சாரல் காலம் 13

சாரல் காலம் - முந்தின பாகங்கள்

#0 / #1 / #2 / #3 / #4 / #5 / #6 /#7 /#8 / #9 / #10 / #11 / #12 / 13 / #14 / !5

-----------------------------------------------------------------------------------------------------------------
பெண்களின் நிலையே வேறு, தீபாவிற்கு காதல். அதனால் அவள் உறங்கவில்லை. காயத்ரி சிறு சலனம் ஏற்பட்டாலோ, வெளிச்சம் இருந்தாலோ அவ்வளவு விரைவில் உறக்கம் வருவதில்லை.

http://farm5.static.flickr.com/4098/4791780425_03a60ddfe7.jpg

(படத்திற்கும் கதைக்கும் சம்பந்தமில்லை, ஒரு அழகியலுக்காக மட்டும் சேர்க்கப் பட்டுள்ளது)

கல்யாண வீடு. ஆதலால் சிறுசிறு சப்தங்கள் வந்து கொண்டே இருந்ததால் காயத்ரியும் உறங்கவில்லை. படுத்து கொண்டே இருந்தவள் ஏதோ ஒரு ஞாபகத்தில் எழுந்து உட்கார்ந்தாள். விழித்துக் கொண்டே படுத்திருந்த தீபாவுக்கு யாரிடமாவது பேச வேண்டும் போல இருந்தது.

தீபா "ஏன்டி, தூங்கலையா?"

காயத்ரி "இல்லை, எனக்கு புது இடத்துல சீக்கிரம் தூக்கம் வராது, நீ தூங்கலை?"

தீபா " இல்லை, எனக்கும் உன்னை மாதிரிதான் புது இடத்துல தூக்கம் வராது"

காயத்ரி "வரலனாலும் எப்படியாவது தூங்கியே ஆகனும். இல்லன்னா காலைல நிக்க முடியாது, பயங்கர டயர்ட் ஆகிடும்"

தீபா "ஆமாமா, எப்படியாவது தூங்கனும்"

காயத்ரி "குட் நைட்"

தீபா "குட் நைட்"

தீபாவிற்கு உறக்கத்தை விட சிந்தனை  தான் புதியதாக வந்து கொண்டே இருந்தது. புது இடத்தில் உறக்கம் வராது என்றால் திருமணத்திற்கு பின் புதிய இடத்திற்கு தான் தங்க வேண்டும். அப்போது என்ன செய்வது?

இப்படி யோசித்து கொண்டே அவளும் உறங்கி போனாள். இப்படி அனைவரும் உறங்க ஆரம்பிக்கவே மணி 1 ஆகிவிட்டது.

மூன்று மணிக்கெல்லாம் கல்யாண வீட்டில் மற்ற வேலைகளை ஆரம்பிக்க அனைவரும் எழுந்து தயராக ஆரம்பித்தனர்.

நம்ம பசங்க எப்பவும் கல்யாணத்துக்குனு போனா 8 மணிக்கு முன்பு எழுந்ததாக சரித்திரம், பூகோளம் எதுவுமில்லை.

ஒருவன் காதலிக்க ஆரம்பித்தால் அவனுடைய வாழ்க்கை மட்டுமல்ல, அவன்  நண்பர்களின் வாழ்க்கையும் சேர்ந்து தான் மாறும்.

சரியாக ஐந்து மணிக்கெல்லாம் சூர்யா எழுந்து கொண்டான். அவன் எழுந்ததும் ஹரியை எழுப்பி விட, எப்போதும் முரண்டு பிடிக்கும் ஹரி இன்று "டேய் ஹரி, எழுந்திரிடா" என்று ஒருமுறை சொன்னதும் எழுந்து விட்டான்.

சூர்யா "சீக்கிரமா கிளம்பு, மணி 5 ஆச்சு"

ஹரி "சரி, பசங்களை எழுப்ப வேண்டாமா?"

சூர்யா "வேண்டாம், லேட் பன்னுவாங்க"

ஆனால் ஹரி எழுந்து நடக்கும் போது தெரியாமல் கன்னனின் தொடைப் பகுதியை மிதித்து விட்டான்.

"அய்யோ, அம்மா"

மொத்த அறையும் எழுந்து விட்டது. மாதேஷ் நன்றாக விழித்து கொண்டான்.

ஹரி "டேய் கன்னா, மூடிட்டு படு"

மாதேஷ் "டேய், எங்கேடா போறிங்க?"

சூர்யா "பாத்ரூம் போறோம்டா"

மாதேஷ் "2 பேருக்கும் ஒன்னா வந்ததா? டைம் என்ன?"

ஹரி "மணி 5 தாண்டிடுச்சு"

மாதேஷ் "சரி, எங்கே போறிங்க?"

