- மழைச்சாரல்: May 2012
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wednesday, 30 May 2012

சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் முன்பு திமுகவினருக்குள் அடிதடி

திமுக இன்று (30.05.2012) அறிவித்த ஆர்ப்பாட்டத்திற்காக முன்னாள் அமைச்சரும், சேலம் மாவட்ட திமுக செயலாளருமான வீரபாண்டி ஆறுமுகம் சேலம் அண்ணாசிலையில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை திறந்த வேனில் வந்தார்.

அவருடன் டி.எம்.செல்வகணபதி எம்பி, வீரபாண்டி ராஜா உள்ளிட்டோர் வந்தனர். தபால் நிலையம் எதிரில் திமுக தொழிற்சங்க உறுப்பினர்கள் (முன்னாள் எம்எல்ஏவும், மாநில இளைஞரணி துணை அமைப்பாளருமான ராஜேந்திரன் ஆதரவாளர்கள்). நின்றிருந்தனர்.

அவர்களை பார்த்த வீரபாண்டி ஆறுமுகம், நீங்கள் பேரணியில் கலந்துகொள்ளுங்கள் என்றார். ஆனால் அவர்கள் அடிப்படியே நின்றனர். அப்போது வீரபாண்டி ஆறுமுகம் சொல்றத கேளுங்கப்பா என்றார்.

இதையடுத்து இருதரப்புக்கும் மோதல் உருவானது. அப்போது ராஜேந்திரன் ஆதரவாளர்கள் முன்னாள் துணை மேயர் ஜி.கே.சுபாஷ், கிச்சுப்பாளையம் வழக்கறிஞர் குணா உட்பட்டோர் மேலும் குவிந்தனர். அதற்குள் காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

கடந்த வாரத்தில் வீரபாண்டி ஆறுமுகம், ராஜேந்திரனுக்கு எதிரான அறிக்கையும், அதற்கு பதிலடியாக ராஜேந்திரன் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு எதிராக அறிக்கையும் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் எதிரொலியாகத்தான் இன்று இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது என்று சேலம் திமுகவினரே குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்த படங்களை காண இங்கே க்ளிக் செய்யவும்.

Tuesday, 22 May 2012

WHATS YOUR NUMBER? பட்டியல் போட்டு காதலிக்கும் கதை- திரை விமர்சனம்


அன்பு நண்பர்களுக்கு, நீண்ட இடைவெளிக்கு பின் சொந்தமாக ஒரு திரைவிமர்சனம், என் நண்பன் ஒருவன் ஏன் எப்பொழுதும் ஆங்கில படத்திற்கு மட்டும் விமர்சனம் எழுதுகிறாய் என்று கேட்டான், தமிழ் படங்களை நான் மற்ற பதிவர்களின் விமர்சனத்தை பார்த்த பின்பே பார்ப்பேன், அதற்குள் குறைந்தது 20 பேராவது அந்த படத்தினை விமர்சித்திருப்பார்கள். அதனால்தான் இப்படி, சரி படத்திற்கு போவோம், "WHATS YOUR NO?"


 இந்த தலைப்பை பார்த்துவிட்டு கதை என்னவாக இருக்கும் என்று நான் பல விதங்களில் யோசித்து பார்த்தேன், ஆனால் இப்படி இருக்கும் என்று சத்தியமா எதிர்பார்க்கலிங்கோ?

படம் ஆரம்பிக்கும் போது, படுக்கையை விட்டு எழுந்து வந்து பாத்ரூமில் மேக் அப் போட்டு கொண்டு திரும்பவும் வந்து படுத்து அப்பொழுதுதான் தூங்கி எழுவது போல்  நடித்து கூட படுத்துருக்கவனை ஏமாத்தும் போதே நான் முடிவு பன்னேன், இது நம்ம ஊர் பொன்னுங்க மாதிரி சரியான தில்லாலங்கடினு, ஹீரோயினுக்கு எதிர் ஃபிளாட்ல குடியிருக்கறார் ஹீரோ, அவருக்கு அறிமுகம் எப்படினா ஷேம்ஷேமா வந்து வாசல்ல இருக்க நியுஷ் பேப்பர் அ எடுத்துகிட்டு கூச்சமே இல்லாம குட்மார்னிங் சொல்றார்,

இதே நம்ம ஊர் படமா இருந்தா 2 வீட்டுக்கும் நடுவுல ஜன்னல் வச்சு அதுல ஹீரோயின் ஒத்த கண்ணுல பார்த்து 3 டூயட் பாடினு கொன்னுருப்பாங்க, நம்ம ஊர்ல எனக்கு பிடிக்காத ஒரே விசயம் ஃபார்முலா, ஏன் ஹீரோயின் ஹீரோவ மட்டும்தான் லவ் பன்னனுமா? சரி நமக்கு எதுக்கு ஊர்வம்பு?
கதைப்படி வேலையை விட்டு அனுப்ப படுற ஹீரோயின் வீட்டுக்கு வர வழில பத்திரிக்கைல ஒரு கட்டுரைல சராசரியா ஒவ்வொரு பொன்னும் கல்யாணத்துக்கு முன்னாடி 10 பேர் கூட தாம்பத்யம் வச்சுக்கறானு போட்டுருக்கறத படிச்சுட்டு அப்பதான் தான் இதுவரைக்கு யார்யார் கூட எத்தனை பேர் கூட படுத்துருக்கங்கறத லிஸ்ட் எடுக்க ஆரம்பிக்கறா, சரியா 19 வருது, நம்ம ஊர்ல பாஞ்சாலிக்கு அப்புறம் பேர் வைக்கலை, 19 நா என்ன பேர் வச்சு கூப்புடறது தெரிஞ்சா யாராவது சொல்லுங்க,


சரினு தங்கச்சியோட நிச்சயதார்த்தத்துல சரக்கடிக்கும் போது தனக்கு சமமா எவளாவது இருக்காலானு விசாரிச்சு பார்த்தா யாரும் 12 அ தாண்டலை, எல்லாரும் என்ன சொல்லறாங்கனா 20 பேருக்குள்ள படுத்து கல்யாணம் பன்றவ குடும்ப குத்துவிளக்கு லிஸ்ட்ல வந்துருவாளாம், இல்லைனா ஐட்டமாம்,சரி இன்னும் லிஸ்ட் ல ஒருத்தன் பாக்கி இருக்கான்னு நினைச்சு நிம்மதியா சரக்கடிச்சுட்டு படுத்து தூங்கிடறா.

