சாரல் காலம் 9

சாரல் காலம் - முந்தின பாகங்கள்

#0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 /#7 /#8 /#9 / #10

-----------------------------------------------------------------------------------------------------------------
ஹரிக்கு எதுவும் பேச இயலவில்லை, அவனையும் சூர்யாவையும் அழைத்து கொண்டு மாதேஸ் வேகமாக பாலா பிடித்து வைத்திருந்த இடத்தருகே சென்று அமர வைத்தான்.

இலை பக்கத்தில் குவளை வைத்து தண்ணீர் ஊற்றி கொண்டிருக்கும் போது ஹரி மெதுவாக மாதேசின் காதருகே சென்று

"மச்சான் அடுத்த பந்தில சாப்பிடலாம்டா"

மாதேஸ் "ஏண்டா?"

ஹரி "சும்மாதான்"

மாதேஸ் "காமெடி பன்னாம உட்காரா"

ஹரி "இல்லடா, அடுத்த பந்தில சாப்பிடலாம், எனக்காக, ப்ளீஸ்டா"

மாதேஸ் "காரணத்தை சொல்லுடா"

ஹரி "காரணம்லாம் ஒன்னுமில்லை, சரி ஒன்னு பன்னலாம், நீங்க சாப்பிடுங்க, நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன்."

சொன்னவாறே ஹரி எழுந்து கொண்டான், மாதேஸ் அவன் கையை பிடித்து நிறுத்தி கேட்டான்.

மாதேஸ் "என்ன பிரச்சனைனு சொல்லிட்டு போடா"

சூர்யா "ஏண்டா, எதுக்குடா அவன் எழுந்து போறேங்கறான், கை கழுவாம சாப்பிட மாட்டானா?"

மாதேஸ் "அப்புறம் சாப்பிடறானாம் தனியா"

சூர்யா "ஏன்னு காரணத்தை சொன்னானா?"

மாதேஸ் "சொல்லலியே, டேய் உன் இலைலருந்து நான் எடுவும் எடுக்க மாட்டேன்டா. உட்காரு"

ஹரி "டேய் அதெல்லாம் இல்லைடா"

மாதேஸ் "அப்புறம் ஒருத்தம் மட்டும் தனியா போனா எப்படி?"

சூர்யா "டேய் ஹரி மச்சான் சொல்றது தான் சரி, ஒருத்தன் மட்டும் தனியா போக கூடாது, இரு நானும் வர்ரேன்"

மாதேஸ் "டேய், YOU TOO?"

சூர்யா "எல்லாம் நட்புக்காக"

மாதேஸ் "அப்ப நானும் வர்ரேன்"

பாலா "எங்கெடா கிளம்பிட்டிங்க, என்னைய விட்டுட்டு?"

மாதேஸ் "அப்ப நீயும் வா"

அன்பு "மச்சான், நான்?"

சூர்யா "வாங்கடா எல்லாரும் போலாம்"

கன்னன் மட்டும் இவர்களை கவனிக்காமல் முதலில் வைத்த கேசரியை எடுத்து வாயில் போடும் போது மாதேஸ்  அந்த கையை பிடித்து தன் வாயில் போட்டு கொண்டான்.

கன்னன் "டெய் ஏன்டா? உன் இலையில வைக்கறத சாப்பிடுறா"

மாதேஸ் "டேய், இவன் மட்டும் உட்கார்ந்து சாப்பிடுறான், கன்னா எழுந்துரு போலாம்"

கன்னன் "டேய் நாய்ங்களா, நீங்க போங்கடா, நான் சாப்பிட்டு வர்ரேன்"

மாதேஸ் "இப்ப நீயா வர்ரியா, இல்லை நாங்க தூக்கிட்டு போகட்டுமா?"

கன்னன் "வந்த தொலையறன்டா... உங்க கூட சாப்பிட வந்ததுக்கு ரொம்ப வருத்த படறேன்டா"

சூர்யா "அதை எங்க கூட கல்யாணத்துக்கு வரும் போதே பட்டுருக்கனும்"

கன்னன் "ஆமா, ஏன்டா எழுந்து போறோம்?"

