- மழைச்சாரல்: March 2013
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Saturday, 30 March 2013

சாரல் காலம் 2

சாரல் காலம்

#0 / #1 / #2 / #3 / #4

========================================================
கனவு கண்டதையெல்லாம் காதலியிடம் மட்டும் தான் கூறுப் போவதாய் ஹரி இருக்கையில் அது என்ன கருமமா இருந்தா நமக்கென்ன? அடுத்து என்ன நடக்க போகுதுனு பார்ப்போம், ஆனா ஒன்னு தெரிஞ்சுக்கங்க, ஹரி ஏதோ முதல் முதலா ஒரு பொன்னை பார்த்து காதல் வயப்பட்டு கற்பனைக்கு போய்ட்டதா நினைக்க வேண்டாம்.

ஏதாவது கொலை கேஸ்ல தப்பா அவனை பிடிச்சு போய் போலிஸ் ஸ்டேசன்ல சட்டைய கழட்டி உட்கார வச்சிங்கன்னா கூட அங்க இருக்க ஏதாவது ஒரு லேடிய ஒரே ஒரு தடவை பார்த்துட்டு கண்ணை மூடிட்டு கனவுக்கு போயிருவான்.

"ஹலோ"

"ஹலோ"

"எனக்கு இளையராஜா பாட்டு பிடிக்கும்"

"எனக்கும் தான்"

"எனக்கு கௌதம் மேனன் படம்னா ரொம்ப பிடிக்கும்"

"எனக்கும் தான்"

"எனக்கு உங்களை பிடிச்சுருக்கு"

"எனக்கும் தான்"

தம்தன தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும்....

பாட்டு முடியறப்ப இவன் எந்த பொன்னை நினைச்சு கனவு கண்டானோ அது ஃப்ரேம்லயே இருக்காது, வேற யாருக்காவது கால்ஸிட் கொடுத்துருக்கும். இவனோட இந்த கனவு, கற்பனை, சாங் லாம் யாருக்கும் தெரியாது, நீங்களும் யார்கிட்டயும் சொல்லிடாதிங்க, கெத் போயிரும்.

இந்த பொன்னையும் அப்படித்தான் ஏதாவது ஒரு ஆத்தங்கரையோரமா கூட்டி போய் டூயட் பாடிட்டு இருப்பான், ஆனா இதோட முடிஞ்சுருக்கும், அந்த பொன்னும் இவனும் பேசிக்காம இருந்துருந்தா?

நடுவுல சாப்பிட கேண்டின்ல வண்டி நின்னப்ப, கொஞ்சம் நேரம் கழிச்சுதான் இவன் இறங்குனான், ஹரிக்கு முடிவு எடுக்கறதுக்கு எப்பவுமே லேட் ஆகும், கேண்டின்குள்ள போனப்ப செம கூட்டம், ஒரு டேபிள் காலி ஆகற மாதிரி தெரிஞ்சது, போய் பக்கத்துல நின்னான். அந்த பொன்னும் வந்து நின்னது, இட நெருக்கடினால ஏதோ ஒன்னா நிக்கற மாதிரி.

"பஸ் ஸ்டாண்ட்ல இத்தனை பேர் இருக்காங்க, எதுக்காக அவ சரியா என்கிட்ட வந்து அடுத்த பஸ் எப்பனு விசாரிக்கனும்?"

"எதுக்காக அவ சரியா என்கிட்ட வந்து 100க்கு சேஞ்ச் இருக்கானு கேட்கனும்?"னு சப்பை விசயத்துக்கெல்லாம் ஏதோ இவன்கிட்ட வந்து "I LOVE YOU" சொன்ன மாதிரி ஃபீல் பன்னுவான், இந்த பொன்னு கூட ஒரே டேபிள் ல உட்கார்ந்து வேற சாப்பிடறான். கேட்கவா வேணும்.

ஏதோ மாமனார் வீட்டு விருந்துக்கு வந்த தோரணை தான், சுத்தி நடக்கறத கண்டுக்கவே இல்லை. சாப்பிட்டு முடிக்கவும் சப்ளையர் வரவும் "போதும் பில் கொண்டு வாங்க"னு அந்த பொன்னு சொன்னது.

இவனும் "ஆமா, பில் கொண்டு வாங்க"னு சொன்னான்.

