- மழைச்சாரல்: September 2012
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Sunday, 30 September 2012

22 FEMALE KOTTAYAM திரை விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், என்னவோ எப்போது பார்த்தாலும் வேறு மொழிப் படங்களை பற்றி எழுதுவதற்குதான் நேரம் அமைகிறது, ஏற்கனவே வாங்கி வைத்து ரொம்ப நாள் பார்க்காமல் இருந்து பார்த்த படம், எனக்கு அறிமுகப்படுத்தியது "வல்லத்தான்". படத்தின் பெயர் 22 FEMALE KOTTAYAM.

 

படத்தின் ஆரம்பத்திலேயே தெரிந்து விடுகிறது, ஏதோ ஒரு த்ரில்லர் வகை என எதிர்பார்க்கும் பொழுதே கதை நாயகியின் அறிமுகப்பாடலில் மனம் லேசாகிறது, கொச்சினில் ஒரு பெரிய மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் நாயகிக்கு வெளி நாட்டில் சென்று வேலை பார்க்கும் ஆசை உண்டு. அதற்காக வீசா அப்ளை செய்து வாங்கி குடுக்கும் நிறுவனத்தில் நாயகனை சந்திக்கிறாள்.


கதையோடு நர்ஸ்களின் வாழ்க்கை பற்றியும் சொல்கிறார்கள். வீசா கிடைத்தற்காக ஹீரோவுக்கு ட்ரிட் தரும் பொழுது நிறைய குடித்த ஹீரோயின் தெளிவாக இருப்பதும் போதையேறிய ஹீரோவினை வீட்டில் கொண்டு விடுவதும் நல்ல ரசனைக்குரிய இடங்கள். அதன் பின் கொஞ்சமாய் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கிறது, காதலாகிறது.


ஹீரோ ஏதோ சொல்ல வரும் நேரத்தில் டக்கென்று "I AM NOT A VIRGIN" என ஹீரோயின் போட்டு உடைக்கும் இடம் தற்கால பெண்களின் மனதைரியத்தினை காட்டுகிறது. நல்ல அழகாய் காதல் பூத்து இருவரும் ஒரே வீட்டில் தங்குகிறார்கள், கூடுகிறார்கள், வாழ்வு ரம்மியமாய் போகிறது. ஒரு முறை ஹோட்டலில் வரும் சின்ன சண்டையில் பெரிய இடத்து பையனை அடித்து விட பிரச்சனை பெரிதானதால் ஹீரோ தலைமறைவாகிறார்.

அப்படி தலைமறைவாவதற்கு உதவும் பெரிய மனிதரான பிரதாப் போத்தன் ஹீரோயினிடம் நிலைமையை விளக்கி விட்டு இயல்பாய் உரிமையாய் "CAN I HAVE A SEX WITH YOU?" என்று கேட்கும் இடம், அடுத்து நடக்கின்ற காட்சிகள் யாரும் எதிர்பார்க்காததாய் அமைகிறது.

வழக்கமாய் சினிமாவிலும், பத்திரிக்கையிலும் கற்பழிப்பு பற்றியும் வல்லுறவு பற்றியும் படித்திருந்தாலும் அதன் பின் ஒரு பெண்ணின் உடல் நிலை எந்த அளவு பாதிக்க படும் என்பதை இப்படம் மூலமே அறிந்து கொண்டேன். ஹீரோவால் ஏதும் செய்ய முடியாத நிலை? எல்லாவற்றையும் மறந்து ஒரு புது வாழ்க்கையை துவங்கும் நேரத்தில் ஒரு விடியற்காலையில் "CAN I HAVE SEX WITH YOU ONE MORE TIME? PLEASE, I AM A PATIENT" என்று பயமுறுத்துகிறார் பிரதாப்.


இவரை தமிழ் சினிமா கொஞ்சம் கூட பயன் படுத்திக் கொள்ளவில்லை என்பேன், அதிலும் கடைசியில் "BLOODY BITCH" என்று சொல்லியபடி அவர் இறப்பது நல்ல வில்லனுக்குரிய அடையாளம், உடலால் பாதிக்கப்பட்ட பெண்ணை மனதளவில் கொலை செய்கிறார் ஹீரோ, துரோகம், கஞ்சா கேசில் போலிஸில் சிக்க வைக்கிறார்.

எப்படியோ வாழ நினைத்த பெண் சிறைச்சாலையில், கர்ப்பமாய் இருக்கும் ஒரு பெரிய பெண் தாதாவின் அறையில், அப்பெண் தாதா கதாபாத்திரத்தை நன்றாக காட்டி இருக்கிறார்கள். எதிர்பார்த்தபடியே பிரசவம் பார்ப்பது நாயகிதான். தன்னால் பார்த்து கொள்ளப்பட்ட ஒரு பெரியவர் இறக்கும் பொழுது எழுதி வைத்த சொத்தினை தங்கையிடம் ஒப்படைத்து விட்டு பழிவாங்க தயாராகிறாள் நாயகி.


