- மழைச்சாரல்: July 2012
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Tuesday, 31 July 2012

தாண்டவம்- TRAILER - ஒரு முன்னோட்டம்

அன்பர்களுக்கு வணக்கம், தெய்வ திருமகளுக்கு பின்னர் இயக்குனர் விஜய்யுடன் நடிகர் விக்ரம் இனைந்து பணியாற்றும் தாண்டவம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

படத்தில் அனுஸ்கா, மதராசபட்டினம் 'எமி ஜாக்சன்' மற்றும் நாசர் நடித்துள்ளனர், இவர்கள் அனைவருமே இயக்குனர் விஜய்யுடன் ஏற்கனவே பணியாற்றி உள்ளார்கள் என்பது குறிப்பிட தக்கது.


படத்தில் விக்ரம் பார்வையற்றவராக வருகிறார், கதை பழி வாங்கும் கதை என்றும் அதை வித்தியாசமாக சொல்லி உள்ளதாகவும் இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார்.

படத்தின் ட்ரெய்லர்


உளவுத்துறைக்கு தண்ணி காட்டும் உளவாளி-SPY GAME- திரை விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான கலாச்சாரங்கள், ஆனால் எங்கெங்கிலும் இருக்கும் உணர்வுகள் ஒன்றுதான், எல்லா நாட்டிலும் தாய்பாசமும், நட்பும், காதலும், பிரிதலும், சேர்தலும், சிரிப்பும், அழுகையும் உண்டு, வெளிப்படுத்தும் முறை மட்டுமே மாறும், ஒரு விசயம் செய்தால் ஆபத்து வருமென்று தெரிந்தும் செய்வதைத்தான் ரிஸ்க் எடுப்பது என்று தூய தமிழில் கூறுவோம். நாம் பெரும்பாலும் எடுக்கும் ரிஸ்க்குகள் நமக்காகத்தான் இருக்கும், சில நேரங்களில் நாம் நேசிப்பவர்களுக்காக, நம் மனசாட்சிக்காக எடுப்போமோ? பார்ப்போம் இத்திரைப்படத்தில். "SPY GAME".


 நம்மில் அதிகம் பேர் பல்வேறு காரணங்களுக்காக ஒரு இடத்தில் இருந்து வேலையை விட்டு நின்று வேறு இடத்திற்கு போவோம், அப்படி கடைசி நாளாக நாம் ஒரு இடத்தில் வேலை பார்க்கும் போது நாம் எப்படி இருக்க ஆசைப் படுவோம்? ஆனால் படத்தில் அமெரிக்க உளவுத்துறை நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெறப் போகும் ஒரு உயர்மட்ட அதிகாரியின் கடைசி வேலை நாளினை பற்றிய படம் தான் இது.


பட ஆரம்பத்தில் சீனாவின் ஒரு சிறையிலிருந்து ஒரு பெண்கைதியை தப்புவிக்க முயன்று ஒரு இளைஞன் மாட்டிக் கொள்கிறான், அவன் ஒரு அமெரிக்க உளவாளி. அவனை வேலைக்கு சேர்த்து பயற்சி அளித்தவர்தான் இன்று ஓய்வு பெற போகிறவர். ஒரு நாட்டின் உளவாளி வேறு நாட்டில் மாட்டிக் கொண்டால் அவன் உளவாளி என்று தாய் நாடு ஒத்துக்கொள்ளவும் செய்யாது, அவனை காப்பாற்றவும் முயலாது.

 


அதுவுமில்லாமல் இவன் சென்றதோ நாட்டு விவகாரமாக அல்ல, காதலியை காப்பாற்ற, இவனை காக்க உளவுத்துறை எந்த முயற்சியையும் எடுக்காது, ஆனால் அவனுக்கு பயிற்சி அளித்தவரால் சும்மா இருக்க முடியவில்லை, நாட்டுக்காக பல முறை உயிரை பண்யம் வைத்து வேலை செய்தவனை விட்டு செல்ல மனம் வரவில்லை. தன்னால் முடிந்த வரை பேசி அவனை காப்பாற்ற சொல்லி விட்டு வெளியே செல்லும் போதுதான் அவனுக்கு மரண தண்டனை விதிக்க பட்டது தெரிய வருகிறது. ஆட்டம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

இதுவரை உளவு நிறுவனத்துக்கு எதிராக எதுவும் செய்யாத மனிதர் கொஞ்சம் கொஞ்சமாக  தன் சக, உயர் அதிகாரிகளை வேவு பார்க்கிறார், சீனாவில் இருக்கும் நண்பர் மூலமாக ஏதாவது செய்ய இயலுமா என்று முயல்கிறார், இவரது முயற்சியை புரிந்து கொண்டவர்கள் இவரை கண்காணிக்கிறார்கள். அவர்களது கண்ணில் மாட்டாமல் ஒவ்வொரு காயாக நகர்த்துகிறார்.


அப்படியே அவ்வப்போது காட்டப்படும் ஃப்ளாஸ்பேக்கில் அந்த இளைஞனை சந்திப்பது, அவனுக்கு பயிற்சி அளிப்பது, கடினமான வேலைக்கு அவனை தேர்ந்தெடுப்பது என்று இருவருக்கும் உண்டான நெருக்கத்தினை விவரிக்கும் காட்சி அருமை. அதிலும் விறுவிறுப்பு.


எந்த இடத்திலும் வளரும் பூச்செடியினை போல உளவு பார்க்க சென்ற இடத்தில் காதல் வரும் காட்சி அருமை, எங்கிருப்பினும் மனித மனம் தேடுவது ஒரு துனையைத்தான். ஆனால் சேர வேண்டிய நேரத்தில் இருவரும் பிரியும் வலியினை நமக்கு இயல்பாய் உணர்த்திருக்கிறார்கள். இந்த இடத்தில் இருக்கும் எந்த காதலனுக்கும் செய்ய தோணிருப்பதைதான் இவனும் செய்வான், அவளை காப்பாற்ற முயல்வது.

உளவுத்துறையை ஏமாற்றி அவர்களுக்கு தெரியாமல் அவர்களது ராணுவத்தி வைத்தே நினைத்ததை சாதிக்கும் திறமை யாருக்கும் வராது, அதிலும் அந்த ஆப்ரேஷன் பேரை இளைஞன் கேட்கும் நேரத்தில் தலைவர் இங்கே கூலிங்கிளாஸ் போட்டு கொண்டே அலுவலகத்திலிருந்து வெளியேறும் சீன் செம மாஸ்.

எதிர்பார்க்காத இடத்தில் டர்னிங் பாய்ன்ட் வைத்தது, வெறும் மூளையை உபயோகித்தே நினைத்தை சாதிப்பது, எந்த இடத்திலும் நம்மை ஆசுவாச படுத்த விடாமல் திரைக்கதையினை மிக வேகமாக கொண்டு சென்றுள்ளனர். இப்படியும் ஒரு திரில்லிங் படம் எடுக்க முடியும் என்று நம்மை வியக்க வைத்துள்ளார்கள்.