 காலைல எழுந்து பார்த்தா பக்கத்துல அவளை வேலைய விட்டு அனுப்பன பாஸ் படுத்துருக்கான், அதாவது லிஸ்ட் 20 அ தொட்டுருச்சு, சரி இவனையாவது கட்டிக்கலாம்னு பார்த்தா சரியான நாத்தம் பிடிச்சவனா இருப்பான், வேற வழியே இல்லை லிஸ்ட் ல இருக்க 20 குள்ள இருக்கவனைதான் கட்டியாகனும், எப்படி கதைல ட்விஸ்ட்?
 


 இப்பதான் ஹீரோவோட உஅதவி ஹீரோயினுக்கு தேவைப்படுது, எப்படினா லிஸ்ட்ல இருக்க ஒவ்வொருத்தனும் இப்ப எங்க இருக்கான், எப்படி இருக்கான்னு கண்டு பிடிச்சு தரனும், அதுக்கு பதிலா ஹீரோ தினமும் கரெக்ட் பன்ற பொன்னுங்களை கழட்டி விட ஹீரோயின் ஹெல்ப் பன்னுவாங்க, எப்படி? அப்புறம் என்னாங்க சொல்லனும்? இந்த விசயத்துல எல்லா நாட்டு படமும் ஒரே மாதிரி தான், எப்படி 2 பேருக்கும் நடுவுல காதல் மோதல் வருதுங்கறதுதான் மீதி கதை, ஆனா உண்மைலயே அதை அழகா சொல்லிருக்காங்க, படத்துல எனக்கு பிடிச்ச சில இடங்களோட புகைப்படங்களை இங்க வரிசையா போட்டுருக்கன், பாருங்க, முதல்ல நைட் திருட்டுத்தனமா பேஸ்கட்பால் விளையாடறது, பந்தயம் ஒவ்வொரு ஷாட்டுக்கும் துணிய கழட்டனும், எப்படி செம கேம்ல்ல?

அப்புறம் ஹீரோயினுக்கு ஹீரோவ பிடிச்சுருந்தாலும் லிஸ்ட்ல 20 ஃபில் ஆயிடுச்சு ஹவுஸ்புல் போர்ட் போட்டும் தன்னோட காதலை ஹீரோ வேற விதமா வெளிப்படுத்தற விதம், அது என்னன்னா "எனக்கு தோணுற வரைக்கும் முத்தம் குடுப்பேன்"னு சொல்லி நீளமா கிஸ் அடிக்கறது.

 அதுக்கு அப்புறம் அவங்களுக்குள்ள ஒரு சண்டை வருது, அதுக்கு அப்புறம் எப்படி அவங்க 2 பேரும் ஒன்னு சேர்ந்தாங்களா இல்லையானு படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க, ஆனா படம் முழுக்க அங்கங்க காமெடி, வசனமும் அப்படித்தான், நடு நடுவுல காதலையும் அழகா வெளிப்படுத்திருக்காங்க,

 படத்தோட கருத்து, காதல் வேற, காமம் வேற, ஒருதடவை ஒருத்தன் கூட படுக்கைய பகிர்ந்துக்கிட்ட ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி, இன்னோருத்தங்க மேல உண்மையான காதல் வராதுநு நினைக்கறது அடி முட்டாள்தனம்.

படத்தோட ட்ரெய்லர்உங்க மனசுல என்ன தோனுனாலும் கொஞ்சம் நாகரிகமாக பின்னூட்ட்மிட்டு தெரிவிக்கவும்.Wednesday, 16 May 2012

உங்கள் வீட்டு பெண்ணை முழுதாக நம்ப வேண்டாம்

அன்பு நண்பர்களுக்கு இனிய வணக்கம், ஒவ்வொரு வீட்டிலும் அவரவர்கள் பெண்ணை அடக்க ஒடுக்கமான பெண்ணாகத்தான் நினைத்து நம்பிக் கொண்டிருக்கிறோம், ஆனால் எல்லோருடைய நம்பிக்கையும் உண்மையாக இருப்பதில்லை, இதோ இந்த காணோளியினை பாருங்கள். இதில் வருபவர்கள் லூதியாணா பகுதியை சேர்ந்தவர்கள், மிக தைரியமாக அவர்களுடைய வீடியோவினை வெளியிட்டுள்ளார்கள், நம்ம ஊர் பெண்களுடைய ஆட்டங்கள் வெளி வருவதில்லை அவ்வளவுதான் வித்தியாசம், ஏன் இது போல் பெண்கள் ஆட்டம் போட்டால் தப்பா என்ற கேள்வியை கேட்க விரும்புவர்கள் தாராளமாக பெண்ணை பெற்றவர்களிடம் கேட்டுப் பாருங்கள்,

இதோ இந்த காணோளி, பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் பின்னுட்டமிடுங்கள்.
Tuesday, 15 May 2012

யார் இந்த மாமனிதர் ?! 'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !!

