- மழைச்சாரல்: சூது கவ்வும் - நினைச்சு நினைச்சு சிரிக்கலாம்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Saturday, 11 May 2013

சூது கவ்வும் - நினைச்சு நினைச்சு சிரிக்கலாம்

அன்பர்களுக்கு வணக்கம், நானும் ரொம்ப நாளா யோசிச்சுருக்கேன், ஒரு மாஸ் படத்துல ஏன் காமெடி இருக்கறதுல்லை? காமெடி படத்துல மாஸ் காட்ட முடியுமானு? தமிழ் ல இதுக்கு முன்னாடி இப்படி பட்ட படம் தமிழ் சினிமால வந்ததே இல்லைனு சொல்ல மாட்டேன், முயற்சி பண்ணிருக்காங்க, தமிழ் ல வந்த BLOCK COMEDY படங்கள் ல இதுதான் சூப்பர்.

 http://4.bp.blogspot.com/-j7gGEC8rCA4/UYElAqiYcMI/AAAAAAAATH8/KCvTDvcSzqc/s1600/soodhu-kavvum_1364369250.jpg

மன நலம் பாதிக்கப்பட்டவங்களை கதாநாயகனா காட்டி பல படம் வந்துருக்கு, எல்லாருக்கும் டக்குன்னு நினைவுக்கு வர்ர படம் "குணா" தான். ஆனா ஒரு மாதிரி பரிதாபம் கலந்து காட்டிருப்பாங்க. ஆனா முழுக்க முழுக்க சிரிக்க வைக்கற மனவியாதியோட வர்ரார் நம்ம ஹீரோ விஜய் சேதுபதி. அவரோட வியாதி அவர் கண்ணுக்கு மட்டும் தெரியற அவர் கனவு கன்னி "ஷாலு".

 http://southnews.in/wp-content/uploads/2013/04/Soothu-Kavvum-review.jpg

தினமும் பேப்பர்ல வர்ர கடத்தல் சம்பந்தமான செய்திகளை கட் பண்ணி வச்சு அதை ஆழமா படிச்சு 5 ரூல் போட்டுகிட்டு கடத்தல் தொழில் பண்ற தாஸ் கூட டாஸ்மாக் சண்டைல வந்து ஒண்ணு சேர்ராங்க 3 பேர், அவங்களுக்கு ஒரு கதை இருக்கு, ஒருத்தன் பொன்னுகிட்ட லவ்  டார்ச்சர் அனுபவிச்சு வேலைய விட்டவன், இன்னொருத்தன் அலாரம் வச்சு சரக்கடிக்கறவன், இன்னொருத்தன் நயன்தாராக்கு கோவில் கட்டுனவன்.

 http://haihoi.com/Channels/cine_gallery/Soodhu-Kavvum-Movie-Photostills-Gallery-13_S_199.jpg

இந்த குருப் பண்ற முதல் கடத்தல் செமயா இருக்கும், பேங்க் மேனஜர் பொன்னை கடத்தி அந்த பொன்னு கையில போன் அ கொடுத்து "அப்பாவ தைரியமா இருக்க சொல்லுமா"ன்னு சொல்றது, அவங்கப்பாகிட்ட போன்ல "பதட்டபடாதிங்க, மூச்சை இழுத்து விடுங்க " னு சொல்றப்பவே யாருடா இவங்கனு "அட" போட வைக்கறார் இயக்குனர்.

 http://www.bharatmoms.com/uploads/Image/Vijay-Sethupathi-Soodhu-Kavvum-movie-Photos-film-pictures-gallery-wallpapers-reviews-releasing-theaters-chennai-shows-songs-mp3-thambaram-kerala-malaysia-theatres-9.jpg

எல்லாத்துக்கும் மேல அவரோட பேங்க்குக்கே போய் பணய தொகைய வாங்கிட்டு வர்ர சீன் செம மாஸ், அதுல 1000 ரூபாய் கடத்துன பொன்னுகிட்ட கொடுத்து "ஷாப்பிங்க்கு வச்சுக்க" னு சொல்றது செம க்ளாஸ், இந்த குருப்க்கு ஒரு அசைன்மென்ட் வருது, இந்தியாவுல மிச்சம் இருக்க  ஒரே நேர்மையான அரசியல்வாதியோட பையனை கடத்தனும்.

 http://runtamil.com/wp-content/uploads/2013/04/482202_420938428000929_451250617_n169.jpg

இதுக்கு அப்புறம் நடக்கறதுலாம் சொல்லிட்டா ஆர்வம் குறைஞ்சுரும், ஆனா நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்துக்கு அப்புறம் மறுபடியும் வயிறு வலிக்க சிரிக்க வச்சுருக்காங்க, சின்ன சின்ன வசனமா இருந்தாலும் வெடியா சிரிக்க வைக்கறாங்க, ஆனா முழுசா சிரிச்சு முடிக்கறதுக்குள்ள அடுத்த காமெடி பஞ்ச் வந்துரும்.

 http://www.tamilkey.com/wp-content/uploads/2013/02/Watch-Soodhu-Kavvum-Movie-Online-TEASER.jpg

படத்துல பாட்டு 3 தான் ஆனா எல்லாமே செம வித்தியாசமா எடுத்துருக்காங்க, என்னை பொறுத்த வரைக்கும் குறும்பட இயக்குனர்களா இருந்து சினிமாக்கு வந்தவங்க எல்லாரும் அவங்க திறமைய நிருபிச்சுருக்காங்க, அவங்க எடுத்த எல்லா படமும் தமிழ் சினிமா டிரண்டுக்கே புதுசு. சூது கவ்வும் என்னை ரொம்ப பாதிச்சுருச்சு, வெளியே வந்ததுக்கு அப்புறமும் நினைச்சு நினைச்சு சிரிக்க வச்ச விஷயங்கள் நிறைய இருக்கு, முக்கியமா அந்த "இருட்டு அறையில் முரட்டு குத்து" சீன், எப்படித்தான் யோசிச்சாரோ மனுசன்.

 https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQY00JpXlaD1u_y9b1EKtM_KpvbJ39g-Ha5_bZPvgqW-TjhBf8XAg

கண்டிப்பா போய் தியேட்டர்ல பாருங்க, எதுக்கு சொல்றனா வீட்ல 4 பேரா சிரிச்சு பார்க்கறத விட தியேட்டர்ல 1000 பேரா சிரிச்சு படம் பார்க்கறது நல்ல விஷயம். முடிஞ்சா நான் இன்னொரு தரம் போய் பார்க்கலாம்னு இருக்கேன்.

படத்தோட ட்ரெய்லர்


4 comments:

 1. சி(ரி)றப்பான விமர்சனம்... நன்றி...

  ReplyDelete
 2. தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 3. சுடர்13 May 2013 at 22:58

  முதலில் தமிழைக் கொல்லாமல் எழுதிப் பழகுங்கள். இவ்வளவு கேவலமான எழுத்துப் பிழைகளோடு எழுதியவரை இது வரை கண்டதில்லை. கேவலம்!

  ReplyDelete
  Replies
  1. எந்த இடத்துல பிழைனு சொல்லுங்க திருத்திக்கறேன்

   Delete