படத்தின் ட்ரெய்லர்


இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் தமிழ்10 ல் கீழே ஓட்டு போடவும், அப்படியே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

Monday, 30 July 2012

'நான் ஈ' ராஜமவுலி + ஜுனியர் NTR = எமதொங்கா - கலக்கல் கலாட்டா/ திரைவிமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், நம்மில் பலருக்கு நான் ஈ புகல் ராஜமவுலிக்கு முதன்முதலாக வாய்ப்பு குடுத்ததும், தொடர்ந்து 3 படங்களுக்கு வாய்ப்பு குடுத்ததும் ஜுனியர் என் டி ஆர் என்பது தெரியாது, அவர்கள் கூட்டனியில் வந்த ஒரு படத்தை பற்றித்தான் இப்போது பார்க்க போகிறோம், மீதி 2 படங்களை தமிழில் எடுக்கிறேன் என்று கேவல படுத்தி விட்டார்கள், ஒன்று ஸ்டூடன்ட் நம்பர் 1, இன்னொன்று கஜேந்திரா, ஆனால் இரண்டும் தெலுங்கில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இன்று நாம் பார்க்கும் படம் எமதொங்கா.

 

கதை என்னவென்று பார்த்தால் நமது அதிசிய பிறவி கதைதான், ஏற்கனவே இதே மாதிரி ஹிந்தில வந்த FATSO படத்தை பத்தி நாம பார்த்துட்டோம், அதுலருந்து கொஞ்சம் மாற்றம், ஆனா அதே மதிரி எமலோகம் சம்பந்த பட்டது. அதாவது பார்த்திங்கனா ஹீரோயின சின்ன பொன்னா காட்டறாங்க, அதுக்கு கடவுள் அருளால ஒரு டாலர் செயின் கிடைக்குது, அதை நல்லவன்னு நம்பி திருட்டு பையனான ஹீரோகிட்ட குடுக்குது, அப்ப பிடிச்சு 20 வருசமா விடாம ஹீரோவ அந்த செயின் துரத்திகிட்டே இருக்கு. வளர்ந்தும் ஹீரோ திருடனா இருக்காரு. ஹீரோயின் அவங்கப்பா இறந்ததும் சொந்த காரங்களால வேலைக்காரியா நடத்தப்படற ஜமின் வாரிசா இருக்கா. (நிறைய தடவை பார்த்துட்டோம்).


எதெச்சையா 2 பேரும் சந்திக்கறாங்க, ஹீரோயின் பிரியாமணிய பனக்காரினு தெரிஞ்சுகிட்டு ஹீரோ காதலிக்கற மாதிரி நடிக்கறார், ஆனா ஹீரோயின் உண்மையிலேயே காதலிக்கறா, அவங்க சொந்தகாரங்ககிட்டயே ஹீரோயின் அ ஒரு கணிசமான அமவுன்ட்டுக்கு விட்டு குடுக்க பார்க்கறார்.


இப்பதான் கதைல ட்விஸ்ட், மேல இந்திரலோகத்துல கெத்தா பஞ்ச் டயலாக் பேசிட்டு இருந்த எமதர்ம ராஜா ஹீரோ குடிச்சுட்டு திட்டறதால அவமானபட்டு ஹீரோவ திட்டம் போட்டு சீக்கிரமே சாகடிச்சு மேல கூப்பிட்டுக்கறார். இதை தெரிஞ்சுகிட்ட ஹீரோ எமன் அவர் மனைவி குஷ்பு கூட ரொமன்ஸ் பன்ன போற கேப்ல பாசக்கயிற எடுத்துகிட்டு புது எமனா மாறிடறார்.


அதுக்கப்புறம்தான் படத்துல கலாட்டா களை கட்டுது. எமலோகத்துல தேர்தல் நடத்தறது, எமனுக்கும் அவர் மனைவிக்கும் சன்டை மூட்டறது, ஏமாத்தி தேர்தல்ல ஜெயிக்கறதுனு செம கலாட்டாவா இருக்கும். அதுக்கப்புறம் பூமிக்கு திரும்ப வந்து பிரியா மணிய காதலிச்சுகிட்டு ஒழுங்கா இருக்கலாம்னு பார்த்தா பழி வாங்க எமதர்ம ராஜா மாறுவேசத்துல வந்து எக்குதப்பா மாட்டிக்கறதுனு செம கலாட்டாவா இருக்கும்.


இந்த படத்துலருந்து விஜய் நிறைய ஸ்டெப் திருடிருப்பார். இயக்குனர் ராஜமவுலிக்கு இந்த மாதிரி ஃபேன்டசியான கதைங்களை எடுக்கறதுனா ரொம்ப இஷ்டம் போல, அவரோட மஹதீரா, நான் ஈ, மாதிரி இந்த படமும் செம கலாட்டாவா இருக்கும், அதுலயும் எமனா நடிச்சுருக்க மோகன் பாபு கலக்கிருப்பார், என்ன கொஞ்சம் தெலுங்கு மசாலா கலந்துருக்கும், அதுவும் நல்லாதான் இருக்கும். செம கலாட்டாவான படம்.

படத்தோட ட்ரெய்லர்


மறக்காம உங்க நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க, அப்படியே தமிழ்10ல ஓட்டு போடுங்க.

Sunday, 29 July 2012

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

அன்பர்களுக்கு வணக்கம். என் நண்பன் ஒருவன் சரித்திர நாவல்கள் விரும்பி படிப்பான், அவனது தந்தையுடன் பேசுகையில் அவர் நமது முன்னோர்களையும், கடவுள் வழிபாட்டையும் மறுத்து பேசியது பற்றி குறிப்பிட்டான். அது சம்பந்தமாக அவனிடம் நான் பேசியதை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.


 நான் மனிதன் எனக்கு எல்லாம் தெரியும், என்னால எல்லா உயிரினத்தையும் அடிமைபடுத்த முடியும், நான் சக்கரத்தை கண்டு பிடிச்சுட்டேன், நெருப்பை கண்டு பிடிச்சுட்டேன், கம்ப்யுட்டர் கண்டுபிடிச்சுட்டேன்னு வெட்டியா சத்தம் போட்டு பேசறவங்க கடவுளை புரிஞ்சுக்க மாட்டாங்க, எல்லாத்தையும் கண்டுபிடிச்ச மனுசனால 2 நாள் சாப்பிடாம தூங்காம இருக்க முடியுமா? இல்லை 2 நாளைக்கு சேர்த்து சாப்பிட்டு ஒட்டுக்கா தூங்கிட்டே இருக்க முடியுமா?


இன்னும் மனுசனால மனுசனையே ஜெயிக்க முடியலைய, பசிச்சா சாப்பிட்டுதான் ஆகனும், தூக்கம் வந்தா தூங்கிதான் ஆகனும், உன்னால ஒன்னும் கட்டுபடுத்த முடியாது, கடவுளை எதுக்கு வணங்கனும்? முதல்ல மனுசன் யாரை வணங்குவான், தன்னை விட வயசுல பெரியவங்களை, அதுக்கு என்ன அர்த்தம்? நான் உன்னை விட சின்னவன், உன் அளவுக்கு நான் இல்லைனு அர்த்தம். கடவுளை வணங்கறதும் அதான். உன்னை இன்னும் என்னால முழுசா புரிஞ்சுக்க முடியலை. அதுக்கு நான் இன்னும் பக்குவ படலை, என் மனசை நான் இன்னும் அடக்கலை, அதுக்கு வழி காட்டுனு கேட்கறதுதான். இன்னொன்னு என்னன்னா எல்லாரும் கடவுள்கிட்ட போய் எனக்கு இதை செஞ்சு குடு அதை செஞ்சு குடு உனக்கு நான் இதை செய்யறேன் அதை செய்யறேன்னு அரசியல்வாதிங்ககிட்ட டீல் பேசற மாதிரி பேசறாங்க.