போய் கைக்கழுவிட்டு வந்து பார்த்தா பில் கொடுத்துட்டு அந்த பொன்னு போயிருச்சு, இவன் விசாரிச்சப்பதான் 2 பேருக்கும் சேர்த்து ஒரே பில்லா வந்தத அந்த பொன்னு கொடுத்துட்டு போனது தெரிஞ்சது. சந்தோஸமா சப்ளையர்க்கு 50 ரூபாய் டிப்ஸ் கொடுத்துட்டு பஸ் ஏறுறதுக்கு முன்னே அந்த பொன்னை மடக்கி கேட்டான்.

"ஹலோ, என் பங்கு"

"என்ன?"

"இல்லை 2 பேருக்கும் சேர்த்து நீங்க பில் கொடுத்திட்டிங்க"

"ஓ, இருக்கட்டும் பராவாயில்லை"

அந்த பொன்னு போய் உட்கார்ந்துருச்சு, இவன் கிட்ட பேச பிடிக்காம கூட அவ போயிருக்கலாம், அது இப்ப மேட்டர் இல்லை, இவன்கிட்ட 4 வார்த்தை பேசிருச்சு."ஆசை ஒரு புல்வெளி, அதில் ஆண் பெண் இரு பனித்துளி"

ஒரு பாட்டுதான் என் காதுல விழுந்துச்சு, இவன் தஞ்சாவூர் வர்ர வரைக்கும் என்னென்ன பாட்டு பாடுனான்லாம் எனக்கு தெரியாது. அதே நேரத்துல தஞ்சாவூர் பஸ் ஸ்டான்ட்ல இவனுக்காக ஒருத்தன் மனசுக்குள்ள அசிங்க அசிங்கமா திட்டிகிட்டு இவன் செல்லுக்கு தொடர்ந்து கால் அடிச்சுகிட்டு இருந்தான். முதல் கால் வரப்பவே ஹரி சைலண்ட் ல போட்டுட்டான்.

ஹரி மனசுல இப்ப இருக்க கேள்வி....

அடுத்த பாட்டு?


----------------------------------------------------------------------------------------------தொடரும்------சாரல் காலம் 1

"இப்ப தம்மடிக்கலாமா? வேணாமா?"

யோசித்துக்கொண்டே ஹரி கிருஸ்ணன் பெருந்து நிலையத்தில் நடந்து கொண்டிருந்தான்.

"பேசாம பசங்க கூடவே போயிருக்கலாம், வெட்டி சீன் போட்டுருக்க கூடாது, நான் பஸ்ல வர்ரேன்னு சொன்னா எவனாவது கட்டாய படுத்துவான்னு பார்த்தா ஆமாமா இடம் இல்லைனு கழட்டி விட்டுட்டு போய்ட்டானுங்களே"

"முதல்ல பஸ் எத்தனை மணிக்குனு கிளம்புதுனு பார்த்துட்டு தம்மடிக்கலாம்"

பஸ்ஸிற்கு வெளியில் நின்று கொண்டிருந்த கண்டக்டரிடம் 
"அண்ணே, எப்ப எடுப்பிங்க?"
"இன்னும் கால் அவர் இருக்குப்பா"
"சரின்னா, டீ சாப்பிட்டு வந்துடறேன்"


கொஞ்சம் தூரம் நடந்துருப்பான். அவன் கேட்ட அதே கேள்வி, பெண் குரலில், 
 "அண்ணே, எப்ப எடுப்பிங்க?"
மனதில் உற்சாகம் பொங்க திரும்பி பார்த்தான். அதற்குள் கேட்ட பெண் பஸ்ஸிற்குள் சென்றிருந்தாள், பின் பக்கமாய் அவசரமாய் ஏறிப் பார்த்தான்.

"இவளா?"
"அய்யோ இவ பேர் என்ன? மறந்துருச்சே, கிண்டல் பன்னி 2 மாசமாச்சு"

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQd_H6DkVIgHz2J_-uV6GUzWRsaoiASd9aOiQhySOVxzjTJN4-7HQ

ஹரி அடுத்து தம்மை பற்றியெல்லாம் நினைக்கவே இல்லை, மெதுவாய் பூனை நடை நடந்து முன்னே சென்று அமர்ந்தான்.மனதிற்குள்

"ஆத்தா மாரியாத்தா, உனக்கே தெரியும், நான் முதல்ல இவளை பார்க்கும் போது என்ன நினைச்சேன்னு உனக்கே தெரியும், சந்தர்ப்பம் எல்லாத்தையும் கெடுத்துருச்சு, ஏதோ திரும்ப வாய்ப்பு வருது, எல்லாம் நல்லபடியா அமைஞ்சா உனக்கு கும்பாபிஷேகம் பன்றம்மா"

யார் இந்த ஹரி? யார் இந்த பெண்? இருவரும் எங்கு செல்கிறார்கள்? நடுவில் என்ன பிரச்சனை? 

