சாரல் காலம் 6

சாரல் காலம் - முந்தின பாகங்கள்

#0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 /#7 /#8 /#9 / #10
=========================================================
மணி 4.30 இருக்கையில் சூர்யா கிளப்பி விட்டு ஹரியை தயாராக்கி வீட்டு முகப்பிற்கு அழைத்து வந்தான், இன்று மாலை நிச்சயதார்த்தம், தூங்கும் போதும் எழும் போதும் ஹரிக்கு காயத்ரி நினைவு தான், வேற ஏதாவது உருப்படியான பிரச்சனை இருந்தா அவன் ஏங்க இப்படி இருக்க போறான்?

ஹரியின் கண்கள் யாரைத் தேடுகின்றன என்று சூர்யாவிற்கு தெரிந்தது, அவனால் எளிதாக யூகிக்க முடிந்தது, மதிய உணவை மணப்பெண்ணுடன் உண்ணும் அளவிற்கு நெருங்கிய பெண்கள் கட்டாயம் அங்கேதான் இருப்பார்கள், விசேசம் துவங்கையில் தான் வருவார்கள் என்று.

சூர்யா "மச்சான், ரொம்ப தேடாத, பார்க்க நல்லாயில்லை, காயத்ரி வனிதா அக்கா கூடத்தான் இருப்பா"

"உனக்கு எப்படி தெரியும்?"

"யோசிச்சா உனக்கும் தோணும், ஆனா உன்னால அது இப்ப முடியாது விடு"

மணப்பெண் கூடத்திற்கு அழைத்து வரப்பட்டாள், உடன் காயத்ரியும் புதிதாய் மிக அழகாய் நின்றிருந்தாள், ஹரி கண்ணிமைக்காமல் பார்த்தான். திடிரென அவனுக்கு ஒரு சந்தேகம்

http://www.gulte.com/content/2012/04/news/Samantha---s-15-25-challenge-in-Bollywood---1312.jpg

"இவ உண்மையிலேயே இவ்வளவு அழகா? இத்தனை நாள் பார்க்கும் இந்த அழகு என் கண்ல படலையே, உள்ளே மறைஞ்சுருக்க அழகை வெளிய காட்டறதுக்குதான் காதல் தேவைப்படுதா? ஒரு வேளை ஓவர் மேக் அப்போ? சீச்சீ ஆனா என்னால கண்ணை அவளை விட்டு நகர்த்த முடியலையே, என்னமோ வர மாதிரி இருக்கே, கவிதையா? வித்தியாசமா ஏதோ சத்தம் கேட்குதே"

சூர்யா"டேய் போன் அடிக்குது எடுறா"

கண்ணை எடுக்காமலே போனை எடுத்து காதில் வைத்தான்.

"ஹலோ"

பாலா "டேய் பரதேசி, தூங்கிட்டிருந்தியாடா? எத்தனை மெசெஜ் போடறது? ஒரு ரிப்ளை கூட வரலைன்னு மிஸ்ட் கால் குடுக்க கால் பண்ணா மட்டும் அட்டென்ட் பன்ற? நாயே கைலதான் வச்சுட்டு இருந்தியா?"

"மெசெஜ் அனுப்புனியா,........................ அட ஆமாடா, நான் பார்க்கலை, என்னன்னு சொல்லு?"

"கருமம் பிடிச்சவனே, பஸ் ஸ்டாண்டுக்கு வந்து தொலை, நாங்க வந்தாச்சு"

ஹரி, வனிதாவிடம் சொல்லி டிரைவருடன் ஒரு கார் எடுத்துக் கொண்டு நண்பர்களை அழைத்து வர சென்றான். உள்ளுக்குள் உதறல், காயத்ரி விசயத்தை சொல்லலாமா? நாம் சொல்லவில்லையென்றால் சூர்யா சொல்லி விட்டால்? பார்ப்போம்.

நான்கு நண்பர்கள் வந்திருந்தார்கள், 4 பேருக்கும் சேர்த்து ஒரே பேக், வண்டியில் செல்ல துவங்கியதும் ஒவ்வொருவராக பேச துவங்கினர், அவர்கல் பேச்சிலேயே அவர்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.