அப்படி பன்னக்கூடாது, கடவுளே, எனக்கு இந்த மாதிரி ஒரு சூழ் நிலை வந்துருக்கு, எனக்கு என்ன பன்றதுனு தெரியலை, ஆனா எனக்கு என்ன செய்யனும்னு உனக்கு தெரியும், இதுல வெற்றிய குடுத்தாலும் தோல்விய குடுத்தாலும் முழு மனசோட ஏத்துக்கறேன்னு பரஸ்பரம் பேசனும்.
இதுதான் முழுசா கடவுள்கிட்ட சரனடையறது, சும்மா இதை எப்படியாவது எனக்கு செஞ்சு குடுனு கேட்கறது "மவுனம் பேசியதே" படத்துல சூர்யாவ பொன்னை தூக்க கூப்டுவாங்களே அது மாதிரிதான் முடியும்.

முதல்ல நமக்கு தெரியுமா எது நல்லது கெட்டதுனு? ஒரு கதை சொல்லுவாங்க. ஒரு ஊர்ல ஒருத்தனோட பையனுக்கு கால்ல அடிபட்டுருச்சாம், எல்லாரும் அவங்கப்பாகிட்ட கஸ்டகாலம்னு சொன்னாங்கலாம், அவர் இல்லை ஏதோ நல்லது இருக்கும்னு சொன்னாராம். கொஞ்ச நாள்ள போர் வந்து வீட்டுக்கு ஒருத்தரை கூட்டி போனாங்களாம், இவன் கால் உடைஞ்சுருந்ததால போகலை, எல்லாரும் நல்லதுக்குதான்னு சொல்லவும், இல்லை இதுலயும் ஏதாவது கெட்டது இருக்கும்னு சொன்னாராம். போர்ல ஜெயிச்சு போன பசங்க எல்லாரும் நகையும் பணமுமா வந்தாங்க, போருக்கு போகததால இவங்களுக்கு எதுவும் கிடைக்கலை, "அப்ப நீ சொன்ன மாதிரி கெட்டதுதான்னு" எல்லாரும் சொல்லவும் அவர் சிரிச்சுகிட்டே போனாராம். கொஞ்ச நாள்ள தோத்த நாட்டுக்காரன் திரும்ப படையெடுத்து வந்து ஒவ்வொரு வீடா நகைய கொள்ளையடிச்சுட்டு போகும்போது தடுத்தவங்களை பயங்கரமா தாக்கிட்டு போனானான். இந்த கால் உடைஞ்ச பையன் வீட்ல எதுவும் இல்லாததால தப்பிச்சுட்டாங்களாம்.

இந்த கதைலருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா நமக்கு நடந்துட்டுருக்கறது நல்லதா கெட்டதானு நமக்கு தெரியறதுக்கு முன்னாடியே அது நம்மளை விட்டுட்டு போயிரும், எதுவும் நிலைக்காது, எதையும் தக்க வச்சுக்க நாம போராட கூடாது. கடவுள்கிட்ட போனமா இது வரைக்கும் குடுத்ததுக்கு நன்றி, எப்ப எனக்கு உன்னை புரிய வைக்க போறனு கேட்டு வந்துரனும், கஸ்டமா? புலம்பாத, போ, எனக்கு வந்துருக்கறது கஸ்டமானு கேளு, ஆமான்னா சரி இதோட நான் வாழ பழகிக்கறேன்னு சொல்லிட்டு வா, சும்மா எனக்கு இந்த கஸ்டம் போகனும்னுலாம் அடம்பிடிக்க கூடாது. ரொம்ப குழப்பமா இருக்கா?

சில விசயங்கள் சொன்னா புரிஞ்சுக்க முடியாது, அனுபவிச்சாதான் புரியும், அதுக்கு ஒரே வழி, நான் ங்கற சிந்தனை போகனும், சுத்தி இருக்கவங்களை கவனிக்கனும், அவங்க வாழ்க்கைய எப்படி வாழறாங்கனு பார்க்கனும், ரொம்ப வேடிக்கையா இருக்கும், மரணத்தை  வெல்ல முடியாத மனிதன் நாத்திகம் பேசறதை விட வேடிக்கையான விசயம் வேற என்ன இருக்கு?

பக்குவத்தோட கடைசி நிலை என்ன தெரியுமா? ஒரு எறும்புக்கு உணவு கிடைக்கலைங்கறதையும் சொந்தத்துல நடக்கற இறப்பையும் ஒன்னா எடுத்துக்கற மனசு தான், எனக்கு இன்னும் வரலை, வந்துரும், அப்படி வந்தது வெளிய தெரிஞ்சா ஒன்னு நம்மளை பைத்தியம்பாங்க, இல்லை சாமியாரிக்கிடுவாங்க.

ஒவ்வொரு உயிரும் எதுக்கு படைக்க படுது? என்ன பெருசா வாழ்ந்துருது? ஏன் பாதிலயே செத்துருது? இந்த கேள்விக்கு விடை தெரிஞ்சவன் கடவுள் ஆயிருவான் இல்லை ஆக்கிருவாங்க.

நம்ம முன்னோர்களை முட்டள்கள்னு சொல்றவங்ககிட்ட  நான் கேட்கனும்னு நினைக்கறது ஒன்னுதான், மன்னர்கள் செஞ்சது எதையும் ஒத்துக்க முடியாதுனா மறுபடியும் வாழ்க்கைய கற்கால மனிதனா ஆரம்பிக்க சொல்லிரு. அவங்க கண்டு பிடிச்ச கடைபிடிச்ச பல விசயங்களை நாம செஞ்சுட்டும் அனுபவிச்சுட்டும் இருக்கோம்.

 நான் சொல்றது சரின்னு பட்டா உங்க நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க...

Tuesday, 24 July 2012

பொறியியல் படிப்பு- ஒரு எளிய அறிமுகம்

அன்பர்களுக்கு வணக்கம், தற்போதுள்ள காலகட்டமானது மாணவர்கள் பள்ளி வாழ்க்கையை முடித்துக் கொண்டு கல்லூரிக்கு செல்லும் சமயம், அதிலும் தற்போது பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்துடுப்பது பொறியியல் (ENGINEERING) படிப்பினைத்தான். நானும் ஒரு பொறியாளர் என்ற வகையிலும் ஒரு தொழில்கல்லூரி ஒன்றினில் ஆசிரியராக பணியாற்றுவதாலும் இப்படிப்பு சம்பந்தமான தகவல்கள் தெரிந்து வைத்துள்ளேன், அதை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

முதலில் பொறியியலில் எண்ணற்ற பாடப்பிரிவுகள் உள்ளன, அதில் தமிழகத்தில் பெரும்பாலும் தேர்ந்துடுக்கப்படுவது ஆறு பிரிவுகளே, அவை முறையே 1.CIVIL 2.MECHANICAL, 3.EEE, 4.ECE, 5.COMPUTER, 6.IT.
 