யார் இந்த மாமனிதர் ?!

'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் !!

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!

கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!

யார் இவர் ?

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .
1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!

மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு

200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.
2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
குடும்பம்
மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!
இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.
மரங்கள் மட்டும் அல்ல

தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300௦௦ ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !!
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.
இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது.

மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.

உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!
'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.

இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்...நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...

-  நன்றி பாமரன் (Pamaran)

Thursday, 10 May 2012

தமிழர்களை மீண்டும் வம்புக்கு இழுக்கும் கேரள அரசு


'நீ நெல் கொண்டுவா... நான் உமி கொண்டுவருகிறேன். இரண்டையும் கலந்து, சமமாகப் பங்கிட்டு... ஊதி ஊதிப் பசியாறலாம்' என்றானாம் ஓர் அதிபுத்திசாலி. அதாவது, 'சதி புத்திசாலி’! முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்துவதால் அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று நிபுணர்களும் நீதிமன்றமும் சொன்ன பிறகும்கூட, தமிழ்நாட்டின் தாகம் தீர்ந்துவிடவே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அநியாய அரசியல் செய்யும் கேரளத்து முதல்வர் உம்மன் சாண்டியும் அப்படி 'சதி புத்தி’யைத்தான் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி ஆகப்போகும் மின்சாரத்தில், சுளையாக 500 மெகா வாட் கேரளத்துக்கு வேண்டுமாம்... பிரதமருக்குக் கடிதம் எழுதி இருக்கிறார் சாண்டி.

மின் தட்டுப்பாட்டால் ஏற்படக்கூடிய இழப்புகளில் இருந்து மீள்வதற்கு வேறு வழியே தெரியாமல்... எத்தனையோ எதிர்ப்புகளையும் மீறி... தன்னையே பணயம்வைத்துத்தான், மத்திய அரசு கொண்டுவந்த கூடங்குளம் அணு மின் திட்டத்துக்கு ஒப்புதலும் ஒத்துழைப்பும் கொடுத்திருக்கிறது தமிழ்நாடு. அப்படி இருக்க... பசுவின் வாய் இருக்கும் முன் பாதியைத் தமிழகத்திடம் கொடுத்து, தீனி போடச் சொல்லிவிட்டு... பால் மடிகொண்ட பின் பாதியைத் தனக்குப் பங்காகத் தரும்படி துளிகூட வெட்கம் இன்றிக் கேட்கிறார் கேரளத்துப் பங்காளி!

மத்தியிலும் கேரளத்திலும் ஆள்வது காங்கிரஸ்தான் என்பதால், இதில் வேறுவிதமான அரசியல் விளையாட்டுகளும் இருக்குமோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. கூடங்குளத்தில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை முழுமையாக தமிழகத்துக்குத் தராமல் தவிர்க்கவே, இப்படி சாண்டியைத் தூண்டி சண்டித்தனம் பண்ணும்படி சிண்டு முடிகிறதோ மத்திய அரசு?

சராசரியாக தினம் எட்டு மணி நேரம் மின்வெட்டால் முடங்கிப்போகும் தமிழகத்தின் வலியை, அரை மணி நேரம் மட்டுமே மின் வெட்டைச் சந்திக்கும் கேரளத்துக்கும் மத்திய அரசுக்கும் உரிய முறையில் 'இடித்துச் சொல்லி'ப் புரியவைக்க வேண்டியது தமிழக முதல்வரின் கடமை!Sunday, 6 May 2012

புகைப்படத்தோடு வாருங்கள்! அழைக்கும் இணையதளம்.

 http://cybersimman.files.wordpress.com/2012/05/aday.jpg


மே 15 ம் தேதியை குறித்து வைத்து கொள்ளுங்கள்;அப்படியே காமிராவையும் எடுத்து வைத்து கொள்ளுங்கள்!
அன்றைய தினம் உங்கள் உலகை ஒரு புகைப்படம் எடுத்து அதனை எங்கள் தளத்தில் சம‌ர்பியுங்கள் என்கிறது ஏடே.ஆர்ஜி.
உலகை ஒரு நாளில் புகைப்படம் எடுத்து அந்த படங்களை பதிவு செய்யும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் இது.
தொழில்முறை புகைப்பட கலைஞர்கள் ஆர்வம் மட்டும் உள்ளவர்கள் என புகைப்படங்களை எல்லோரும் எடுக்கின்றனர்.அதிலும் டிஜிட்டல் காமிரா வருகைக்கு பின் புகைப்படம் எடுப்பவ‌ர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.புகைப்பட வழி பதிவுகளும் அதிகரித்துள்ளது.
புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்காக இணைய சேவைகளும் அதிகரித்துள்ளன.
ஆனால் எடுக்கப்படும் புகைப்படங்களும் ப‌கிரப்படும் புகைப்படங்களும் இணையத்தில் சிதறிக்கிடக்கின்றன.
இந்நிலையில் புகைப்படங்கள் வாயிலாக உலகை புரிந்து கொள்ளும் ஒரு முயற்சியாக ஒரு நாளில் எடுக்கப்படும் அனைத்து புகைப்படங்களையும் திரட்டும் நோக்கத்தோடு ஏடே.ஆர்ஜி இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.இதற்காக தான் மே 15 ம் தேதி தேர்வு செய்ப்பட்டுள்ளது.
புகைப்படக்கலையில் ஆர்வம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் அன்றைய தினம் புகைப்படம் எடுத்து அதனை இந்த தளத்தில் சம‌ர்பிக்க‌லாம்.புகைப்படம் எடுப்பவர் முக்கியமாக கருதும் எந்த விஷயம் பற்றியும் படமெடுத்து சமர்பிக்கலாம். வேலை,வீடு மற்றும் தொடர்புகள் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ புகைப்படங்களை சமர்பிக்கலாம்.புகைப்படங்களோடு அவற்றின் குறிப்பு மற்றும் அதன் பின்னே உள்ள கதையையும் குறிப்பிடலாம்.
சமர்பிக்கப்படும் படங்கள் அனைத்தும் அந்தந்த பிரிவில் இந்த தளத்தில் இடம் பெற்றிருக்கும்.குறிப்பிட்ட படங்கள் தேர்வு செய்யப்பட்டு புகைப்பட புத்தகமாக வெளியிடப்பட உள்ளது.
புகைப்படக்கலையின் ஆற்றலை தினசரி வாழ்க்கையை புரிந்து கொள்ளவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக குறிபிடப்பட்டுள்ளது.புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதோடு நாளைய தலைமுறைக்காக அவற்றை பதிவு செய்வதும் நோக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்வீடனை சேர்ந்த மனித உணர்வுகளுக்கான அமைப்பு (எக்ஸ்பிரஷன் ஸ் ஆப் ஹுயுமைகைன்ட்) என்னும் தன்னார்வ அமைப்பு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.பல்வேறு பிரபலங்களும் இந்த அமைப்போடு கை கோர்த்துள்ளனர்.
இந்த தளம் சொல்வது போல ஒரு நாள்;பல லட்சம் பார்வைகள் இந்த திட்டத்தின் மூலம் காட்சி ரீதியாக பதிவாக வாய்ப்புள்ளது.உலகை அதன் அததனை வண்ணங்களோடும் புகைப்பட கொலாஜாக பார்க்கலாம்.
உங்களது புகைப்படமும் இதில் இடம் பெறட்டுமே!
இணையதள முகவரி;http://www.aday.org/