கன்னன் "டேய் ஹரி, பட்டாசு கிளப்பற? ரொம்ப அழகா தெரியறயே? என்ன விசயம்?"

"ஹரி "டேய் கன்னா? உனக்கு மட்டும் எப்புடிடா நான் தூங்கி எழுந்து வந்தா கூட அழகா தெரியறேன், ஒரே வசனத்தை பேசிகிட்டு சுத்தாம, மூடிகிட்டு இரு"

பாலா "டேய் மச்சான், வனிதாகிட்ட பேசுனியா?"

ஹரி "அவங்க வீட்டுக்கு வந்துருக்கோம், பேசாம எப்படி? "

பாலா "மச்சி, புடவைலாம் கட்டி சக்கையா இருந்துருப்பாளே?"

ஹரி "டேய், இவன் பேசறதை பார்த்தா, ஆரம்பத்தில நாம வனிதாவ கிண்டல் பன்னப்ப நமக்கு தெரியாம சைட் அடிச்சுருப்பான் போல?"

பாலா மனதிற்குள் "கண்டுபிடிச்சுட்டானே"

வெளியே "அப்படிலாம் இல்லைடா, வேற யார்லாம் வந்துருக்கா?"

ஹரி "அவ பிராஞ்ச் பசங்க எல்லோருமேதான், நம்ம பிராஞ்ச் பசங்க நேத்தே வந்துட்டாங்க"

பாலா "அந்த பரதேசிங்களை எவன்டா கேட்டான்? வனிதா ஃப்ரெண்ட்ஸ் லருந்து யார் யார் வந்துருக்காங்க?"

ஹரி "தெரியலை, நம்ம செட்ட விட ஜீனியர் செட்லதான் நிறைய பேர் வந்துருக்காங்க"

கன்னன் "ஹரி, பட்டாசு கிளப்பற, எல்லா பொன்னுங்களையும் தெரிஞ்சு வச்சுருக்கயே, கலக்கு, கலக்கு"

ஹரி "இவனி ஏன்டா கூட்டிகிட்டு வந்திங, பாதி வழிலயே பஸ்லருந்து தள்ளிவிட வேண்டியதுதானே?"

மாதேஸ் "சும்மா சமாளிக்காதடா, நீயும் சூர்யாவும் சேர்ந்து காலேஜ்ல எந்த பொன்னை விட்டு  வச்சிங்க, NSS போறேன்னு பார்க்கற பொன்னுங்ககிட்ட எல்லாம் கடலை போடறது தானே வேலை"

அன்பு "அப்படியா, சூர்யா பொன்னுங்களோட பேசுவான்னு தெரியும், ஹரியுமா?"

மாதேஸ் "நீ வேற? இவன் கூட போகும் போது எந்த பொன்னை காட்டி நல்லாருக்குன்னு சொன்னாலும் அந்த பொன்னை பத்தி எல்லா விவரமும் சொல்லி நான் ஏற்கனவே பேசிருக்கேன்னு சொல்லி வெறுப்பேத்துவான்"

அன்பு "அப்படியா, அப்ப ஹரி கூட போனா நிறைய பொன்னுங்க கூட பேசலாம்"

ஹரி 'அப்படிலாம் இல்லைடா, நான் பன்ற அலும்புக்கு காலேஜ்ல எத்தனை பொன்னுங்க காறி துப்பறாங்க தெரியுமா?"

சூர்யா "விட்றா, இப்பதான் உன்னை துப்புன பொன்னுங்களாம் உனக்கு ட்ரிட் தர்ராங்களே, போதாதா?"

கன்னன் "டேய் ஹரி, பட்டாசு"

ஹரி "நீ மூடுறா"

பாலா "என்ன ஹரி, என்கிட்ட எதுவுமே சொல்லை, மறைச்சுட்ட இல்லை?"

ஹரி மனதுக்குள் "எங்கப்பாவை விட நான் அதிகம் பயப்படறது இவனுக்குதான், எதையாவது மறைச்சுட்டா தாளிச்சிடறான்"

ஹரி "டேய் நான் உன்கிட்ட எதையாவது மறைச்சுருக்கனா? இப்பதான்டா உன்னை பார்க்கறேன். நான் சொல்றதுக்கு முன்னாடி அவன் சொல்லிட்டான், அவ்வளவுதான்"

பாலா "அதானே பார்த்தேன், என் மாப்பிள்ளையை பத்தி எனக்கு தெரியாதா?