ஒவ்வொரு பிரிவாக பார்ப்போம். முதலில் CIVIL-கட்டிடவியல். தொழில் படிப்புகளில் முதல் பிரிவு, பெரும்பாலோனோர், இத்துறையினை பற்றிய தெளிவான தகவல் இன்றி இருக்கின்றனர். இப்பிரிவில் படித்தால் வெயிலில் காயவேண்டும் என்பது பலரது எண்ணம். அது உண்மையல்ல. SOFTWARE ல் இருப்பவர்களுக்கு ஈடாக வருமானம் ஈட்டவும், அவர்களை போல் குளிரான அறையில் வேலை பார்க்கும் வாய்ப்பு இப்பிரிவு படிப்பவர்களுக்கும் உண்டு. எப்படியெனில் DESIGN துறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு தற்போது சென்னை மற்றும் பெங்களூரில் நல்ல வாய்ப்பு, ஆரம்பத்திலேயே 25000 வரையிலான சம்பளம் தர தயாராக இருக்கிறார்கள், அதிலும் இத்துறையில் ஆசிரியர்களுக்கு மற்ற துறையினை காட்டிலும் அதிக சம்பளம் தர பலக் கல்லூரிகள் தயாராக இருக்கின்றன. பெண்கள் இத்துறையினை படித்து வெளி வந்தால் டிசைன் மற்றும் கல்வி துறைகளில் சரியான எதிர்காலம் உண்டு. ஆண்களுக்கு சொல்லவே தேவை இல்லை.


அடுத்து நாம் பார்க்க போவது இயந்திரவியல் துறை. எனக்கு தெரிந்து அதிக கல்லூரிகளில் நன்கொடை வாங்குவது இந்த துறைக்குத்தான், படித்தால் இதில்தான் படிப்பேன் என்று பல மாணவர்கள் அடம்பிடிப்பதற்கு காரணம் MECHANICAL என்றாலே MASS தான், ஓரளவுக்கு படிப்பதற்கும் எளிதாக இருக்கும் என நம்புவதும் ஒரு காரணம். இதன் உப பிரிவுகளான TOOL & DIE மற்றும் AUTOMOBILE பிரிவுகள் இதற்கு ஈடாக வேலை வாய்ப்பை தருகிறது. இதிலும் DESIGN பிரிவு இருக்கிறது. பெரிய பெரிய வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இத்துறையினில் படித்தவர்கள் நிறைய தேவை படுகிறார்கள்.


அடுத்து நாம் பார்க்க போவது மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறைகள் பற்றி. நன்கு படிக்கக் கூடிய மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகள் இவை, ஏனெனில் புரிந்து படித்தால் முழு மதிப்பெண்ணும் வேலை வாய்ப்பும் சர்வ நிச்சயம், அதுவுமில்லாமல் பெண்கள் அதிகம் விரும்பும் துறைகள் இவை. அதிலும் மின்னனுவியல் (ECE) படிப்பவர்கள் மின் துறை சம்பந்தமான நிறுவனங்களிலும் கணிப்பொறி சம்பந்தமான நிறுவனங்களிலும் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.

 

கணிப்பொறியியல் துறையை பற்றி சொல்லவே வேண்டாம், 5 இலகர சம்பளம் ஆரம்பதிலேயே கிடைக்கும் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்தால். பெண்களுக்கு ஏற்ற பிரிவு, உட்கார்ந்து வேலை பார்க்கலாம். ஓரளவுக்கு எளிதான படிப்புதான். வெளி நாடுகளில் நல்ல வாய்ப்பு உண்டு.

பொறியியலில் எந்த பிரிவு எடுத்தாலும் அடிப்படையான ஆங்கில அறிவு கட்டாயம் தேவை, பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழியில் படித்து விட்டு செல்பவர்கள் பொறியியலில் தடுமாற ஆங்கிலம் தான் காரணம். ஆங்கிலத்தை அறிவாக பார்க்காமல் மொழியாக மட்டும் பார்த்தால் எந்த பிரச்சனையும் வராது. பெற்றோர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றுதான். உங்கள் பிள்ளையை பொறியியல் சேர்த்துவதாக இருப்பின் உங்கள் வீட்டில் ஆங்கில செய்திதாள்களை வாங்க ஆரம்பியுங்கள். உங்கள் பிள்ளைகளை வாசித்து பழக சொல்லுங்கள்.

மறக்காமல் உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்.


Monday, 23 July 2012

"நான் ஈ" நாயகனின் காதல் கலாட்டா "Ala Modalaindi"- REVIEW

அன்பர்களுக்கு வணக்கம், கல்யாணம் ஆகற வரைக்கும் காதல் படம் பிடிக்கும், ஆனதுக்கு அப்புறம் திகில் படம்தான் பிடிக்கும்னு என் நண்பன் ஒருத்தன் சொன்னான், அவனுக்கும் இன்னும் ஆகலை, இருந்தாலும் எதுக்கும் கல்யாணத்துக்கு முன்னமே தெரிஞ்ச காதல் படங்களை பார்த்துருவோம். இன்னைக்கு நாம பார்க்கப் போற படம் "Ala Modalaindi". எனக்கும் சொல்ல வரலை.


 படத்தோட ஹீரோ நம்ம "நான் ஈ" புகழ் நானிதான். ஹீரோயின் நம்ம 180 பட புகழ் 'நித்யா மேனன்'. இவங்க 2 பேரும் ஜோடியா ஒரு தமிழ் படத்துல கூட நடிச்சுருக்காங்க படம் பேர் 'வெப்பம்'. படம் மொக்கை, ஆனா ஒரு பாட்டு செமையா இருக்கும். "மழை வரும் அறிகுறி". முடிஞ்சா கேளுங்க.

சரி கதைக்கு போவோம், நம்ம தில் 'ஆஷிஸ் வித்யார்த்தி துப்பாக்கி முனையில நம்ம ஹீரோவ கடத்தறதுதான் ஆரம்பம். போரடிக்கறதால அவரே உன் காதல் பத்தி சொல்லுன்னு ஃப்ளாஸ்பேக் அ கேட்டு வாங்கறார்.


தன்னோட பழைய காதலியோட கல்யாணத்துக்கு போய் குடிச்சுட்டு புலம்பறப்ப கூட யாரோ புலம்பற சத்தம் கேட்க யார்னு பார்த்தா நம்ம நித்யா, அவங்களும் பழைய லவ்வர் அ பறி குடுத்துட்டு நிக்கறாங்க. 2 பேரும் மப்பு, அதுலயே ஒரு பாட்டு.

அடுத்த நாள் போதை தெளிஞ்சு நண்பர்களா பழக ஆரம்பிக்கறாங்க. அடுத்த அவங்க சந்திச்சுக்கறது ஹைதராபாத்ல, ஹீரோவோட அம்மாவா நம்ம ரோஹினி, அருமையா நடிச்சுருக்காங்க, வழக்கம் போல பழக பழக ஹீரோ, ஹீரோயினுக்கு நல்லா கெமிஸ்ட்ரி ஒத்துப்போகுது.