மலையேறிய அனுபவமுண்டா? இது எனது அனுபவம்

 அன்பு நண்பர்களே, நீண்ட இடைவெளிக்கு பின் உங்களுடன் என் எண்ணங்களை பகிர்வதில் மகிழ்ச்சி. வழக்கம் போல் என்ன எழுதுவதென்று தெரியாமல் பார்க்கும் படங்களுக்கு விமர்சனமும் ரசித்த பதிவுகளை அப்படியே திருடி பகிர்ந்து கொண்டு இருந்தேன், இப்போது முதல் முறையாக சொந்தமாக ஒரு பதிவை எழுதுகிறேன். அதற்காக மறக்காமல் உங்கள் வாழ்த்தினை தெரிவித்துவிட்டு செல்லுங்கள்.

உங்களுக்கு மலையேறிய அனுபவம் உண்டா? மலையேறுதல் என்றால் பழனி, திருப்பதி போன்ற தளங்களுக்கு பஸ்ஸிலோயொ அல்லது படிகளின் வழியாகவோ செல்லுதல் அல்ல, வெறுமனே கால் நடையாக ஏறுதல். என்னை பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதிகம் புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ளவன், இதை எதற்கு சொல்கிறேன் என்றால் பாலகுமாரனின் பல புத்தகங்களில் மலையேறுதல் உடலுக்கும் மனதுக்கும் எவ்வளவு நல்லது என கூறியிருப்பார்,
என் நண்பர்கள் பிரபு மற்றும் கண்ணன்

