹரி "எனக்கு அவளை பார்க்கனும் போல இருக்கு"

காயத்ரி வந்து தீபாவை "என்னடி பன்ற, வந்து படு வா" என்று கூப்பிட, சத்தம் கேட்டு தனது செல்லில் டார்ச் அடித்து பார்த்த ஹரிக்கு காயத்ரியை பார்த்த இன்ப அதிர்ச்சி, யாரது டார்ச்சடிப்பது என அறையில் லைட்டை போட்டு பார்த்த தீபாவிற்கு சூர்யாவை பார்த்ததும் இருட்டிலும் முகம் பிரகாசித்தது.

http://almostno1.com/wp-content/uploads/2013/02/swathi-1.jpg

சூர்யா மெதுவாக கூறினான்.

"கடவுளே, இன்னும் என்னென்னெ காமெடி காதல்ங்கற பேர்ல நடக்க போகுதோ....?"

---------------------------------------------------------------------------------------தொடரும்-----------






Comments

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

கலாய்ச்சுட்டாராமாம்...