அந்த தாதாவிடம்

"அக்கா, நான் ஒருத்தனை கொல்லனும்" என்றதும், சிரித்தவாறே

"உன் கதைல 2 வில்லன்களாச்சே, ஒருத்தனை கொன்னா போதுமா?"

"பத்தாது"

என கொலைக்கான திட்டங்கள் செயல் படுத்த படுகின்றன, இதன் பின் வரும் காட்சிகளும் க்ளைமாக்சும் தமிழ் சினிமாவிற்கு புதியது, நம் நகரங்களிலும் இப்படிப்பட்ட வல்லுறவுகள் தொடர்கின்ற நிலையில் ஏன் இது போன்ற படங்கள் வருவதில்லை?


எல்லா கோணங்களிலும் அழகாய் தெரியும் நாயகி, கொடுரமான வில்லத்தனம் காட்டும் பிரதாப், விறுவிறுப்பான திரைக்கதை, வித்தியாசமான கதைக்களம், எதிர்பாராத திருப்பங்கள் என நிறைய நல்ல அம்சங்கள் படத்தில் இருக்கிறது, முதல் பாதியில் வரும் அழகான காதலும் முக்கியமான ஒரு அம்சம், தவறாமல் பார்க்க வேண்டிய படம்.

படத்தின் டிரைலர்நண்பர்களே ஏதேனும் குறை இருப்பின் கருத்தாக தெரிவியுங்கள், பிடித்திருந்தால் மேலே தமிழ்மண ஓட்டுப்பட்டையும், கீழே தமிழ்10 ஓட்டுப்பட்டையும் இருக்கிறது, ஓட்டளித்துவிட்டு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Thursday, 27 September 2012

FERRARI KI SAWAARI திரை விமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், அது என்னவோ தெரியவில்லை, இந்திய சினிமாக்களில் ஒவ்வொரு மாநிலங்களிலும் விதவிதமாய் சினிமாக்கள் வருகின்றன, எனக்கென்னவோ தமிழில் பல்வேறு விதமான படங்கள் வருவது குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது. மற்ற மொழிகளில் 10 விதமான படங்கள் வந்தால் தமிழில் 3 விதங்கள் தான், கருத்துள்ள படங்கள் எடுத்தால் உட்கார்ந்து பார்க்க முடியாத அளவுதான் திரைக்கதை அமைக்கிறார்கள்.

 

சமிபத்தில் ஹிந்தியில் வெளி வந்த படம் ஒன்றினை பார்த்தேன், படத்தின் பெயர் FERRARI KI SAWAARI, பலர் இப்படத்தினை பார்த்திருப்பீர்கள்.  3 இடியட்ஸ் படத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பியிருந்த ஷர்மான் ஜோஷிதான் கதை நாயகன். 

கதைப்படி மகன், தந்தை, தாத்தா என 3 ஆண்கள் மட்டும் வாழும் வீடு, மகனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம், திறமையாக விளையாடுகிறார், அதை முழுமையாய் ஊக்குவிக்கும் அப்பாவாக நாயகன், தெரியாமல் சிக்னலை கடந்ததற்கு போலிஸ் ஐ தேடிப்போய் ஃபைன் கட்டி மகனுக்கு நேர்மையை கற்று தருபவர், எப்போது பார்த்தாலும் எரிந்து விழும் தாத்தா.

 

நேர்மையாய் வாழ்பவர்களிடம் வருமானம் குறைவாகத்தான் இருக்கும், கிரிக்கெட்டிற்கு தேவையான பொருட்களை கூட இன்ஸ்டால்மென்ட்டில் வாங்கும் நிலைமை, அப்படி இருக்கும் பொழுது லண்டனில் நடக்க இருக்கும் கிரிக்கெட் பயிற்சிக்கு சென்றால் கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் என்ற வாய்ப்பு வருகிறது, ஆனால் அதற்கு 150000 செலவாகும்.


நாயகனும் என்னென்னவோ முயற்சிக்கறார், அலுவலகத்தில் கடனுக்கு முயற்சிக்கிறார், செல்போன் வாங்கினால் லோன் குடுப்பார்கள் என நம்பி செல்போன் வாங்க, அப்பாவிடம் திட்டு வாங்கும் பொழுதுதான் வாக்குவாதத்தில் தாத்தா பெரிய கிரிக்கெட் ப்ளேயர் என்றும் நண்பனின் துரோகத்தினால் வாய்ப்பை இழந்து அதனாலேயே எல்லோரிடமும் எரிந்து விழுந்து வீட்டிலேயெ அடைந்து கிடக்கும் உண்மை வெளிவருகிறது.