எடுறா கொசுவர்த்திய, சுத்துறா

ஹரி - பொறியியல் கல்லூரி 2ம் ஆண்டு மாணவன். அடிக்கடி ஒரு சந்தேகம் வரும்.

"காதலிக்கிறது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா?"
"காலேஜ் முடிக்கறதுக்குள்ளே கண்டு பிடிச்சுடனும்"
"ஆண்டவா, என் சந்தேகத்தை தீர்க்க ஒரு நல்ல புத்திசாலியான பொன்னா முக்கியமா அழகான இல்லை கொஞ்சம் சுமாரா இருந்தாலும் பரவாயில்லை, அனுப்பி வைப்பா"

வந்தாங்க நிறைய பேர், பழகனாங்க, ஹரிக்கும் அவன் நண்பர்களுக்கும் இந்த கலாச்சாரம் ஒத்து வரலை, கேர்ள் ஃப்ரெண்ட்னா ஒரு வரைமுறை இல்லையா? கட் அடிச்சா திட்டறாங்க, ஃபெயில் ஆனா திட்டறாங்க, ஒரு வாத்தியார்கிட்ட கூட சண்டை போடமுடியறதில்லை, எல்லாத்துக்கும் மேல இங்கிலிஸ் கத்துகிட்டே ஆகனும்னு சொல்றாங்க. 

நெம்ப கஸ்டம் அம்மணினு பழையபடி ஹரி குருப் வெறுமனே சைட் அடிச்சுகிட்டும் கற்பனைல காதலிச்சுகிட்டும் இருந்தாங்க, 2வது வருசம் வந்தப்புறம் அதிகம் பொன்னுங்களை கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க, ஃப்ரெண்ட் ஆ பழகனாலும்  பொன்னுங்கனா ஒரு இளக்காரம், அதுக்கு காரணம் யாருக்கும் லவ் செட் ஆகலைனு கடுப்புதான்.

காலேஜ்ல ANNUAL DAY, வழக்கம்போல கொண்டாடலாம்னு வந்துட்டு இருந்த ஹரி கண்ல அழகா, 2 கையிலயும் புக் அ குறுக்க வச்சுகிட்டு தாண்டி போன பொன்னு ரொம்ப அழகா தெரிஞ்சா, சும்மாவே பொன்னுங்கனா அழகுனு சொல்றவன் கண்ல யாருடா அழகான பொன்னுங்களை காட்டறது?

அந்த பொன்னை பார்க்கற மாதிரி உட்கார்ந்து நடக்கற நிகழ்ச்சிய கண்டுக்காம சை அடிச்சுட்டு இருந்தான், திடிர்னு பதட்டம், ஹரி சைட் அடிச்ச பொன்னு பின்னாடி இருந்த பையன் சட்டைய பிடிச்சு பக்கத்துல நின்னுட்டு இருந்த மேடம்கிட்ட ஏதோ கோபமா சொல்லிகிட்டு இருந்தாள்.

என்னடானு விசாரிச்சா அந்த பையன் பின்னாடி உட்கார்ந்து காலை வச்சு ஏதோ பன்னதா கம்ப்ளைன்ட், ஆனா அவன் நல்ல பையன்தான், தெரியாம பட்டுருக்கும். ஹரிக்கு தெரிஞ்சு போச்சு, இது நமக்கு செட் ஆகாதுனு, அதெப்படி ஒரு ஜீனியர் பொன்னு தைரியமா முதல் வருசத்துலயே சீனியரை கம்ப்ளைன்ட் பன்னலாம்?

அடுத்த 2 மாசம் அந்த பொன்னை எங்க பார்த்தாலும் கேலி.

"ஜில் ஜங் ஜக்"

"அக்கா ஹாஸ்டல்ல தண்ணி வரலை, யார்கிட்ட கம்ப்ளைன்ட் பன்னனும்?"