ஹரி "தூக்கம் தெளிஞ்சுடுச்சுடா, அதான் அப்படியே குளிச்சு ரெடி ஆகலாம்னு கிளம்பனோம்"

மாதேஷ் "யாருக்கு உனக்கு 5 மணிக்கு தெளிஞ்ச்ருச்சா?"

ஹரி "இல்லை, சூர்யாவுக்கு தெளிஞ்சுருச்சு, அவன் என்னையும் எழுப்பி விட்டுட்டான்"

சூர்யா "சரி மச்சான், இரு நாங்க போய்  குளிச்சுட்டு வந்துடறோம். ஹரி நட போலாம்"

மாதேசுக்கு இவர்கள் எங்கோ ரகசியமாக கிளம்புகிறார்கள் என்பது புரிந்தது. ஆனால் எங்கு என்று யோசிக்க தோன்றவில்லை. தானும் பின் தொடர வேண்டும் என்றுதான் தோன்றியது. துனைக்கு அன்பையும் எழுப்பினான். அவன் சாமான்யத்தில் எழுந்திருக்கவில்லை.

போட்டு உலுக்கியதில் அன்புவை கட்டி பிடித்து தூங்கி கொண்டிருந்த பாலா விழித்து கொண்டான்.

பாலா "என்னடா மாப்பிள்ளை?"

மாதேஷ் "ஹரியும் சூர்யாவும் எங்கேயோ கிளம்பறாங்கடா, வா நாமளும் போலாம்"

உடனே பாலாவும் விறுவிறுவென்று எழுந்து கொண்டான். இருவரும் சேர்ந்து உலுக்கியதில் அன்புக்கு லேசாக தூக்கம் தெளிந்தது. அவனை ஏதோ குழந்தையை தூக்குவது போல் மாதேஷ் தூக்கி கொண்டும் இழுத்து கொண்டும் கிளம்பினான். பாலா திரும்பி பார்த்தான்.

கன்னன் நிம்மதியாக ஒரு கையை வயிற்றிலும் ஒரு கையை கண்கள் மீதும் வைத்து உறங்கி கொண்டிருந்தான். அமைதியாக அவனை நெருங்கி பாலா, அவன் தொடையில் ஒரு எத்து விட்டான்.

கன்னன் "என்னடா?"

பாலா "மணி 7 ஆகுது, இன்னும் தூங்கற? உருப்படுவியா? எழுந்திருடா?"

கன்னன் "7- ஆ? (தன் செல்லை எடுத்து பார்த்து) மணி 5 தான்டா ஆகுது"

பாலா "நம்ப மாட்டியா? நம்ம பசங்க என்னைக்குடா 5 மணிக்கு எழுந்து குளிக்க போனாங்க?"

கன்னன் "ஆமாடா பசங்க எங்க போனங்க?"

பாலா "சொன்னன்ல்ல? குளிக்க போய்ட்டாங்க வா போகலாம்"

கன்னன் "டேய் என்னாச்சுன்னே தெரியலைடா, என் செல்லுல மணி 5 னு ஸ்லோவா காட்டுது, இப்ப என்ன டைம்னு சொல்லு மாத்திக்கறேன்"

பாலா "மணி இப்ப 7.10. சீக்கிரம் வா, 7.30க்கு முகூர்த்தம்"

கன்னன் உடனே அடித்து பிடித்து கொண்டு எழுந்து வந்தான், பாத்ரூம் அருகே அன்பு குத்த வைத்து உட்கார்ந்து உறங்கி கொண்டிருந்தான்.

கன்னன் "இங்க பாரு, 7 மணிக்கு உட்கார்ந்து தூங்கறத?"

கன்னன் அப்படி சொன்னதும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அனைவருக்கும் கன்னன் மணி 7 என்று நம்பி கொண்டிருப்பது புரிந்து விட்டது. எல்லோரும் அதை ஆமோதிப்பது போல் எதுவும் பேசாமல் இருந்து விட்டார்கள்.

அதிக பட்சம் 20 நிமிடத்தில் அனைவரும் குளித்து தயாராகி விட்டனர். அறைக்கு வந்து சீராக உடை மாற்றிக் கொண்டு தயாரானார்கள்.

பெண்கள் அறையில் கதையே வேறு. 4 மணிக்கெல்லாம் எழுந்து தயாராக ஆரம்பித்து பொருத்தமாக புடவை அணிந்து கிளம்ப மணி 6 ஆனது.

திருமணத்திற்கு வந்த மற்ற நண்பர்களுக்கு இவர்களின் செயல்கள் ஆச்சர்யத்தை அளித்தது. வழக்கமாக எந்த சிறு விஷயமாக இருந்தாலும் தோண்டி துருவி கேள்வி கேட்கும் பாலா கூட யாரையும் எதுவும் கேட்கவில்லை. நண்பனுக்கு ஒரு காதல் கிடைத்திருக்கிறது என்றால் மகிழ்ச்சிதான், ஆனால் எனக்கும் ஒன்று வேணும்.