சூர்யா மனதுக்குள் "அவனை பத்தி எனக்கு மட்டும்தான்டி தெரியும்"

வீட்டை நெருங்கையில் தான் நிகழ்ச்சி துவங்கியிருந்தது தெரிந்தது, ஜன நடமாட்டம் அதிகமாய் இருந்தது, அதிலும் பெண்கள் கூட்டம் அதிகமாய் தெரிந்தது, இறங்கிய கார் கண்ணாடியில் ஒவ்வொருவராய் தங்கள் தலையை வாரிக் கொண்டு, கன்னனை மட்டும் பார்க்க விடவில்லை.

கன்னன் "டேய் டேய் என்னை விடுங்கடா, நானும் தலை சீவனும்"

மாதேஸ் "அப்ப இந்த பேக் அ நீதான் தூக்கனும்"

அவனை சிக்க வைத்து விட்டு அனைவரும் அறைக்கு சென்று உடைகளையும் சரி செய்து  கொண்டனர், சிலர் டக் - இன் செய்தனர், வெளியே வந்ததும் வழக்கம் போல் தனித்தனியாக பிரிந்து கொண்டனர், சூர்யாவும் ஹரியும் ஒரு புறம், அன்பும் மாதேசும் ஒரு புறம் அவர்களுடன் பாலாவும் கன்னனும்.

சூர்யாவிற்கு எந்த நேரத்தில் எது செய்தால் பெண்களுக்கு பிடிக்கும் என்பது நன்றாகவே தெரியும் என்பது ஹரிக்கு தெரியும், அதனால் இந்த மாதிரி சமயங்களில் அவனுடன் தான் ஹரி இருப்பான்.



சூர்யாவும் "நந்தா ராஜ்கிரன்" சொல்வது போல் ஹரிக்கு அட்வைஸ் செய்வான், பொன்னுங்களுக்கு கண்ணை பார்த்து பேசறவனைத்தான் பிடிக்கும் அப்படி இப்படினு அடிச்சு விடுவான்.

ஹரியும் சூர்யாவும் இப்போதுதான் வனிதாவை கவனித்தார்கள், திடிரென்று கலராகி இருந்தாள், இருவரும் பேசிக் கொள்ளாமலேயே அவளை பார்த்து சிரித்தார்கள். மேக் அப்.

ஹரி "இப்படி ஏதாவது ஃபங்சன் ல மேக் அப் ல பார்த்துட்டுதான் அவ பிராஞ்ச் குமார் மயங்கி இருப்பான்னு நினைக்கறேன்"

சூர்யா "அவனை விடு, நம்ம பாலா ஏன் இவளை ஓவரா வர்ணிக்கிறான்னு தெரியுமா?"

ஹரி "வனிதாவுக்கு தான் தெரியும், என்ன சொக்கு பொடி போட்டாளோ?"

சூர்யா "அப்ப இன்னைக்கு பாலா அவகிட்ட ஜொள்ளு விடுவான்ங்கற?"

ஹரி "நாமல்லாம் இல்லைனா விடுவான், இருக்கும் போது காட்டிக்க மாட்டான்"

சூர்யா "வனிதாவை விடு, உன் ஆள் பாரு, சிரிச்சுகிட்டு இருக்கா"

ஹரி எதுவும் பேசாமல் அப்படியே பார்த்து கொண்டிருந்தான், மனதுக்குள் ஒரு முறையாவது தன்னை திரும்பி பார்க்க மாட்டாளா என்ற ஏக்கம், அந்த ஏக்கமனைத்தும் அவனை அறியாமல் பெருமூச்சாய் வெளி வந்தது.

சூர்யா "மச்சி, பசங்ககிட்ட சொல்லட்டுமா?"

ஹரி "உன் இஷ்டம்"

சூர்யா "பேசாம, வனிதாகிட்ட கேட்போமா?"

ஹரி "என்னன்னு கேட்க?"

சூர்யா "முதல்ல அந்த பொன்னை பத்தி விசாரிப்போம்"

ஹரி "எதை விசாரிக்கறது?"