இப்போது ஹீரோவுக்கு ஒரு வாய்ப்பு வருகிறது, ஒரு அரசியல்வாதியின் மகனுக்கு திருமணத்திற்கு ஜானவாசத்திற்கு FERRARI கார் தேவைப்படுகிறது, இந்தியாவிலேயே சச்சின் டெண்டுல்கரிடம் மட்டும் தான் அது இருக்கிறது, அதை ஒரு நாள் எடுத்து வந்து குடுத்தால் மகனை லண்டன் அனுப்ப தேவையான பணத்தை தருவதாக ஒரு பெண்ணிடம் இருந்து வாய்ப்பு வருகிறது.

நேர்மையாய் தந்தையின் பெயரை உபயோகித்து கார் வாங்க செல்ல எதெச்சையாய் கார் சாவி கிடைக்க சொல்லாமல் கொள்ளாமல் வண்டி எடுத்து வந்து விடுகிறார், நினைத்தபடி கல்யாணத்தில் அதனை பயன்படுத்தி பணம் வாங்கினாலும் NO PARKING ல் நிறுத்தியதால் காருடன் சேர்த்து பணமும் போய் விடுகிறது.


இப்படி நடந்ததை தந்தையிடம் கூறும் போது கிரிக்கெட் பற்றி விவாதம் வர பேரனின் திறமையினை நேரில் பார்த்ததும் அவரும் பேரனுக்காக களத்தில் இறங்குகிறார். தன்னை ஏமாற்றிய நண்பனை பார்த்து உதவி கேட்க சென்று, ஏமாற்றத்தில் திரும்பும் போது FERRARI கார் கண்ணில் பட அதை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்.

அதில் இருந்து பணத்தை நைசாக எடுத்துக் கொண்டு ஹீரோ தப்பிக்க ஒரு வழியாய் எல்லாம் செட் ஆகும் பொழுது கார் திருடிய விஷயம் மகனுக்கு தெரிய, தந்தை அடிபட்டு கிடக்கும் நேரத்தில் மகன் காணாமல் போக, நொந்து போகிறார் ஹீரோ. இப்படி எல்லா பிரச்சனைகளையும் தாண்டி எப்படி லண்டன் அனுப்புகிறார் என்பது தான் கதை.


படத்தில் எந்த இடமும் போரடிக்கவில்லை, அதுவுமில்லாமல் காரினை தொலைத்த வாட்ச்மேனும் சச்சின் வீட்டு வேலைக்காரணும் அதை தேடி அலையும் காட்சிகள் ரசிக்கும் காமெடி, விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். தந்தை மகன் பாசத்தினை ஒவ்வொரு ஃபிரேமிலும் செதுக்கி இருக்கிறார்கள். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

படத்தின் டிரைலர்மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள், பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள், நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Wednesday, 26 September 2012

கொசுவை விரட்டும் பாசி

அன்பர்களுக்கு வணக்கம், ஒட்டு மொத்த மனித இனத்திற்கே இப்போது பெரும் சவாலாய் இருப்பது கொசு தான்,

ரொம்ப பாதிக்கப்பட்டுதான் ராஜமௌலி "நான் ஈ" படம் எடுத்துருப்பார்னு நினைக்கறேன். அப்படிப்பட்ட கொசுவ ஒழிக்க விதவிதமான ஐடியா எல்லாரும் குடுக்கறாங்க. 

நாமளும் ALL OUT, GOOD NIGHT னு என்னென்னமோ பயன்படுத்தி பார்த்துட்டோம், நம்ம ரத்தத்தை குடிச்சுட்டு கோசு போய் ரெஸ்ட் எடுக்கறதே அந்த காயில் மேலதான். அதுலயும் இப்ப அடிக்கடி மின்தடை ஏற்படறதால கொசுவர்த்திதான் கொளுத்திட்டு இருக்கோம், முகப்புத்தகத்துல மேய்ஞ்சுட்டு இருந்தப்ப கீழ இருக்கற விஷயத்தை படிச்சேன், சரி பகிர்ந்துகிட்டா மக்களுக்கு உபயோகமா இருக்குமேனு பகிர்ந்துக்கறேன்.

கொசுவை விரட்டும் பாசி...

 

ஒரேக் கல்லில் எக்கசக்க மாங்காய்..!

கொசுக் கடியில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு வீட்டிலும் கணிசமான அளவுக்கு செலவு செய்கிறோம்.

அசோலா என்ற பாசியை வளர்த்தால், அந்த வீட்டுப் பக்கம் கொசுக்கள் எட்டிப்பார்க்கா து. இந்த பாசியை வடை, போண்டா, பஜ்ஜி... என்று பலகாரம் செய்தும் சாப்பிடலாம். அற்புதமான ருசியில் இருக்கும். புரதச் சத்துக் கொண்ட இந்த பாசியை ஆடு, மாடு, கோழிகளுக்கும் கொடுக்கலாம். விவசாயிகள் இதை நெல் வயலில் வளர்க்கலாம். இந்த பாசி காற்றில் உள்ள தழைச்சத்துக்களை இழுத்து, பயிருக்கு கொடுக்கும். அதனால், ஆயிரக்கணக்கில் செலவுசெய்து இரசாயன உரம் போட தேவையில்லை. அசோலாவை வளர்ப்பதால், வயலில் களைகளும் வளராது. நீர் ஆவியாவதும் தடுக்கப்படுகிறது.

கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவை தொடர்பு கொள்ளுங்கள்.
இதோ அவர்கள் தொலைபேசி எண்:04652 246296

Saturday, 22 September 2012

நோயின்றி வாழ மீன் சாப்பிடுங்க...

அறிவை அதிகரிக்கும் மீன் உணவுகள், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்!....

நீங்கள் புத்திசாலியாக மாற வேண்டுமா? அப்படி என்றால் மீன் சாப்பிடுங்கள் என்கிறார்கள் ஸ்வீடன்ஆராய்ச்சியாளர்கள். சுமார் 5 ஆயிரம் பேரை வைத்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை ஆய்வு செய்தார்கள்.ஆய்வு முடிவில், வாரத்திற்கு ஒன்றும் மேற்பட்ட முறை மீன் உணவு உட்கொண்டவர்கள், அதைவிட குறைவாக மீன் உட்கொண்டவர்கள் மற்றும் மீனே சாப்பிடாதவர்களைக் காட்டிலும் அதிக அறிவுடன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்ப ட்டது.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, `15 வயதுக்கு மேல் மீன் உணவு அதிகம் உட்கொள்வது அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது என்பது எங்கள் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாரத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட முறை மீன் உணவை எடுத்துக்கொள்பவர்கள்தான் இந்த பலனை பெற முடியும். அதனால், மீன் உணவுகளை தவிர்க்காமல் அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது' என்றனர்.

தாய்மைக் காலத்தில் வாரம் இரண்டு முறையேனும் மீன் உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள் அறிவில் படு சுட்டியாக இருப்பார்களாம். அமெரிக்காவில் நடத்தப்பட்ட விரிவான ஆய்வு ஒன்று தாய்மார்களின் உணவுப்பழக்கவழக்கத்திற்கும், பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கும் இடையேயான ஒற்றுமை வேற்றுமைகளைக் குறித்து ஆராய்ந்தது.

இந்த ஆராய்ச்சி நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவுஉண்ணாத தாய்மார்களின்குழந்தைகளை விட, அறிவுக் கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என முடிவு வெளியிட்டிருக்கிறது.

தாய்மார்களின் உணவுப்பழக்கம் ஆராயப்பட்டது. பின்னர் குழந்தைகளுக்கு மூன்று வயதான போது அவர்களுக்கு சில சோதனைகள் கொடுக்கப்பட்டன. பார்வை, எளிதில் உள்வாங்குதல், கவனம் சிதறாமை போன்ற வகைகளில் நடந்த இந்த சோதனையில் முன்னிலை வகித்தவர்கள் மீன் உணவு உட்கொண்ட தாய்மாரின் குழந்தைகளே.

மீன்களை உண்ணும் மீன்கள், மற்றும் அதிககாலம் வாழும் மீன்கள் போன்றவை பாதரச அளவு அதிகம் கொண்ட மீன்கள் எனும் வரிசையில் வருகின்றன. அத்தகைய மீன்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி அறிவுறுத்துகிறது. பாதரச அளவு குறைந்த அளவு உள்ள மீன்களே தேவையானது என்பது இந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம். மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்தநோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது. ஏகப்பட்ட மருத்துவ நிபுணர்கள், மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பல முறை எடுத்துச்சொல்லி விட்டனர்.

மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள "ஓமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட், வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்தநோயும் அண்டாமல் இருக்க, இந்தஆசிட் பெரிதும் உதவுகிறது. அதனால் தான், மீன் உணவு சாப்பிடுபவர் களுக்குஅவர்கள் அறியாமலேயே,"ஒமேகா 3' கிடைக்கிறது.

அதனால், வாரத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது, மீன் உணவு சாப்பிட்டு வருவது மிக மிக நல்லது.

ஆண்களின் ஆயுளுக்கு மீன் துணைபுரியுமா?

ஜப்பானில் மருத்துவப்பேராசிரியர் ஒருவர் 1980 முதல் 1999 வரை 30 முதல் 64 வயது வரையாந 4070 ஆண்களையும் 5182 பெண்களையும் சோதனைக்கு உட்படுத்தினார். 20 ஆண்டுகளாக கண்காணித்தபின் ஆய்வறிக்கை தயாரித்தார். ஆண் ஒருவர் நாள்தோறும் ஒரு முறை மீன் உட்கொண்டால் இதய நோய்,உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் விதிதத்தை 30விழுக்காடு வரை குறைக்கலாம். 2 நாட்களுக்கு ஒரு முறை மீன் உட்கொண்டால் உடம்புக்குத் தேவைப்படும் சத்து போதிய அளவு கிடைக்கலாம்.