"ஒரு தென்றல் புயலாகி வருதே"

என்னென்னலாம் தோணுதோ பேசி, பாடி கிண்டல் பன்னாங்க, அப்படியே சைட்ல சைட் அடிச்சது ஹரி மட்டும்தான். அந்த பொன்னு இவனுங்களை கண்டுக்கவே இல்லை, கொஞ்ச நாள்ள போரடிச்சு விட்டுட்டாங்க. ஹரி மட்டும் அங்கங்க பார்க்கறப்ப நிறுத்தி நிதானமா யாருக்கும் தெரியாம முறைச்ச்சுகிட்டே சைட் அடிப்பான்.

காலேஜ்ல படிக்கற முக்கால்வாசி பேருக்கு ஃப்ரெண்ட்னு ஒரு அராத்து இருக்கு, அவ பேர் வனிதா, அவங்கக்கா கல்யாணம், தஞ்சாவூர்ல, அங்க போகத்தான் பஸ் ஏற வந்தான், பொன்னை வேற பார்த்துட்டான். பஸ் டிக்கெட் வாங்குனதும் 8 தடவையாவது கண்ணை மூடி ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் வாய்ப்பு குடுத்து டூயட் பாடுவான். அவனை டிஸ்டர்ப் பன்னாதிங்க, சாபம் விடுவான்.

அவனுக்கு என்னமோ ஒரு உள்ளுணர்வு, 
"இத்தனை நடந்தது எப்படியோ? இந்த நொடியில இருந்து இவளை நான் மனசார காதலிக்கிறேன்."

"என்ன காரணம்?"

"பூமி ஏன் உருண்டையா இருக்கு?"

"அது?????"

"போங்கடா, காதலிக்கறேன்னா விடுங்கடா, காரணம் சொன்னா என்னா காதலிக்க லோனா தரப்போறிங்க?"

----------------------------------------------------------------------------------------தொடரும்-------

பின் குறிப்பு:

கதையின் கன்னன் என்றொரு நபர் வருவார், அதுவரை கொஞ்சம் இழுக்கும், முன்பாகவே சொல்லி விடுகிறேன், மொத்தம் கதையில் 4 காதல் ஜோடிகள் உண்டு, நாலுமே வித்தியாசமானது, அடுத்த பகுதியில் சந்திப்போம். பாராட்டரதுனா வேணும்னா இப்பவே பாராட்டுங்க, திட்டறதுக்கு அவசர படாதிங்க, கன்னன் வந்தப்புறம் பேசி தீர்த்துப்போம்.

சாரல் காலம் - முன்னுரை

அன்பர்களுக்கு வணக்கம், ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களுக்காக வலைச்சரத்தை துவங்கியிருப்பார்கள், எனக்கும் ஒரு காரணம் உண்டு, நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் அனைவரும் நோட்ஸ் எடுக்கும் பொழுது தனியாக நோட் போட்டு கதை எழுதி கொண்டிருப்பேன், அல்லது கதை படித்து கொண்டிருப்பேன், என்னுடன் படித்தவர்களை கேட்டால் அதிகம் தூங்கியதைத்தான் சொல்வார்கள். அப்படி எழுதிய கதைகளை தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்களை தேடிப் பிடித்து கட்டாயப் படுத்தி படிக்க வைத்து கருத்து கேட்பேன்.

அதன் மூலமாக எனக்கு பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். முதன் முதலில் நான் எழுதிய கதை "சாரல் காலம்". முழுக்க முழுக்க காதலும் கிண்டலும் மட்டும் போட்டி போட்டு மோதும் கல்லூரிக்காலம், தனியாக எதையும் கற்பனை செய்யாமல் என் உயிர் நண்பர்கள், நாங்கள் வழக்கமாக செய்யும் விசயங்களை தொகுத்து எழுதப்பட்ட கதை.

எனக்கு டைரி எழுதும் பழக்கம் உடையதால், இக்கதையை படித்த பல கல்லூரி நண்பர்கள் "உண்மையை சொல்றா, இதுல வர்ர எல்லா கேரக்டரும் நம்ம காலேஜ்ல இருக்காங்க, இது நடந்தது தானே?"னு கேட்டதுண்டு. அதற்கு எனது பதில் உண்மையில் நடந்திருந்தால் இப்படித்தான் நடந்திருக்கும். அவ்வளவுதான் என வேண்டுமென்றே அரைகுறையாக முடிப்பேன்.

http://api.ning.com/files/RkmlBfWrKPwe66Hszt2pveQs8wx2Urjg4s6M4H37Tz0JOzRQVdkrbc4-VGCSOHs27WGQ0OUx5wBXwam5VN0RYv9oM-PR5dcF/3dffd0c898eefad5a2e692cd312665ac.jpg

எது எப்படியோ, வலைச்சரம் மூலம் என் முதல் கதையை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். கொஞ்சம் நெடுங்கதை, ஆனால் போரடிக்காது என உறுதியளிக்கிறேன். கூடிய விரைவில் சாரலில் நனைய காத்திருங்கள்.