போன வருடம் சித்திரை மாதம் ஆரம்பிக்கும்பொழுதே, என்னுடன் கல்லூரியில் வேலை பார்க்கும் என் நண்பன் பிரபு (வருசம் தவறாமல் மலையேறுபவன்) என்னை மேட்டூர் பக்கத்தில் இருக்கும் பாலமலைக்கு சித்ரா பவுர்ணமிக்கு செல்லலாம் என்று அழைத்தான்.
ஏதோ நண்பன் அழைக்கிறான் என்று நான் மட்டும் செல்லாமல் என் நணபன் கண்ணனையும் அழைத்து சென்றேன். மேட்டூரில் இருந்து சற்று தொலைவில் செக்கானூர் பேரேஜ்-ல் இருக்கிறது மலை அடிவாரம். அடிவாரத்தை கண்டுபிடிக்கவே ரொம்ப நேரமானது.
போன வரடம் சித்ரா பவுர்ணாமிக்கு முதல் நாள் இரவு 10 மணிக்கு ஏற ஆரம்பித்தோம். மொத்தம் 7 மலைகள்.ஒவ்வோரு மலைக்கும் அவரவர் விருப்பத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். வட்டப்பாறை, தண்ணிர்பாறை, சிங்காரதோப்பு, மலையாளத்தான்காடு,தோட்டக்காடு என்று.
பிரபு உஷாராக லுங்கி கட்டிக் கொண்டு ஏறினான், நான் தெரியாத்தனமாக லோயர் போட்டிருந்தேன்.முடியலை.ஒவ்வொரு மலையாக ஏறுவதற்குள் உடல் முழுக்க வியர்வை பொங்க ஆரம்பித்தது. அதுவும் எனக்கு சொல்லவே தேவையில்லை, படித்து முடித்து 3 வருடங்களில் வீட்டு சாப்பாட்டால் வளர்ந்திருந்த தொப்பையை தூக்கி கொண்டு ஏறுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது, முதல் மலையை பாதி கடப்பதற்குள்ளே நாக்கு உண்மையிலேயே தள்ள ஆரம்பித்துவிட்டது.
இதில் பெரிய காமெடி என்னவென்றால் கிளம்பும் போது என் உருவத்தை பார்த்து பிரபுவின் அப்பா பிரபுவிடம் "வழியில் முடியவில்லையென்றால் பைகளை இந்த தம்பியிடம் குடுத்து விடு" என்று சொன்னார். உண்மையில் முக்கால்வாசி தூரம் என் பைகளை பிரபுதான் தூக்கிக் கொண்டு சென்றான்.
மூச்சு அதிகம் வாங்கியதாலும் அதிக வியர்வையினாலும் உடலின் உஷ்ணம் அதிகமானது, அது எப்படியோ பிரபு பாதி வழியிலேயே மழை வருவதற்குள் 2 வது மலை ஏறி அங்கிருக்கும் மரத்தடி பாறையில் அமரலாம் என்று முன்பே தெரிந்தவன் போல் சொன்னான், அவன் சொன்னது போலவே நாங்கள் அங்கு போனதும் மழை வந்தது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமியில் மலை ஏறி இறங்குவதற்குள் கண்டிப்பாக மழை வந்து விடுமாம்.
மழையின் பின் காற்று சிலுசிலுவென வீசவும் ஏறுவத்ற்கு சுலபமாக இருந்தது.3வது மலையிலிருந்து 4 வது மலைக்கு போகும் வழிக்கான அடையாளம் மாறிப் போயிருந்ததால் பாதை கண்டு பிடிக்க கொஞ்சம் சிரமப்பட்டோம். 4வது மலைக்கு போய் சேரும் வரை போய் கொண்டிருக்கும் பாதை சரியா என்ற சந்தேகத்திலேயே போனோம்.
4 வது மலைதான் சாப்பாட்டு பாறை இங்குதான் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு காலையில் எழுந்து சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும். அதனால்தான் இந்த பெயர் என்று நினைக்கிறேன். படுத்து தூங்குவது என்றால் எப்படி என்று நினைக்கிறீர்கள்? வெறும் பாறையில் நிலாவை பார்த்துக்கொண்டு கொண்டு போயிருந்தால் ஒரு பெட்சீட்டை வைத்து தூங்க வேண்டும்.
மலையின் உச்சியில் எவ்வளவு பனி இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள், இரவு 2 மணிக்குதான் அங்கு சென்றோம், அந்த பனியிலும் உறங்கி விட்டோம், அவ்வளவு களைப்பு, இருப்பினும் விடியற்காலை பனி எழுப்பிவிட்டு விட்டது. பக்கத்தில் இருந்த குச்சிகளை வைத்து நெருப்பு பற்ற வைத்து குளிர் காய்ந்தோம்.

பக்கத்திலேயே ஊத்து தண்ணிர், அங்கிருக்கும் மலைவாசிகள் வீட்டில் குடம் வாங்கி குளித்தோம், தொடந்து குளித்துக் கொண்டே இருக்க வேண்டும் போல சுகமாக இருந்தது. சாப்பிட்டு விட்டு 7 மணிக்குள் தொடர்ந்து மலை ஏற ஆரம்பித்தோம்.எனக்கு இதுவே அதிகம், எங்களுடன் வந்த பிரபுவின் ஊர்க்காரர்கள் 4 மணிக்கு ஏறிப் போய் திரும்பி வந்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரம் தூங்கியதில் கால் ரத்தம் கட்டி இருந்தது. நேற்று விட ஏறுவதற்கு கஷ்டமாக இருந்தது.
ஆனால் பரவாயில்லை. 6 வது மலை ஒரளவிற்கு சமமாக நடந்து செல்வது போல்தான் இருந்தது.கோவில் கோபுரம் கண்ணுக்கு தெரிந்ததும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை, அப்பாடா ஒரு வழியாக மலைஏறிவிட்டோம் என்று.
அதிலும் ஒரு ஆப்பு இருந்தது. கொஞ்ச தூரம் இறங்கி தீர்த்த குளத்திற்கு சென்று விட்டு படிக்கட்டில் ஏறும் போதுதான் கால் இன்னும் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. பிரபு ஏற்கனவே கன்னனை கைப்பிடித்து மேலே ஏற்றி செல்வதால் நான் மெதுமெதுவா ஏறினேன். கடைசியாக படிகள் முடிந்ததும் முழுவதும் செங்குத்தான பாறைகள். ஸ்பைடர் மேன் மாதிரி 4 காலில்தான் ஏறினேன்.
கோவிலை அடைந்ததும் ஏதோ சாதித்தது போல் இருந்தது. வரிசையில் காத்திருந்து சாமி பார்த்தபின் அங்கே இருந்த பாறையில் அமர்ந்தோம்.11 மணி வெயில் அடிக்கற காற்றில் தெரியாமல் போய்க் கொண்டிருந்தது.
இங்கே ஒரு ஐதீகம் உண்டு, இங்கிருக்கும்(சிங்காரத் தோப்பு) புல்லினை ஒரு கையால் மனதில் ஏதாவது வேண்டுதல் வைத்துக் கொண்டு முடிச்சு போட்டால் அது கண்டிப்பாக நடக்கும் என்று, அப்படி நடந்தால் அடுத்த வருடம் வந்து ஏதாவது புல்லில் இருக்கும் முடிச்சை அவுக்க வேண்டும், முக்கால் வாசி வரும் வாலிபர்கள் காதலுக்காகவும் கல்யாணத்திற்காகவும் தான் முடிச்சிடுவார்கள், அது நிறைவேறியதும் அடுத்த வருடம் அவர்கள் துணையுடன் வந்து முடிச்சினை அவிழ்ப்பார்கள்.
இப்படி ஜோடியாக ஏறும் போழுது ஆண்கள் தங்கள் மனைவியின் கையை பிடித்துக் கொண்டும் சிலர் ரொம்பவும் முடியாத பெண்களை தூக்கி தோளில் போட்டுக் கொண்டும் ஏறுவார்கள், எல்லோரும் கிராமத்து வாசிகள், ஜிம்மிற்கு போகமலேயெ 6 பேக் வைத்திருப்பவர்கள். ஜோடியாக ஏறுபவர்களை பார்க்கும் போது எனக்கும் திருமண ஆசை வந்து போனது.
இறங்குவது வேறு வழியில், சின்ன பள்ளம் வழி, ஒரு மலை இறங்கி ஊத்து தண்ணீர் இருக்கும் இடத்தில் மதிய உணவு  சாப்பிட்டு விட்டு கையில் ஒரு கோலினை எடுத்துக் கொண்டு ஊன்றி ஊன்றி இறங்கினோம், சில சிறுவர்கள் ஏதோ ஓடிப் பிடித்து விளையாடுவது போல் வேகமாக இறங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் தோளில் அவருடைய பையனை தூக்கிக் கொண்டு ஜம்ப் பன்னி ஜம்ப் பன்னி இறங்கி கொண்டிருந்தார்.
வெயில் அதிகமாக இருந்ததால் அதிகமாக தாகம் எடுத்தது, பிரபுதான் அளந்து அளந்து குடுத்தான், கடைசி மலை இறங்கும் போது தரை கண்ணுக்கு தெரிந்தது, ரொம்ப நேரம் இறங்கி மறுபடியும் பார்த்தால் தரை முன்பு பார்த்த அதே தொலைவில் தான் இருக்கும், அப்ப வரும்  பாருங்க ஒரு கோபம், யார் மேல வருதுனு தெரியாது.
ஒரு வழியாக இறங்கி அங்க பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்துல இருந்த பைப்பில் அப்படியே தலையை நீட்டி நனைத்துக் கொண்டு பஸ் ஏறினோம், பஸ்ஸில் அமர்ந்து கண்ணை மூடி திறப்பதற்குள் ஊர் வந்து விட்டது, செம தூக்கம், வீட்டிற்கு வந்து மாலை 6 மணிக்கு படுத்தவன் அடுத்த நாள் 8 மணிக்குதான் எழுந்தேன். நடக்கும் போது கால் பயங்கரமாக வலித்தது, அந்த வலி 3 நாட்களில் சரியாகி விட்டது. ஆனால் ஒரு மாதம் உடலும் மனமும் பயங்கர உற்சாகமாக இருந்தது. மனதிற்குள் அடுத்த வருடமும் கண்டிப்பாக மலையேற வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். 
இது போன வருடம் 2011 ல் நான் மலையேறியது தொடர்பான பதிவு, இந்த வருடத்திற்கான பதிவு விரைவில் வரும். உங்களுக்கு தோன்றும் கருத்துகளை மறக்காமல் தெரிவியுங்கள், இப்பதிவு பிடித்திருப்பின் பகிந்து கொள்ளவும்.