பெண்களிடையே உயிரிழப்பு விகிதம் குறைவு என்பதால் அவர்கள் மீன் உட்கொள்வதன் விளைவு சரியாகத் தெரியவில்லை. மீன் இறைச்சி ரத்தக் கட்டியைத் தடுக்கலாம். இருதய நோய் மூளையில் ரத்தம் உறைவது முதலானவற்றைத்தடுக்கலாம்.

தடுக்கப்படும் நோய்கள்

ஆஸ்துமா:

மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது. அதிலும், குழந்தைகளுக்கு, மீன் உணவு கொடுத்து வந்தால், அவர்களுக்கு கண்டிப்பாக ஆஸ்துமா வரவே வராது.

கண் பாதிப்பு:

மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும்பயனளிக்கிறது மீன் உணவில் உள்ள "ஒமேகா 3' ஆசிட், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும், கண் பார்வையில் பாதிப்பு வராமலும் செய்கிறது இது.

கேன்சர்:

பலவகை புற்றுநோயும் வராமல் தடுப்பதில், "ஒமேகா 3' யின் பங்கு 70 சதவீதம் வரை உள்ளது. மீன் உணவு சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உட்பட எந்த வகை புற்றுநோயும் வராது.

இருதய நோய்:

கொழுப்பு அறவே இல்லாமல் இருப்பதால், இருதய பாதிப்பு வருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.

 நன்றி: மோகன் தாஸ் சாம்வேல்

Friday, 21 September 2012

A Cinderella Story திரைவிமர்சனம்

அன்பர்களுக்கு வணக்கம், என் மாணவர்களுக்கு தேர்வு நெருங்குவதால் முன் போலதிகமாய் எழுத இயலவில்லை, தினமும் இறக்கம் செய்யும் படங்களும் என் கணிணியினை நிரப்பிக் கொண்டே வருகிறது, ஒரு படத்தினை பார்த்ததும் அதன் விமர்சனம் எழுதிய பின்புதான் அதனை அழிப்பது வழக்கம், எப்போதோ எடுத்து வைத்து சமிபத்தில் பார்த்த படம் "A CINDERELLA STORY".

 

இந்த சின்ட்ரெல்லா பெயரினை கேள்விப் படாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள், அது போலத்தான் அந்த கதையும், சிறுவயதில் பெற்றோரினை இழந்து சித்திக் கொடுமையால் வாடும் கதா நாயகி தேவதையின் வரத்தால் இரவு அரண்மனையில் நடக்கும் விருந்திற்கு முகத்தினை காட்டாமல் சென்று இளவரசனை கவர்ந்து பின் காலணியினை வைத்து இருவரும் சேரும் கதை, சிறுவயதில் பலருக்கு இது BED TIME STORY ஆக இருந்திருக்கும். எனக்கு இல்லைங்க.

படத்துக்கு வருவோம், இப்ப மேல படிச்ச அதே கதைய இப்ப இருக்க கலாச்சாரத்துக்கு ஏத்த மாதிரி எடுத்தா எப்படி இருக்கும்? அந்த ஒரு கேள்விக்காகத்தான் நானும் படம் பார்த்தேன். கதைப்படி அம்மா இல்லாத ஒரு பெண் குழந்தை அவங்க அப்பா கூட சந்தோஷமா இருக்கறப்ப சித்தியா 2 குழந்தையோட ஒரு மேக் அப் பைத்தியம் வருது, எதெச்சையா அவங்கப்பாவும் இறந்துடறார்.


படிப்பை இழந்துட கூடாதுனு சொந்த ரெஸ்டாரண்ட்லயே வேலை பார்த்துகிட்டே காலேஜ் போற நம்ம கதா நாயகிவங்க காலேஜ் வெப்சைட்ல முகம் தெரியாத ஒரு பையன் கூட கவிதையா பேசி 2 பேரும் ஒருத்தரை ஒருத்தரை விரும்ப ஆரம்பிக்கறாங்க.

ஹீரோ யார்னா காலேஜ்ல எல்லா பொன்னுங்களும் சை அடிக்கற பார்ட்டி, பெரிய ஃபுட்பால் ப்ளேயர், சரி எத்தனை நாள்தான் பார்த்துக்காமயே காதலிக்கறதுனு 2 பேரும் பேசி காலேஜ்ல நடக்கற ஒரு ஃபேன்சி டான்ஸ் பார்ட்டில பார்த்துக்கறதுனு முடிவுக்கு வராங்க.