கதை துவங்கி விட்டது நண்பர்களே... படிப்பதற்கு கீழே உள்ள இனைப்பை உபயோகியுங்கள்.

சாரல் காலம்

#1 / #2 / #3 / #4

Friday, 29 March 2013

கேடி பில்லா கில்லாடி ரங்கா - விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், நேரடியாக படத்திற்குள் செல்வோம், தமிழில் எனக்கு மிகவும் பிடித்த படங்களின் வரிசையில் "பசங்க" படத்திற்கு என்றும் இடமுண்டு, அதன் இயக்குனரின் படைப்பான படத்திற்கு யாருடைய விமர்சனத்தையும் கேட்காமல் போக வேண்டும் என்று நேற்று சென்றேன். மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு நான் கொடுத்த 50 ரூபாய்க்கு இது போதும் என்றுதான் தோன்றியது, ஏனேன்றால் அதே தியேட்டரில்தான் 'அலெக்ஸ் பாண்டியன்' பார்த்தேன். 

 

படத்தில் கதைலாம் இருக்கானு கேட்க கூடாது, ஆரம்பமே அலப்பறைய குடுக்கறாங்க, புது வருசத்துக்கு முன்னாடி நாள் குடிய இத்தோட விடறோம்னு சபதம் எடுத்துகிட்டு குடிக்க ஆரம்பிக்கறப்ப தியேட்டர் முழுக்க விசில், அத்தனை குடிகாரங்களை அரசாங்கம் உருவாக்கி வச்சுருக்கு.

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQWTkH5jkiM_zHrGBO-sNrDZ5IWSXDWJ4eHnaqCRtCl1yKJHl_kEw

மத்த படம் மாதிரி இல்லாம பட ஹீரோனு வர்ர 2 பேருக்கும் கவுன்சிலர் ஆகனும்னாவது லட்சியம் இருக்கேனு சந்தோச பட்டுக்க வேண்டியதுதான். தன்னை பார்த்து கண்ணடிக்கற பொன்னுகிட்ட " நீயெல்லாம் அண்ணன் தம்பி கூட பிறக்கலை?" னு கேட்கறதுல ஆரம்பிச்சு படம் முழுக்க சிவாவோட டைமிங் காமெடிதான் படத்தை காப்பாத்துது.

 http://kollywoodz.com/wp-content/uploads/2012/08/Kedi-Billa-Killadi-Ranga-Movie-Stills04.jpg

அதுலயும் அவர் ஜோடிகிட்ட, பேர் பாப்பாவாம்,
 "உங்க பேர்ல படம் வந்துருக்கு, பாப்பா போட்ட தாப்பா"
"யாரு ஹீரோ?"
"ஹீரோலாம் மேட்டர் இல்லைங்க, மேட்டர்தான் ஹீரோ, cd வேணுமா?"னு கேட்கறப்ப மறுபடியும் விசில்.

விமலுக்கு சரியான வாய்ப்பு களவானிக்கு அப்புறம் அமையலைனுதான் சொல்லனும், ஆனாலும் பராவாயில்லை, எனக்கு இவருக்கு ஜோடியா போட்ட பொன்னு ரொம்ப சுமாராதான் படுது, இல்லை இந்த படத்துல அப்படி காட்டிருக்காங்களானு தெரியலை.

ஆனா நிக்கற மாதிரி நிறைய காமெடி இருக்கு, இவங்களே 3 பவுன் செயின் கவரிங்ல வாங்கி MLA கிட்ட குடுத்து மேடையில போட சொல்றது ஏதோ தமிழின தலைவரை கிண்டல் பண்ற மாதிரி இருக்கு. ஒவ்வொரு ஓட்டா கரெக்ட் பன்னனும்னு முடிவு பன்னிட்டு அதுக்காக டாஸ்மாக்ல வேலை செய்யற பையனுக்கு சால்வை போடறதுலாம் பாண்டிராஜ் டச்.