ஆனா காதல்ல சொல்ல போகும் போது ட்விஸ்ட், ஹீரோயின் வேற ஒருத்தன் கூட நிச்சயம் ஆகிருக்கா, அவன் வந்ததும் ஹீரோ ஏற்கனவே வளர்ந்த தாடிய தடவிகிட்டே வந்து பொழப்ப பார்க்கறார், ஒரு தமிழ் பொன்னையும் லவ் பன்றார், துரதிர்ஷ்டவசமா அதுவும் கழன்டுக்குது.

 

திரும்பவும் நித்யா ஹீரோ லைஃப் ல வரதும் போறதுமா இருக்கு, நித்யாக்கும் தான் உண்மையிலேயே காதலிக்கறது நானியத்தான்னு தெரியுது ஆனா தப்பா புரிஞ்சுகிட்டு வீட்ல பார்க்கற கல்யாணத்துக்கு சம்மதிச்சுருது.

 

கல்யாணத்தை நிறுத்தி பொன்னை தூக்க வந்துட்டு இருந்த ஹீரோவத்தான் ஆஷிஸ் கடத்திடறார், அப்புறம் தான் தெரியுது, நடுவுல ஆஷிஸ் ஒரு குழப்பம் பன்னது. அப்புறம் மண்டபத்துல ஏகப்பட்ட கலாட்டா, பொன்னு ஓடுனதுக்கு அப்புறம் பொன்னை தூக்க போய் மாட்டிக்கறது செம கலாட்டா.

 

படத்துல நாம எதிர்பார்க்காத இடத்துலலாம் காமெடி களைக் கட்டுது, அதுவும் மண்டபத்துல பொன்னை தூக்க ரகசியமா திட்டம் போடறன்னு பன்ற கலாட்டாக்கு சிரிக்காம இருக்கவே முடியாது, நித்யா மேனன் தெலுங்குல நல்லாதான் வெளிப்படையா நடிக்கறாங்க. புரிஞ்சுருக்கனும்? இதுவும் காதல் கலந்த காமெடி படம்தான்.

படத்தோட  ட்ரெய்லர்.

அப்படியே எனக்கு பிடிச்ச அந்த பாட்ட டைம் இருந்தா கேளுங்க

மறக்காம தமிழ்10ல ஓட்டும் கமெண்ட்டும் போட்டுருங்க.


Saturday, 21 July 2012

கலக்கல் ஆவி- காமெடிப்படம் - GHOST TOWN- REVIEW

அன்பர்களுக்கு வணக்கம், அனைவராலும் ரசிக்க கூடிய படங்களுடைய முடிவு பெரும்பாலும் சுபமாகத்தான் இருக்கும், அனைவரது மனமும் மகிழ்ச்சியைத்தான் விரும்புகிறது. ஹாலிவுட்டிலும் அதனால்தானோ என்னவோ குறைந்த செலவில் எடுக்கப்படும் ROMANTIC COMEDY படங்கள் சக்கை போடு போடுகின்றன. அந்த வகையான் படங்களில் FANTASY கலந்திருந்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியான ஒரு படம்தான் "GHOST TOWN".


 கதையின் நாயகன் ஒரு பல் மருத்துவர், தனிமை விரும்பி, எந்த அளவுக்கு என்றால் யாராவது உதவி கேட்டால் கூட கழண்டுக் கொள்வார், எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். இவரது அப்பார்ட்மென்ட்டில் தான் நாயகியும் வசிக்கிறார்.


ஒரு நாள் கிட்டத்தட்ட தற்கொலை முயற்சி போல் ஏதோ ஒன்று செய்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைக்கிறார்.  அடுத்தடுத்த நாட்களில் அவர் கண்களுக்கு இறந்தவர்கள் தெரிய ஆரம்பிக்கிறார்கள்.

அவர்களுக்கு இவரால் தங்களை பார்க்க முடியும் என்ற விசயம் தெரிய வந்ததும் ஒவ்வொருவரும் தங்களது கடைசி ஆசையை தீர்த்து வைக்க சொல்லி பின் தொடர்கிறார்கள். தனிமை விரும்பிக்கு ஒரு கூட்டமே பின் தொடர்ந்தால் எப்படி இருக்கும்?


அதில் ஒருவர் தனது மனைவி சம்பந்தமான பிரச்சனையை தீர்த்து வைத்தால் மற்ற ஆவிகளிடமிருந்து காப்பாற்றுவதாக சொல்லி டீல் பேசுகிறார், தப்பிக்க வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ளும் நாயகன் தனது பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ள துவங்குகிறார்.


கொஞ்சம் கொஞ்சமாக நாயகியுடன் நெருங்கி பழக துவங்குகிறார், நாயகிக்கு தனது பல அந்தரங்க விஷயங்கள் எப்படி இவருக்கு தெரிந்திருக்கிறது என்ற குழப்பம் வர நாயகன் உண்மையை ஒத்துக் கொள்கிறார். அதை நம்பாமல் நாயகி பிரிகிறாள்.

தனிமையில் தவிக்கும் நாயகனுக்கு "மற்றவர்களுக்கு உதவதுதான் வாழ்க்கை" என் உணர்த்துவது ஒரு இந்திய டாக்டர். படத்தில் நமது கலாச்சாரத்தை பெருமைப் படுத்துகிறார்கள். தன்னை பின் தொடரும் ஆவிகளின் ஆசைகளை நிறைவேற்றி அவர்களை வழியனுப்புகிறார்.


அவரது நல்ல உள்ளத்தை ஹீரோயின் புரிந்து கொள்கிறாரா? இடையில் ஒரு சமுக சேவகன் வந்து ஹீரோயினை கவர முயற்சிப்பது என்னாகிறது? திடிரென்று விபத்தில் சிக்கும் நாயகனின் நிலைமை என்னாகிறது என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்.

படத்தில் FANTASY அடையாளம் 'ஆவிகளை நாம் தீண்டினால் தும்மல் வருகிறது, ஆவிகள் முக்தியடையும் போது பக்கத்தில் உள்ள விளக்கு பிரகாசமாக எரிகிறது'.

காதல், நகைச்சுவை, FANTASY மூன்றையும் சரியான விதத்தில் கலந்து எடுத்திருக்கிறார்கள், ஆவிகள் பற்றிய காட்சிகள் எடுத்த விதம் அருமை. சொல்ல வந்ததை சரியாக சொல்லி இருக்கிறார்கள். நகைச்சுவை பிரியர்களுக்கு படம் பிடிக்கும்.

படத்தின் ட்ரெய்லர்


மறக்காம கமெண்ட் போடுங்க, கீழே தமிழ்10, இண்ட்லிலாம் இருக்கு, ஒரு க்ளிக் பன்னி விடுங்க. நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.


Friday, 20 July 2012

மாற்றான் படக்கதை இதுவாகவும் இருக்கலாம்-STUCK ON YOU-REVIEW

அன்பர்களுக்கு வணக்கம். மாற்றான் படம் வந்தது முதலே இனையங்களில் அது "STUCK ON YOU" படத்தின் தழுவல் என்று பரப்பப் பட்டு வருகிறது. மற்ற பதிவர்கள் எந்த திரப்படம் வந்தாலும் முதல் நாளே பார்த்து விமர்சனம் எழுதுகிறார்கள், அந்த வேகம் எனக்கு வராது, அதனால் தான் அதிகமாக மற்ற மொழிப் படங்களை விமர்சித்து வருகிறேன். 