பாலா "தெரியலை, ஹரி எழுந்து போனான், கூடவே எல்லாரும் போறோம்"

கன்னன் "டேய் எவ்வளவு கஷ்டபட்டு இடம் பிடிச்சேன்டா, போங்கடா"

பாலா "விடுறா கன்னா, நம்ம 6 பேர் இடத்தையும் வேற 6 நல்ல ஜீவன்கள் பிடிச்சுப்பாங்க"

இவர்கள் இப்படி பேசிக்கொண்டே வாயிலை கடந்து வெளியே வந்தனர். இவர்கள் பேச்சை கவனித்த ஒரு பெண் மற்ற பெண்களிடம் போய் தகவல் சொன்னாள்.

"அக்க, 6 பேர் சாப்பிடாமயே கிளம்பிட்டாங்க, இடம் இருக்கும், நாம போலாம்கா"

காயத்ரியும் ஹரி நண்பர்களுடன் வெளியே செல்வதை பார்த்து கொண்டுதான் இருந்தாள். அவள் ஹரியை போல் தேவையில்லாமல் தன்னை குழப்பிக் கொள்ளவில்லை, அதனால் அவளும் சாப்பிட தயாராகத்தான் இருந்தாள்.

அந்த பெண்களின் குழுவில் இருந்தவர்கள் காயத்ரி, சித்ரா. இருவருமே ஒரே வகுப்பு. தீபா, கௌசல்யா வேறு வகுப்பு, வனிதா இன்னொரு பெணுடன் சேர்த்து மொத்தம் 6 பேர்.

அனைவரும் கல்லூரி விடுதியில் தங்கியிருப்பவர்கள், அனைவருக்கும் நெருக்கமான சினேகிதம் வனிதாவுடன் மட்டுமே.

கௌசல்யா "என்னக்கா போலாமா"

வனிதா "நான் எங்கக்கா கூட சாப்பிட்டுக்கறேன், நீங்க போய்ட்டு வாங்க"

சித்ரா "பரவால்லைக்கா, வாங்க போலாம்"

காய்த்ரி "ஆமா, சீக்கிரம் முடிவெடுங்க, அந்த இடமும் கிடைக்காது அப்புறம்"

தீபா "அக்கா, நீங்க எல்லாரும் போய் சாப்பிடுங்க, நான் அப்புறமா சாப்பிடறேன்"

வனிதா "ஏன்டி?"

தீபா "இல்லைக்கா வயிறு முழுக்க சாப்பிட்ட மாதிரி திம்முன்னு இருக்கு, கொஞ்ச நேரம் போச்சுனா பசிக்கும், அப்ப சாப்பிட்டுக்கறேன்"

வனிதா "சரி நாமளும் அப்புறம் சாப்பிட்டுக்கலாம். இப்பவே போனா அலையற மாதிரி இருக்கும்"

சித்ரா "சரி வாங்க, அது வரைக்கும் போய் உட்கார்ந்துக்கலாம்"

அனைவரும் போய் அமர்ந்து கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். தீபாவின் அருகே கௌசல்யா மெதுவாக கேட்டாள்.

"ஏண்டி உனக்கு உண்மையிலேயே பசிக்கலை?"

தீபா "பசிக்கலடி, ஏன் கேட்கற?"

"ஏன் கேட்கறனா, பசிக்குது சீக்கிரம் வாடினு நீதான்டி என்னை இழுத்துட்டு வந்த!!"

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8tXHV6NuFiuXOnU2MET98Fb7CLgaxgHfiKHWl7OP3mYN-gJMkT9oxQIi9iv_QTcZHF3v3lNArAzKykBnmoKK8MzPc9oeEYZI26UnlbkTyy0baCeNVzeVHymYtJGdUHVbiVaL0eIiMWWPw/s1600/Sujitha+%25289%2529.jpg

தீபாவின் கன்னங்கள் சடாரென சிவக்க ஆரம்பித்தது. அவள் பேச முடியாமல் திணறினாள். அவள் மனதில் அவளை பேச விடாமல் விளையாடி கொண்டிருப்பது

"ஹரி"

என்னடா, முக்கோன காதல் கதையானு நீங்க கேட்கறது புரியுது. சும்மா சொன்னேன். அவள் மனதில் இருப்பது

"சூர்யா"

ஆம். தீபாவும் கௌசல்யாவும் கல்லூரி NSS ல் அடிக்கடி சூர்யாவினை பார்த்திருக்கிறார்கள், தீபாவுக்கு சூர்யாவை பார்த்ததுமே பிடித்திருந்தது, ஆனால் அதிகம் குழப்பிக் கொள்ளவில்லை.

அவன் தேவையில்லாமல் பெண்களிடம் பேசாமலிருப்பது தீபாவிற்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் அவனின் இரத்தம் கொடுக்கும் ஆர்வத்தை பார்த்து பலமுறை சிலிர்தததுண்டு.