என்றும் அன்புடன்

கதிரவன்

Wednesday, 2 May 2012

புகழ், பணத்திற்காக இளைய ஆதீனமாக நான் பொறுப்பேற்கவில்லை. நித்யானந்தா விளக்கம். - Thedipaar.com

News at Tamilsource,புகழ், பணத்திற்காக இளைய ஆதீனமாக நான் பொறுப்பேற்கவில்லை. நித்யானந்தா விளக்கம். - Thedipaar.com

ஆனந்த விகடன் பேட்டியில் மதுரை ஆதீனம் அருணகிரி....

ஆனந்த விகடன் பேட்டியில் மதுரை ஆதீனம் அருணகிரி....

ஹைடெக் மைக்குகள்... லேப்-டாப்கள் சகிதம் நித்தியானந்தாவின் சீடர்கள்... ‘‘மைக் ஒன் காலிங் மைக் டூ... அங்கே கூட்டம் ஜாஸ்தியா இருக்கு. கன்ட்ரோல் பண்ணுங்க... ஓவர்!’’ என்று மதுரை ஆதீனத்தில் உத்தரவுகள் தூள் பறந்துகொண்டு இருக்க... 100 கார்கள் புடைசூழ வந்து இறங்கினார்கள் நித்தியானந்தாவும் மதுரை ஆதீனமும்.

’’இனி மதுரை ஆதீனத்திலும் ஆட்டம் பாட்டம் டான்ஸ் எல்லாம் இருக்குமா?’’

‘‘அதில் தவறென்ன? அனைவரையும் ஆடவைத்துச் சந்தோஷப்படுத்த நித்தியானந்தா விரும்பினால், அதற்கு நாங்கள் குறுக்கே நிற்க மாட்டோம். இளம் தலை-முறையினர் பக்தியின் சிறப்பை அறியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே அப்டேட் செய்யப்பட்ட டைனமிக் சாஃப்ட்வேர்தான் நித்தியானந்தா!’’

’’இனி ரஞ்சிதாவும் மதுரை ஆதீனத்துக்கு வருவாரா?’’

‘‘நித்தியானந்தரின் உண்மையான சீடர் ரஞ்சிதா. அவர் மேல் எந்தத் தப்பும் கிடையாது. யாரோ செய்த சூழ்ச்சிக்கு பாவம் அந்தப் பொண்ணு பலியாகிடுச்சு. எல்லாச் சீடர்களையும்போல ரஞ்சிதாவும் மதுரை ஆதீனத்துக்கு வருவார். அதை ஆதீனமும் வரவேற்கிறது!’’