ஆசையா கிளம்பறப்ப கொடுமைக்கார சித்தி வேலை வச்சுட்டு நகர முடியாத மாதிரி செஞ்சுட்டு மேக் அப் பன்னிட்டு கிளம்பிடறா, கூட வேலை பார்க்கற எல்லாரும் ஏத்திவிட்டு பார்ட்டிக்கு நல்லா தேவதை மாதிரி மேக் அப் பன்னி அனுப்பறாங்க, பார்ட்டில சொன்ன இடத்துல காத்திருந்து 2 பேரும் சந்திச்சுக்கறாங்க.


முகமூடி போட்டு இருக்கறதால ஹீரோக்கு ஹீரோயின் யார்னு தெரியலை, ஆனா நல்லா கடலை, ஹீரோயின் கூட வந்த பையனும் முகமூடி போட்டுகிட்டு, ஹீரோ கழட்டி விட்ட ஒரு சீன் பார்ட்டி கூட செட் ஆகி கிஸ் அடிச்சுட்டு இருக்கான், 12 மணிக்குள்ள ரெஸ்டாரண்ட் போகனும்னு அடிச்சு பிடிச்சு போயிடறாங்க.

வெறும் கண்ணை மட்டும் பார்த்து மயங்குன நம்ம ஹீரோ யார் அந்த சின்ட்ரெல்லானு காலேஜ் முழுக்க போஸ்டர் அடிச்சு தேடறான், ஆனா ஹோட்டல்ல வேலை பார்க்கற நம்மள ஹீரோக்கு பிடிக்குமானு தாழ்வு மனப்பான்மையோட ஹீரோயின் சொல்லாமையே இருக்கறா, உண்மைய சொல்லி மூக்கறு பட்டு உட்கார்ந்துட்டு இருக்க நண்பன் ஒரு பக்கம்.

 http://www.entertainmentwallpaper.com/images/desktops/movie/1424.jpg

ஆனா இந்த உண்மைகளை தெரிஞ்சுக்கற ஹீரோயினோட சித்தி பொன்னுங்க அதை வில்லிகிட்ட சொல்லி திட்டம் போட்டு அசிங்க படுத்தி ஹீரோயின் அ அழ வைக்கறாங்க, 2 பேரும் சேர முடியாத மாதிரி செஞ்சுடறா, பெரிய யுனிவர்சிட்டில இருந்து கிடைச்ச வாய்ப்பையும் சித்தி மறைச்சுடறா. சண்டை போட்டு வீட்டை விட்டு தனியா போயிடற ஹீரோயின் எப்படி எல்லா பிரச்சனையும் தாண்டி ஹீரோ கூட சேர்ராங்கறதுதான் க்ளைமாக்ஸ்.

 

கதை நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச கதைனாலும் எடுத்துருக்க விதம் போரடிக்காம போகுது, நான் கூட எங்க தேவதை,வரம்னுலாம் மாயமந்திரத்தை கொண்டு வந்திருவாங்களோனு பயந்தேன், அப்படி எல்லாம் இல்லாம அழகா காதலா, கவிதை படத்தை எடுத்துருக்காங்கனு நம்பறேன். பார்க்கலாம்.

படத்தோட ட்ரெய்லர்.மறக்காம ஓட்டு போட்டு, உங்க நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கங்க.

அன்புடன் கதிரவன்.

Tuesday, 18 September 2012

ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!


நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.
(இந்த தகவலை பகிர்ந்த அந்த நல்லுள்ளதிர்க்கு "கதிரவனின்" மனமார்ந்த நன்றிகள் ...!)
— with Kishore Rajendhiran, Rajesh Appu, Rvk Kambli and Mani Maran.

Monday, 17 September 2012

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம் எப்படி ?

அன்பர்களுக்கு வணக்கம்.நமது நாட்டில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தலையாய பிரச்சனை உடல் பருமன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அய்யோ உடம்பு வந்துருச்சே குறைக்க முடியவில்லையே இது தான் புலம்பல் ஏன் வந்தது அதை வரும் முன் காக்க என்ன வழி இதையாரும் யோசிப்பதில்லை யோசிக்கும் போது உடல் வெயிட் ஆகிவிடுகிறது. இதில் பாதிக்கப்படுபவார்கள் கிராமப்புரத்தை விட நகரவாசிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.


உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்டிரால்ல நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு கொலஸ்ட்ரால்: கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது

இந்த உப்புகள் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. உடலானது தேவையான அளவு கொலஸ்டிராலினை உற்பத்தி செய்கிறது. எனவே வேறு கொலஸ்டிரால் உடைய உணவை உண்ணாமல் இருந்தால் நல்லது. ஆனால் உணவில், கொலஸ்டிராலை முழுமையாக தவிர்ப்பதென்பது கடினமானமாகும். ஏனெனில் பல உணவுகள் இதனை தன்னுள் கொண்டுள்ளன. உடலில் அதிகளவு கொலஸ்டிரால் என்பது இதய நோய்கள் போன்ற மோசமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். பல காரணிகள் உயர் அளவு கொலஸ்டிரால் ஏற்பட பங்களிக்கிறது, ஆனால் சில செயல்கள் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.