அதில் ஒரு புது முயற்சியாகத்தான் இந்த படத்தின் விமர்சனம், அனைவரும் சொல்வது போல் இந்தக் கதை மாற்றான் படத்தின் கதையாகவும் இருக்கலாம். ஏதோ ஒரு வகையில் என்னை இந்த படம் பார்க்க வைத்த கே.வி. ஆனந்த் மற்றும் இனைய நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனேனில் அருமையான படம்.
 

படத்தின் துவக்கத்திலேயே கதையின் நாயகர்கள் இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என தெரிந்து விடுகிறது. இருவரும் ஒரு சிறிய ஊரில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார்கள். அவர்களது கடையில் ஒரு சிறப்பு, PIZZA போல் சொன்ன நேரத்தில் ஆர்டர் செய்ததை தராவிட்டால் இலவசமாக சாப்பிட்டுவிட்டு செல்லலாம்.


சிறு வயதில் இருந்து அந்த ஊரில் இருப்பதால் ஊர் முழுக்க நண்பர்கள். அண்ணன் தம்பி என்று பிரித்துக் கொள்வோம், அண்ணன் ஒரு சமையல்காரன், ஹாக்கிப் ப்ளேயர், இணையத்தில் ஒரு பென்னை காதலிப்பவன், வேறு பெண்களிடம் பேசச் சொன்னால் உளறுபவன். பதட்டமானால் மூச்சுக் கோளாறால் அவதிப்படுபவன்.


தம்பி நடிகனாக விரும்புபவன், இள ரத்தம், தினமும் ஒரு பெண், கோபப்படுவான், ஹாலிவுட் போக விரும்புகிறான். ஆனால் இருவரும் ஒட்டியே இருப்பதாலும் அண்ணனுக்கு விருப்பமில்லாததாலும் கிராமத்திலேயே இருக்கிறான். வருட வருடம் நாடகம் போடுவான்.


ஒரு கட்டத்தில் தம்பி அண்ணனை சம்மதிக்க வைத்து ஹாலிவுட்டுக்கு அழைத்து செல்கிறான். அங்கு ஒரு கவர்ச்சி பெண் அறிமுகமாகிறாள், யாரும் இரட்டையர்களான இவர்களுக்கு வாய்ப்பு தரவில்லை.


ஒரு சீரியலில் நடிப்பதில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு நடிகை இவர்களைத்தான் ஜோடியாகப் போட வேண்டும் என அடம் பிடிப்பதால் வாய்ப்பு கிடைக்கிறது, அதிர்ஷ்டவசமாக நல்ல பேரும் கிடைத்து பிரபலமாகிறார்கள்.

இன்னொரு பக்கம் இனைய காதலியை நேரில் சந்தித்து பழக வேண்டும், ஆனால் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் என்பதை சொல்லாமல் விட்டதற்காக அதை மறைக்க இவர்கள் படும்பாடு அனைவராலும் ரசிக்கக் கூடிய ஒன்று. ஒரு கட்டத்தில் தெரிய வர காதலி பிரிகிறாள்.

ஆப்ரேஷன் செய்து இருவரும் பிரியலாம் என்றால் தம்பி உயிருக்கு 50% வாய்ப்பு இருப்பதால் மறுத்து வந்த அண்ணனின் காதலுக்காக தம்பி சண்டை போட்டு சிகிச்சைக்கு ஒத்துகொள்ள வைக்கிறான். இருவரும் பிரிகிறார்கள்.

கிட்டதட்ட 25 வருடம் ஒன்றாக தோளோடு தோளாக நடந்தவர்கள் பிரிந்து நடக்கக் கூட முடியாமல் கீழே விழுகிறார்கள். கொஞ்ச நாளில் அண்ணன் ஊருக்கே செல்கிறான். தம்பி தொடர்ந்து நடிக்கிறான்.


நாட்கள் போகப்போக இருவருக்கும் வாழ்க்கையில் அனைத்து சந்தோசங்களை விட இருவரும் சேர்ந்து இருப்பதுதான் மகிழ்வான் விசயம் என்று புரிகிறது. சிகிச்சைக்கு பின்பும் இருவரும் ஒட்டியே வாழ ஆரம்பிக்கிறார்கள். தேவைப்படும் போது மட்டும் பிரிகிறார்கள்.

படம் அருமையான கதை, இதை அப்படியே எடுத்திருந்தால் மாற்றான் செம ஹிட் ஆகும் என அடித்து சொல்கிறேன்.ஏதோ ஒரு வகையில் என்னை இந்த படம் பார்க்க வைத்த கே.வி. ஆனந்த் மற்றும் இனைய நண்பர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனேனில் அருமையான படம்.

படத்தின் ட்ரெய்லர்மறக்காமல் கமெண்ட்டும் தமிழ்10ல் ஓட்டும் போட்டுருங்கப்பா...

Thursday, 19 July 2012

நண்பர்களுக்கு SMS இலவசமாக அனுப்பவும், இலவசமாக RECHARGE செய்யவும் புதிய இனைதளம்

வணக்கம் நண்பர்களே. என்னடா சினிமா விமர்சங்கள் தந்து கொண்டு இருக்கும் போது என்ன இது! என்று நினைக்கலாம். எல்லாம் ஒரு
மாற்றம் தான் சும்மா! இந்த பதிவானது உங்களுக்கு இலவசமாக மொபைல் ரிசார்ஜ் செய்ய உதவும் ஒரு நம்பகமான தளத்தை பற்றியது. இந்த தளத்தில் நமக்கு பல வசதிகளை இலவசமாக தந்துள்ளர்கள். உதாரணமாக சொல்ல போனால் நீங்கள் way 2 sms பயன்படுத்திக் கொண்டிருப்பிர்கள். அதை போலவே இந்த தளமும் உள்ளது. மற்றும் Amulyam என்ற தளத்தையும் பயன்படுத்தி இருப்பீர்கள். இந்த தளம் முதலில் ஓன்றை சொல்லி பின்பு செய்வதில்லை. ஆனால் நான் சொல்லும் தளம் மிக நம்பகமானது. நாம் இந்த தளத்துக்கு எந்த வேலையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இணைந்தவுடன் உங்கள் கணக்கில் 2 இணைந்து விடும். நீங்கள் மற்றவரை இணைத்து விட்டால் உங்களுக்கு கமிசனாக 1 ருபாய் கிடைக்கும்.நீங்கள் நண்பர்களை இணைக்க எளிய வழிகள் உள்ளது. என்னிடம் பிளாக உள்ளதால் பதிவிட்டுள்ளேன். ஆனால் உங்களிடம் பிளாக் இல்லை என்றாலும் எளிதாக சம்பாரிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் facebook , twitter, google+ போன்ற சமுக வலை தளங்களில் உங்களிம் ரெப்ரல் லிங்கை கொடுக்கும் போழுது அதன் மூலம் கண்டிப்பாக நீங்கள் சம்பாரிக்க முடியும். இதனை முயன்று பார்தால் நமக்கு நட்டம் இல்லை. இவர்களின் தளத்தில் தனியாக இணைய முடியாது. கண்டிப்பாக ரெப்ரல் தேவை. இந்த தளமானது ஆரம்பிக்க பட்டு சில மாதங்கள் தான் ஆகின்றது. இந்த தளத்தை அவர்கள் விளம்பர படுத்தவும் மற்றும் வாடிக்கையாளரை கவரவும் தான் அதிக அளவில் நமக்கு தருகின்றனர் என்று நினைக்கிறேன் இத் தளத்தில் நம்க்கு 10 ரூபாய் சேர்ந்தவுடன் இலவசமாக ரிசார்ஜ் செய்து கொள்ளலாம். எனக்கு கிடைத்தது 10 ருபாய் ஆனால் அதிஸ்டம் இருந்தால் தொகை 100 கூட மாறலாம். இப்பொழுதே இந்த தளத்தில் இணைந்து இலவச மழையில் நனைந்திடுங்கள்.