படித்ததில் பிடித்தவை!புலி ஒரு ஆளுமையின் குறியீடு

புலி ஒரு ஆளுமையின் குறியீடு. தைரியத்தோட அடையாளம். ”உண்மையில் புலிதான் தனிக்காட்டு ராஜா. காட்டுல அது வெச்சதுதான் சட்டம். அத்தனை ஆக்ரோஷமா இருக்கும் புலி, உண்மையில் ரொம்பக் கூச்ச சுபாவி. தனிமை விரும்பியும்கூட. தனக்குனு ஒரு எல்லையை வகுத்துக்கிட்டு அதுக்குள்ள உலா வர்றது தான் புலியோட இயல்பு. ஒரு புலி அப்படிச் சுதந்திரமா உலா வர, 40 சதுர கி.மீ. பரப்புள்ள அடர்த்தியான வனம் தேவை. இப்போ அதோட எல்லைக்கு உள்ளே நாம அத்துமீறி நுழையுறதாலேயே, புலிகள் அழிவோட விளிம்புல இருக்குங்க
புலிகளின் அழிவுங்கிறது உண்மையில் காடுகளோட அழிவு மட்டும் இல்லை… அது ஒரு நாட்டோட வளத்தின் அழிவு. புலி ஒரு ஆளுமையின் குறியீடு. தைரியத்தோட அடையாளம். உயிர்ச் சங்கிலியில் ஒரு கண்ணி!” - களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்துக்கு நான் கானகப் பயணம் சென்றிருந்தபோது அதன் இயக்குநர் வெங்கடேஷ் உணர்ச்சியும் உருக்கமுமாகப் பேசினார்.
களக்காடு முண்டந்துறையில் சென்ற வாரம் புலிகள் கணக்கெடுப்பு நடந்தது. அதில் கலந்துகொண்ட வாலன்டியர்களுக்குத்தான் இந்தப் பாடம். காட்டுக்குள் ஒரு புலியை நேருக்கு நேர் பார்ப்பது என்பது, ஜெயலலிதாவும் கருணா நிதியும் ஒரே நேரத்தில் சட்டசபைக்கு வந்து, இன்முகத்தோடு பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொள்வதற்கு இணையான அபூர்வ நிகழ்வு. ”ஏழு வருஷமா காட்டுக்குள்ளே சுத்திட்டு இருக்கேன். ஒரே ஒரு முறை புலியோட உறுமல் சத்தத்தை மட்டும்தான் கேட்டிருக்கேன்!” என்கிறார் களக்காட்டின் வனக் காவலர் ஒருவர். புலியின் நேரடி தரிசனத்துக்காகப் பலர் வருடக் கணக்கில் காட்டில் தவம் கிடக்க, ஸ்ரீவில்லிபுத்தூர் மலையில் ‘ச்சும்மா’ ட்ரெக்கிங் போன கல்லூரி மாணவர்கள் சிலர் புலியை நேருக்கு நேர் பார்த்து, அந்த உயிர் பயத்திலும் மொபைலில் போட்டோ எடுத்துத் திரும்பிய கதையும் உண்டு.

மனிதர்களின் வியர்வை வாடையை உணர்ந்ததுமே புலிகள் அந்த இடத்தைக் காலி செய்துவிடும். பிறகு எப்படி அவற்றைக் கணக்கெடுப்பது? நீர்நிலைகளில் பதிந்து இருக்கும் கால்தடம், புலியின் எச்சம், மரத்தில் இருக்கும் நகக் கீறல்கள் ஆகியவற்றை வைத்துதான் கண்டுபிடிக்க வேண்டும். காட்டில் யானைக்கு அடுத்து புலியின் கால்தடம்தான் பெரிதாக, அழுத்தமாக, அழகாகப் பதிந்திருக்கும். அதை அளந்து, அதில் ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ் மாவை ஊற்றி அச்சு எடுப்பார்கள்.

தன் எல்லையைப் பிற புலிகளுக்குத் தெரிவிப்பதற்காக, நகத்தால் மரங்களில் பிறாண்டி வைத்திருப்பார் மிஸ்டர் புலியார். அல்லது உச்சா அடித்து இருப்பார். ஒரு புலியின் உச்சா வாடையைப் பிற புலிகள் மிக எளிதாக, தொலைவில் இருந்தே கண்டுபிடித்து விலகிச் சென்றுவிடும். இது புலிகளுக்கு இடையிலான ரகசிய ஒப்பந்தம். ஒருவேளை இரண்டு ஆண் புலிகள் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டால், சந்தேகமே வேண்டாம்… அடிதடி சண்டைதான். பலவீனமான புலி மல்லாக்கப் படுத்து தன் தோல்வியை ஒப்புக்கொள்ளும் வரை, பலசாலி ஓயமாட்டார்.
 கணக்கெடுப்புப் பயணம் முழுக்கப் புலிகளின் இருப்பு மற்றும் இயல்பு குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டே வந்தார் ரேஞ்சர் ஜெபஸ். காலடித் தடத்தைவைத்தே ஒரு புலி ஆணா, பெண்ணா என்று கண்டுபிடித்துவிடலாம். பெண் புலியின் தடத்துக்கு அருகே புலிக் குட்டிகளின் தடங்களும் இருக்கின்றன.
ஆண் புலி தனிமை விரும்பிதான். ஆனால், ஆயுசுக்கும் தனித்தே வாழ்ந்தால், இனம் எப்படிப் பெருகும்? அங்கேதான் மிஸ்டர் புலியார் தன் ‘தேவை’களுக்காக பெரிய மனசு பண்ணி, பெண் புலியைத் தன் எல்லைக்குள் வாழ அனுமதிப்பார். ஆனால், குட்டி பிறந்த உடனே ஆண் புலியார், பெண் புலியைக் கழற்றி விட்டுவிடுவார். பிறந்து சில வாரங்கள் வரை பார்வைத் திறன் இல்லாமல் இருக்கும் குட்டியைப் பாறை இடுக்கில் உள்ள புதர்களில் மறைவாகவைத்து வளர்க்கும் பெண் புலி.