* கொலஸ்டிரால் அளவு உங்கள் உடலில் உள்ள எச்டிஎல் கொலஸ்டிரால் அளவு (நல்ல கொலஸ்டிரால்) மற்றும் எல்டிஎல் கொலஸ்டிரால் அளவு (கெட்ட கொலஸ்டிரால்) களை பொறுத்துள்ளது. எல்டிஎல் கொலஸ்டிராலைவிட எச்டிஎல் கொலஸ்டிரால் உடலில் அதிகளவு இருப்பது உடலில் உள்ள சுகாதாரமான கொலஸ்டிரால் அளவை பேண மிக முக்கியமாகும்.

* உடலில் நல்ல கொலஸ்டிராலலின் அளவை அதிகரிக்க, உங்கள் உணவில் எந்த வகையான கொழுப்புகள் உள்ளன என்பதனை கவணியுங்கள், குறிப்பாக ட்ரான்ஸ் பாட் (அன்சாச்சுரேட்டெட் பாட்) டினை தவிர்ப்பது நல்ல வழியாகும்.

* இதய இரத்தநாள பயிர்ச்சிகளை ஒழுங்காக செய்வது, உணவில் குறைந்த அளவு கொலஸ்டிராலினை எடுத்துக்கொள்வது மற்றும் புகைக்காமல் இருப்பது போன்றவை உடலில் கெட்ட கொலஸ்டிரால் சேர்வதை அகற்றும் பிறவழிகளாகும்.

கொலஸ்டிரால் உள்ளவர்கள் எதை சாப்பிடலாம் எதை தவிர்க்கலாம் :

* வறுத்தல், பொரித்தலுக்கு எண்ணெய் குறைவாகத் தேவைப்படும் "நான்-ஸ்டிக்' பானைப் பயன்படுத்துங்கள். உறையாத எண்ணெய் வகைகளான சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றில் ஏதாவது இரண்டு எண்ணெய்களைச் சேர்த்து அளவோடு சமையலுக்குப் பயன்படுத்துங்கள். மொனொ அன்ஸேச்சுரேடெட் எண்ணெய் மற்றும் பாலி அன்ஸேச்சுரேடெட் எண்ணெய்கள், சமையலில் உபயோகிக்க வேண்டும். அவற்றையும் குறைந்த அளவில்தான் உபயோகிக்க வேண்டும்.

* கொலஸ்டிரால் என்பது வேறு; கொழுப்புச் சத்து என்பது வேறு. "கொலஸ்டிரால் இல்லாத எண்ணெய் போன்ற விளம்பரங்களைப் பார்த்து மயங்கி, குறிப்பிட்ட எண்ணெய்யை வாங்கிப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில் தாவர வகைகளிலிருந்து பெறப்படும் எந்த எண்ணெயிலும் கொலஸ்டிராலுக்கு இடமில்லை. பிராணிகளிடமிருந்து கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களான வெண்ணெய், நெய் போன்றவற்றில் மட்டுமே கொலஸ்டிரால் உண்டு.

* பழைய எண்ணெய்யை சூடுபடுத்தி மீண்டும் பூரி போன்றவை செய்ய பயன்படுத்தக் கூடாது. பழைய எண்ணெய்யை தாளிக்க பயன்படுத்தலாம்.


* ஒலிவ எண்ணெய் (ஜைத்தூன் எண்ணெய்) யில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடன்ஸ்(antioxidants) உள்ளது. இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவுகிறது. FDA பரிந்துரைப் படி தினமும் 2 மேஜைக்கரண்டி (23 Gram) ஆலிவ் எண்ணெய் இதயத்துக்கு மிக நல்லதாம்.

* தேங்காயில் உள்ள fatty Acid உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது, உடல் எடையை குறைக்கிறது என சமீபத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. தேங்காய் எண்ணெயில் கொழுப்பு உள்ளது, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் இதை தொடக்கூடாது என்ற கருத்தை இது பொய்யாக்குகிறது. தேங்காய் எண்ணெயில் "medium chain Fatty Acid" அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கும் Capric Acid,மற்றும் 'Lauric Acid' ஆகிய இரு அமிலங்களும் போதிய அளவு உள்ளது. இதனால் தினமும் போதிய அளவு தேங்காய் எண்ணெய் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையுமாம்.