புதிய தகவல் : SMS அனுப்பினால் எவ்வளவு தருகிறார்கள் என்று சென்று பாருங்கள் அசந்து போவீர்கள்ரீசார்ஜ் செய்ய இங்கு கிளிக் செய்யவும்http://ultoo.com/login.php?refererCode=89021E&flag=hide

ஆந்திரா மசாலா-POOLA RANGADU- TAMIL REVIEW

அன்பர்களுக்கு வணக்கம், எப்பொழுதும் உலக சினிமாக்களை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் நம்ம ஊர் சினிமாக்களை யார் பார்ப்பது என்ற கவலையில் அவ்வப்போது சமயம் கிடைத்தால் தமிழ் படம் பார்ப்பேன். அதிகம் பார்ப்பது தெலுங்கு படங்கள் தான், 

என்னதான் ஆந்திராவில் ஹீரோயிசம் அதிகம் என்றாலும் அவர்களின் முன்னேற்றம் நம்மை விட அதிகம். உதாரணத்திற்கு அருந்ததி, மஹதீரா, நான் ஈ, பிருந்தாவனம் சொல்லிக் கொண்டே போகலாம். சரி நாம் படத்திற்கு போவோம்.

படத்தின் பெயர் பூலா ரங்கடு. கதையின் நாயகன் சுனில் ரெட்டி. தெலுங்குலகில் பெயர் சொல்லுமளவுக்கான நகைச்சுவை நடிகர். இவரை ஹீரோவாக்கிய பெருமை நமது நான் ஈ புகழ் இயக்குனர் ராஜ் மௌலியை சாரும். சுனிலை ஹீரோவாக்கி இவர் எடுத்த 'மர்யாத ரமண்ணா' படம் சூப்பர் டூப்பர் ஹிட். எப்படி நம்ம ஊரில் இம்சை அரசன் ஹிட் ஆனதும் இ.லோக அழகப்பன் வந்ததோ அதே போல் வந்த படம் தான் இந்த பூலா ரங்குடு.


கதைப்படி ஹீரோ ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர். இவரை ஏமாற்றி ஒரு 30 ஏக்கர் நிலத்தை இவர் தலையில் ஒரு கும்பல் கட்டி விடுகிறது. அந்த நிலத்தை விற்றால்தான் அவரது பல குடும்ப பிரச்சனைகள் தீரும். ஆனால் விற்க விடாமல் 2 கும்பல் தடுக்கிறது.


ஏன் என்றால் அந்த 2 வில்லன்களுடைய நிலத்திற்கு நடுவில்தான் 30 ஏக்கர் இருக்கிறது, அது யாருக்கு என்ற போட்டியில் விற்க விடுவதில்லை, இத்தனைக்கும் அந்த 2 வில்லன்களும் மாமன் மச்சான்களே. 

 

எப்படியாவது இருவரையும் சமாளித்து நிலப்பிரச்சனையை தீர்ப்போம் என்று வரும் சுனில் தன் பால்ய நண்பனுடன் ஒரு வில்லனிடம் அடியாளாய் சேர்கிறார். ஆந்திராவில் வில்லன்கள் என்றால் முட்டாளாய்த்தான் இருக்க வேண்டும் என்பது எழுதப் படாத விதி.சுனிலை யார் என்று தெரியாமல் அடியாளாய் சேர்த்துக் கொண்டதோடு இல்லாமல் அவர் எதெச்சையாய் செய்யும் விஷயங்கள் அவருக்கும் வில்லனுக்குமான நெருக்கத்தை அதிகரிக்க அண்ணன், தம்பி அளவுக்கு நெருங்குகிறார்கள்.


ஒரு பக்கம் இப்படி என்றால் இன்னொரு வில்லனின் மகள்(ஹீரோயின்) சுனிலை காதலிக்கிறாள். அந்த ஹீரோயினை திருமணம் செய்ய வேண்டுமென்பது இன்னொரு வில்லனின் ஆசை. ஹீரோக்கும் வில்லனுக்கும் மோத காரணம் கிடைத்து விட்டது.


படத்தோட ஹைலைட் க்ளைமேக்ஸ்ல சுனில் காட்டற 6 பேக் தான், நிஜமா நான் எதிர்பார்க்கலை. படம் ஆரம்பத்துலருந்து காமெடி, சென்டிமென்ட்டா போய்ட்டுருக்கு. ஆனா நல்ல திரைக்கதை. காமெடி பிடிக்கறவங்க பாருங்க. விரசமில்லாத நகைச்சுவை அதிகம்.

படத்தோட ட்ரெய்லர்.மறக்காம கருத்துக்களும் தமிழ்10ல் ஓட்டும் போட்டுருங்க.

Tuesday, 17 July 2012

CRAZY,STUPID,LOVE - MOVIE REVIEW

அன்பர்களுக்கு வணக்கம், ஏனோ தெரியவில்லை, பல த்ரில்லர் படங்கள் எடுத்து வைத்தாலும் என் மனம் எப்போதும் காதல், நகைச்சுவை படங்களை நோக்கியே செல்கிறது. ரொமென்டிக் காமெடி வகையில் உலக அளவில் அதிக வசூல் செய்த படத்தை பற்றித்தான் இன்று பார்க்கப் போகிறோம். CRAZY,STUPID,LOVE.


 படத்தில் எடுத்தவுடன் ஒரு தம்பதிகளை காட்டுகிறார்கள், இருவரும் A 40YEAR OLD VIRGIN படத்தில் இனைந்து நடித்தவர்கள். இருவரும் விவாகரத்தை பற்றி பேசுகிறார்கள், காரணம் மனைவிக்கு வேறு ஒருவருடனான தொடர்பு. கடுப்பில் மனிதன் ஓடும் காரில் இருந்து குதித்து விடுகிறான் என்றால் பாருங்கள்.


அவர்கள் வீட்டில் அவர்களது 13 வயது சிறுவன் தன்னை விட 8 வயது பெரிய பென்னை காதலிக்கிறான். அந்த பென்னோ நம்ம ஏமாந்த ஹீரோ (45 வயசு)வ காதலிக்கறா. இதுதான் கதைக்களம்.