கன்னனுக்கு விளங்கி விட்டது. மணி எத்தனை என்று. ஆனால் எதற்காக இவ்வளவு சீக்கிரம் கிளம்பி இருக்கிறோம் என்றுதான் தெரியவில்லை. சரியென்று மெதுவாக அன்புவிடம் கேட்டான்.

கன்னன் "டேய், எதுக்குடா இவ்வளவு சீக்கிரம் கிளப்புனிங்க?"

அன்பு "டேய் நாயே, இவ்ளோ நேரமா நானும் அதைத்தான் யோசிச்சுட்டு இருக்கேன், என்னை கேட்டா? உன்னை எவன் எழுப்பனானோ அவனை கேளு"

கன்னன் "டேய் பாலா, நீதான் என்னை எழுப்பன? நீயே சொல்லு"

பாலா "அது வந்து கன்னா, நேத்து நைட் படுக்க வரப்பவே எல்லா பொன்னுங்களும் காலைல உன்னை சீக்கிரமா எழுப்பி கூட்டி வர சொன்னாங்க"

கன்னன் அதை நம்பியவாறே கேட்டான் 
"என்னையா? எதுக்கு?"

பாலா "என்னடா கன்னா? எல்லாம் உன் அழகை ரசிக்கத்தான்"

பாலா இப்படி சொன்னதும் யாருமே சிரிக்கவில்லை, கன்னன் அவர்களை ஒரு தடவை பார்த்து விட்டு கேட்டான்.

கன்னன் "ஏன்டா, அவந்தான் ஜோக் அடிக்கறானே, சிரிங்களேன்டா"

மாதேஷ் "நாங்க எதுக்கு சிரிக்கனும், அவன் உண்மையதான சொல்றான், நீ அழுகுதானே"

கன்னன் "நான் எதுவும் பேச விரும்பலைடா சாமிகளா"

ஹரி மெதுவாக சூர்யாவிடம் கேட்டான்

ஹரி "மச்சான், நாம வேணா ஏதாவது வேலை செய்யலாமா?"

சூர்யா "என்ன வேலை?"

ஹரி "பொன்னு வீட்டு சார்பா கல்யாண வேலைலாம் செய்யலாம்டா"

சூர்யா "எப்படி, பந்தியில பரிமாறுறது, கூல்ட்ரிங்ஸ் கொடுக்கறது அது மாதிரியா?"

ஹரி "ஆமாடா"

சூர்யா "வீட்ல உங்கப்பா சாப்பிடும் போது தண்ணிர் மொண்டு வச்சுருக்கியா? உங்கப்பாவ விடு உனக்கே உங்கம்மாதான் வைப்பாங்க, எப்படிடா கூசாம வேலை பார்க்கலாமானு கேட்கற?"

ஹரி "இல்லைடா நீதான சொன்ன அவளை காதலிக்கறதை விட காதலிக்க வைக்கறதுல கவனம் செலுத்தனும்னு"

சூர்யா "அதுக்குனு இதெல்லாம் ரொம்ப ஓவர்"

ஹரி "வேற என்ன பன்னா இம்ப்ரெஸ் பன்ன முடியும்?"

சூர்யா "இந்த கல்யாணம் முடியற வரைக்கும் அவளை இம்ப்ரெஸ் பன்றத விட்டுட்டு, அவ எதுல இம்ப்ரெஸ் ஆவானு அவளை முழுக்க அப்சர்வ் பன்னி கண்டு பிடி"

ஹரி "எப்படி மச்சான் இவ்வளவு புத்திசாலி தனமா பேசற? வேற எந்த விஷயத்துலயும் நீ இவ்ளோ தெளிவா பேச மாட்டியே"

சூர்யா "என்னை பொறுத்த வரைக்கும் காதல் ஒரு கேம், வீடியோ கேம்ல வர்ர மாதிரி ஒவ்வொரு ஸ்டேஜ் ஆ தாண்டுனா எந்த பொன்னையும் காதலிக்க வச்சுடலாம்"

ஹரி "இவ்ளோ சொல்றியே, நீ ஏன்டா எந்த பொன்னையும் கரெக்ட் பன்னலை"

சூர்யா "அதுக்கெல்லாம் ஒரு டைம் வரும்டா, உனக்கு தோணுன மாதிரி எனக்கும் ஒருத்திய பார்த்து தோணும் போது பார்க்கலாம்"

இவர்கள் இருவரும் பேசியதை மாதேஷ் கேட்டக் கொண்டுதான் இருந்தான். ஆனால் இருவரும் ஒரு தடவை கூட ஹரியின் காதலி (காயத்ரி) பெயரை சொல்லாதது மாதேசுக்கு ஏமாற்றமாக இருந்தது. 

Comments

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

கலாய்ச்சுட்டாராமாம்...

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்