* எருமைப் பாலில் கொழுப்பு அதிகம். பசும்பால் நல்லது. கொழுப்புச் சத்து குறைந்த ஸ்டாண்டர்டைஸ்டு பால் இதய நோயாளிகளுக்கு நல்லது. கொழுப்புச் சத்து அறவே நீக்கிய பாலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

* அசைவ உணவு வகைகளில் ஆட்டுக்கறி, மாட்டுக் கறி, பன்றிக் கறி ஆகிய மூன்றிலும் அதிகம் உள்ளது. * முட்டையின் மஞ்சள் கருவிலும் கொலஸ்டிரால் அதிகம்.ஆனால் முட்டையை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஹார்வார்டு பள்ளி தெரிவிக்கிறது.

* அசைவ உணவு சாப்பிடுவோர், ஆடு-கோழி போன்றவற்றின் ஈரல், சிறுநீரகம், மூளை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடு-கோழி ஆகியவற்றின் உறுப்புகளில் கொழுப்புச் சத்து அதிகம்.

* கொட்டை வகைகள்:


முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, எள் போன்றவற்றில் கொழுப்புச் சத்து அதிகம்; இதனால் கலோரிச் சத்து அதிகம். எனவே இதய நோயாளிகள் இத்தகைய உணவைத் தவிர்க்க வேண்டும்.


* வால் நட்டில் அதிக அளவு பாலி அன் சேச்சுரேட்டட் அமிலக் கொழுப்பு உள்ளது. இது கொலெஸ்ட்ராலை குறிப்பிடத்தக்க அளவு குறைக்கிறது. பாதாமும் இதைப் போல் குணமுடையது


* பாதாம் பருப்பை இரண்டு அல்லது மூன்று என்ற எண்ணிக்கையில் மட்டுமே நாள் ஒன்றுக்குச் சாப்பிடலாம்.


* ஸேடுரேடெட் கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்க வேண்டும் * எண்ணெயில் பொரித்துண்ணும் உணவுகளை, பொறிப்பதற்கு பதிலாக வேகவைத்ததோ, சுட்டோ, வதக்கியோ சாப்பிடப் பழக வேண்டும்.

* கொழுப்பு நீக்கிய பால் (skimmed milk) அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் (low fat milk), வெண்ணெய் மற்றும் தயிரை உபயோகிக்க வேண்டும்.


* டோனட்ஸ் (Dough nuts), மஃப்பின்ஸ்(muffins) போன்ற pastry பாஸ்ட்ரி வகை துரித உணவு(fast food)களைத் தவிர்க்க வேண்டும்.


* பழவகைகள், காய்கறிகள், பருப்புகள், தானியங்கள், ரொட்டி, அரிசி மற்றும் பாஸ்டா உணவுகள் உண்ண வேண்டும்.


* வெண்ணையைத் தவிர்த்து, திரவ நிலையிலான மார்கரின் பயன்படுத்தலாம்.


* உணவுப் பொருட்களில் உள்ளக் கொழுப்பின் அளவை, அவற்றின் குறிப்பேட்டைப் படித்துத் தெரிந்து கொள்ளவது கூடுதலாக உள்ளக் கொழுப்பு உணவைத் தவிர்க்க உதவும்.


* இனிப்பு உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். * நார்ச்சத்து காய்கறிகள்: நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவதால், ரத்தத்தில் கொழுப்பு சேருவது தாமதப்படுத்துகிறது.


* ஓட்ஸில்(Oatmeal) கரையக்கூடிய நார் சத்து இருக்கிறது .இது LDL எனப்படும் கெட்ட கொலெஸ்ட்ராலை குறைக்கிறது.கிட்னி பீன்ஸ், ஆப்பிள், பியர்ஸ், பார்லி போன்றவற்றிலும் இத்தகை கரைக்கூடிய நார் சத்து அதிகம் உள்ளது.


* வாழைப் பழத்தில் அதிக நார் சத்து உள்ளது நல்லது


-நல்லது நாம் சாப்பிடும் உணவு வகையில் கொலஸ்டிராலின் அளவு :


* முட்டை (வெண்கரு+மஞ்சட்கரு) -550 (mg /100gm)


* வெண்ணெய் -250 (mg /100gm)


* சிப்பி மீன் (Oyster)-200 (mg /100gm)


* இறால் (Shrimp)-170 (mg /100gm)


* மாட்டு இறைச்சி -75 (mg /100gm)


* ஆட்டிறைச்சி (Mutton)-65 (mg /100gm)


* கோழியிறைச்சி-62 (mg /100gm)


* பனீர் (cottage cheese)-15 (mg /100gm)


* ஐஸ் கிரீம்-45 (mg /100gm)


* நிறைக்கொழுப்புப் பால் (1 குவளை)-34 (mg /100gm)


* கொழுப்பு நீக்கிய பால் (1 குவளை)-5 (mg /100gm)


* பிரெட்-1 (mg /100gm)


* ஸ்போஞ்ச் கேக்-130 (mg /100gm)


* சாக்லேட் பால்-90 (mg /100gm)


நாமும் இதைப்பின்பற்றினால் கொலஸ்டிரால் இல்லாத மனிதனாக வாழ முயற்சிக்கலாமே....