சரி நம்ம விமர்சனத்துக்கு வருவோம். பொன்டாட்டி தப்பு பன்றானு தெரிஞ்சதுக்கப்புறம் அவன் செவ்வாய் கிரகத்து ஏலியனா இருந்தாலும் டாஸ்மாக் போகனும்ங்கறது விதி, நம்ம வயசான ஹீரோவும் அங்கன போய் புலம்பிட்டு இருக்கார்.

அங்கதான் இன்னொரு சின்ன வயசு ஹீரோ வர்ரார், அவருக்கு பொழப்பு என்னன்னா தினமும் இந்த மாதிரி பாருக்கு வந்து பொன்னுங்களை கரெக்ட் பன்னி வீட்டுக்கு கூட்டிப் போறதுதான். அந்த மூட்ல வந்தவர் முதல் ஹீரோவோட புலம்பல் தாங்காம அவரை கூப்பிட்டு அட்வைஸ் பன்றார்.

கொஞ்சம் கொஞ்சமா எப்படி பொன்னுங்களை கரெக்ட் பன்றதுனு சொல்லிக் குடுத்து அவரையும் மைனர் குஞ்சா மாத்தறார். இன்னொரு பக்கம் அந்த சின்ன பையன் தான் லவ் பன்ற பெரிய பொன்னை கரெக்ட் பன்ன நிறைய சேட்டை பன்றான்.

படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச சீன் இதாங்க. நம்ம சின்ன ஹீரொகிட்ட ஒரு பொன்னு ஏமாந்த கடுப்புல என்னை உன் வீட்டுக்கு கூட்டிப் போய் என்ன வேணா பன்னிக்கோனு வருது, ஆனா வீட்டுக்கு போனா எதுவும் செய்ய விடாமா பேசிகிட்டே இருக்கு.


கொஞ்சம் கொஞ்சமா ஹீரோக்கு செக்ஸ் அ விட மனசளவுள ஒன்னு சேர்ரதுதான் பெரிய சந்தோஷம்னு புரியுது. நம்மளை பிடிச்ச பொன்னு கூட தப்பான எண்ணம் இல்லாம ஒரே போர்வைக்குள்ள படுத்துகிட்டு மனச விட்டு பேசற சுகம் செக்ஸ்ல கிடைக்காதுங்க. அவங்களுக்குள்ள லவ் ஸ்டார்ட் ஆகிடுது.


நடுவுல பெரிய ஹீரோ ஒரு வேகத்துல தான் பையன் படிக்கற ஸ்கூல் டீச்சரையே கரெக்ட் பன்னி மேட்டர் முடிக்க, அது அவர் மனைவிக்கு தெரிய வர அந்த பக்கம் தனி பஞ்சாயத்து.

அந்த டீன் ஏஜ் பொன்னு வயசான ஹீரோவ கரேக்ட் பன்ன நிர்வாணமா போட்டோ எடுத்து வைக்கறத அவங்கப்பா பார்த்துட்டு ஹீரோவ அடிக்க ஓடுறார். சின்ன ஹீரோ கரெக்ட் பன்ன பொன்னு யாருன்னா பெரிய ஹீரோவோட மூத்த பொன்னு, இவங்களுக்குள்ள பெரிய ஹீரோயினோட கள்ளக்காதலனும் வந்து சேர பெரிய கலவரமே நடக்குது.


எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சு அவங்கவங்க ஜோடியோட எப்படி சேர்ராங்கங்கறது தான் படத்தோட கதை.  எனக்கென்னன்னா ஹீரோயின்ஸ் அ இன்னும் கொஞ்சம் பெட்டர் ஆ செலக்ட் பன்னிருக்கலாம்னு தோனுது.

படம் காமெடினு சொன்னாலும் காதல் காட்சிகளை கவிதை மாதிரி எடுத்துருக்காங்க, எல்லா காதல்லயும் பிரிவு வரும், அது காதலை வலுப்படுத்தறதுக்குத்தாங்கறதுதான் கதைக்கருன்னு நான் நினைக்கறேன்.

படத்தோட ட்ரெய்லர்மறக்காம கருத்தை தெரிவிச்சுட்டு தமிழ்10ல ஓட்டு போட்டுருங்க.


Monday, 16 July 2012

ஆடி 1 - கொண்டாட்டம்/தேங்காய் சுட்டிங்களா?

அன்பர்களுக்கு வணக்கம், ஆடி மாசம் இன்னைக்கு ஆரம்பிச்சுருச்சு, இனி எல்லா ஊர்லயும் மாரியம்மன் பண்டிகை நடத்துவாங்க, கூழ் ஊத்துவாங்க, ஆடி 18 வந்தால் காவிரி ஆறு போற பக்கமெல்லாம் அமர்க்கலமா இருக்கும். 

எல்லாத்துக்கும் மேல ஆடி மாசம் எல்லா துணிக்கடைலயும் தள்ளுபடிய நடிகைகளை வச்சு ஊர் முழுக்க சொல்லுவாங்க, எல்லாத்துக்கும் தயாராகுங்க.  உங்க ஊர்ப்பக்கம் ஆடி 1 அ கொண்டாடுவிங்களா?

எங்க மாவட்டம்ல தேங்காய் சுடற பண்டிகைனு கொண்டாடுவோம், ஆடி மாசம் முழுக்க அம்மனுக்கு பண்டிகை, ஆடி முதல் நாள் வினாயகருக்கு தேங்காய் சுடற பண்டிகை, 


என்னன்னா தேங்காய் வாங்கி உரிச்சு தரைல தேய்ச்சு மொழுமொழுன்னு ஆக்கி ஓட்டை போட்டு உள்ளே வெல்லம், அவுல், கடலை,கடுகுனு என்னென்னமோ ஒரு லிஸ்ட் வச்சு போட்டு குச்சி சொருகி அடைச்சுருவோம்.


அதுக்கு அப்புறம் டெக்கரேஷன், மஞ்சள், குங்குமம் , கரின்னு விதவிதமா கலர் பூசுவோம், எதுக்குனா ஒரு தெருவுல இருக்க எல்லாரும் ஒன்னா ஒரே நேரத்துலதான் தேங்காய் சுடுவோம். அப்ப யாரோட தேங்காய் அழகா இருக்குனு சீன் போடத்தான்.


நான் பெரியவனாயிட்டேன், தேங்காய் சுடறதுலாம் சின்ன பசங்க வேலைனு சொல்லி தப்பிக்க பார்த்தேன், எங்க அண்ணன் பொன்னு இப்பதான் LKG படிக்கறா, அவ சார்பா சுட வச்சுட்டாங்க, எங்க அண்ணண் சும்மா இருந்துருப்பாரேனு நினைக்காதிங்க, அவர் 6 மாச பையனுக்கு தேங்காய் சுட்டுக் குடுத்தார்.

சின்னதோ பெரியதோ வீட்ல அப்பப்ப விசேசம் நடக்கனுங்க, பெரியவங்க சும்மா எல்லாத்தையும் செய்யலை, குடும்பம் ஒன்னு சேர்ந்து ஒரு விசயத்தை செய்யும் போது கிடைக்கற சந்தோஷமே தனி.