ஒருமுறை சகக்கல்லூரி பெண் கல்லூரிக்கு வரும் பொழுது வண்டியில் இருந்து கீழே விழுந்து காலில் அடிபட்ட பொழுது, அந்த நேரத்தில் துரிதமாக ஆட்டோ பிடித்து உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றதை பற்றி கேள்வி பட்ட பொழுது ஏதோ இவளை புகழ்வது போல பெருமை பட்டு கொண்டாள்.

தீபா இந்த திருமணத்திற்கு வரும் போது மிகவும் வருந்தினாள். காதலிக்கும் ஆண்கள் ஆரம்ப கட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஒருமுறையாவது காதலியை பார்க்காமல் இருக்கமாட்டார்கள். தீபாவும் அப்படித்தான். திருமணத்திற்கு வந்துவிட்டால் சூர்யாவை பார்க்க இயலாது என்று வருந்தினாள்.

ஆனால் தோழிகளுடன் தஞ்சாவூர் வந்து வீட்டிற்குள் நுழையும் பொழுது சூர்யாவை பார்த்ததும் அப்படி ஒரு ஆனந்தம்.

ஆட்டோகிராஃப் பட பாடலில் வருவது போல

"ஏதோ ஒன்றை தொலைத்தது போல
ஏதோ மீண்டும் கிடைத்தது போல"

அந்த ஆனந்தம் அவள் முகத்திற்கு இரு மடங்கு பிரகாசத்தையும் அழகையும் குடுத்தது. பல பெண்களே திரும்பி பார்க்கும் வகையில் பிரகாசித்தாள்.

தீபாவிற்கு தெரியும் ஹரி காயத்ரியிடம் மயங்கியது. உண்மையில் சொல்லப்போனால் ஹரி காயத்ரியை காதலித்திராவிட்டால் தீபாவிற்கு அவள் காதல் அவளுக்கே புரிந்திரிக்காமல் போயிருக்க கூடும்.

ஏனென்றால் முதலில் ஹரியும் சூர்யாவும் சேர்ந்து காய்த்ரியை தேடும் பொழுது, அவளுடன் அமர்ந்து சாப்பிடும் பொழுதும் ஒரு வேளை சூர்யா காயத்ரியை விரும்புகிறானோ என்ற குழப்பமும் பொறாமையும், தன்னை திரும்பி பார்க்க மாட்டானா என்ற ஏக்கமும் தான் தன் மனதில் சூர்யா குடியேறியதை அவளுக்கே உணர வைத்தது.

ஆனால் தோழி காதலிப்பது தெரிந்தால் மகிழ்ச்சி அடையும் பெண்கள் சிலரே, அதனால் தீபாவால் கௌசல்யாவிடம் தனது எண்ணங்களை வெளியிட இயலவில்லை. ஆனால் அவளே துருவுகிறாள்.

கௌசல்யா "சொல்லுடி, எதுக்கு நீயே கூட்டிட்டு வந்துட்டு இப்போ வேணாங்கற?"

தீபா "இல்லைடி, பசிக்குதுனு சொன்னாதான் நீ சீக்கிரம் வருவேனு அப்படி சொன்னேன், ஆனா கூட்டமா இருக்கு"

கௌசல்யா "சரி, உண்மைய சொல்லு உனக்கு பசிக்குதா? இல்லையா?"

தீபா "பசிக்குது, ஆனா என்னால பொறுத்துக்க முடியும்"

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRd7D9ar82wZzF5uFqqwGIzJoTlUToXhFksG5kQ4yOn8pf1UvMImzhjtNphWmevLWZVazFGMOuQHiPqK1m6nBOPx0efBe-sVgn6fEXM5hJDu3cBKDwzLJdBZTaoD6KDbAaylWukZa0K99q/s1600/Rowdila+Charitra+Movie+stills+%25285%2529.JPG
என்று சொல்லிவிட்டு திருட்டுத்தனமாய் சூர்யாவை தேட துவங்கியது அவள் கண்கள்.

---------------------------------------------------------------------------------தொடரும்---------------



Comments

  1. Replies
    1. இக்கதையில் கடைசி வரை சோகம் என்பதே வராது என்பதை முன்கூட்டியே தெரிவித்து விடுகிறேன் நண்பரே..
      கருத்துக்கு நன்றி...

      Delete

Post a Comment

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2