சூர்யா "நிறைய இருக்குடா, அவ குடும்பம், அவ புக்கிங் ஆ? ஃபிரியா? உன்னை மாதிரி பசங்கனா பிடிக்குமா? பிடிக்கலனாலும் பேசற அளவுக்கு பக்குவம் இருக்கானு நிறைய தெரிஞ்சுக்கனும்"

ஹரி "ஏண்டா, இவ்ளோ கேட்டா வனிதா லவ் பன்றதா நினைச்சுக்க மாட்டா?"

சூர்யா "அதை அப்படி சொல்ல கூடாது, லவ் பன்றதை கண்டு பிடிச்சுட மாட்டானு கேடகனும்"

ஹரி 'லவ்வா? யார்?'

சூர்யா "யார்ரா? நான் தான், எனக்காகதான் விசாரிக்கறேன்"

ஹரி "என்னடா சொல்ற? நிஜமாலுமா?"

சூர்யா"ஆமா, இப்ப நீ ஒத்துக்கறியா? இல்லை நான் லவ் பன்ன ஆரம்பிச்சுருவேன், அன்புகிட்ட சொன்னா உடனே காதலிக்க ஆரம்பிச்சு கைய கிழிச்சுக்க கூட தயங்க மாட்டான், தெரியுமில்லை?"

"அப்படியில்லைடா, முதல்லை நானே என்னை உறுதி படுத்திக்கனும், அப்புறம் தானே களத்துல இறங்க முடியும்"

"பார்த்துடா, நம்ம காலேஜ் அ பத்தி தெரியுமுல்ல, ஒரு பொன்னுக்கு ஆள் இல்லைனு தெரிஞ்சா ஒருத்தனுக்கு கூட தூக்கம் வராது, வாழ்க்கை குடுக்க அலைவானுங்க"

"சரிடா நைட் பேசிக்கலாம், அப்படியே உனக்கும் ஏதாவது ஒன்ன பார்ப்போம், வா"

"ஒன்னா? நான் ஏற்கனவே 7 பார்த்து வச்சுருக்கேன், விசாரிச்சுட்டு பேச ஆரம்பிச்சுருவேன்"

"எனக்கு ஏன்டா உன் அளவுக்கு தைரியம் வர மாட்டேங்குது?"

"நீ எல்லா பொன்னுங்களையும் கிண்டல் பன்னாலும் உன் மனசுல அவங்க மேல மதிப்பு அதிகம், தப்பா நினைச்சுடுவாங்களோனு பயப்படற, அதனால உன்னால தைரியமா ஸ்டெப் எடுக்க முடியலை"

அப்ப நீ எப்படி நினைக்கற?"

"என்னை பொறுத்த வரைக்கும் நீ நல்லவங்க சொல்ற பையனும் பொன்னுங்களும் சந்தர்ப்பம் கிடைக்கற வரைக்கும் தான் நல்லவங்களா இருப்பாங்க"

"அதனால"

"அவங்க நம்மளை தப்பா நினைச்சா என்ன? நினைக்காட்டி என்ன?"

"சரி விடுறா? என்னை தப்பா நல்லவனா வளர்த்துட்டாங்க"

"எங்களை மட்டும்? நான் பார்த்த மாதிரி பொன்னுங்களை நீயும் பார்த்துருந்தா உனக்கும் இந்த மாதிரி தயக்கம் லாம் வராது"

"சரி சரி பாலா வர்ரான், வேற ஏதாவது பேசு?"

"எதுக்கு? அவன் நாம என்ன பேசிகிட்டு இருக்கோம்னு கேட்காம அவன் விசயத்தைதான் பேச போறான், ஆனா ஏன் ரொம்ப வேகமா வர்ரான்?"

------------------------------------------------------------------------------தொடரும்----------------


Comments

  1. கல்லூரி அனுபவங்களா? கதை இளமைத் துள்ளலுடன் சுவாரசியமாகத்தான் செல்கிறது

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி நண்பரே...
      அங்கங்கு நடந்த அனுபவங்களின் தொகுப்பு...
      இக்கதையில் வரும் அனைத்து பாத்திரங்களும் உண்மையானவர்களே....

      Delete

Post a Comment

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2