செந்நாய்கள், சிறுத்தைகள் எனப் புலிக் குட்டியை வேட்டை ஆடப் பல எதிரிகள் இருந்தாலும், மற்ற ஆண் புலிகளிடம் இருந்துதான் குட்டியைக் காப்பாற்ற தாய் அதிகம் போராட வேண்டும். ஏனென்றால், குட்டி இறந்து விட்டால், பெண் புலி அடுத்த ஐந்தே மாதங்களில் இனப்பெருக்கத்துக்குத் தயாராகிவிடும். இதனால், ஏரியாவில் சும்மா அலையும் மற்ற ஆண் புலிகள் குட்டிகளைத் தேடி வந்து கதையை முடித்துவிட்டு, அந்தப் பெண் புலியை மீண்டும் அம்மா ஆக்கும் முயற்சிகளில் இறங்கும்.
இதனால், அதிகபட்ச எச்சரிக்கை உணர்வுடன் இரண்டு வருடங்கள் கஷ்டப்பட்டு குட்டிகளை வளர்க்கும் தாய்ப் புலி. பெரும்பாலும் மனிதர்களைக் கண்டால், சத்தமின்றி விலகிச் செல்வதுதான் புலிகளின் பழக்கம். ஆனால், குட்டியோடு இருக்கும் தாய், மனிதர்களைப் பார்த்தால் தன் குட்டியைக் காப்பாற்றும் நோக்கத்தோடு எதிர்த் தாக்குதலில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம்.
அதனால், காட்டில் புலிக் குட்டியைப் பார்த்தாலே அனுபவம் உள்ளவர்கள் பதறி விலகி ஓடுவார்கள். இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்க்கும் குட்டிக்கு இரண்டு வயதானதும் தாய்ப் புலியே குட்டிகளைத் துரத்தி விட்டுவிடும். வேட்டையாடும் தகுதியை வளர்த்துக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் கட்டாயத் தனிக்குடித்தனம் அது!
காலடித் தடங்களை வைத்து ஒரு பகுதியில் புலியின் நடமாட்டத்தைக் கணித்ததும் அங்கே சென்ஸார் செட்டப்போடு தானியங்கி கேமராவைப் பொருத்துகிறார்கள். இருபுறமும் சென்ஸார் பொருத்திய பாதையைப் புலி கடக்கும்போது, கேமரா தானாகவே இயங்கி ஃப்ளாஷ் அடித்துப் படம் பிடிக்கும். இந்த உத்திக்கு ‘கேமரா ட்ரேப்பிங்’ என்று பெயர். இதிலும் பல வேடிக்கை விநோதங்கள் நடக்கும்.

திடீரென ஃப்ளாஷ் வெளிச்சம் மின்னுவதால் கோபத்தில் காட்டு யானைகள் கேமரா செட்டப்பை ஒரே அடியில் பிடுங்கி வீசிவிடும். அந்தப் பாதையில் கடக்கும் மயில் ஃப்ளாஷை மின்னல் என்று நினைத்து, தோகை விரித்து ஆட ஆரம்பித்துவிடும். பதிவாகும் படங்கள் முழுக்க மயிலாகவே இருக்கும். குரங்கு என்றால் இன்னும் கேட்கவே வேண்டாம். ஃப்ளாஷ் வெளிச்சத்துக்கு உற்சாகமாகி மீண்டும் மீண்டும் கேமரா முன் வந்து நின்று சளைக்காமல் போஸ் கொடுத்துக்கொண்டே இருப்பார் குரங்கார்.

இரண்டு, மூன்று மலைகளைக் கடந்து நடந்து புலிப் படங்களை எதிர்பார்த்து, கேமராவின் மெமரி கார்டைச் சோதித்தால், பதிவான படங்கள் முழுக்கக் குரங்குச் சேட்டைகளாக இருந்தால், ஒரு வனக் காவலருக்கு எவ்வளவு கொலை வெறி வரும்?

அன்றைய இரவில் கோதையாற்று நீர்த்தேக்கம் அருகில் எங்களை கேம்ப் ஃபயர் போட்டுத் தங்கவைத்தார்கள். ”பயப்படாதீங்க… நெருப்புன்னா எல்லாப் பயலுகளும் பயப்படுவானுங்க. புகை ஸ்மெல் வந்ததுமே பெரியவன் (யானை) ஒரு கி.மீ-க்கு அப்பால போயிருவான்!” என்று தைரியம் கொடுத்தார் வனக் காவலர் ஜான்.

அவருக்கு புலி, எலி எல்லாமே பயலுவதான். ”ஆனா… இந்த சிறுத்தைப் பய மட்டும் நெருப்பைப் பார்த்தா தேடி வருவான். அவுக வாயில உள்ள புழுவைக் கொல்றதுக்காக வந்து நெருப்புல ‘ஆ’ காட்டுவாக!” என்றார். ”ஆ காட்டுனா பரவாயில்லை. நம்மகிட்ட வந்து ஒரு காட்டு காட்டுனா என்ன பண்றது?” என்று எங்களிடம் எழுந்த கேள்விக்கு மையமாகச் சிரித்துவைத்தார். அதற்குப் பிறகு தூக்கம் பிடித்திருக்கும் என்றா நினைக்கிறீர்கள்?

காலையில் கேம்ப் ஆபீஸுக்குத் திரும்பி வந்தபோது, முதல்முறையாக வாழ்க்கையின் மீது ஆசை பிறந்தது

நன்றி :விகடன்