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcTvSbzCEuSQrvIYG5thKUFxGMXL3ip7WLWItnKXuO0GkHUQSlahTA

"உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் ரோசமில்லை ரோசமில்லை ரோசம் என்பது இல்லையே"

"டேய் என்னை பார்த்து கேவலமா சிரிங்களேன்"

"நீ எத்தனை தடவ என் பொன்னுகிட்ட அடி வாங்கி இருக்க? நான் 470 தடவை, என் பொன்டாட்டிகிட்ட 1280 தடவை, இவ்வளவு ஏன்? என் மாமியாரே என்னை 23 தடவை தூக்கி போட்டு மிதிச்சுருக்காங்கனா பாரேன்"

"சீன்ல ட்விஸ்ட் வைக்கறாங்களாம்"

"டேய் நீங்க அரசியலுக்கு புதுசா? சின்னம் கிடைச்சதுக்கே கொண்டாடறிங்க"

"ஏன்டா, வாங்குன 39 ஓட்டுக்கு ரிசல்ட்க்கு முன்னாடியே வெற்றிக்கு நன்றினு போஸ்டர் அடிச்சத கூட பொறுத்துக்குவேன்டா, ஆனா இந்த 39 ஓட்டுக்கு பொட்டிய மாத்திருவாங்கனு விடிய விடிய தூங்க விடாமா காவல் காக்க வச்சதைதான் தாங்க முடியலை"

"மச்சான் அவங்க தோத்துட்டாங்கடா"
"நாம?"
"நமக்கு டெபாஸிட் தான் போச்சு"

"உன்னையாவது அடிச்சாங்கடா, என்னை முட்டி போட வச்சு மண்டைலயே லவ் பன்னுவியா லவ் பன்னுவியானு கொட்டி அசிங்க படுத்திட்டாங்கடா?"

 "அடுத்தவன் காசுக்கு அப்பனும் பையனும் அலையறத பாரு, எங்களுக்கும் ஜெராக்ஸ் கடைலாம் இருக்கு"


இதெல்லாம் நம்மளை சிரிக்க வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள், எனக்கு சிரிப்பு வருது, ஏன்னா நான் போனது டப்பா தியேட்டர், டிக்கெட் 50 ரூபாய்தான், தியேட்டர்ல இருந்த 90 பேர்ல 60 பேர் எனக்கு நல்லா தெரிஞ்சவங்க, ஒருத்தரை ஒருத்தர் கிண்டல் பண்ணிகிட்டு பார்த்தோம், எல்லாருமே அராத்துங்கறதால டைம்பாஸ் ஆச்சு.

நீங்க முடிஞ்ச வரைக்கும் நண்பர்களோட போங்க, க்ளைமாக்ஸ்க்கு மட்டும் வெளியே போய்ட்டு வாங்க,  படம் முடிஞ்சது போடற க்ளிப்பிங்ஸ் கூட நல்லாதான் இருக்கு.

Thursday, 7 March 2013

ஹரிதாஸ் - பாராட்டப்பட வேண்டிய முயற்சி

அன்பர்களுக்கு வணக்கம், முன்பு போல் நிறைய எழுத நேரமும் மனமும் இருப்பதில்லை, இன்று தான் இப்படத்தினை பார்த்தேன், படம் வருவதற்கு முன்பாகவே கேபிள் சங்கர் அவர்கள் தனது வலைத்தளத்தில் இப்படத்தினை குறிப்பிட்டு கட்டாயம் பார்க்க வேண்டிய படமென்று சொல்லி இருந்தார், நானும் என் நண்பர்களிடம் இப்படத்தினை பற்றி கூறி இருந்தேன், சரி படத்தினுள் செல்வோம்.

http://3.bp.blogspot.com/-rnXqHPrC0d4/USYsHo_vRSI/AAAAAAAAMBc/0lc_xqr_7Bs/s1600/Haridas+Movie+New+Posters+(2).JPG

முதலில் ஆட்டிசம் பற்றி தெரிந்து கொள்வோம், அது ஒரு வகையான குறைப்பாடாக தெரியும் திறமை, இதனை உடையவர்கள் சராசரி சமூகத்தினை பார்ப்பவர்கள் அல்ல, அவர்களுக்கென்று ஒரு உலகத்தினை உருவாக்கி அதனுள்ளே வாழ்பவர்கள், உதாரணத்திற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டின், பள்ளி படிப்பிற்கு தகுதியற்றவர் என்று வீட்டிற்கு அனுப்ப பட்டவர், அவரது தியரி இல்லாமல் இப்போதைய இயற்பியல் இல்லை.

எனக்கு ஒரு தோழி, ஆட்டிசம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை கொடுப்பதற்கான படிப்பை(Rehabilitation science) படித்தவள், அவளிடம் பேசும் போது நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன், நாம் ஒவ்வொருவரும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தான், சிலர் புத்தகத்திற்குள்ளும், சிலர் கிரிக்கெட்டிலும், சிலர் சினிமாக்களிலும் தங்கள் உலகத்தை உருவாக்கி கொண்டுதான் இருக்கிறோம். சரி இதை பற்றி இன்னொரு பதிவில் பேசுவோம்.

http://2.bp.blogspot.com/-7Vq1sKhxsEU/USMF73KWXvI/AAAAAAAAOlE/m1oDKJ8OMmk/s640/Haridas-Movie-Stills02.jpg

படத்தில் இத்தகைய கதைக்களத்தை தேர்ந்தெடுத்த இயக்குனரை பாராட்டி விட்டு கதையை பார்ப்போம், முழுக்க முழுக்க கடுமையான என்கவுன்டர் பணியில் ஈடுபடும் போலிஸ் ஆபிசர் கிஷோர், தனது தாயாரிந் இறப்பிற்கு பின் தன் ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தையை தன்னுடன் அழைத்து வருகிறார், மருத்துவரிடம் கலந்தாலோசிக்கும் போது நிறைய விசயங்கள் தெரிகிறது. முக்கியமாய் முன்னாள் குடியரசு தலைவர் இத்தகைய குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் படிக்க ஏதுவான வகையில் சட்டம் இயற்றியுள்ளார்.

http://mycinenews.com/wp-content/uploads/2013/02/haridas-sneha-still.jpg

அரசு பள்ளி ஆசிரியையாய் வரும் சினேகா, கொஞ்சம் கொஞ்சமாய் குழந்தையை நெருங்கும் சூழல் இயல்பாய் இருக்கிறது, சொல்லிப்போனால் அனைத்து காட்சிகளும் யதார்த்தமாய் எடுக்கப் பட்டுள்ள்ளது, வேண்டுமென்றே திணிக்கப்பட்ட காமெடி காட்சிகள், என்கவுண்டர் காட்சிகள் தவிர, ஆனால் வேறு வழியில்லை, வெறுமனே ஆட்டிசம் பற்றி எடுத்திருந்தால் டாக்குமென்ரி படம் போல் இருக்கும்.

http://l1.yimg.com/bt/api/res/1.2/VMn4z8mmsXF.fblf4e0PNA--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00MDA7cT04NTt3PTYwMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/16370572610.jpg

தன் மகனின் களம் எதுவென்று தெரியாமால் மழையில் அழும் காட்சியிலும், மகனை பைத்தியம் என்று சொன்ன கடைக்காரனை சீறி அறையும் காட்சியிலும், கடைசியில் ஓட்டப்பந்தயத்தில் தனது மகனை சேர்த்து கொண்டாலே அவனுக்கு வெற்றிதான் என கெஞ்சும் காட்சியிலும் கிஷோர் நம் மனதில் இடம் பிடிக்கிறார்.

http://2.bp.blogspot.com/-F_g5kH-6XC0/US2ryS0UbTI/AAAAAAAAU5s/O2RCElC6hPM/s1600/HAR.jpg

யாருங்க அந்த பையன்? அவனோட முகத்தை பார்த்தா நடிப்புனே சொல்ல முடியாது, அவ்ளோ இயல்பா இருந்துருக்கான். நிறைய சின்ன சின்ன கேரக்டரை இயக்குனர் பார்த்து பார்த்து வச்சுருக்கார், இந்த படத்துலயும் குறை சொல்றதுக்கு விசயம் இருக்கு, ஆனா சொல்ல மாட்டேன், அப்புறம் மத்த படத்துக்கும் இதுக்கும் வித்தியாசம் இல்லாம போய்ரும்.

அன்புடன்

கதிரவன்

உங்களின் மேலான கருத்துக்களை தெரிவியுங்கள்